அத்தியாயம் 64: ஆக்சன் மோடில் Varun (part 1)
லாவண்யாவிடம் பேசுவதற்கு முன்பு வரை தான் இப்படி யோசித்து கொண்டு இருப்பது சரியா..?? தவறா..?? என்ற ஒரு குழப்பத்தில் தான் இருந்தால் ஷாலினி. ஆனால் இப்போது அவள் லாவண்யாவிடம் பேசிய பின், அவள் நினைத்தது போலவே விஷ்ணுவிடமிருந்து தான் விலகி விடுவது தான் தனக்கும் அவனுக்கும் நல்லது என்று நினைத்த ஷாலினி; இனி அவனிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.
“விஷ்ணு உனக்கு செட்டாக மாட்டான் ஷாலினி. ஏன்னா அவன் எனக்கு மட்டும் தான். இப்ப நீ அவன வேணான்னு சொல்ற மாதிரி.. ஒரு நாள் அவனையும் உன்ன வேணான்னு சொல்ல வைப்பேன்." என்று தன் மனதிற்குள் நினைத்த லாவண்யா, ஷாலினியை பார்த்து வஞ்சனை புன்னகை ஒன்றை சிந்திவிட்டு 😁 அவளை அழைத்து கொண்டு சாப்பிட சென்றாள்.
நாராயணன் மருத்துவமனையில்...
ரித்திகா கண் விழித்து இருக்கும் நேரம் எல்லாம் அவளுடனேயே தன் பொழுதை கழித்து கொண்டு இருந்தான் சந்தோஷ். இப்போது ஒருவருடன் ஒருவர் நன்கு பேசி பழகுவதற்கான தக்க சமயம் அமைந்ததால் இதை சரியாக பயன்படுத்தி கொண்டு ரித்திகாவின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்று நினைத்த சந்தோஷ், தன்னால் முடிந்த வரை ஸ்கோர் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டு இருந்தான். ரித்திகா சந்தோஷை தம்பியாக நினைப்பதால் அவளும் அவனிடம் பழகுவதற்கு தயக்கம் காட்டவில்லை. ஆனால் சந்தோஷ்சோ தன்னைப் போல் ரித்திகா விற்கும் தன் மேல் இன்ட்ரஸ்ட் இருக்கிறது என்று அதை தவறாக எடுத்து கொண்டான்.
ரித்திகாவை செக் செய்த டாக்டர் அவள் மிகவும் பலவீனமாக இருப்ப தால் அவளுக்கு நிறைய சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுக்குமாறு சொல்லிவிட்டு சென்றார். டாக்டரின் வாயில் இருந்து எப்போது இந்த வார்த்தைகள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தவனை போல உடனே சந்தோஷ் தான் வாங்கி வந்த அத்தனை பழங்களையும் பிழிந்து தன் கைகளாலேயே ரித்திகாவிற்கு ஜூஸ் போட்டு கொடுத்தான். ரித்திகாவே தனக்கு ஜூஸ் வேண்டாம் என்று சொன்னாலும் அவளை குடிக்க சொல்லி அன்பு தொல்லை செய்து கொண்டு இருந்தான் சந்தோஷ். வேறு வழி இன்றி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவன் கொடுத்த ஜூஸ் ஐ குடித்து கொண்டு இருந்தாள் ரித்திகா.
வருணின் அலுவலகத்தில்…
தன்னுடைய அலுவலக அறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த வருணிற்கு, பாலாஜி இடம் இருந்து ஒரு கால் வந்தது. அந்த காலில் அவன் வருணை உடனே டார்க் ரூமிற்கு வரும்படி சொல்லி விட்டு காலை கட் செய்தான். தன்னுடன் சிவாவையும், ஆதித்யாவையும், அழைத்துக் கொண்டு லிப்ட் இல் கிரவுண்ட் ப்ளோருக்கு வந்த வருண் கார் பாங்கிங் -க்கு உள்ளே மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க பட்டு இருந்த டார்க் ரூம் இன் கதவை அங்கு இருந்த ஒரு சிறிய பட்டனை அழுத்தி திறந்து அதன் உள்ளே சென்றான்.
அந்த அரை சீக்ரட்டான அறை என்பதால் அதை டார்க் ரூம் என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் அதை ஒரு அறை என்று சொல்வதை விட மினி ஆபீஸ் என்றே சொல்லலாம். பொதுவாக இந்த உலகத்தின் பார்வையில் இருந்து வருண் மறைத்து செய்யும் அத்தனை வேலையையும் இங்கே தான் செய்வான். வருண் அங்கே வந்தவுடன் அவனை உள்ளே அழைத்து சென்ற பாலாஜி, டாக்டர் அருணின் குழந்தையை கடத்திய ரவுடிகளை தான் கண்டுபிடித்து விட்டதாக சொல்லி அவர்கள் இருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் வந்தான். ஏற்கனவே வருணி பாடி கார்ட்டுகளால் அந்த ரவுடிகள் பலமாக தாக்கப்பட்டு இருந்தனர். அதனால் அந்த அடிகளை தாங்க முடியாமல் அவர்கள் மயங்கி கிடந்தனர்.
வருண்: ஏதாச்சும் சொன்னானுங்களா..??
பாலாஜி: நாங்களும் இவனுங்கள எவ்வளவோ அடிச்சு பாத்துட்டோம். நாங்க அந்த குழந்தையை கடத்தலன்னு மட்டும் தான் திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே இருக்கானுங்க சார். இதுக்கு மேலயும் அடிச்சா பொட்டுன்னு போய்டுவானுங்க அதனால தான் உங்கள கூப்பிட்டேன்.
வருண்: “அப்ப இனி இவனுங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தான் குடுக்கணும்." என்றவன் அவனுடன் வந்து இருந்த ஆதித்யாவை பார்த்து அங்கு ஓரமாக இருந்த வாட்டர் ட்டுயூப் ஐ எடுத்து வரும் படி சைகை செய்தான். ஆதித்யா அந்த டியூப் -ல் இருந்து தண்ணீரை ஒரு கேட்டவால்வின் உதவியால் திறந்து விட , அதில் இருந்து வரும் தண்ணிரை அங்கு மயங்கி கிடந்தவர்களின் மீது பாய்ச்சினான் வருண்.
அந்த ட்யூபில் பொருத்தப்பட்டு இருந்த அட்ஜெஸ்ட்மெண்ட்டை வருண் சிறிது மாற்ற அதில் இருந்து வேகமாக வந்த தண்ணீர் அந்த ரவுடிகளின் மீது பல ஆயிரம் ஊசிகளாக பாய்ந்தது. அதன் தாக்கத்தால் மயக்கத்தில் இருந்து தெளிந்த அந்த ரவுடிகள், வருணை பார்த்து தங்களை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். அவர்கள் தனக்கு முன் கெஞ்சுவதை பார்த்த வருணின் உதடுகள் கோணலாக வளைய.. வில்லத்தனமாக அவர்களை பார்த்து 😁 புன்னகைத்த வருண், “நான் உங்கள விடனுமா..?? ஆனா எனக்கு உங்கள விடனும்ன்னு தோன மாட்டேங்குதே... வருணை பத்தி நீங்க தானே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டீங்க. இப்ப நல்லா தெரிஞ்சுக்கோங்க....!!! ரொம்ப நாள் கழிச்சு நான் இப்ப தான் இப்படி ஒரு சம்பவம் பண்றேன். அதனால எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு. நீங்க உண்மைய சொல்றதுக்கு எவ்ளோ டைம் வேணாலும் எடுத்துக்கோங்க. அது வரைக்கும் நீங்களும், நானும், இந்த மாதிரி விளையாடிட்டு இருக்கலாம்." என்றான் கூலாக. 😎
ஏற்கனவே அந்த ரவுடிகளின் தலை முதல், கால் வரை, ஏராளமான காயங்கள் இருந்தன. அதில் இந்த தண்ணீர் வேறு ஊசி போல் அவர்களின் மீது இறங்குவது அவர்களுக்கு மரண வேதனையை கொடுத்தது. ஆனால் அப்போதும் அந்த ரவுடிகள் தங்களுடைய வாயைத் திறந்து அருணின் குழந்தையை யார் கடத்த சொன்னது என்று ஒன்று வார்த்தையும் சொல்லவில்லை. அதனால் கடுப்பான வருண், “அப்ப உங்களுக்கு இதெல்லாம் பத்தலைன்னு சொல்றீங்க...!! சரி. நீங்களே இவ்ளோ ஆசைப்படும் போது நான் எப்படி டா உங்களுக்கு எதுவும் குடுக்காம இருக்க முடியும்...???" என்று நக்கலாக சிரித்துக் கொண்டே 😁 சொன்ன வருண், வேகமாக அவர்களின் அருகே சென்று தன்னுடைய ஷூ காலால் அங்கு இருந்த ஒவ்வொரு ரவுடிகளின் வாயிலும் மிதித்த படி... “உண்மைய சொல்லுங்க டா..!! யார் சொல்லி இத எல்லாம் பண்ணீங்க..??" என்று கோபம் பொங்க கண்களும் முகமும் சிவக்க அவர்களைப் பார்த்து கேட்டு கொண்டு இருந்தான். 😡 🔥
அவனுக்கு இருந்த அதீத கோபத்தின் காரணமாக வருணின் சட்டை முழுவதும் வியர்வையால் நனைந்தது இருந்தது. வருணின் ஒவ்வொரு அடியும் இடியாய் அந்த ரவுடிகளின் மீது இறங்கியது. அதனால் அந்த அடிகளை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த ரவுடிகளில் ஒருவன், “சொல்றேன் சார்...!!! சொல்றேன் சார்...!!! அடிக்காதீங்க. நீங்க இப்படியே என் வாய் மேல மிதிச்சீங்கன்னா நானே எதயாவது சொல்லனும்னு ஆசைப்பட்டாலும் என்னால அத சொல்ல முடியாம போயிரும். என்ன விட்டுருங்க. எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் நான் சொல்றேன்." என்று வருணி காலை பிடித்துக் கொண்டு கெஞ்சினான். 😢🙏
அப்போது அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த இன்னொரு ரவுடி, “ வேணாண்டா எதுவும் சொல்லிறாத. நம்ம அவன காட்டி குடுத்துட்டோம்ன்னு தெரிஞ்சா அவன் நம்மள உயிரோடவே விட மாட்டான்." என்று சொல்ல... அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த ஆதித்யா, அவனுடைய வாயிலேயே நன்றாக மிதித்தவன், “இப்ப நீங்க உண்மைய சொல்லலைன்னாலும் என் கையால இங்கயே செத்துருவீங்க டா. தடையையுமே இல்லாம உன்ன டிஸ்போஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்." என்று கோபமாக சொன்னான்.
வருனும், ஆதித்யாவும், அந்த ரவுடிகளோடு போராடி தங்களுடைய நேரத்தையும், எனர்ஜியையும், வேஸ்ட் செய்து கொண்டு இருப்பதாக நினைத்த சிவா, தன்னுடைய இடுப்பில் சொருகி வைத்து இருந்த ஒரு கன் ஐ எடுத்து அதை வருனிடம் தூக்கி போட்டவன், “ஏன் பாஸ் இவனுங்க கூட எல்லாம் போய் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்கீங்க..?? இவனுங்க சொல்லலைன்னா நம்மளால எதையும் கண்டுபிடிக்க முடியாதா..??? போட்டு தள்ளிட்டுவாங்க." என்றான் கேஷுவலாக. 😁
சிவா தூக்கி எறிந்த கன் ஐ லாபகமாக கேட்ச் பிடித்த வருண் அந்த கன் ஐ அவன் முன் இருந்த ஒரு ரவுடியின் நெத்தி போட்டியில் வைத்தவன், “இப்ப உண்மைய சொல்றியா..?? இல்ல சாகுறியா..??" என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டவன், துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தப் போனான். உயிர் போகும் பயத்தில் வருணனின் காலை பிடித்துக் கொண்டு கதறிய அந்த ரவுடி “அய்யய்யோ...!! சார்... நான் உண்மைய சொல்றேன். தயவு செஞ்சு என்ன சுட்டுறாதீங்க." என்று கெஞ்ச, அவனின் தலையில் தான் பாய்ண்ட் செய்து இருந்த துப்பாக்கியை கீழே இறக்கிய வருண், “சரி சொல்லு." என்று கூலாக சொல்லி விட்டு அங்கு இருந்த ஒரு சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அந்த ரவுடி: “எங்க ஏரியால குமார்ன்னு ஒருத்தன் இருக்கான் சார். உங்கள மாதிரி பெரிய ஆளுங்க, அரசியல்வாதிங்க எல்லாருக்கும் அடியாள் வேலை பார்க்கிறது , பினாமியா இருக்கிறதுன்னு அவன் எல்லா தப்பான தொழிலையுமே பண்ணுவான் சார். என்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அவன் தான் பெரிய தல. எங்க கிட்ட என்ன சம்பவம் பண்ணனும்னு மட்டும் தான் சொல்லுவான். அத யார் பண்ண சொன்னதுன்னு சொல்ல மாட்டான் அவன்.
நாங்களும் அவனுங்க உங்களுக்கு தான் ஹெச் போட்டு இருக்கானுங்கன்னு தெரியாம ஏதோ ஒரு டாக்டரோட குழந்தைய தானே கடத்தனும்னு நினைச்சு காசுக்காக கடத்திட்டோம் சார். அவங்க எத்தன கோடி குடுத்து இருந்தாலும் இதுல நீங்க சம்பந்தப்பட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா நாங்க இந்த காண்ட்ராக்ட்ட எடுத்து இருக்க மாட்டோம். உங்கள பகைச்சிக்கிற தைரியம் எல்லாம் எங்களுக்கு இல்ல. எங்களுக்கு இத பத்தி வேற எதுவும் தெரியாது சார். எங்களை விட்டுருங்க." என்று அழுது கெஞ்சினான். 😭 😭 😭
அவர்கள் சொன்னதை கேட்ட வருண் ஆதித்யாவை பார்த்து, “ஆதி இவனுங்கள வச்சே அந்த குமார துக்கிரு." என்றான். “இவனுங்க எல்லாம் தேவையில்லை சார். எனக்கே அந்த குமார தெரியும். இவனுங்க சொல்ற அளவுக்கெல்லாம் அவன் வொர்த் இல்ல. இன்னைக்கு ஈவினிங்க்குள்ள அவன தூக்கிட்டு வந்து இங்க போடுறேன்." என்றான் ஆதித்யா. அவனை பார்த்து சரி என்பது போல் தலை அசைத்த வருண், அந்த துப்பாக்கியை தன் இருபில் சொருகி விட்டு சிவாவுடன் அங்கு இருந்து சென்றான் .
- நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 64
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.