அத்தியாயம் 59: சித்தார்த்தின் குட்டி அம்மா (பார்ட்டு 2)
செல்பவளின் கையை பிடித்து அவளை தடுத்து நிறுத்திய வருண், “நான் தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். என்னோட பர்மிஷன் இல்லாம நீ இங்க இருந்து போக முடியாது." என்றான் உறுதியாக. அவன் பேசியதை கேட்ட ஆராதனா, அவன் மேல் இருந்த மரியாதையால் தன் வாயை திறந்து ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக நின்ற படி அவர்களேயே பார்த்து கொண்டு இருந்தாள்.
ஆராதனாவே இங்கு இருந்து செல்கிறேன் என்று சொல்லியும், வருண் அவளை தடுத்துக் கொண்டு இருப்பதால் இந்த வீட்டில் தனக்கு என்ன மரியாதை இருக்கிறது..?? என்று நினைத்த செண்பகம், அதை அப்படியே தன்னுடைய வார்த்தைகளின் மூலம் விஷ்வாவிடம் வெளிப்படுத்தினாள்.
செண்பகம்: என்ன டா நீங்க எல்லாம் வளந்துட்டா அம்மா பேச்ச கேக்க கூடாதுன்னு இருக்கா..?? நீங்க எல்லாரும் உங்க இஷ்டத்துக்கு தான் எல்லாமே பண்ணுவீங்கன்னா இந்த வீட்ல நான் யாரு..?? என் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்கு..??
வருண்: “நாங்க எல்லாரும் உங்க மேல எவ்வளவு பாசமும், மரியாதையும், வச்சுருக்கோம்ன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு ஆராதனா மேல இருக்கிறது கோபம் தான் வெறுப்பு இல்லை. உங்களால யாரையும் வெறுக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். ஒரு நாள் அவ மேல இருக்குற கோவம் கோரஞ்சி நீங்களே அவள உங்க மருமகளா ஏத்துபீங்க. அவள இந்த வீட்ல வாழ வைப்பேன்னு நான் ஆராதனாக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். அவளுக்கும் ஹரிக்கும் நான் சீக்கிரம் கல்யாணமும் பண்ணி வைப்பேன்.
சோ ப்ளீஸ் மா, நீங்களும் கஷ்ட பட்டு என்னையும் கஷ்ட படுத்தாதீங்க. ஆராதனாவ உள்ள வர விடுங்க. எனக்கு பிராத்தனாவும், இவளும் ஒன்னு தான். நான் எப்பவுமே இவ பக்கம் இருப்பேன்." என்று நிதானமாகவும், தெளிவாகவும், உறுதியாகவும், சொன்னான்.
வருண் சொன்னதை கேட்ட செண்பகம், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள். இப்போது தான் வருணை மறுத்து பேசினாலும் அவன் தன்னை மீறி எப்படியும் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவான், என்று நினைத்தவள், இப்போது தான் தன்னுடைய மகன்களை எதிர்த்து பேசினால்.. அவளுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டு விட வாய்ப்பு இருக்கிறது. அதனால் பிறகு ஆராதனாவை எப்படி ஆவது திட்டம் போட்டு இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைத்து அமைதியாக தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள் செண்பகம்.
செண்பகம் அமைதியாக சென்று விட்டதால் அவளுடைய மௌனமே சம்மதிக்கத்திற்கு அறிகுறி என்று நினைத்த வருண்; ஹரியையும், ஆராதனாவையும், தங்களுடைய வீட்டிற்குள் அழைத்து சென்றான். சிறுது தயக்கத்துடனே ஹரியின் கையை இறுக்கமாக பிடித்த படி ஆராதனா விஷ்வாவை தொடர்ந்து அந்த வீட்டிற்குள் வத்தாள்.
காவல் நிலையத்தில்...
விஷ்ணுவின் குரலில் இருந்த உறுதியை கவனித்த சசி; ஏற்கனவே தனக்கு வேலை போனது பற்றியும், ரவி ஷாலினிக்கு செய்ததையும், யோசித்துப் பார்த்தான். அவனுக்கு இந்த கேஸை வாபஸ் வாங்குவது தான் சரியாக பட்டது. அதனால் .. “நான் குடுத்த கேச நானே வாபஸ் வாங்கிக்கிறேன்." என்றான் சசி. தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்று நினைத்து பயந்த மாலதி, அவனை மறுத்து பேசவில்லை.
சசியே தான் கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதாக சொன்னதால் விஷ்ணுவின் வேலை எளிதாகிவிட்டது. சசி எந்த நிபந்தனைகளும் இன்றி அந்த கேசை வாபஸ் வாங்கி விட, விஷ்ணுவின் தூண்டுதலால்... இனி தங்களுக்கும் ஷாலினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஷாலினியின் மீது தங்களுக்கு இருந்த அதிக கோபத்தின் காரணமாக தான் இப்படி ஒரு பொய் புகார் கொடுத்ததாகவும், இனி தங்களுடைய வற்புறுத்தலால் ஷாலினிக்கும், ரவிக்கும் திருமணம் நடக்காது என்றும், ஷாலினி மேஜர் என்பதால் இனி அவளுடைய வாழ்க்கையை அவள் அவளுடைய விருப்பத்தின் படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், என்று எழுதி அதில் சசி இடமும், மாலதி இடமும் கையெழுத்து வாங்கிவிட்டு அவர்களை வெளியே அனுப்பியவர், அதன் ஒரு காப்பியை விஷ்ணுவிடம் கொடுத்து விட்டார் அந்த இன்ஸ்பெக்டர்.
அதை பெற்று கொண்ட விஷ்ணு, பெருமூச்சு விட்டான். அவன் அவர்களை இந்த கேசை வாபஸ் வாங்க வைத்து விட்டாலும் பிற்காலத்தில் அவர்களால் ஷாலினிக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்று நினைத்தவன், மொபைலில் யாருக்கோ ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு சசியையும், மாலதியையும், பின் தொடர்ந்து அவர்களுடைய வீட்டிற்கு சென்றான் விஷ்ணு.
அனுமதி இன்றி தங்கள் வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்த விஷ்ணுவை பார்த்த மாலதி, பயத்தில் தங்களுடைய அறையில் இருந்த சசியை அழைத்து கொண்டு ஹால்ற்கு வந்தாள். விஷ்ணு அங்கு இருந்த சோபாவில் தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான். அப்போது ஒரு பையுடன் உள்ளே வந்த கருப்பு உடை அணிந்து இருந்த பாடி கார்ட் அதை விஷ்ணுவின் முன் இருந்த காபி டேபிளில் பவ்யமாக வைத்துவிட்டு வெளியே சென்று விட்டான்.
இப்போது இவன் ஏன் இங்கு வந்து இருக்கிறான் என்று நினைத்த மாலதி அதை அவனிடம் கேட்க துனியவில்லை. ஆனால் தன் வீட்டிற்கு வந்து ஒருவன் இப்படி நடு ஷாலில் அமர்ந்து இருப்பதை பார்த்த சசியால் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் விஷ்ணுவை கோபமாக பார்த்த சசி, “அதான் நாங்க கேச வபஸ் வாங்கிட்டோமே.. அப்புறம் எதுக்கு தம்பி தேவை இல்லாம இங்க வந்து பிரச்சனை பண்றீங்க..??" என்றான்.
விஷ்ணு: “எனக்கு உங்க மேல எல்லாம் இருக்கிற கோவத்துக்கு இங்க பெருசா பிரச்சனை பண்ணனும்னு தான் இருக்கு. ஆனா அதனால என் ஷாலினிக்கு எந்த பிரச்சனையும் வந்துற கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன்." என்று சொல்லி விட்டு தன் முன் இருந்த பேக் ஐ தூக்கி அவர்களின் முன் தூக்கி போட்டவன், “இதுல 10 லாக்ஸ் இருக்கு... இத வச்சு நீங்க அந்த ரவிக்கு ட்ரீட்மென்ட் பண்ணுவீங்களோ, இல்ல நீங்களே வச்சுப்பீங்களோ.. அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. இனிமே ஷாலினி இருக்கிற திசை பக்கம் கூட நீங்க வர கூடாது. இந்த தடவை நான் பண்ணதே ரொம்ப கம்மி தான். இதுக்கு மேலயும் உங்களால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். ஒழுங்கா பாத்து நடந்துக்கோங்க." என்றவன், அவர்களுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கு இருந்து வேகமாக வெளியே வந்துவிட்டான்.
சித்தார்த்தின் பள்ளியில்...
முதலில் தனக்காக விஷ்ணு இவ்வளவு மேனக்கெடுகிறானே என்று நினைத்த ஷாலினி, மனம் வருந்தினாள். பின் அவன் ஒரு வார்த்தை சொன்னதால் தன்னை போலீஸ்காரர்கள் அர்ரெஸ்ட் செய்யாமல் இங்கு இருந்து சென்றதை நினைத்து பார்த்தவள், அவனால் எப்படியும் இந்த பிரச்சினையை சுலபனாக கையாண்டு விட முடியும் என்று நினைத்து நிம்மதி அடைந்து தான் செல்ல வேண்டிய வகுப்பு அறைக்கு சென்றுவிட்டாள் ஷாலினி.
அவள் நினைத்து பயந்ததை போல அவளை போலீஸ்காரர்கள் அரெஸ்ட் செய்ய வந்தது குறித்து ஒரு சிலறை தவிர அங்கு இருந்த வேறு யாருக்கும் தெரியவில்லை. அந்த விஷயத்தை பற்றி நன்கு அறிந்திருந்தவர்களும் விஷ்ணுவின் அறிவுறுத்தலால் அதை பற்றி ஷாலினிடமோ இல்லை வேறு யாரிடமோ பேச துணியவில்லை.
உணவு இடைவேளை...
சித்தார்த்தை சாப்பிட வர சொல்லி சுகந்தி அவனை அழைத்துக் கொண்டு இருந்தாள். எப்போதும் அவன் மரத்தடியில் தனியாக ராகவியுடன் இணைந்து தான் சாப்பிடுவான். இப்போது ராகவி இல்லாததால் அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட அவன் விரும்பவில்லை. “எனக்கு சாப்பாடு வேண்டாம். பசிக்கல. ப்ளீஸ் நீங்க இங்க இருந்து போங்க." என்று சோகமான குரலில் சித்தார்த் சுகந்தியிடம் சொல்லிக் கொண்டு இருந்ததை அப்போது தான் தன் நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக அமர்ந்த பூஜா கவனித்தாள்.
தானே சென்று எத்தனை முறை நட்பாக சித்தார்த்திடம் பேச முயன்றாலும், அவன் தன்னிடம் பேச மறுப்பதால் அவன் மீது அவளுக்கு அதிகமான கோபம் இருந்தாலும் அவனுடைய வாடிய முகத்தை பூஜாவால் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் தன்னுடைய லஞ்ச் பாக்ஸை அப்படியே வைத்து விட்டு சித்தார்த்தின் அருகே சென்றவள், “ஏன் நீ சாப்பிட மாட்டேங்குற..?? நம்ப டைமுக்கு கரெக்டா சாப்பிடலன்னா நம்ப வைத்துள்ள இருக்குற பெரிய பூச்சி சாப்பாடு கிடைக்காம பசியில நம்ம வைத்த கடிச்சு சாப்பிட்டுறுமாம். அப்புறம் நமக்கு வயிறு வலிக்குமாம் என் அம்மா சொல்லுவாங்க. ஏன் நீ கொண்டு வந்த சாப்பாடு உனக்கு பிடிக்கலையா..?? அதனால தான் சாப்பிட மாட்டேன்னு சொல்றியா..???
நான் இன்னைக்கு பிரியாணி தான் கொண்டு வந்தேன். எங்க அம்மா அத சூப்பரா செய்வாங்க தெரியுமா..?? நீ என் கூட வா. நம்ம சேந்து சாப்பிடலாம். அது உனக்கும் பிடிக்கும்." என்று தன்னுடைய மழலை குரலில் பாசமாக அவளை பார்த்து சொன்னவள், அவனுடைய கையை பிடித்து இழுத்தாள். சித்தார்த்திற்கு சாப்பிட பிடிக்கவில்லை தான். ஆனால் அவனும் குழந்தை தானே... பூஜா பிரியாணி சாப்பிடலாம் வா என்று சொன்னது அவனுடைய பசியை தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது. அதனால் அமைதியாக அவள் பின்னே சென்றவன், அவள் அமர.. அவனும் அவள் அருகே சமத்தாக அமர்ந்து கொண்டான்.
சித்தார்த் தன் வயது குழந்தைகளோடு குழந்தையாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பழகுவதை பார்த்த சுகந்திக்கு மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், இருந்தது. சித்தார்த்தின் லன்ச் பாக்சை எடுத்து அவன் அருகில் வைத்துவிட்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள் சுகதந்தி.
சித்தார்த்தை பார்த்து அழகாக புன்னகைத்த பூஜா, தன்னுடைய லஞ்ச் பாக்ஸ் ஐயும், சித்தார்த்தின் லன்ச் பாக்ஸ் ஐயும் திறந்ததாள். பூஜா சொன்னதை போல் அவளுடைய லஞ்ச் பாக்ஸில் சிக்கன் பிரியாணியும், வெங்காய பச்சடியும் இருந்தது. சித்தார்த்தன் லஞ்ச் பாக்ஸில் பருப்பு சாதமும், உளுந்த வடையும், இருந்தது. தன்னுடைய லஞ்ச் பாக்ஸில் இருந்த பிரியாணியை எடுத்து சித்தார்தின் லஞ்ச் பாக்ஸ் மூடியில் வைத்த பூஜா, அவனுடைய பாக்ஸில் இருந்த பருப்பு சாதத்தை கொஞ்சமாக எடுத்து தன்னுடைய லஞ்ச் பாக்ஸ் மூடியில் வைத்துக் கொண்டாள்.
பின் அவற்றை சாப்பிட தொடங்கியவள் சாப்பிடாமல் அமைதியாக இருந்த சித்தார்த்தை பார்த்து, “இது நல்லா இருக்கும் சாப்பிடு சித்து." என்று பாசமாக தன்னுடைய மழலை குரலில் சொன்னாள். சித்தார்த்திற்கும் பசித்ததால் அதை தன்னுடைய ஸ்பூனில் எடுத்து சாப்பிட தொடங்கினான். சித்தார்த் பொதுவாகவே சாப்பிடுவதற்கு மிகவும் அடம் பிடிப்பவன் என்பதால் எப்போதும் அவனுக்கு யாராவது ஊட்டி விட்டு தான் அவன் சாப்பிட்டு இருக்கிறான்.
அதனால் தானாகவே ஸ்பூனில் உணவை எடுத்து சாப்பிடுவது எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை. கீழேயும் மேலேயும் அந்த உணவுகளை சிந்திக் கொண்டு இருந்தான். அதை கவனித்த பூஜா, “ஐயோ..!! உனக்கு சாப்பிட கூட தெரியாதா..?? குடு நானே உனக்கு ஊட்டி விடுறேன்." என்றவள், அவன் கையில் இருந்து ஸ்பூனை வாங்கி அவனுக்கு ஊட்டி விட்டாள். பூஜா திணைக்கு இப்படி ஊட்டி விடுவது அவனுக்கு ராகவியை ஞாபகப்படுத்த, இப்போது ராகவி தான் தனக்கு ஊட்டி கொண்டு இருப்பதாக நினைத்து அமைதியாக சாப்பிட்டான். அவனுக்கு தோழியாக இருக்க விரும்பிய பூஜா, இப்போது அவனுக்கு குட்டி தாயாக மாறிவிட்டாள்.
- நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 59
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.