அத்தியாயம் 55: ஐ லவ் யூ ஹீரோ (பார்ட் 1)
ஆராதனாவின் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து கவனித்து கொண்டு இருந்த ஹரியால் அவளுடைய வலியை புரிந்து கொள்ள முடிந்தது. அதே வலியை தான் அவனும் இத்தனை நாள் அனுபவித்தான். அதனால் அவள் மீதான இத்தனை நாள் ஏக்கத்தை தீர்த்து கொள்ள நினைத்தவன், சட்டென்று அவள் இதழ் மீது தன் இதழ் பதித்தான். 😚 😘 இந்த திடீர் இதழ் முத்தத்தை எதிர்பார்த்திராத ஆராதனா, விழிகள் விரிய அவனை பார்த்தாள். 😳
“காற்று புகும் இடைவெளி கூட நம்முள் வேண்டாம் அடி கண்மணியே... 😍 ❤️
உன்னை பிரிந்த இத்தனை நாள் தவிப்பை சிறிது நேரம் உன் இதழோடு உரையாடி தீர்த்து கொள்கிறேன். 🥰😘
உன்னுடைய கோபத்தினால் நான் எரிந்து கொண்டு இருக்கிறேன். 🔥 குளிர்ந்த உன் இதழினால் என் உயிரை மீட்டுக் கொடு. ❤️
பருவ மழை காக காத்திருக்கும் தரிசு நிலம் போல வறண்டு கிடந்த என் மனதை வளமாக்கி விடுகிறது உன்னுடைய ஒற்றை முத்தம். 😍 😘
களிப்பின் மிகுதியால் என்னை உன்னிடம் நான் தொலைத்து கொண்டு இருக்கவில்லை... 😁
காதலின் மிகுதியால் என்னை உன்னுள் தொலைத்து விட்டு உன் இதழ் வழியாக உனக்குள் ஊடுருவி என்னை நானே தேடி கொண்டு இருக்கிறேன். 😍
வார்த்தையால் வெளி படுத்தினால் தான் காதலா என்ன..?? என் கண்களில் வழியும் உனக்கான என் காதலை நீ ஏன் கண்டுகொள்ள மறுக்கிறாய்..??" 🥺❤️
- நர்மதா சண்முகம்
என்று நினைத்த ஹரி, முதலில் அவளை மென்மையாக முத்தமிட்டு கொண்டு இருந்தவன், இத்தனை நாள் இருந்த நீண்ட பிரிவு தந்த தவிப்பை தன் முத்ததின் வேகத்தில் காட்ட தொடங்கினான்.😚 😘 தான் அவன் மீது கோபத்தில் இருந்ததால் தன்னை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தான் இவன் தனக்கு இப்படி முத்தம் கொடுக்கிறான் போல என்று நினைத்த ஆராதனாவிற்க்கு அவன் மீது இருந்த கோவம் இன்னும் அதிகரிக்க... அவளை தன்னிடம் இருந்து பிரிக்க நினைத்தவள், அவனை தன்னிடம் இருந்து பிடித்து தள்ளினாள். 😡
ஆராதனா தன் பலத்தை மட்டும் கொண்டு அவனை தள்ள முயற்சிக்க... ஹரி, அவளை விட்டு விலக மனம் இன்றி அவளை இறுக்கி அணைத்தவன், தான் அது வரை செய்து கொண்டு இருந்த வேலையை மீண்டும் சிறப்பாக செய்ய தொடங்கினான். 😚 😘 🥰 அவனோடு போராடி கலைத்த ஆராதனா, இறுதியில் அவனுக்கு ஒத்துழைத்தாள். 😘 அவள் மனதில் இருந்த தீராத காயங்களை ஆற்றுவதற்கு அவனுடைய அந்த முத்தம் அருமருந்தாக இருந்தது. இருவரும் தங்களுக்கு இடையே இத்தனை நாள் இருந்த கண்ணுக்கு தெரியாத சுவற்றை கடந்து தங்களுக்கு ஒருவரின் மீது ஒருவருக்கு இருக்கும் காதலை அந்த முத்தத்தின் மூலம் மற்றொருவருக்கு தெரிய படுத்தி கொண்டு இருந்தனர். ❤️💫🌟✨
இப்படி அவர்கள் இருவரும் தங்களுக்கான உலகத்தில் தங்களை மறந்து காதலில் திளைத்து கொண்டு இருக்க...வ் ஹரியை தேடி அங்கே வந்த தர்ஷன் வேகமாக கதவை திறந்து, “பாஸ்...!!" என்று சத்தமாக அழைத்த படியே உள்ளே வந்தான். சிவ பூஜையின் போது கரடியாக....
அவனுடைய குரலால் பதட்டம் அடைந்த இருவரும் சட்டென்று ஒரு வரை விட்டு ஒருவர் விலகி நின்றனர். ஹரி, தர்ஷனை பார்த்து முறைக்க... 😒 🤨 கூச்சத்தில் நெளிந்த ஆராதனா வேகமாக ஓடி சென்று அங்கு இருந்த கட்டிலில் படுத்து கொண்டு தன் முகத்தை கைகளால் மூடி கொண்டாள். உண்மையில் இவர்களுடைய அந்த ஆழமான முத்தத்தை பார்த்து அதிக அதிர்ச்சி அடைந்தது தர்ஷன் தான். “ஐயையோ..!!! நான் எதுவும் பாக்கல பாஸ். என்ன விட்டுருங்க." என்று அவசரமான குரலில் சொன்ன தர்ஷன், அங்கு இருந்து வெளியே ஓடி சொல்ல திரும்பினான்.
அதன் பின்னே ஓடி சென்று அவனுடைய பின் சட்டை காலரை வேகமாக பிடித்து இழுத்த ஹரி, அவனை தன் பக்கம் திருப்பியவன், “அதான் இங்க வந்ததுக்கு உன்னால என்ன முடியுமோ அத பண்ணி எல்லாத்தையும் கெடுத்து விட்டுடில... அப்புறம் ஏன் டா ஓடுற... எதுக்கு இங்க வந்த..??? அத சொல்லிட்டு போ." என்றான் மிரட்டும் தோரணையில்...😒
தர்ஷன்: சாரி பாஸ்...!!! ஏற்கனவே ஆராதனா மேடம் உங்க மேல கோவமா இருந்தாங்க. இதுல நீங்க வேற இன்னைக்கு வேற பொண்ணோட டேட்டிங் போனீங்க. அதனால அவங்க கிட்ட நீங்க சாரி சொல்லி கெஞ்சிட்டு இருப்பீங்கன்னு தான் நினைச்சேன். ஆனா நீங்க என்று இழுத்தவன்... இப்படி பண்ணுவீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியாது. தெரிஞ்சு இருந்தா இந்த பக்கமே வந்து இருக்க மாட்டேன். ப்ளிஸ் மண்னிச்சு பாஸ்." என்றான் அப்பாவியாக.. 🥺
அந்த டேட்டிங் விஷயத்தை மீண்டும் ஆராதனாவிற்கு ஞாபகம் படுத்துவதை போல் அவள் முன்னேயே இவன் அதை பற்றி பேசியதால் கடுப்பான ஹரி... அவனுடைய சட்டையில் இருந்த தன் கையை எடுத்தவன்; அவனுடைய தலை முடியை கொத்தாக பிடித்து மாவு ஆட்டுவதை ஆட்டிய படி, “அதான் இன்னைக்கு வாயில வாஸ்து சரி இல்லைன்னு தெரியுதுல்ல... அப்பயும் உன்னால தேவை இல்லாம பேசாம இருக்க முடியல.. என் வாழ்க்கையில கும்மி அடிச்சே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு சுத்திட்டு இருக்கல்ல நீ..." என்றான். சிறு கோபத்துடன்... ☹️
தர்ஷன்: “பாஸ்..!! பாஸ்..!! ப்ளீஸ் பாஸ்..!! சின்ன பையன் ஏதோ தெரியாம பேசிட்டேன். என்ன மன்னிச்சு விடுங்களேன்.. மீ பாவம்." என்றான். அவன் கண்களில் இருந்து வராத அழுகையை தன் கையால் துவைத்த படி.
ஹரி: “அப்ப நீ சின்ன பையன் எனக்கு தான் வயசு ஆயிடுச்சுன்னு நீ என் ஆள் முன்னாடி என்ன குத்தி காட்டுற..." என்று அவன் முடியை பிடித்து ஆட்டிய படியே அவனை முறைத்து கொண்டே கேட்டான். 😒🤨
தர்ஷன்: “பாஸ் உங்களுக்கும், அந்த அக்காவுக்கும், ஒரே ஏஜ் தானே... இப்ப நான் என்ன சின்ன பையன்னு சொன்னதுனால மட்டும் அவங்களுக்கு உங்கள புடிக்காம போயிருமா..?? புதுசு... புதுசா.. என்ன அடிக்கிறதுக்கு ரீசின் கண்டு புடிக்காதீங்க பாஸ்." என்றவன், ஆராதனாவை பார்த்து.. “அக்கா ப்ளீஸ்... அக்கா...!!. அவர் கிட்ட என்ன விட சொல்லுங்க அக்கா." என்றான்.
தரிஷனை பார்த்து சிரித்த ஆராதனா, பின் ஹரியை பார்த்து, "ஹே.. விடு டா அவன பாவம்" என்றாள். ஆராதனா சொன்னதால் தர்ஷனை விட்ட ஹரி, “வெளில போய் வெயிட் பண்ணு நான் வரேன்." என்றான். “ஒகே பாஸ்." என்று சொல்லிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவன், பின் மீண்டும் அந்த கதவை மெதுவாக திறந்து தன் தலையை மட்டும் உள்ளே நீட்டி ஆராதனாவை பார்த்து, “தேங்க்ஸ் அக்கா" என்று சிரித்து கொண்டே சொல்லி விட்டு அங்கே இருந்து சென்றான்.
ஆராதனா: செல்லும் தரிஷனை பார்த்து சிரித்தவள், பின் ஹரியிடம் “இவன் இன்னும் அப்படியே தான் இருக்கான்ல..." என்றாள். 😅
ஹரி: “ஆமா..!!" என்றவன், ஆராதனாவின் அருகே அமர்ந்து.. “உனக்கு இப்ப கோபம் போயிருச்சா..??" என்றான் குறும்பாக புன்னகைத்த படியே... 😅😅😅
ஆராதனா: “அதெல்லாம் அப்படியே தான் இருக்கு. முதல்ல நீ அவ கிட்ட போய் என்ன சொல்லிட்டு வந்தேன்னு சொல்லு.." என்றவள், மார்புக்கு குறுக்காக தன்னுடைய கைகளை கட்டிய படி அவனை கூர்மையாக பார்த்தாள். 😒
ஹரி: “அந்த பொண்ணு பேரு சௌபர்ணிகா. அந்த பொண்ணு குட்டியா க்யூட்டா அழகா இருந்தா தெரியுமா...??" என்றவன், மீண்டும் எதையோ சொல்ல வர...
அவனுடைய தொடையில் நன்றாக வலிக்கும் படி நறுக்கு என்று கிள்ளிய ஆராதனா, “அவ எப்படி இருந்தான்னு நான் உன் கிட்ட கேட்கல. மூடிட்டு அவ கிட்ட நீ என்ன சொல்லிட்டு வந்தன்னு மட்டும் சொல்லு." என்று காட்டமாக கேட்டாள். 😒
ஹரி: “இப்டி மரியாதையா கேட்டா சொல்லப்போறேன் அதுக்கு எதுக்கு டி கிள்ளுற வலிக்குதுல்ல.." என்று தன்னுடைய ஒரு கையால் தன் கால் ஐ தேய்த்த படியே சொன்னவன், “நீங்க ரொம்ப அழகா தான் இருக்கீங்க. ஆனா என்னோட லைஃப்ல என் பார்பி டாலோட பிலேச்ச என்னால வேற யாருக்கும் தர முடியாது. என்னோட சைல்ட்ஹூட் டேஸ்ல இருந்து நான் அவள லவ் பண்றேன்னு சொன்னேன். அந்த பொண்ணு நான் சொன்னத கேட்டு பீல் ஆகி இத நீங்க முன்னாடியே சொன்னதுக்கு தேங்க்ஸ்னு சொல்லிட்டு அழுதுகிட்டே கிளம்பி போயிட்டா. எனக்கு பாக்கவே பாவமா இருந்துச்சு. அவ போனதுக்கு அப்புறம் நான் அங்கயே பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு உனக்கு புடிச்ச ஃப்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தேன். இந்தா இத எல்லாம் பொறுமையா சாப்பிடு. நான் தர்ஷன் என்ன எதுக்கு கூப்பிட வந்தான்னு கேட்டுட்டு வறேன்." என்றவன், தான் கொண்டு வந்த உணவு பார்சல்களை ஆராதனாவிடம் கொடுத்துவிட்டு கதவின் அருகே சென்றான்.
ஹரியை காதலோடு பார்த்த ஆராதனா, “ஹரி" என்று அவனுடைய பெயரை சொல்லி அழைக்க.. அவளை நோக்கி திரும்பினான் ஹரி. அவன் என்ன என்பது போல் இவளை பார்க்க, அவனை பார்த்து அழகாக புன்னகைத்த ஆராதனா, ““லவ் யூ ஹீரோ" என்றாள் சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன். ☺️ 😁
ஆராதனாவிற்கு எந்த பதிலும் சொல்லாத ஹரி, அவளை பார்த்து சிரித்த படியே அந்த அறையில் இருந்து வெளியே சென்று விட்டான். தான் தன்னுடைய காதலை வெளிப்படையாக அவனிடம் சொல்லியும் அவன் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் சென்றது அவளுக்கு வருத்தமாக தான் இருந்தது. இருந்தாலும் இதற்கு அவள் நன்கு பழகி இருந்ததால் அதை அவள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின் தேவை இல்லாததை யோசித்து தன்னுடைய நல்ல மன நிலையை கெடுத்து கொள்ள விரும்பாத ஆராதனா, ஹரி அவளிடன் கொடுத்துவிட்டு சென்ற உணவு பார்சல்களை பிரித்து, ரசித்து, உண்ண தொடங்கினாள்.
ஆராதனாவின் அறைக்கு வெளியே காத்திருந்த தர்ஷனின் அருகே சென்ற ஹரி என்ன விசையம் என்று கேட்க, “பிக் பாஸ் ஏதோ இம்போர்ட்டண்ட் பீட்டிங் இருக்கு. அதுக்கு நீங்களும் கண்டிப்பா வரணும்னு சொன்னாரு."
ஹரி: அப்டி என்ன மீட்டிங் திடீர்னு..??
தர்ஷன்: செக்யூரிட்டி டீம் கூட மீட்டிங் -ன்னு நினைக்கிறேன். ஆதித்யா வந்திருக்கான்னு சிவா சொன்னான்.
ஹரி: அப்ப ஏதோ சம்பவம் நடந்திருக்கு போல. விஷ்வா இன்னும் எல்லாருக்கும் செக்யூரிட்டி டைட் பண்ண போறான்னு நினைக்கிறேன்.
தர்ஷன்: ஆமா பாஸ்..!! சீக்கிரம் வாங்க. ஆல்ரெடி மீட்டிங் ஸ்டார்ட் ஆயிருக்கும். நம்ம லேட்டா போனா உங்க அண்ணனும், என் அண்ணனும், என்ன மட்டும் தான் திட்டுவாங்க.
ஹரி: நீயுமா வர்ற..??
தர்ஷன்: பின்ன நான் மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டாமா...???
ஹரி: அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீ இங்க இருந்து ஆரு -வ பாத்துக்கோ. நான் ஆபீஸ் போறேன்.
தர்ஷன்: ஓகே பாஸ். சீக்கிரம் போங்க.
ஹரி அங்கு இருந்து சென்று விட ஆராதனாவின் அறைக்கு எதிரே இருந்து சேரல் அமர்ந்து கொண்டான் தர்ஷன்.
- நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 55
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.