அத்தியாயம் 53: ஷாலினி காப்பாற்றப்படுவாளா?
ஹரி பார்மல் ஆக டிப் டாப்பாக வருவான் என்று தான் சௌபர்ணிகா எதிர்பார்த்து இருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பு வீணாகி இருந்தாலும் ஹரியின் இந்தத் தோற்றம் அவளை ஈர்க்காமல் இல்லை. அவளை அந்த கோலத்தில் பார்த்த அவள் தன் மனதிற்குள், “ஹி இஸ் சிம்பிளி சூப்பர்." என்று நினைத்து கொண்டாள். 😍🥰
ஹரியும் சௌபர்ணிகாவை தன்னுடைய கண்களால் ஸ்கேல் செய்தான். பிராண்டட் குர்தா மற்றும் பலாஸ்ஸோ செட் அணிந்து இருந்தவள், தன்னுடைய நீண்ட கூந்தலை ஒரு பக்கமாக போட்டு அதை லூஸாக பின்னி இருந்தாள் சௌபர்ணிகா. அவள் காதில் அணிந்து இருந்த பெரிய தோடு அவள் அசைய... அசைய.. அவளுடைய அசைவிற்கு ஏற்ப ஆடி கொண்டு இருந்தது. அவளுடைய எலுமிச்சை நிறத்திற்கு எடுப்பாக அடர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து இருந்தாள். எந்த அங்கிளில் பார்த்தாலும் ஹரி இன் கண்களுக்கு குட்டி பெண்ணை போல் க்யூட் ஆக தான் தெரிந்தாள் சௌபர்ணிக்கா.
ஆராதனாவிற்கும், ஹரிக்கும் ஒரே வயது தான். அதனால் ஆராதனாவின் முகத்தில் எப்போதுமே ஒரு மெச்சூரிட்டி இருக்கும். அது சௌபர்ணிகாவின் முகத்தில் அவனால் பார்க்க முடியவில்லை. ஹரியின் கண்களுக்கு அவன் முன் இருக்கும் சௌபர்ணிகா, அப்பாவியான பள்ளியில் பயிலும் குட்டி பெண்ணை போல் தெரிந்தாள். 🙋♀️ ஆராதனாவை விட சௌபர்ணிகா அழகாகவும், இளமையாகவும், இருந்தாள். இதை எல்லாம் யோசித்து பார்த்த ஹரிக்கு தன் அம்மாவுடைய செலக்சன் நன்றாக தான் இருக்கிறது என்று தோன்றியது.
இவளை விட எத்தனையோ அழகான பெண்களை பார்த்து இருக்கிறான் தான் ஹரி. ஆனால் ஆராதனாவிடம் அவனுக்கு ஏற்படும் உணர்வை வேறு எந்த பெண்ணிடமும் அவன் உணர்வதில்லை. அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமித்து அவனுடைய ஆராதனா தான் அரசியாக ஆண்டு கொண்டு இருந்தாள். 👰 அதனால் சௌபர்ணிகாவை தீர்க்கமாக பார்த்த ஹரி, முடிந்த வரை அவளை புண்படுத்தாமல் தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
ஹரி: சௌபர்ணிகாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன், “இந்த மேரேஜ் ப்ரோபோஸ்சல்ல உங்களுக்கு சம்மதமா..??" என்று கேட்டான். ஏனென்றால் அவளும் தன்னை போல் யாரையாவது காதலித்தால் இவருக்கும் பிரச்சனை இன்றி இந்த மேரேஜ் ப்ரோபோசல் ஐ இங்கேயே முடித்து விடலாம் என்று நினைத்தான்.
சௌபர்ணிகா: ஹரி இங்கே வந்து சில நிமிடங்கள் ஆகி இருந்ததால் அவனுடைய இந்த அணுகுமுறை அவளை இயற்றது , சிறிது தயக்கத்துடன் அவனை நேரடியாக பார்த்து.. “எனக்கு சம்மதம் தான்." என்று சிறிது வெட்கத்துடன் சொன்னாள். ☺️
ஹரி அதை கேட்டு ஒரு பெருமூச்சு விட்டவன், “நான் சொல்ல வர்றத கொஞ்சம் எமோஷினல் ஆகாம கேளுங்க..." என்று அவன் பேச தொடங்க...
ஏற்கனவே அவளுடைய அம்மா மங்கை அவளிடம் இந்த சந்திப்பை வெற்றிகரமாக மாற்றி ஹரியின் பியான்சி ஆக தான் அங்கு இருந்து வீட்டுக்கு வர வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தால் அதை நினைத்து பார்த்த்வள், இவன் என்ன சொல்ல போகிறானோ..?? என்று நினைத்து பதட்டமாகி அவனை சீரியசாக பார்த்து கொண்டு இருந்தாள் சௌபர்ணிகா.
ஹரி “எந்த எக்ஸ்பிரசனையும் தன் முகத்தில் காட்டாதவன், கூர்மையான விழிகளோடு அவளை பார்த்து, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. என் அம்மாவோட பாயிண்ட் ஆஃப் வியூல நீங்க எனக்கு பெஸ்ட் மேட்ச் ஆ இருப்பீங்கன்னு அவங்க நினைச்சு இருக்காங்க. அது உண்மையா கூட இருக்கலாம். மேபி நான் என்னோட பார்பிய பாக்குறதுக்கு முன்னாடி நான் உங்கள பாத்து இருந்தா எனக்கு உங்கள புடிச்சி கூட இருக்கலாம். பட் நவ் இட்ஸ் டு லேட். நான் என்னோட ஷைல்ட்ஹூட் டேஸ்ல இருந்தே ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்கேன்.
இன் ஃபேக்ட் நானும் அந்த பொண்ணும் லவ் பண்றது எங்க அம்மாவுக்கு ரொம்ப நல்லா தெரியும். அந்த பொண்ணோட ஃபேமிலிக்கும் என்னோட ஃபேமிலிக்கும் இப்ப கொஞ்சம் டெர்ம்ஸ் சரி இல்லை. அதான் எங்க அம்மா எனக்கு அலையன்ஸ் பாக்க ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க. பட் என்னோட லைஃப்ல என்னோட பரப்பி டால் -க்கு இருக்கிற ப்ளேஸ்ஸ என்னால வேற யாருக்கும் குடுக்க முடியாது. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..." என்றவன், தன் முன் கலங்கிய கண்களோடு அமர்ந்து இருந்த சௌபர்ணிகாவை பாவமாக பார்த்து கொண்டு இருந்தான்.
தன் கண்களில் தேங்கி இருந்த நீரை வெளியே வராமல் கஷ்ட பட்டு தடுத்து கொண்டு இருந்தவள், ஹரியை பார்த்து தழுதழுத்த குரலில் “எனக்கு புரியுது சார்." என்றாள் சௌபர்ணிகா.
ஹரி அவனால் அவளுடைய நிலைமையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது அதனால் அவளை நட்பாக பார்த்தவன், “சாரி நீங்க நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸோட இங்க வந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அத எல்லாம் நான் பிரேக் பண்ணிட்டேன். நீங்க ஃபீல் பண்ணாதீங்க. அண்ட் எங்க அம்மாவோட சார்பா நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்குறேன். என் கிட்ட கேக்காம கூட அவங்களா இப்படி ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணிட்டாங்க. உங்கள விட உங்கள இந்த மொமென்ட்ல ஹர்ட் பண்றது எனக்கு தான் ரொம்ப ஆக்வேர்ட் ஆ இருக்கு. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல." என்று தன் மனதில் இருந்தவற்றை உண்மையாக அப்படியே அவளிடம் சொல்லி விட்டான்.
அது வரை அவன் பேசியதை பொறுமையாக கேட்ட சௌபரணிகா, அதற்க்கு மேல் அங்கே இருக்க முடியாமல்.. “ஓகே சார். எனக்கு புரியுது. நான் கிளம்புறேன். உங்க மேல எந்த தப்பும் இல்ல. இத பத்தி முன்னாடியே சொன்னதுக்கு தேங்க்ஸ். பாய்." என்றவள், அங்கு இருந்து ஹரியின் முகத்தை அதற்கு மேல் திரும்பி கூட பார்க்க முடியாமல் சென்று விட்டாள். அந்த ரெஸ்டாரன்ட்டை விட்டு வெளியே வந்த சௌபர்ணிகா, முதல் வேலையாக தன்னுடைய அம்மாவிற்கு கால் செய்து ஹரி சொன்னது அனைத்தையும் அவளிடம் மனம் திறந்து சொல்லி அழுதாள். 😭😭😭
அவள் சொன்னது அனைத்தையும் கேட்ட மங்கைக்கு ஹரியின் மீது பொல்லாத கோபம் வந்தது. 😡😤 அதனால் ஆறுமுகத்திற்கு கால் செய்து ஹரியின் காதல் விஷயத்தை பற்றி சொல்லி அவனை குறை கூறினாள். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், செண்பகத்திடம் இந்த தகவலை அப்படியே பரிமாறினான். அதைக் கேட்டு கடுப்பான செண்பகம், “இவனுக்கு இன்னும் அந்த ஆராதனா மயக்கம் தெளியலையா..??" என்று தன் மனதிற்குள் நினைத்தவள்; தான் மங்கை குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதாக ஆறுமுகத்திடம் தெரிவித்து விடுமாறு சொல்லிவிட்டு ஏற்கனவே அவர்கள் முடிவு செய்து வைத்து இருந்ததை போல் லக்ஷனா இன்று மாலை சென்று சித்தார்த்தை அழைத்து வரும் படி சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.
சௌபர்ணிகா அங்கே இருந்து சென்றவுடன், சாவகாசமாக அந்த இதய வடிவ சோபாவில் சாய்ந்து அமர்ந்த ஹரி, அவனுடைய காலை உணவை ஆர்டர் செய்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு ஆராதனாவிற்கு பிடித்த சில உணவுகளை பார்சல் வாங்கி கொண்டு அங்கு இருந்து கிளம்பினான்.
காவல் நிலையத்தில்....
தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு சசியை அழைத்துக் கொண்டு வந்த மாலதி, அவன் கையாலேயே ஷாலினியுன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தாள். அந்த கம்ப்ளைன்ட்டில்...
ஷாலினி எவனோ ஒருவனை காதலித்து அவனை இழுத்து கொண்டு வீட்டை விட்டு ஓடி செல்லும் போது தங்கள் வீட்டில் இருந்த அனைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தையும் திருடி கொண்டு சென்று விட்டதாகவும், ஷாலினியை தடுக்க நினைத்த மாலதியை அவள் அடித்து காய படுத்த்தி விட்டு சென்றததாகவும், மாலதியின் தம்பி அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் தன்னுடைய காதலுக்கு அவன் தடையாக இருக்கிறானே என்று நினைத்தால் ஷாலினி அவனை கொல்ல முயற்சி செய்ததாகவும், எழுத பட்டு இருந்தது.
அதை பெற்று கொண்ட போலீசார் பல செக்ஷன்களின் கீழ் ஷாலினியின் மீது எஃப்.ஐ.ஆர். போட்டு வழக்கு பதிவு செய்தனர். பின் அவர்களிடம் ஷாலினியை பற்றிய தகவல்களை பெற்று கொண்டு அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கு அவளை அர்ரெஸ்ட் செய்வதற்காக விரைந்தனர்.
ஜே.வி. மெட்ரிகுலேசன் அண்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல் இல்...
போலீஸ் தங்களுடைய வாகனத்தில் ஷாலினியை அர்ரெஸ்ட் செய்வதற்காக அந்தப் பள்ளியின் பெரிய கேட்டின் முன் வந்து நின்றனர். வந்தது போலீசாராகவே இருந்தாலும் அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபிஸர்களால் அந்த போலீஸ் ஜீப் உள்ளே செல்லாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. பின் போலீசாரின் வருகையை பற்றி செக்யூரிட்டி ஆபீசர்கள் சாரதாவிற்கு தகவல் சொல்ல, போலீஸ் ஜீப் ஐ கேட்டின் வெளியே நிறுத்தி வைத்து விட்டு போலிஸ்சார்களை மட்டும் தன்னுடைய அறைக்கு அழைத்து வருமாறு சொன்னாள் சாரதா.
சாரதா சொன்னபடி போலீஸ்சார்கள் செக்யூரிட்டி ஆபீஸர்கள் மற்றும் பாடிகார்ட்கள் குடை சூழ அங்கே வந்து ஷாலினியின் மீது வந்து இருக்கும் கம்பளைண்ட் பற்றியும், அவளை தாங்கள் அரெஸ்ட் செய்ய வேண்டும் என்றும் சாரதாவிடம் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாரதா, விஷ்ணுவிற்கு கால் செய்தாள். விஷ்ணு உடைய மொபைல் போன் அவனிடம் தான் இருந்தது. ஆனால் அவன் வகுப்பறையில் இருந்ததால் அதை சைலன்ட் மோடில் போட்டு தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருந்தான். சாரதா எவ்வளவு முறை கால் செய்தும் விஷ்ணு எடுக்காததால் முதலில் ஷாலினியை இங்கு அழைத்து வர முடிவு செய்து ஒரு ஆபீஸ் ஸ்டாப்பை அனுப்பி ஷாலினியை அழைத்து வருமாறு ஆணையிட்டாள்.
ஷாலினி வழக்கம் போல் வகுப்பறியில் தன்னுடைய வேலையை செய்து கொண்டு இருந்தாள். அப்போது அங்கே வந்த ஆபீஸ் ச்டாப் ஒருத்தி அவளை பிரின்ஸ்பல் அழைத்ததாக சொல்லி ஆபீஸ் ரூமிற்கு அழைத்து சென்றாள். ஷாலினியும் எத்தனையோ முறை தன்னை ஏன் பிரின்சிபால் அலைகிறார்கள் என்று அந்த ஆபீஸ் டாப் இடம் கேட்டும் அவள் எதையும் சொல்ல மறுத்து விட்டாள். அதனால் குழப்பத்துடனே பிரின்சிபலின் அறைக்கு வந்த ஷாலினி, அங்கே போலீசை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள்.
அவளுடைய உள்ளுணர்வு தான் ஏதோ பெரிய பிரச்சினையில் சிக்கி கொண்டதாக அவளிடம் சொல்லி கொண்டே இருந்தது. அதனால் பதட்டமடைந்த ஷாலினி, தன்னுடைய சேலை முந்தானையை இறுக்கி பிடித்த படியே தைரியத்தை வரவழைத்து க் கொண்டு பிரின்சிபள் சாராதராவிடம் என்னை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டாள். ஷாலினியை கூர்மையாக பார்த்த சாரதா, “இவங்க உன்ன அரெஸ்ட் பண்ண தான் வந்திருக்காங்க." என்று ஏளனமாக சொன்னாள்.
அதைக் கேட்ட உடனேயே ஷாலினியின் இதயம் பயத்தில் வேகமாக துடித்தது. இது கண்டிப்பாக அவருடைய சித்தியின் வேலையாக தான் இருக்கும் என்று அவளுடைய மனம் அவளிடம் சொல்ல... இப்போது தன்னை அர்ரெஸ்ட் செய்ய வந்து இருப்பவர்களிடம் தான் குற்றமற்றவள் என்று நிரூபித்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க, அவருடைய கண்கள் கண்ணீரால் நிரைய... அவளுடைய மனம் விஷ்ணுவின் அருகாமைக்காக ஏங்கியது. ஏனென்று தெரியவில்லை இந்த நிமிடத்தில் விஷ்ணு தன் அருகில் இருந்தால் தனக்கு எதுவும் தவறாக நடக்காது என்று அவருடைய மனம் ஆழமாக நம்பியது.
அங்கு இருந்த போலீஸ்காரர்கள் ஷாலினியை பார்த்து, “உங்க அப்பாவும், அம்மாவும், உங்க மேல கம்ப்ளைன்ட் குடுத்து இருக்காங்க. நாங்களும் எஃப். ஐ. ஆர். ஃபைல் பண்ணிட்டோம். நீங்க எந்த பிரச்சனையும் பண்ணாம அமைதியா எங்க கூட வந்தீங்கனா யாருக்கும் டிஸ்டர்பன்ஸ் இல்லாம கிளம்பலாம்." என்றனர். ஷாலினி பேச்சற்று சிலையாக சமைந்து நின்றாள். இதற்கு கண்டிப்பாக அவளுடைய குடும்பம் தான் காரணமாக இருக்கும் என்று அவளுக்கு தெரியும் தான். ஆனால் தன் மேல் கம்ப்லைன்ட் கொடுக்கும் அளவிற்கு அப்படி தான் அவர்களுக்கு என்ன செய்து விட்டோம்..?? என்று நினைத்த ஷாலினியின் மனம் வலித்தது. 💔 பாவம் அவளுடைய முதுகிற்கு பின்னால் விஷ்ணு செய்து இருந்த வேலையை அவள் அறிந்து இருக்கவில்லை.
“அவங்க என் மேல என்ன கம்ப்ளைன்ட் குடுத்தாங்கன்னு எனக்கு தெரியல சார். ஆனா என் மேல எந்த தப்பும் இல்ல." என்று உடைந்து போன குரலில் சொன்ன ஷாலினியின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.😭😭😭
சாரதாவிற்கு ரித்திகாவின் மீதும் சரி.. ஷாலினியின் மீதும் சரி.. நல்ல அபிப்ராயம் இல்லை. அதனால் அவள் ஷாலினியின் மீது தான் தவறு இருக்கும் என்று முழுமையாக நம்பினாள். பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களோடு ஒரு வகுப்பறையில் செல்ஃப் மோட்டிவேஷன் பற்றியும், செல்ஃப் கான்ஃபிடன்ஸ் பற்றியும், பாடம் நடத்தி கொண்டு இருந்தான் விஷ்ணு. வழக்கம் போல அவன் உற்சாகமாக பாடம் நடத்தி கொண்டு இருக்க... மாணவர்கள் அவன் சொல்வதை உற்சாகமாகவும், மாணவிகள் அவனை சைட் அடித்தபடியே ஜாலியாகவும், அவன் பேசியதை கேட்டு கொண்டு இருந்தனர்.
சாரதா பல முறை போனில் அழைத்து இருந்தும் விஷ்ணு அவனுக்கு வந்த கால் ஐ எடுக்காததால் அவனை அழைத்து வருவதற்காக இன்னொரு ஆஃபிஸ் ஸ்டாப்பை அனுப்பி வைத்து இருந்தாள் சாரதா. விரைவாக விஷ்ணு பாடம் நடத்திக் கொண்டு இருந்த வகுப்பு அறைக்கு ஓடி வந்த அந்த ஸ்டாப் அவனை பிரின்சிபல் சாரதா தன்னுடைய அறைக்கு அழைத்து வர சொன்னதாக அவனிடம் சொல்ல, அதை கேட்ட விஷ்ணு, அவனிடம் என்ன விஷயம் என்று வினவ; விஷ்ணுவின் அருகே சென்றவர் மெதுவான குரலில்... ஷாலினியை அர்ரெஸ்ட செய்வதற்காக அங்கே போலீஸ் வந்து இருப்பதாக சொன்னான்.
விஷ்ணுவால் என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற விஷயங்களை அவனால் ஒரு விரல் அசைவில் சரி செய்து விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தாலும், இப்போது ஷாலினி எவ்வளவு பயத்தில் இருப்பாள் என்று நினைத்து கவலை பட்ட விஷ்ணு, தன் கையில் இருந்த புத்தகத்தை அப்படியே கீழே போட்டு விட்டு வேகமாக பிரின்சிலால் அறையை நோக்கி நடந்தான். பிரின்சிபல் அறையை நோக்கி ஓட்டமும், நடையுமாக வந்து கொண்டு இருந்தவனின் மனம் முழுவதும் ஷாலினி தான் நிறைந்து இருந்தாள்.
விஷ்ணு அந்த அறைக்குள் வரும் போது... இரண்டு லேடி கான்ஸ்டபிள்கள் ஷாலினியை தன்னோடு வருமாறு அவளுடைய இரு பக்கமும் நின்று கொண்டு அவளுடைய கையை பிடித்து வலுக்கட்டாயமாக அவளை இழுத்து கொண்டு இருந்தனர். “என் மேல எந்த தப்பும் இல்ல ப்ளீஸ் என்ன விடுங்க." என்று கதறி அழுத ஷாலினியின் உடல் பயத்தில் வெளிப்படையாக நடுங்கி கொண்டு இருந்தது. அந்த நொடி அவ்வளவு தான் தன்னுடைய வாழ்க்கையே இன்று மொத்தமாக அழிய போகிறது என்று நினைத்த ஷாலினியின் இதயம் வேதனையால் சுக்குநூறாக உடைந்தது. 💔
தன்னுடையவளை இந்த நிலையில் பார்த்த விஷ்ணுவின் மனம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது. ஷாலினியை தன் கண் முன்னையை இப்படி நடத்துவதற்கு இந்த போலீஸ்காரர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்..?? என்று நினைத்த விஷ்ணுவின் கண்கள் கோவத்தில் சிவக்க, அவனுடைய வாயில் இருந்து.. “அவ மேல இருந்து கைய எடுங்க." என்ற வார்த்தைகள் கட்டளை குரலில் காற்றை கிழித்து கொண்டு அந்த அறைக்குள் பலத்த சத்தத்துடன் வெளி வந்தது.
அந்த அறையில் இருந்த அனைவரும் விஷ்ணுவின் குரலால் ஒரு நொடி அதிர்ந்து அவன் இருந்த திசையை திரும்பி பார்த்தனர். அது வரை தன்னுடைய சேரில் அமர்ந்து இருந்த சாரதா கூட அவனுடைய குரலின் தாக்கத்தால் தன்னை அறியாமல் எழுந்து நின்று அவனை மரியாதையாக அவனை பார்த்தாள். ஷாலினியை பிடித்து இருந்த அந்த கான்சாபில்கள் தங்களுடைய பிடியை சிறிது தளர்த்த அதை கவனித்த ஷாலினி, விஷ்ணுவை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களுடைய கையை தட்டி விட்டு ஓடி சென்று அவனை கட்டி பிடித்து கொண்டு கதறி அழுதாள். 🤗😭😭
விஷ்ணுவும் ஷாலினியை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டான். 🤗 முதல் முறை அவளுடைய வீட்டில் அவனை ஷாலினி கட்டி பிடிக்கும் போது அவள் இருந்த நிலையை பார்த்து அவன் எவ்வளவு வலியை உணர்ந்தானோ அதை விட இப்போது அதிகப்படியான வலியை உணர்ந்தான் விஷ்ணு. ஏன் என்றால் அவனுடைய இதயம் முழுவதும் ஷாலினியை தான் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சி நிறைந்து இருந்தது. அவன் செய்த வேலையால் தான் ஷாலினியின் குடும்பத்தினர் அவள் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்கள் என்ற நிலையில்... நாம் இப்படி செய்யும் போது அதற்கு அவர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே தான் கணித்து ஷாலினியை தற்காத்திருக்க வேண்டும். அவளை இப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டோமே என்று நினைத்த விஷ்ணுவின் மனம் குற்ற உணர்ச்சியாலும், வேதனையாலும், வாடியது. 💔☹️
தங்கள் பிடியில் இருந்து தப்பித்து சென்ற ஷாலினியை மீண்டும் பிடிப்பதற்காக அவளை விஷ்ணுவிடம் இருந்து பிரிக்க தங்கள் பக்கம் ஷாலினியை அந்த கான்ஸ்டபிள்கள் இழுத்தாளர். அதை கவனித்த விஷ்ணு, அவர்களை எரித்து விடும் கண்களுடன் முறைத்து பார்த்தான். 😡 🤨 🤬 விஷ்ணுவின் அந்த பார்வை வீச்சால் சற்று திகைத்த அந்த கான்ஸ்டபிள்கள் ஷாலினியை பிடித்து இருந்த தங்கள் கைகளை எடுத்துக் கொண்டனர். சில காரணங்களால் விஷ்ணுவின் பார்வை அவர்களை அச்சுறுத்தும் விதத்திலும், அவனுடைய முகம் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாகவும் தோன்றியது.
அந்த கான்ஸ்டபிளை தன்னுடன் அழைத்து கொண்டு வந்து இருந்த எஸ். ஐயும் அதே நிலையில் தான் இருந்தார். விஷ்ணுவை பார்க்கும் போது அவன் சாதாரணமான ஆளாக இருக்க மாட்டான் என்று அவருடைய அனுபவம் அவருக்கு அடித்து சொல்ல.. அவனை பக்குவமாக தன் ஹேண்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தவன், “யார் சார் நீங்க..?? அவங்கள விடுங்க. எங்களைய எங்களோட வேலைய செய்ய விடாம தடுக்காதீங்க. அவங்க மேல கம்ப்ளைன்ட் வந்து இருக்கு." என்று நிதானமான குரலில் சொன்னான்.
அதை கேட்ட விஷ்ணு, ஷாலினியை தன்னிடம் இருந்து பிடித்தவன், ஷாலினியின் கண்களை தீர்க்கமாக பார்த்து... “பயப்படாத. உனக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விட மாட்டேன். நீ கிளாஸ்க்கு போ." என்று அவளுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன் கண்களால் துடைத்த படியே சொன்னான். விஷ்ணு, ஷாலினியை இங்கு இருந்து போக சொல்வதை பார்த்து கடுப்பான அந்த போலீஸ் காரர், “நான் அவங்கள அரெஸ்ட் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு அவங்கள போக சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்..???" என்று கேட்க, அவரை பார்த்து முறைத்த விஷ்ணு, “நீங்க கேட்கிற கொஸ்டின் -க்கு எல்லாம் நான் இங்க இருந்து ஆன்சர் பண்றேன். அது வரைக்கும் இவ இங்க இருக்க தேவை இல்லைனு அர்த்தம்." என்றான் ஆணையிடும் தோரணையில்.
அந்த போலீஸ் காரருக்கு விஷ்ணுவின் மீது அதிகப்படியான கோபம் வந்தாலும், அவனுடைய குரலில் இருக்கும் செல்ப் கான்ஃபிடன்சை கவனித்தவன், அவனிடம் வன்மையாக நடந்து கொள்ள துணியவில்லை. விஷ்ணுவின் முகம் வேறு அவருக்கு நன்கு பரிச்சயமான முகமாக தோன்றியது. ஆனால் அவன் யாராக இருப்பான் என்று மட்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் ஷாலினியின் மீது எஃப்.ஐ.ஆர். ஏற்கனவே போட்டு விட்டதால் அவளை அவரால் அப்படியே விட்டு விட முடியவில்லை.
- நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 53
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.