தாபம் 50

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 50: வருணிற்க்கு இருக்கும் பிரச்சனை

தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள வருண், தூக்க மாத்திரையை போட்டு தூங்கினாலும் மீண்டும் அந்த கனவு வந்து சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து விடுவான். அவன் எப்போது யோசித்து பார்த்தும் இந்த கனவு அவனுக்கு ஏன் வருகிறது என்று மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் காலப்போக்கில் இது தானாக சரியாகிவிடும் என்று நினைத்தவன் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அது சரி ஆகமல் இருப்பதால் முதலில் ஒரு சைகாட்ரிஸ்டை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்த விஷ்வா, மீண்டும் அவன் மூடி வைத்த லேப் டாப்பை திறந்து ஆபீஸ் வேலையை பார்க்க தொடங்கி விட்டான். எவ்வளவு பணம் இருந்தும் என்ன பிரயோஜனம்..?? நிம்மதியான தூக்கம் இன்றி தவிக்கிறான் இவன். இவனுடைய வாழ்வில் எப்போது ராகவி தேவதையாக வந்து இவனை மாற்றுவாளோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

ஷாலினியின் வீட்டில்...

விடியற்காலை ஆகியும் இது பழக்கம் இல்லாத இடம் என்பதால் தூக்கம் வராமல் தவித்து கொண்டு இருந்தாள் ஷாலினி. இன்னொரு பக்கம் ஆள் இல்லாத வீட்டில் தனியாக தூங்குவது வேறு அவளுக்கு பயமாக இருந்தது. புரண்டு.. புரண்டு.. படுத்து பார்த்தும் தூக்கம் வராமல் சலித்து போன ஷாலினி, தன்னுடைய மொபைல் போனை எடுத்து பார்த்தாள். அதில் நேரம் சரியாக மணி 04:15 என்று காட்டியது. இப்படியே தூங்காமல் இருந்தால் காலையில் தன்னால் எப்படி வேலைக்கு சரியாக செல்ல முடியும்..?? என்று நினைத்தவள், எப்படியாவது தூங்கி விட வேண்டும் என்று ஒரு பக்கமாக புரண்டு படுத்தாள்.

அப்போது அவளுக்கு திடீரென்று விஷ்ணுவின் அம்மா அவனுக்கு கால் செய்யும் போது.. அவன் இந்த கட்டிலில் உக்கார்த படியே சாய்ந்து படுத்தது நியாபகம் வந்தது. அத்னால் அவளை அறியாமல் அவளுடைய உதட்டில் ஒரு பிரகாசமான புன்னகை வந்தது. ☺️😁விஷ்ணுவோடு அவள் செலவிட்ட ஒவ்வொரு நிமிடங்களையும் நினைத்து அவனை ரசிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. இது என்ன வகையான உணர்வு என்று அவளால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை என்றாலும் அவளுக்கு இது மிகவும் பிடித்து இருந்தது.

இப்படியே அவள் விஷ்ணுவை பற்றி யோசித்து கொண்டு இருக்க, அவர்கள் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்கு முன் அந்த தள்ளு வண்டி கடையின் முன் நின்று எடுத்த செல்ஃபி அவளுக்கு ஞாபகம் வர, அதை எடுத்து பார்த்தாள் ஷாலினி. அந்த செல்பியில் ஷாலினியின் அருகே நின்று கொண்டு இருந்த விஷ்ணு, ஷாலினியின் தலைக்கு மேல் அவனுடைய கைகளால் கொம்பு போல் வைத்து கொண்டு இருந்தான். அதை கவனித்த ஷாலினி, அவனை முறைக்க... 😒🤨 விஷ்ணுவின் முகத்தில் ஒரு அழகான விரிந்த புன்னகை இருந்தது. 😂

அந்த செல்ஃபியை விஷ்ணு எடுக்கும்போது அவள் விஷ்ணுவை பார்த்து முறைத்து கொண்டு இருந்தாலும் இப்போது அந்த செல்பியை பார்த்தவளுக்கு.. இப்போது அந்த அறையில் அது வரை இருந்த வெறுமை எல்லாம் எங்கேயோ காணாமல் போனது போல் நிம்மதியாகவும், மன நிறைவாகவும் உணர்ந்தாள் ஷாலினி. அப்போது “இவன் ஸ்மைல்ல என்னமோ இருக்கு." என்று நினைத்தவள், தன் போனை வைத்துவிட்டு தன் அருகில் இருந்த தலையனையை கட்டி பிடித்து கொண்டு நிம்மதியாக தூங்கினாள்.

காலை பொழுது அழகாக விடிந்தது...

நாராயணன் பேலஸில்...

வருண் குளித்து விட்டு பாத் ரூமிலிருந்து வெளியே வந்தவன், தான் அணிந்து கொள்ளப்போகும் ஆடையை எடுத்து வைத்து கொண்டு இருந்தான். அப்போது எதிரில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தெரிந்த அவனுடைய உருவத்தை கவனித்தான். விஷ்வா எப்போதும் சரியாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை Fit-டாக வைத்திருப்பவன் தான். ஆனால் இன்று அவனுக்கே அவனுடைய உருவத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வழக்கத்தை விட தான் மெலிந்து காணப்படுவதாக தோன்றியது.

அவன் கண்களில் கருவளையங்கள் கூட வரத் தொடங்கி இருந்தன. என்ன தான் ஒரு மனிதன் தன்னுடைய உடலை சரியாக பராமரித்து வந்து கொண்டு இருந்தாலும் போதுமான அளவிற்கு தூக்கம் இல்லை என்றால் அது அவனுடைய உடலை பாதிக்கும் தானே.. அந்த பாதிப்பை விஷ்வா இப்போது தன்னுடைய உடலில் உணர்ந்தான். அதனால் இன்று முதலில் இந்த இன்சோம்னியா பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவன், சைகாட்ரிஸ்ட்டுக்கு உடனடியாக கால் செய்து அப்பாயின்மென்ட் வாங்கினான். பின் தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டவன், கம்பீரமாக தன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

காலை நேரமாக எழுந்து உற்சாகமாக கிளம்பிய விஷ்ணு, ஷாலினிக்கு வாட்ஸ்ஆப்பில்.. “குட் மார்னிங்" என்று மெசேஜ் அனுப்பியவன், பின் இன்று தானே அவளை பள்ளியில் ட்ரோப் செய்வதாக ஒரு மெசேஜ் அனுப்பினான். லேட்டாக தூங்கியதால் இன்னும் எழுந்திருக்காத ஷாலினி, அந்த மெசேஜை பார்க்கவில்லை. ஷாலினியிடம் இருந்து ரிப்ளை வராததால் தன்னுடைய மொபைலை சார்ஜ் இல் போட்டுவிட்டு சாப்பிடுவதற்காக கீழே சென்று விட்டான் விஷ்ணு.

ஷாலினியின் வீட்டில்...

இரண்டு மூன்று முறை அலாரம் அடிக்கும் அதை ஆப் செய்து விட்டு ஒரு தலையணையை கட்டி பிடித்தபடி அதன் மேல் தன் காலை போட்டு குப்புறப்படுத்து நன்கு அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தாள் ஷாலினி. மணி 8:15 ஆகியும் தன்னுடைய மெசேஜை ஷாலினி பார்க்காததால் அவளுக்கு கால் செய்தான் விஷ்ணு. தூக்க கலக்கத்தில் தன்னுடைய மொபைல் ஃபோனை கண்டு பிடித்து அந்த கால் ஐ அட்டெண்ட் செய்த ஷாலினி, யார் தனக்கு கால் செய்து இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் “ஹலோ..!!" என்றாள். 🥱

விஷ்ணு: அவள் தூக்க கலக்கத்தில் பேசுவதை உணர்ந்தவன், “அட எரும.. . இப்ப தான் தூங்கி எந்திரிக்கிறியா நீ..??" என்றான்.

விஷ்ணுவின் குரலை கேட்டவுடன், ஷாலினியின் தூக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதனால் “இப்ப டைம் என்ன..??" என்று அவசரமான குரலில் கேட்டாள் ஷாலினி.

விஷ்ணு: 8:15க்கு மேல ஆகுது. ஸ்கூலுக்கு வரலையா நீ..??

ஷாலினி: “இல்ல.!! இல்ல...!! கிளம்பனும். நான் போய் கிளம்புறேன். நீ போன வை." என்றாள் தன் படுக்கையில் இருந்து எழுந்த படியே.

விஷ்ணு: ஏய்ய்ய்ய்... ஒரு நிமிஷம். கால் ஐ கட் பண்ணிடாத.

ஷாலினி: “இப்ப என்ன டா உனக்கு பிரச்சனை..??" என்றாள் சலிப்பாக.

விஷ்ணு: எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. நீ கிளம்பிட்டு சொல்லு நான் போற வழியில.. உன்ன பிக் கப் பண்ணிக்கறேன்.

ஷாலினி: அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் ஆட்டோ புடிச்சு போய்க்கிறேன்.

விஷ்ணு: அதுக்கெல்லாம் டைம் இல்ல டி. நீ இதுக்கு மேல கெளம்பி ஆட்டோ புடிச்சு வரத்துக்கு லேட் ஆயிடும். சொன்னா கேளு ஓவரா பண்ணாத.

ஷாலினிக்கும் அவன் சொன்னது சரி என்று தான் பட்டது அதனால் அவனிடம்.. “ஒகே வா. ஆனா இன்னைக்கு மட்டும் தான் உன் கூட வருவேன். அப்புறம் இதுக்கு மேல நம்ம தான் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமேன்னு.. என் கிட்ட சும்மா சும்மா ட்ரோப் பண்ணிட்டான்னு கேக்குறது, வீட்டுக்கு வர்றதுன்னு அட்வாண்டேஜ் எடுத்துக்க கூடாது. புரிஞ்சுதா..??" என்றாள் ச்ட்ரிச்ட்டாக.

விஷ்ணு: ஐயோ..!!! சரிங்க மேடம். அட்லீஸ்ட் என்ன உங்க ஃபிரண்டுன்னு சொன்னீங்களே அது வரைக்கும் சந்தோஷம். நான் மெயின் கேட் கிட்ட வந்துட்டு கால் பண்றேன். அதுக்குள்ள நீங்க கிளம்பி வாங்க மேடம்.

ஷாலினி: ஒகே

விஷ்ணு: “ஓகே..!! மேடம். தேங்க்யூ மேடம்." என்றான் பவ்வியமாக.

அவன் அந்த கால் ஐ துண்டித்த உடன், தனக்குள் சிரித்து 🤭 கொண்ட ஷாலினி, வேகமாக கிளம்பினாள். பின் அரை மணி நேரத்தில் கிளம்பிய ஷாலினி, விஷ்ணுவுடன் பள்ளிக்கு சென்றாள்.

சித்தார்த்தின் பள்ளியில்...

தன்னுடைய வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்து இருந்த சித்தார்த், இன்று ரித்திகாவை பள்ளியில் அவனால் பார்க்க முடியாதே என்று நினைத்து சோகமாக இருந்தவன், தன் கன்னத்தில் கை வைத்த படி ரைட்டிங் டெஸ்க்கில் சாய்ந்து படுத்து இருந்தான். அப்போது அவனுக்கு முன்னாடி பெஞ்சில் அமர்ந்து இருந்த பூஜா, ஏதற்ச்சியாக அவனை கவனித்தவள், அவன் அருகே சென்று அமர்ந்து.. “சித்து நீ சோகமா இருக்கியா..??" என்று தன் குட்டி கண்களை சிமிட்டிய படி அவனை பார்த்து தன் மழலை குரலில் அழகாக கேட்டாள்.

சித்தார்த்தின் நினைப்பு முழுவதும் ரித்திகாவை சுற்றியே இருந்ததால் அவன் பூஜாவை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தன்னுடைய தலையை அவளுக்கு எதிர்புறமாக திரும்பி படுத்து கொண்டான் சித்தார்த். சித்தார்த் தன்னை புறக்கணித்ததால் பூஜாவின் குட்டி முகம் சுருங்கி போய் விட்டது. 😞😣 பின் அவனை பார்த்தவள், “போ..!!! நீ எப்ப பார்த்தாலும் என் கிட்ட பேசவே மாட்டேங்குற... நான் என் பிளேஸ்க்கே போறேன்." என்று தன் உதட்டை சுளித்து 😒 கொண்டு சொன்னவள், எழுந்து தன் வகுப்பறை தோழிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

இன்னும் முதல் பீரியட் ஸ்டார்ட் ஆகி இருக்காததால் ஸ்டாஃப் ரூமில் லாவண்யா உடன் இருந்தாள் ஷாலினி. சசியின் கை விரல்கள் இன்னும் அவளுடைய கன்னத்தில் தெளிவாக பதிந்திருந்ததால் எக்ஸ்ட்ரா மேக்கப் போட்டு அதை மறைத்து இருந்தாள் ஷாலினி. இன்னும் அவளுடைய முகத்தில் இருந்த வீக்கமும் கூட குரையாமல் அப்படியே இருந்தது. ஷாலினியின் முகத்தில் தெரிந்த வித்தியாசத்தை கவனித்த லாவண்யா, “என்ன இன்னைக்கு உன் ஃபேஸ்ல ஏதோ ஒரு டிஃபரன்ஸ் தெரியுது..??" என்றாள் குழப்பமாக.🙄

நடந்தவற்றை லாவண்யாவிடம் சொல்லாமல் மறைக்க வேண்டும் என்றெல்லாம் ஷாலினி நினைக்கவில்லை ஆனால் காலையிலேயே அது பற்றி பேசி தன்னுடைய மூடையும், லாவண்யாவின், மூடையும் கெடுக்க வேண்டாம் என்று அவளுக்கு தோன்றியது. அதனால்.. “ நான் எப்பையும் போல தான் இருக்கேன். உனக்கு தான் அப்படி தோணுது." என்று சொல்லி சமாளித்தாள்.

லாவண்யா: “இல்லையே..!! ஏதோ ஒன்னு இருக்குனு என் மனசு சொல்லுதே.. என்னான்னு சொல்லு... மறுபடியும் அந்த ரவி ஏதாச்சும் பிரச்சனை பண்ணான்னா..??" என்றவள், ஷாலினியின் முகத்தை வைத்து என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து கொள்ள அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்.

ஷாலினி, லாவண்யாவிற்க்கு ஏதோ பதில் சொல்ல வர.. அதற்குள் அந்த அறைக்குள் வந்த விஷ்ணு, ஷாலினியின் பெயரை சொல்லி அவளை அழைத்தான். விஷ்ணுவை இப்போது அங்கே எதிர்பார்த்திராத ஷாலினி, என்ன...?? என்பது போல் அவனை கேள்வியாக பார்த்தாள். 🤨 விஷ்ணுவை பார்த்த லாவண்யா, சிரித்து கொண்டே.. “குட் மார்னிங் சார்." என்றாள். லாவண்யாவை பார்த்து பார்மாலிட்டி -க்காக சிரித்த விஷ்ணு, பதிலுக்கு அவனும் “குட் மார்னிங்" என்றவன், பின் ஷாலினியை பார்த்து தன் கையில் இருந்த பார்சலை அவளிடம் இந்தா...!! என்று சொன்ன படுயே நீட்டினான். அதை பெற்று கொண்ட ஷாலினி, குழப்பமாக அவனை பார்த்து... “என்னது இது..??" என்றாள். 🙄

விஷ்ணு: “நீயே அவசர அவசரமா கிளம்பி வந்த. எப்டியும் சாப்பிட்டுருக்க மாட்டல்ல... அதான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன். ஒழுங்கா சாப்பிட்டு அப்புறம் கிளாசுக்கு போ." என்றான் உரிமையாக.

ஷாலினி: “சரி..!! எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு." என்று கேட்ட படியே.. தன்னுடைய ஹேண்ட் பேக்கிலிருந்து காசை எடுக்க போனாள்.

விஷ்ணு: இப்ப நீ எதுக்கு உடனே காச எடுத்து நீட்டுறா...?? நேத்து நீ வாங்கி குடுத்த.. நான் சாப்பிட்டேன்ல..?? இப்ப நான் வாங்கி குடுத்தா நீ சாப்பிட மாட்டியா..??

ஷாலினி: அது என் ட்ரீட்டு...

விஷ்ணு: “அப்ப இது என் ட்ரீட்டு.. போய் சாப்பிட்டு போ.." என்றவன், இதற்கு மேலும் தான் இங்கேயே நின்று கொண்டு இருந்தால்.. இவள் ஏதாவது தேவை இல்லாமல் சொல்லி கொண்டே இருப்பாள்... என்று நினைத்தவன்; அங்கு இருந்து வெளியே செல்ல திரும்பினான்.

“ஒய்...!!!" என்று அவனை அழைத்தாள் ஷாலினி. “ஒரு டப்பா சோறுக்கு இவ்ளோ அக்கப்போரா..!!!" என்று நினைத்த விஷ்ணு, அவளை திரும்பி பார்த்தான். விஷ்ணுவை முறைத்து பார்த்த ஷாலினி, “மிஸ்டர் விஷ்ணு..!! இப்டி -லாம் பண்ணி என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காதீங்க..!!!" என்று சொல்லி விட்டு சிரித்தாள். 😂 😂 🤣

விஷ்ணு: “ஆமாடி. 24 மணி நேரமும் உன் கிட்ட எப்படி அட்வான்டேஜ் எடுத்துக்கிறதுன்னு தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன் போடி லூசு..." என்று சொன்னவன், சிரித்து கொண்டே அங்கு இருந்து சென்று விட்டான்.🤣🤣

அங்கு இருந்து சென்று கொண்டு இருக்கும் விஷ்ணுவையும், புன்னகை மாறாத முகத்துடன் அந்த சாப்பாடு பார்சலை பிரித்து சாப்பிட அமர்ந்து இருக்கும் ஷாலினியும் மாறி... மாறி.. பார்த்து கொண்டு இருந்தாள் லாவண்யா. இங்கு நடப்பது அவளுக்கு புதிதாகவும், புதிராகவும், இருந்தது. நேற்று விஷ்ணுவுடன் ரித்திகாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு ஷாலினியை அவனோடு செல்ல சொல்லும் போது தயங்கியவள், இப்போது அவனுடன் இப்படி ஜாலியாக பேசும் அளவிற்க்கு அப்படி என்ன நடந்து விட்டது என்று நினைத்த லாவண்யாவிற்க்கு குழப்பமாக இருந்தது. அப்போது ஷாலினி கப் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்த லாவண்யா, அதிர்ச்சி அடைந்தாள். 😳

லாவண்யா: “இது கப் நூடுல்ஸ் தானே..?? இது உனக்கு பிடிக்கும்ன்னு அவருக்கு எப்படி தெரியும்..?? கரெக்டா வாங்கி குடுத்திருக்கிறாரு..??" என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

ஷாலினி: “நேத்து நாங்க சாப்பிட போனப்ப இது எனக்கு பிடிக்கும்ன்னு அவன் கிட்ட சொன்னேன். அதனால இத வாங்கிட்டு வந்துருப்பான்." என்றுஸகேஷுவலாக சொன்னவள், அந்த நூடுல்சை ரசித்து.. ருசித்து.. சாப்பிட்டு கொண்டு இருந்தாள். 🍜

லாவண்யா: “என்னது சாப்பிட போனீங்களா..?? இது எப்போ..??." என்று அதிர்ச்சியாக கேட்டாள். 😳

அந்த நூடுல்ஸ் ஐ சாப்பிட்டு கொண்டே நேற்று மாலை அவர்கள் ரித்திகாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பியதில் இருந்து.. இன்று காலை விஷ்ணுவோடு அவள் இங்கு வந்தது வரை, அனைத்தையும் தெளிவாக லாவண்யாவிடம் சொன்னாள் ஷாலினி. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்து லாவண்யாவிற்கு.. ஷாலினி சொன்னது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் ஷாலினி இவ்வளவு வேதனை பட்டு இருக்கிறாளே.. என்று நினைக்கும் போது அவளுக்கு இவளை நினைத்து கஷ்டமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவள் விஷ்ணுவோடு நெருங்கி விட்டாளோ என்ற பயமும் இருந்ததால் ஷாலினியை போறமையுடன் பார்த்தாள் லாவண்யா. 😒

லாவண்யா: இவ்ளோ நடந்து இருக்கு.. ஏன் டி என் கிட்ட எதுவுமே சொல்ல-ல...??

ஷாலினி: “எல்லா ரொம்ப வேக வேகமா நடந்திருச்சு. என்ன நடக்குதுன்னு நின்னு நிதானமா யோசிக்க கூட டைம் இல்ல. அதான் உன் கிட்ட சொல்ல முடியல." என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே.. முதல் பீரியட் ஆரம்பிப்பதற்கான அறிகுறியாக பெல் அடித்தது. அப்போது சரியாக அவள் சாப்பிட்டு முடித்து இருக்க.. தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அவசர அவசரமாக கிளம்பி சென்று விட்டாள்.

நாராயணன் பேலஸில்....

செண்பகத்திற்கு புரோக்கர் ஆறுமுகத்திடம் இருந்து கால் வந்து இருந்தது. லக்ஷனாவையும், சௌபர்ணிகாவையும், திருமணம் செய்து கொள்ள விஷ்வாவும், ஹரியும், ஒப்பு கொண்டு விட்டனரா என்று செண்பகத்திடம் கேட்டான் ஆறுமுகம்.

செண்பகம்: நான் விஷ்வா கிட்ட பேசிட்டேன் பா. அவனுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான். ஆனா அந்த லக்ஷனா பொண்ண எங்க சித்தார்த் அம்மாவா ஏதுக்குவணான்னு நினைச்சு தான் பயப்படுகிறான்.

ஆறுமுகம்: ஹரி தம்பி என்ன மா சொன்னாரு..??

செண்பகம்: அவன் ரொம்ப பிசியாவே இருக்கான். அதனால அவன் கிட்ட பேச முடியல. நம்ம வேணா ஒன்னு பண்ணலாம்.... பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட் -ல இன்னைக்கு தான் நம்மளோட ரெஸ்டாரன்ட் ஒன்னு ஓபன் பண்ணி இருக்கோம். ஹரியையும், சௌபர்ணிகாவையும், வேணா இன்னைக்கு அங்க மீட் பண்ண சொல்லுவோம். அவங்க ரெண்டு பேரும் பேசி பாக்கட்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் புடிச்சிருந்துச்சுன்னா அப்புறமா கல்யாணத்த பத்தி பேசலாம்.

ஆறுமுகம்: அதுவும் சரி தான் மா. நான் அவங்க வீட்டில பேசி பாக்கிறேன்.

செண்பகம்: அப்புறம் அந்த லக்ஷனா பொண்ணு இன்னைக்கு சாயங்காலம் சித்தார்த்த ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வரட்டும். அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போகுதான்னு பாக்கலாம். அதையும் சொல்லிருங்க. எல்லாம் சரியா நடந்துச்சுன்னா ஒரு நல்ல நாளா பாத்துட்டு நம்ம விஷ்வாவையும், ஹரியையும் கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வறேன்.

ஆறுமுகம்: நல்லது மா. நான் அந்த பொண்ணுங்க வீட்ல பேசிட்டு சொல்றேன்.

செண்பகம்: ம்ம்.. சரிப்பா. நான் வேக்கிறேன்.

ஆறுமுகம்: சரிங்க மா.

செண்பகத்திடம் பேசி முடித்தவுடனே லக்ஷனாவின் அம்மா மங்கைக்கு கால் செய்து செண்பகம் சொன்ன அனைத்தையும் சொன்னான் ஆறுமுகம். மங்கைக்கு எப்படியாவது தன்னுடைய இரண்டு மகள்களையும் நாராயணன் குடும்பத்தில் கட்டி கொடுத்து விட வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருந்தது. அது மட்டும் இன்றி செண்பகம் சொன்னதில் எதுவும் தவறு இருப்பதாக அவளுக்கும் தோன்றாததால் ஆறுமுகம் கேட்ட உடனே சரி என்று ஒப்புக் கொண்டு விட்டாள் மங்கை.

மங்கை உடனே இதற்கு சம்மதம் தெரிவித்ததால் மகிழ்ச்சியடைந்த ஆறுமுகம், அந்த தகவலை செண்பகத்திடம் சொல்லி விட்டான். ஹரியும், சௌபர்ணிகாவும், சித்தார்த்தும், லக்ஷனாவும், எப்போது எப்படி சந்திக்க வேண்டும் என்று அனைத்தையும் தெளிவாக ஆறுமுகத்திடம் சொன்னாள் செண்பகம். அதை கேட்டவன், அப்படியே தெளிவாக மங்கையிடம் சொல்லி விட்டான்.

மங்கையின் வீட்டில்...

தன் மகள்கள் இருவரையும் அழைத்த மங்கை, அவர்களிடம் செண்பகம் சொன்னதாக ஆறுமுகம் சொன்னது அனைத்தையும் எடுத்துரைத்தாள். ஹரியை தான் சென்று பார்க்க வேண்டும் என்று மங்கை சொன்னவுடன் அதை கேட்ட சௌபர்ணிகா, மகிழ்ச்சி அடைந்தாள். 😍🥰 மீடியாவின் வெளிச்சத்தை விரும்பாத வருண், எப்போதும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஹரியை தான் முன்னிலை படுத்துவான். அதனால் பணக்கார மனிதர்களின் வட்டத்தில் ஹரி மிகவும் பிரபல்யமானவன்.

அனைத்து மல்டி மில்லினர்களும் தங்களுடைய செல்ல மகளை நாராயணன் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க ஆசை படும் போது, இப்படி ஹரியை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததால் பேரானந்தத்தில் இருந்தாள் சௌபர்ணிகா. 😍 எத்தனையோ முறை பத்திரிகைகளில் வந்திருந்த ஹரியின் புகைப்படத்தை பார்த்து அவள் சைட் அடித்து இருக்கிறாள். இப்போது அவனே தனக்கு கணவனாக போகிறான் என்ற பூரிப்பில் இருந்தவள், “ஓகே மா. அப்ப நான் போய் சீக்கிரம் ரெடி ஆகுறேன். ஹரி எப்பவும் ரொம்ப punctual-லா இருப்பாருன்னு கேள்வி பட்டு இருக்கேன். சோ நான் லேட்டா போக கூடாது." என்று சொன்னவள், துள்ளிக்குதித்து தன்னுடைய அறைக்கு ஓடினாள்.

மகிழ்ச்சியாக இருக்கும் தன் தங்கையை பார்க்கும் போது லக்ஷனாவிற்கு வயிறு எரிந்தது. 🤬🔥 அவளுடைய கோபமான முகத்தை கவனித்த அவளுடைய அம்மா மங்கை, “இப்ப உனக்கு என்ன பிரச்சனை..?? எதுக்கு இப்டி ஃபேஸ் -அ கொடுரமா வச்சுட்டு இருக்க..??" என்றாள்.

லக்ஷனா: அப்போ உங்க கண்ணுக்கு என் பிரச்சனை எல்லாம் தெரியுதா மாம்..?? என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம எப்படி இந்த மேரேஜ் ப்ரொபோசல்ல அக்சப்ட் பண்ணீங்க..??

மங்கை: உனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். பாரு..!! சௌபி எவ்ளோ ஜாலியா இருக்கா.. உனக்கு மட்டும் என்ன..?? நீ மட்டும் விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா நாராயணன் குரூப்ஸ்சோட லேடி பாஸ் நீ தான். அத நெனச்சு நீ சந்தோஷப்படணும் லக்ஷனா.

லக்ஷனா: எத நினைச்சு மாம் நான் சந்தோஷ படணும்ன்னு சொல்றீங்க..?? அந்த விஷ்வா பையனுக்கு என்ன போய் ஆயா வேலை பாக்க சொல்றீங்களே.. அத நினைச்சு நான் சந்தோஷப்படனுமா..??

மங்கை: அத நெனச்சுலாம் நீ கவலை பட தேவையில்லை. அவன பாத்துக்கறதுக்கு மேய்ட் இருப்பாங்க. நீ ஜஸ்ட் அந்த பையன் கூட கொஞ்சம் அட்டாச்ட்டா இருந்தா போதும். மத்த படி விஷ்வாவுக்கு வேற என்ன குறை சொல்லு... ஹி இஸ் லூக்கிங் குட்.

லக்ஷனா: அவனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. எல்லாமே கூட தான். ஐ அம் ஜஸ்ட் 25. பட் ஹி இஸ் 33. எப்டி மா.. என்ன விட இவ்ளோ வயசானவன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும்..?? நான் வேணா ஹரிய கல்யாணம் பண்ணிக்கிறேன். சௌபி -க்கு அவங்க கடைசி பையன் விஷ்ணுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல..?? அவங்க ரெண்டு பேருக்கும் சேம் ஏஜ் தான்.

மங்கை: “நீ சொல்ற மாதிரி அவங்க உன்ன ஹரிக்கு கல்யாணம் பண்ணி தர சொல்லி கேட்டு இருந்தா.. நான் அவளை விஷ்ணுவுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பேன். அவங்க விஷ்வாவுக்கு கேட்கும் போது என்னால நோ சொல்ல முடியாது. நான் அவங்க ஃபேமிலிய பத்தியும், அந்த பசங்கள பத்தியும் விசாரிச்சு பாத்தேன். அவங்க ரெண்டு பேர் மேலயும் எந்த பிளாக் மார்க்கும் இல்ல. அண்ட் நம்ப கம்பெனி இப்ப லாஸ்ல போயிட்டு இருக்கு.

உனக்கே இதெல்லாம் தெரியுமே... இப்படியே போச்சுன்னா கம்பெனிய நம்ம இழுத்து மூடிற வேண்டியது தான். இப்போ நம்ப கம்பெனிய நாராயணன் குரூப்ஸ் கூட Tie up பண்ணிட்டா நமக்கு எவ்ளோ ப்ராஃபிட் கிடைக்கும் தெரியுமா..?? அதை கூட விடு. அவங்க சொத்து மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா...?? அவங்க கிட்ட இருக்கிற சொத்துக்காகவே நீ விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கலாம். ஒன்னும் தப்பில்ல. அவங்க சொன்ன மாதிரியே இன்னைக்கு சாயங்காலம் நீ அந்த பையனோட ஸ்கூலுக்கு போய் அவன பிக் கப் பண்ணிட்டு நாராயணன் பேலஸ்க்கு போற. செண்பகத்துக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கிட்டு அவங்க வீட்டு மருமகளாகுற. அவ்வளவு தான்." என்றவள், லக்ஷனாவின் பதிலை கூட எதிர்பாராமல் அங்கு இருந்து சென்று விட்டாள்.

விரக்தியில் அங்கு இருந்து சோபாவில் அமர்ந்த லக்ஷனா, அவள் அம்மா சொன்னது அனைத்தையும் யோசித்து பார்த்தாள். ஒரு வேளை அவளுடைய அம்மா சொன்னது போல அவர்களுடைய கம்பெனி திவால் ஆகி விட்டால் அவர்கள் நடு தெருவிற்கு வர நேரிடும். என்று நினைத்தவள், விஷ்வாவையும், ஹரியையும், ஒப்பிட்டுப் பார்த்தாள். கிட்டத்தட்ட உருவத்தில் இருவருமே ஒரே மாதிரி தான் இருந்தனர். விஷ்வாவின் வயதும், அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும் தான் அவளுக்கு பிரச்சனையாக தோன்றியது. இருந்தாலும் அவனுக்கு இருக்கும் சொத்தை கணக்கில் கொண்டால் அது ஒரு பிரச்சனை இல்லை என்று நினைத்த லக்ஷனா, விஷ்வாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள்.

நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தில்...

வருண் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்த சைக்காட்ரிஸ்ட் அருண் அவனை சந்திக்க அவனுடைய ஆபீஸ்க்கே வந்து இருந்தான். அந்த டாக்டரை தன்னுடைய கேபினுக்கு வர சொன்ன வருண், தன்னுடைய பிரச்சினையை அவரிடம் சொன்னான். அவனுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் அந்த கனவு பற்றியும் சொன்னான். அவன் சொன்னது அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தான் அருண்.

அருண்: மிஸ்டர் வருண்.. உங்களுக்கு அந்த ஆக்சிடென்ட் நடந்த அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு ஒன்னு விடாம எல்லாமே ஞாபகம் இருக்கா..??

வருண்: எஸ் டாக்டர்.

அருண்: அந்த ரியல் இன்சிடென்டுக்கும் அந்த கனவுக்கும், ஏதாவது டிஃபரன்ஸ் இருக்கா..?? இல்ல ரெண்டும் சேமா இருந்துச்சா..??

வருண்: டிஃபரன்ஸ் இருக்கு டாக்டர். அன்னைக்கு எங்க கார் ஆக்சிடென்ட் ஆகும் போது, என்னோட சைடு இருந்த டோர் ஓபன் ஆகி பாதிலேயே நான் வெளியில விழுந்துட்டேன். அப்போ என் வொய்ஃப் ஜான்வி என் பேரை சொல்லி கத்துனா. அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கு அப்புறம் நான் மயங்கிட்டேன். எனக்கு மயக்கம் தெரியும் போது நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன். இது தான் அன்னைக்கு நடந்துச்சு.

ஆனா என் கனவுல வந்தது வேற. அதுல மயங்கி கிடக்கிற என் கிட்ட ஜான்வி, என்ன எழுப்ப ட்ரை பண்றா. அவ வைத்தில இருக்க குழந்தைய காமிச்சு அத காப்பாத்த சொல்லி கேக்குற. மொத்தத்துல அது கனவு மாதிரியே இல்ல டாக்டர். அந்த கனவு கலைஞ்சு நான் எந்திரிக்கும் போது லாம் என் ஜான்வி எதையோ என் கிட்ட சொல்ல ட்ரை பண்ற மாதிரியே எனக்கு தோணுது.

அருண்: அந்த ஆக்சிடென்ட்ல உங்க வைப்போட அவங்க வயித்துல இருந்த அந்த குழந்தையும் சேந்து இறந்திருச்சில்ல..??

வருண்: “எஸ் டாக்டர்." என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

அருண்: உங்களுக்கு ரெண்டு பிரச்சனை இருக்கு மிஸ்டர் விஷ்வா. அதை சரி பண்ணிட்டா உங்களுக்கு இந்த கனவும் வராது அண்ட் இன்சோம்னியாவும் சரி ஆயிடும்.

வருண்: என்ன பிராப்ளம் டாக்டர்..??

- நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 50
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.