அத்தியாயம் 41: ஷாலினிக்கு ஆபத்து
ரித்திகா கண் விழித்ததை அரித்து அவளை பார்க்க சிவாவுடன் அவளுடைய அறைக்கு வந்தான் சித்தார்த்.
சித்தார்த்: அப்போ உனக்கு நிறைய வலிச்சுதா..?? 🥺
ரித்திகா: “நான் வளர்ந்து பெரிய பொண்ணு ஆயிட்டேன்ல.. அதனால எனக்கு கொஞ்சமா தான் வலிச்சுது." என்று சிரித்து கொண்டே சொன்னாள். 😁 சித்தார்த்தின் கள்ளம் கபடமற்ற அன்பு அவளுடைய மனதை நிறைத்தது. ❤️🥰
லாவண்யாவின் வீட்டில்...
வீட்டுக்கு வந்த லாவண்யாவிடம் அவளுடைய அம்மா ஒரு பட்டு புடவையை கொடுத்து அதை கட்டி கொள்ளுமாறு சொன்னாள். “சும்மா கோயிலுக்கு சாமி கும்பிட போறதுக்கு எதுக்கு மா பட்டு புடவை கட்டனும்...??" என்று பல முறை லாவண்யா அவளுடைய அம்மாவிடம் கேட்டும் அதற்கு சரியாக பதில் சொல்லாத அவளுடைய அம்மா, அவளை சீக்கிரம் கிளம்பி வருமாறு சொல்லிவிட்டு அவளுடைய அறையில் இருந்து வெளியே சென்று விட்டாள்.
லாவண்யா: “நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு எனக்கு தெரியும். இப்ப நான் கிளம்புறதுனால மட்டும் என்ன ஆயிடப்போகுது..?? நீங்க டிசைன் டிசைனா என்ன பிளான் பண்ணாலும் நான் நினைக்கிறது மட்டும் தான் நடக்கும். நீங்க வேணா பாருங்க..." என்றவள், கதவை அரைத்து சாத்தி விட்டு அவளுடைய அம்மா கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு அழகாக தயாராகி வெளியே வந்தாள்.
வெளியே வந்த லாவண்யாவை பார்த்த அவளுடைய அண்ணன் தினேஷ், “அம்மா இங்கே வந்து பாருமா... அதிசயமா உன் பொண்ணு பாக்குறதுக்கு பொண்ணு மாதிரியே இருக்கா.." என்றான் நக்கலாக... 😂
லாவண்யா: “டேய் எரும அப்படின்னா இத்தன நாள் நான் உன் கண்ணுக்கு பையன் மாதிரியா தெரிஞ்சேன்...??"
அவளுடைய அண்ணன் தினேஷ்: "ஆமா டா தம்பி. இதுல உனக்கு என்ன டா சந்தேகம்..." என்று லாவண்யாவின் தோளில் கை போட்ட படி நக்கலாக சிரித்து கொண்டே சொன்னான். 😂🤣
லாவண்யா: அவனுடைய கையை தன் தோளில் இருந்து எடுத்தவள், அவனுடைய இடுப்பில் நன்றாக கிள்ளி வைத்து விட்டாள்.
தினேஷ்: “அம்மா வலிக்குது.." 🥺 என்று கத்தியவன், அவள் கிள்ளிய இடத்தில் தேய்த்தபடி லாவண்யாவின் தலையில் லேசாக கொட்டினான்.
இவள் அவனை நன்றாக வலிக்கும்படி கிள்ளியும், அவன் இவளை லேசாக தான் அடித்தான். இருந்தாலும் அவன் கிள்ளியது தனக்கு மிகவும் வலிக்கிறது என்பது போல் நடித்தவள், அவனை அடிப்பதற்காக துரத்தினாள்.
அண்ணனும், தங்கையும், சிறு குழந்தைகள் போல வீடு முழுவதும் ஓடியாடி விளையாடி கொண்டு இருந்தனர். அந்த வீடு முழுவதும் அவர்களுடைய சிரிப்பு சத்தத்தால் நிறைந்து இருந்தது. 😅 அப்போது தான் எங்கேயோ சென்று விட்டு வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்த லாவண்யாவின் அம்மா, அவர்கள் இருவரும் விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து கடுப்பாகி இருவரையும் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டு சென்றாள்.
புடவை தடுக்கி கீழே விழுவதை போல் நடித்த லாவண்யா, அப்படியே சோபாவில் சென்று விழுந்தாள். நிஜமாகவே அவள் கீழே விழுந்ததில் அவளுக்கு ஏதும் அடிபட்டு விட்டது போல என்று நினைத்து பயந்த தினேஷ், வேகமாக சென்று அவள் அருகே அமர்ந்து “என்ன.. ஆச்சு.. பாத்து வரமாட்டியா...??" என்று அக்கறையாக விசாரித்தான்.
“மாட்னியா டா மவனே" என்று சத்தமாக சொன்ன லாவண்யா, தினேசை மடக்கி பிடித்து குனிய வைத்து நன்றாக அவன் வயற்றில் 4 குத்து குத்தினாள். வலியில் துடித்த தினேஷ், அவனுடைய பாசமான தங்கச்சியிடம் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சினான். லாவண்யா, இன்று அவனை விடுவதாக இல்லை. மனதில் அவன் மேல் இருக்கும் கோபம் அனைத்தையும் இன்று தீர்த்து விட வேண்டும் நினைத்தவள், அவனை தன்னால் முடிந்த வரை அடித்து தீர்த்தாள்.
லாவண்யா: “நீ என்ன போடி, வாடி -ன்னு கூப்பிட்டா கூட போனா போகுதுன்னு உன்ன மன்னிச்சு விட்டுருவேன் டா. ஆனா நீ என்ன எப்ப பார்த்தாலும் என்ன போடா தம்பி, வாடா தம்பின்னு சொல்றப்ப தான் பத்திகிட்டு வருது. 🔥 இனிமே அப்டி சொல்லுவியா... சொல்லுவியா..??" என்று பல்லை கடித்து கொண்டு சொன்னவள், அவன் கை மீது இரண்டு அடி அடித்தாள்.
தங்கை பொழியும் பாச மழையை தன் கைகளால் தடுத்த படியே அவளிடம் பேச தொடங்கினான் தினேஷ்.
தினேஷ்: பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கனும். அப்ப தான் பார்க்கிறவங்களுக்கு நீ ஒரு பொண்ணுன்னு நினைப்பு வரும். எப்ப பாத்தாலும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுறது, கூட பிறந்த அண்ணனை மரியாதை இல்லாம பேசுறது, அடிக்கிறது, இதெல்லாம் கூட பரவாயில்லை... என்னோட ஒரு டிரஸ் -ச விட்டு வைக்குறியா டி..??
என் இந்நேர்ஸ் தவிற எல்லாத்தையும் எடுத்து எடுத்து போட்டுட்டு சுத்திட்டு இருக்க... பத்தாதக்கு பசங்க விளையாடுற எல்லா கேமையும் இந்த சின்ன பசங்க எல்லாத்தையும் கூட்டு சேத்து கிட்டு விளையாடுறது... இதெல்லாம் இந்த வயசுல ஒரு பொம்பள புள்ள செய்யற வேலையா? முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணி உன்ன இந்த வீட்டில இருந்து பேக் ஆஃப் பண்ணனும். அப்ப தான் உன் அண்ணி இங்க வரும்போது ஜாலியா; ஃப்ரீயா இருப்பா. இல்லன்னா நீ என் பொண்டாட்டிய நாத்தனார் கொடுமை பண்ணி அவளை அவ வீட்டுக்கே அனுப்பி விட்டுருவ.
தினேஷ் பேசியதை கேட்ட லாவண்யா, அமைதியாக தலை குனிந்து அமர்ந்து கொண்டாள். “என்ன அதிசயமா இருக்கு..?? நம்ம இவ்ளோ பேசி இருக்கோம்.. அதுக்கு எந்த பதிலும் பேசாம அமைதியா இருக்காளே... ஏதோ சரி இல்லையே..." என்று நினைத்த தினேஷ், அவளுடைய தலையை தன் கையால் உயர்த்தியவன், அவளை தன்னை பார்க்கும்படி செய்தான். லாவண்யாவின் கண்கள் கலங்கி இருந்தது. 🥺
தினேஷும், லாவண்யாவும் எவ்வளவு சண்டை பிடித்து கொண்டாலும் இருவருமே ஒருவரின் மீது ஒருவர் அதிகமான பாசம் வைத்து இருக்கிறார்கள். அவன் ஏதோ விளையாட்டாக சொல்லியதை லாவண்யா சீரியசாக எடுத்து கொண்டு அழுது கொண்டு இருப்பதால் அவளை சமாதான படுத்தும் பொருட்டு, அவளிடம் கெஞ்சி கொஞ்சி பேசி சமாதான படுத்தி கொண்டு இருந்தான் தினேஷ்.
லாவண்யா: வேண்டாம் நீ என் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். நீ சொன்னது கரெக்ட் தான். எல்லாமே என்னோட வருங்கால அண்ணி அதான் உன் சுவேதா அவளுக்காக தானே பண்ற நீ...??? நீ அவள சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகணும். உங்களுக்கு நடுவுல நான் தான் இப்ப இடைஞ்சலா இருக்கேன். அதனால எவன் தலையில ஆச்சு என்ன கட்டி வச்சுட்டு நீ ஜாலியா அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் பண்ற அப்படி தானே...??
தினேஷ்: நான் அவ்வளவு செல்பீஷ் ஆன ஆளுன்னு தான் நீ என்ன பத்தி நினைச்சுட்டு இருக்கியா..??
லாவண்யா: அப்புறம் நீ பண்றது எல்லாம் பார்த்துட்டு வேற என்ன நினைக்கிறது..?? அம்மா தான் இப்படி பண்றாங்கன்னா.. நீயும் தானே அவங்க கூட சேந்திட்டு எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்க..?? அப்பாவ பத்தி சொல்றதே வேஸ்ட். நீங்க ரெண்டு பேரும் சொல்றத அப்படியே அவரு கேப்பாரு. என்னை அவர் தான் பெத்தாரா... இல்லை எங்கிட்டு இருந்தாவது தூக்கிட்டு வந்தாறான்னே தெரியல..
தினேஷ்: அப்படி ஒன்னும் உனக்கு செட் ஆகாத, உனக்கு சுத்தமா பிடிக்காத, யாருக்கும் உன்ன கல்யாணம் பண்ணி வச்சுர மாட்டோம் புரிஞ்சுதா...?? ஸ்வேதா வீட்ல அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி (Pressure) பிரஷர் பண்றாங்க.
லாவண்யா: நீங்க அத தானே எனக்கும் பண்ணிட்டு இருக்கீங்க..?? அது உனக்கு பரவால்ல.. அதே உன் ஆளுக்கு நடக்கும் போது அது உனக்கு தப்பா தெரியுதா...???
தினேஷ்: ஃபோர்ஸ் பண்ணி மேரேஜ் பண்ணிக்க சொல்றது.. யார், யாருக்கு பண்ணாலும் தப்பு தான். இப்ப நானும், சுவேதாவும், லவ் பண்றோம். சோ நாங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறோம். இப்ப நீ யாரையாச்சும் லவ் பண்றேன்னு சொல்லி.. அவன் நல்லவனா இருந்தா கண்டிப்பா நானே உனக்கு அவன கல்யாணம் பண்ணி வைப்பேன். ஆனா நீ தான் யாரையும் லவ் பண்ணலயே...
நீ கடைசி வரைக்கும் யாரையுமே லவ் பண்ணாம, உனக்குன்னு ஒருத்தன் செட் ஆகாமயே இருந்துச்சுன்னா... கடைசியில அரேஞ்ச் மேரேஜ் மட்டும் தானே ஒரே ஆப்ஷன்...?? இப்ப நான் லவ் மேரேஜ் பண்ணுனேன் நம்ம சொந்த காரணங்களுக்கு தெரிஞ்சா... நாளைக்கு உனக்கு கல்யாணம் பண்ணும் போது எவ்ளோ பிரச்சனை வரும் -ன்னு உனக்கு தெரியுமா..??
உன் கல்யாணத்துல என்னால எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு தான் நான் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி உன்னை செட்டில் பண்ணனும்னு நினைக்கிறேன்.
லாவண்யா: எதுக்கு இவ்ளோ கஷ்டம்...?? நான் உன்ன மாதிரியே லவ் மேரேஜ் பண்ணிக்கிறேன். சோ பிராப்ளம்மே இருக்காது.
தினேஷ்: ஓ... லவ் மேரேஜ் அவ்ளோ ஈஸி -ன்னு நினைச்சுட்டு இருக்கிறியா..?? அரேஞ் மேரேஜ் பண்ணுறத விட லவ் லவ் மேரேஜ் பண்றது தான் கஸ்டம். இப்போ நீ லவ் மேரேஜ் தான் பண்ணனும்னு ஒரு மைண்ட் செட் -ல இருந்தா.. நீ திடீர்னு யாரை பாத்தாலும் அட்ராக்ட் ஆவ. ஏன் இவங்க ஓகேவா தானே இருக்காங்க.. லவ் பண்ணா என்னான்னு தோணும்.
ஆனா லவ் -ன்னா அப்படிலாம் வர கூடாது. லவ் லாம் (Magic) மேஜிக் மாதிரி தானா நடக்கணும். நீயே பண்ணனும்னு நெனச்சு பண்ணாலும் அது ஆர்ட்டிஃபிஷியல்ல தான் இருக்கும். ஒருத்தர முதல்ல பாத்து, புரிஞ்சு, பேசி, பழகி, அவங்க கூட செட் ஆகி அதுக்கப்புறம் அவங்க மேல லவ் வந்து.. பல வருஷம் தாண்டி லவ் பண்ணி அப்புறம் கல்யாணம் பண்ணா தான் கடைசி வரைக்கும் அந்த ரெலேஷன்ஷிப் ஸ்ட்ராங்கா இருக்கும்.
லாவண்யா: ஓ.. நீ அப்ப சுவேதாவ அப்படி தான் லவ் பண்ண..??
தினேஷ்: ஆமா..!!! ஏன் உனக்கு தெரியாதா..?? நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கிறப்பல இருந்தே எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும். நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து, அப்புறமா லவ் பண்ணி, இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஸ்டேஜ்ல வந்து நிக்கிறோம்.
லாவண்யா: எனக்கும் அதே மாதிரி நடக்கும். ஆனா நீங்க தான் எனக்கு டைம் கொடுக்க மாட்டேங்கிறீங்களே...
தினேஷ்: எதுக்கு மா உனக்கு டைம் குடுக்கணும்..?? நீ ஏற்கனவே ஸ்கூல் படிக்கிறப்போ ஒருத்தன லவ் பண்ணி.. அவன் தான் எனக்கு வேணும் இல்லைன்னா சூசைட் பண்ணிப்பேன் அப்படி இப்படின்னு சொன்னியே... அவன் உன்ன விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணி... அவ கூட சேந்து இன்னைக்கு அவன் டீ கடையில டீ ஆத்திக்கிட்டு இருக்கான். அவனை கல்யாணம் பண்ணி இருந்தா நீயும் சேர்ந்து டீ ஆத்துகிட்டு தான் இருப்ப. அது கூட பரவால்ல..அவன் பழக்க வழக்கமே சரியில்ல.. உனக்கே தெரியும் -ல...
லாவண்யா: அது ஏதோ அறியாத வயசு தெரியாம பண்ணிட்டேன்.. அதுக்குன்னு எனக்கு அரேஞ்ச் மேரேஜ் பண்ணி வப்பீங்களா..?? எனக்கு அரேஞ்ச் மேரேஜ் -ல எல்லாம் நம்பிக்கை இல்லை. நீ என்ன பத்தி எல்லாம் யோசிக்க வேண்டாம். நீ அந்த சுவேதாவ கல்யாணம் பண்ணிக்கோ. உன் லைஃப்-ஐ பாரு.
தினேஷ்: அப்படி எல்லாம் உன்ன விட முடியாது. அரேஞ்ச் மேரேஜ் அப்படி ஒன்னும் மோசம் கிடையாது. ஒரு வருஷத்துக்குள்ள உனக்கும் கல்யாணம் பண்ணி, எனக்கும் கல்யாணம் பண்ணி ஆகணும். எனக்கு டைம் இல்ல. வேற வழியும் இல்லை. அதுக்காக உனக்கு பிடிக்காத கல்யாணத்தலாம் பண்ணி வைக்க மாட்டோம். டோன்ட் வரி...
ஷாலினியின் வீட்டில்...
ஷாலினியின் வீட்டு வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தாள் அவளுடைய தங்கை கௌசல்யா. ஷாலினி வீட்டிற்கு நடந்து வருவதை பார்த்த கௌசல்யா, “ஏன் இன்னைக்கு நடந்துவர்ற...?? லாவண்யா அக்கா உன்ன வந்து ட்ராப் பண்ணலையா..??" என்று அக்கறையாக விசாரிப்பவளை போல் நடித்தாள். “ஆமா.. அப்படியே இவளுக்கு என் மேல ரொம்ப தான் அக்கறை இருக்குற மாதிரி வெளியில மட்டும் எப்படி தான் இவளால இப்படிலாம் நடிக்க முடியுதுன்னு தெரியல..." என்று தன் மனதிற்குள் நினைத்தவள், “அந்த அக்காவுக்கு வேலை இருக்குன்னு தெரு மொக்கு-ல இறக்கிவிட்டுட்டு அப்படியே கிளம்பிட்டா. அதான் நடந்து வந்தேன்." என்றாள் ஷாலினி.
கௌசல்யா: அப்படியா அக்கா.. சரி நீ போய் ட்ரஸ் மாத்திட்டு சாப்பிடு.
தன்னுடைய அறைக்கு வந்து அங்கு இருந்த கதவை அறைந்து சாத்திய ஷாலினி, வேகமாக உடையை மாற்றிவிட்டு அமர்ந்தாள். அப்போது லாவண்யாவிடமிருந்து அவளுக்கு கால் செய்யுமாறு ஒரு மெசேஜ் வந்திருந்ததை பார்த்தாள். அதனால் லாவண்யாவிற்கு கால் செய்தாள் ஷாலினி. அவள் தொடர்ந்து இரண்டு, மூன்று முறை, கால் செய்தும் லாவண்யா கால் ஐ எடுக்காததால் கடுப்பான ஷாலினி, போனை பெட்டில் தூக்கி எறிந்துவிட்டு சலிப்பாக பெட்டில் அமர்ந்தாள்.
அப்போது அவனுடைய அறைக்கு வெளியே மிகவும் சத்தமாக இருந்தது. “அம்மாவும், மகளும், புதுசா ஏதோ ஒரு டிராமாவ ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல." என்று நினைத்த ஷாலினி, அவள் அமர்ந்திருந்த பெட்டில் அப்படியே சரிந்தாள். ஷாலினி உடைய மனது வெறுமையாக இருந்தது. அவளுடைய தலைக்கு மேலே இருந்த சீலிங்கையும், மெதுவாக சுற்றி கொண்டு இருந்த (Fan) பேன் -ஐயும், பார்த்து கொண்டு இருந்தாள் ஷாலினி.
அப்போது அவளுக்கு திடீரென்று விஷ்ணுவின் முகமும், அவன் கண் அசைத்து அவளை வண்டியில் ஏறி அமர சொல்லியதும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதை நினைத்து பார்த்தவள், வெட்கத்துடன் மெலிதாக சிரித்தாள்.😁 பெண்களிடம் டைம் பாஸ்சுக்காக பழகி, அவர்களை ஏமாற்றி அப்படியே விட்டுவிட்டு சென்று விடும் ஆண்களுக்கு நடுவில் விஷ்ணு உண்மையாகவே அவளை காதலித்து, அவளையே திருமணமும் செய்து கொண்டால்... அவனோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சிறிது நேரம் கற்பனை செய்து பார்த்தாள் ஷாலினி. 😍 🥰
அது கற்பனையாக இருந்தாலும் அவளுக்கு அது மகிழ்ச்சியை தர கூடியதாக இருந்தது. அதனால் ஷாலினி அதை விரும்பினாள். 🥰 “கற்பனை எல்லாம் நல்லா தான் இருக்கும் ஷாலினி. ஆனா இந்த நிஜம் மோசமானது. நீ நினைக்கிறது எல்லாம் அப்படியே நடக்கிற அளவுக்கு உனக்கு என்ன நல்ல தலை எழுத்தா இருக்கு..?? கண்டத ஆசைப்பட்டுட்டு அப்புறம் நீ தான் கிடைக்கலைன்னு வருத்தப்படுவ... எதுக்கு...!! நம்ம இருக்கிற நிலைமைக்கு இதெல்லாம் நமக்கு தேவை தானா கோபி..." என்று தன் மனதிற்குள் நினைத்த ஷாலினி, விரக்தி புன்னகை சிந்தினாள். 😁😁😁
அப்போது அவளுடைய கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. 😢 அவள் நினைத்து நினைத்து அழுவதற்கு அவளுக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் இப்போது அவள் எதை நினைத்து கண்ணீர் விடுகிறாள் என்று அவளுக்கும் கடவுளுக்கும் தான் வெளிச்சம்.
ஷாலினி அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு இருக்கும் போது, அவளுடைய அறையின் கதவு வேகமாக தட்டப்பட்டது. “கற்பனையில கூட என்ன நீங்க நிம்மதியா இருக்க விட மாட்டீங்கள்ல..." என்று தன் நிலைமையை நினைத்து சிரித்த 😁 ஷாலினி, எழுந்து சென்று கதவை திறந்தாள்.
அப்போது கதவிற்கு வெளியே நின்று கொண்டு இருந்த கௌசல்யா, “அக்கா அப்பா வந்திருக்கிறாரு.. உன்ன கூப்பிட்டாரு.." என்றாள். இப்போது அவர் ஏன் வந்து இருக்கிறார் என்று நினைத்து குழம்பிய ஷாலினி, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள். செல்லும் ஷாலினியையே விரைத்து பார்த்து கொண்டு இருந்த கௌசல்யா, மர்ம புன்னகை சிந்தினாள்.
ஷாலினி ஹாலிற்கு வந்தாள். அப்போது அவளுடைய அப்பா சசி ஒரு இளைஞனோடு பேசி கொண்டு இருந்தான். அவர்கள் அருகே சென்ற ஷாலினி, “அப்பா" என்று அழைத்தாள். அவள் திறந்த வாயை முழுதாக மூடி இருக்க கூட இல்லை.. அதற்குள் அவளுடைய கன்னத்தில் அவளுடைய அப்பா சசி அடித்த அடி இடியாக இறங்கியது. ஷாலினியுடைய கண்கள் கலங்கியது. 🥺 சசி அடித்த அடியின் தாக்கத்தால் தடுமாறிய ஷாலினி, அவள் கண்ணத்தில் தன் கையை வைத்த படி இரண்டடி பின்னே சென்று விட்டு தருமாறி பின் நேராக நின்றாள்.
இந்த அடி எல்லாம் அவளுக்கு ஒன்றும் புதியதில்லை. ஆனால் இவர்கள் முன் மட்டும் அழுது தன்னை பலவீனமான ஆளாக காட்டி கொள்ள கூடாது என்று நினைத்த ஷாலினி, அழுத்தமாக வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தாள். அவளுடைய கன்னத்தில் சசியின் ஐந்து விரலும் பதிந்திருந்தது. அவளுடைய வாய் கிழிந்து அதில் இருந்து லேசாக ரத்தம் கூட வெளியே வந்தது.
சசி: “இங்க பாரு எப்ப பார்த்தாலும் எவ்ளோ அடி வாங்கினாலும் இப்படி தான் மாடு மாதிரி அமைதியாவே நிக்கிறது.. இதுக்கெல்லாம் சூடு, சுரணை - லாம் இருக்குமோ.. இருக்காதோ.. தெரியல." என்று தன் மனைவி மாலதியை பார்த்து சொன்னான்.
மாலதி: அந்த புள்ள.. நம்ப இது தான் நல்லது, கெட்டதுன்னு சொல்லிக் கொடுத்தா கேட்டுக்க போகுது.. அதுக்கு எதுக்குங்க புள்ளைய அடிக்கிறீங்க...??
சசியின் அருகே நின்று அது வரை அங்கு நடப்பது எல்லாம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்த அந்த இளைஞன், “ஆமா மாமா. அக்கா சொல்றது கரெக்ட் தானே.. நம்ம வீட்டு புள்ளை நம்ம சொல்றத கேட்டுக்காதா என்ன..?? என் ஷாலுவ என் முன்னாடியே இப்படி எல்லாம் அடிக்காதீங்க மாமா. பாக்கிறதுக்கே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு." என்றவன், அவனால் முடிந்த வரை அவனுக்குத் தான் ஷாலினியின் மீது பாசம் அதிகம் என்பது போல் பேசினான்.
சசி: "பின்ன என்ன மாப்பிள வயசுக்கு வந்த பொண்ணு பண்ற காரியமா இது..?? எவ்வளவு தைரியம் இருந்தா எவன் கூடவோ உரசிகிட்டு பைக் -ல வந்து தெரு முனையிலேயே வந்து இறங்குவா..??? இன்னைக்கு அவன் கூட ஜோடி சேந்துக்கிட்டு பைக்ல ஊர் ஊரா சுத்துறவ நாளைக்கு அவன் கூட வீட்டை விட்டு ஓடி போவா.. இவளுக்கு என்ன இவ பாட்டுக்கு எங்கேயாவது ஆடிக்கிட்டு அவன் கூட போய் சந்தோசமா இருப்பா. என் வீட்டு மானந்தானே கப்பலேறிப் போயிரும்...
அப்ப இந்த ஊர் என்ன மாப்பிள்ளை பேசும்..?? அம்மா இல்லாத பொண்ண நல்லா பாத்துக்கிறேன்னு அடுத்த பொண்டாட்டி கட்டினான் இவன்.. கடைசில இவன் பொண்ணு ஒருத்தன கூட்டிட்டு ஓடி போயிடுச்சுன்னு ஊரே பேசுமே.. அப்போ என் குடும்ப மானம் தானே சந்தி சிரிச்ச்சு போயிரும்... இவளுக்கு அப்புறம் இவளுக்கு ஒரு தங்கச்சி இருக்கா -ன்னு நினைப்பு இருந்தா இவ இப்படி எல்லாம் பண்ணுவாளா...???" என்றவன் மீண்டும் ஷாலினியை சரமாரியாக அடித்தான்.
ஒரு இரண்டு நிமிடம் “வேண்டாம் மாமா.. வேண்டாம் மாமா.." என்று மட்டும் சொல்லி கொண்டு அமைதியாக ஷாலினி அடி வாங்குவதை பார்த்து கொண்டு இருந்த ரவி, “திமிரு புடிச்சவ.. எவ்ளோ அடி வாங்கினாலும் அசராம நிக்கிறா பாரு.... இதெல்லாம் உனக்கு பத்தாது டி. நான் ஒருத்தன் இருக்கும் போதே.. என் கண்ணு முன்னாடியே இன்னொருத்தன் கூட பைக்ல வந்து நீ இறங்குனப்ப எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? கொஞ்ச நாள் உன்ன ப்ரீயா விட்டதால உனக்கு துளிர் விட்டு போயிருச்சு.
அதான் உங்க அப்பன் கிட்ட சொல்லி அவன கையோடு இங்க கூட்டிட்டு வந்தேன். உங்க அப்பாகிட்ட எதையாச்சு சொல்லி அவனை கரெக்ட் பண்ணி உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணல என் பேரு ரவி இல்லடி." என்று தன் மனதிற்குள் நினைத்தவன், ஷாலினியை அடித்து கொண்டு இருந்த சசியின் கையை பிடித்து தடுத்தான்.
“இல்ல மாப்பிள்ளை என்ன விடு. இவள நாலு அடி அடிச்சா தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்." என்ற சசி, மீண்டும் மீண்டும் அவளை அடிப்பதற்காக சீறிப் பாய்ந்தான். “போதும் மாமா. விடுங்க பாவம் அவ. நான் சொன்னா கேக்க மாட்டீங்களா..?? நான் பார்த்துக்குறேன் மாமா." என்று ரவி சொன்னதால் அமைதியான சசி, ஷாலினியை பார்க்க பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்.
சசி வெளியே சென்றவுடன் தன் மகள் கௌசல்யாவை அழைத்துக் கொண்டு அவர்களுடைய அறைக்கு சென்றுவிட்டாள் மாலதி. நடு ஹாலில் ஷாலினியும், ரவியும், மட்டும் தான் நின்று கொண்டு இருந்தனர். “ஷாலினி மா வலிக்குதா டா.." என்ற ரவி, ஷாலினியின் அருகே சென்று.. “இங்க வலிக்குதா.. இல்ல இங்க வலிக்குதா..." என்று கேட்ட படியே அவளுடைய அங்கங்களை தொட்டு தடவினான்.
ஷாலினியின் கண்கள் கோபத்தால் சிவந்து இருந்தது. 😡 🤬 ஏற்கனவே அவளுடைய அப்பா சசி அவளை வெறித்தனமாக தாக்கி இருந்ததால் பலவீனமாக இருந்தாள் ஷாலினி. இருந்தாலும் அவளால் இந்த நாய் அவளை பிராண்டுவதை சகித்து கொள்ள முடியவில்லை. “கைய எடுடா.." என்று உச்ச சுருதியில் பத்திரகாளி ஆக மாறிய ஷாலினி அவனை எரித்துவிடும் பார்வை பார்த்து கத்தினாள். ஷாலினியின் எச்சரிக்கைகளுக்கு எல்லாம் அவன் பயபடுவதாகவே தெரியவில்லை.
“கோபப்படாத ஷாலினி. உனக்காக மாமா நான் இருக்கேன்." என்றவன், அவளை கட்டி பிடித்து கொண்டான். 🤗 தன்னுடைய சக்தி மொத்தத்தையும் திரட்டிய ஷாலினி, அவளுடைய பலத்தை கொண்டு தன்னிடமிருந்து அவனை பிடித்து தள்ளியவள் அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். ஷாலினியிடம் அடி வாங்கிய ரவி, வெறி பிடித்த மிருகமாய் மாறி.. அவனுடைய இறையாக ஷாலினியை பார்த்தவன்; “என்னவே அடிச்சுட்டல.. இன்னைக்கு நான் உன்ன விட மாட்டேன் டி.."
என்றவன், ஷாலினியின் மீது பாய்ந்தான்.
- நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.