தாபம் 39

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 39: ரித்திகாவிற்கு மயக்கம் தெளிந்தது



வாய்விட்டு பாடிய படியே பைக்கை ஓட்டி கொண்டு இருந்தான் விஷ்ணு. அதை கேட்டு ஷாலினி கடுப்பானாள். 😒

ஷாலினி: ஹலோ.. !! ரித்திகா அக்காவுக்கு உடம்பு சரி இல்லைன்னு அவங்கள ஹாஸ்பிடலுக்கு பாக்குறதுக்கு போயிட்டு இருக்கோம். நீங்க ஜாலியா லவ் சாங் பாடிட்டு வரீங்க? எப்படி உங்களால இப்படி எல்லாம் இருக்க முடியுது?

விஷ்ணு: கோச்சிக்காத ஷாலு மா.. 😁

ஷாலினி: “என்னது?" 🤨 என்று கடுமையான குரலில் அவனை முறைத்த படி கேட்டாள்.

விஷ்ணு: ஷாலினி அவனை பார்த்து முறைப்பதை சைடு மிரரில் கவனித்தவன், “டேய் விஷ்ணு கொஞ்சம் அடக்கி வாசி டா. இல்லனா கடுப்பாகி பாதில பைக் ஐ நிறுத்தி கீழ இறங்கி அவளே தனியா போனாலும் போய்டுவா." என்று தன் மனதிற்குள் நினைத்தவன், வெட்கமே இல்லாமல் அவனுடைய அனைத்து பற்களையும் காட்டி இழித்த படி.. “சாரி.. சாரி.. ஒரு எக்சைட்மென்ட்ல அப்டி பேசிட்டேன்." 😁

என்றவன், பின் சீரியஸ் ஆன குரலில்... “ரித்திகா சிஸ்டருக்கு இப்படி ஆயிடுச்சேன்னு எனக்கு நிஜமாவே வருத்தமாதாங்க இருக்கு. ஆனா உங்க கூட இப்டி தனியா பைக்ல போறது ஒரு மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த குஷில தான் என் அறியாம பாடிட்டேன். ப்ளீஸ் என்ன தப்பா நினைச்சுக்காதீங்க." என்று மனதார சொன்னான்.

ஷாலினி: ஓகே.. ஓகே.. என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவள், “என் கூட வர்றதுல அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம்.. ?" என்று கேட்டாள்.

விஷ்ணு: அதெல்லாம் Boys thing. உங்களுக்கு சொன்னா புரியாது விடுங்க.

ஷாலினி: “ஓ... என்னமோ.." என்றவள், அதற்கு மேல் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சுற்றிலும் வேடிக்கை பார்த்த படி அமைதியாகவே இருந்தாள்.

விஷ்ணு: ஏங்க அமைதியாவே வர்றீங்க...?

ஷாலினி: பின்ன சும்மா உங்கள மாதிரி தொன தொனன்னு பேசிட்டே இருக்க சொல்றீங்களா?

விஷ்ணு: ஆமாங்க. எப்ப பாத்தாலும் பேசிக்கிட்டே இருக்கணும். அதான் உடம்புக்கும், மனசுக்கும் ரொம்ப நல்லது. உங்களுக்கு தெரியாதா..?? வாய் விட்டு பேசினால் நோய் விட்டு போகும்னு சொல்லுவாங்களே...

ஷாலினி: மெலிதாக சிரித்தவள், 😁 “அது வாய் விட்டு பேசினா இல்ல. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ன்னு சொல்லுவாங்க." 😁

விஷ்ணு: சைடு மிரரில் அவள் புன்னகைக்கும் அழகை பார்த்து அவனும் சிரித்தவன், 😁 “பின் அது எனக்கு தெரியும் ஷாலினி." என்றான் நக்கலாக. 😂

ஷாலினி: “அதான் தெரியுதுல.. அப்பறம் ஏன் அப்படி சொன்னீங்க..??" என்று கேட்டாள் காட்டமாக. 😒🤨

விஷ்ணு: “எப்பயாவது வந்து மனுஷங்களை சந்தோஷ படுத்துர அந்த மழை மாதிரி வர்ற உங்க ஸ்மைல்ல பாக்க தான்." என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😂

அவன் இப்படி சொல்லவும் ஷலினிக்கு ஏதோ போல் ஆகி விட்டது. அவன் சொல்வது மொக்கையாக இருந்தாலும்... சொல்வது அவன் என்பதாலும், அவன் சொன்ன விதம் அவளுக்கு பிடித்து இருந்ததாலும், அதை தன் மனதிற்குள் ரசித்தவள், வெட்கப்பட்டாள். ☺️ ஆனால் வெளியில் அதை அவனிடம் காட்டி கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை.

ஷாலினி: தன்னுடைய முகத்தை சீரியஸாக வைத்து கொண்டவள், “என்னங்க comparison இது...?? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம.." என்றாள்.

விஷ்ணு: இந்த மாதிரி யாராச்சு எதாச்சும் சொன்னா.. அத அனுபவிக்கனும். அத விட்டுட்டு இப்ட ஆராய்ச்சி பண்ணி பாக்க கூடாது. ஓகேவா...?? 😂

ஷாலினி: அத விடுங்க. ஒழுங்கா ரோட்டை பார்த்து ட்ரைவ் பண்ணுங்க. நீங்க பாட்டு கண்டத பேசிகிட்டு ரோட்ட பாக்காம எங்கேயாவது கொண்டு போய் விட்டுடீங்கன்னா... நம்ம பேஷண்ட பாக்க போறோம்னு கிளம்பி கடைசில நம்மளே பேஷன்ட் ஆகி ரித்திகா அக்கா அட்மிட் ஆகி இருக்க அதே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிட வேண்டியது தான்.

விஷ்ணு: ஏங்க இப்படி எல்லாம் நெகட்டிவா பேசுறீங்க..?? அப்படிலாம் ஒன்னும் ஆகாது.

ஷாலினி: நீங்க அமைதியா டிரைவிங்ல ஃபோகஸ் பண்ணா ஒன்னும் ஆகாது தான். ஆனா உங்க வாய் தான் அப்படி இருக்குமான்னு தெரியல....

விஷ்ணு: “அட போங்க ஷாலினி. இந்த வாய திறந்து நான் ஒரு வார்த்தை அவங்க கூட பேசிட மாட்டேனான்னு எத்தனை பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க தெரியுமா? என்னமோ உங்களுக்கு மட்டும் தான் நான் வாய தொறந்து பேசினாலே புடிக்க மாட்டேங்குது. எனக்கும் அதான் ஏன்னு புரிலைங்க. ஏங்க அப்படி..??" என்று பாவமாக கேட்டான்.

ஷாலினி: விஷ்ணு பேசியதை எல்லாம் கேட்டு கடுப்பானவள் அதுலம் அப்படி தான். அதான் நீங்க பேசறத கேக்குறதுக்குன்னே ஏங்கி நிறைய பொண்ணுங்க தவிக்கிறார்களே அவங்க கிட்ட போய் பேசுங்க. என் கிட்ட ஏன் பேசுறீங்க...??" 😒 🤨

விஷ்ணு: “என்ன டா விஷ்ணு இவ எது சொன்னாலும் திட்டுறாளே.. ஒரு வேல நம்ம மேல பொசசிவ் ஆகுறாளோ..?? அப்படி பொசசிவ் ஆகுறான்னா இவளுக்கும் நம்ம மேல ஏதோ ஒரு இது... வந்துருச்சுன்னு தானே அர்த்தம்...??? சூப்பர்..!! சூப்பர்..!! வரட்டும் வரட்டும்.. வந்தா நமக்கு நல்லது தானே." என்று தன் மனதிற்குள் நினைத்தவன், “இந்த உலகத்துல எத்தன பொண்ணுங்க இருந்தாலும்... எனக்கு ஷாலினியை தானே புடிச்சிருக்கு. அவங்க யாரும் ஷாலினி ஆகிர முடியாது.." என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டான்.

ஷாலினியிடம் இதற்கு முன் இப்படி யாரும் பேசியதில்லை. அதனால் விஷ்ணு இப்படி பேசுவது அவளுக்கு புதிதாகவும், ஆச்சரியமாகவும், இருந்தது. ஒரு பக்கம் ஷாலினி அதை ரசித்தாலும், இன்னொரு பக்கம் இவன் பொதுவாகாவே பெண்களிடம் ஃப்ளீர்ட் செய்பவன் போல.. அதனால் தான் தன்னிடமும் வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விடுகிறான் என்று நினைத்து, அதை எல்லாம் அவள் பெரிதாக எடுத்து கொண்டு அவன் மேல் ஏதாவது தேவை இல்லாத உணர்ச்சிகளை வளர்த்து விட்டு பின் அவற்றால் சிரம பட்டு கொண்டு இருக்க அவள் விரும்பவில்லை.

அதனால் இதை எல்லாம் ஆரம்பத்திலேயே வளர விட கூடாது என்று நினைத்து அவனிடம் சற்று கடுமையாகவே பேசினாள்.

ஷாலினி: “ஓ... மிஸ்டர் விஷ்ணு, நீங்க இந்த ஸ்கூலுக்கு வந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள நீங்க கொஞ்சம் ஓவரா பேசுற மாதிரி உங்களுக்கே தோனலையா?" என்றாள் காட்டமாக. 😒 🤨

விஷ்ணு: அப்போது தான் அவன் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட்டதை உணர்ந்தவன், இப்போது அதை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல்... வெருமனே “சாரி" என்று சொன்னவன் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ஐந்து நிமிடப் பயணத்திற்கு பின் ஷாலினியுடன் நாராயணன் மருத்துவமனையை வந்தடைந்தான் விஷ்ணு. ஷாலினியை வாசலில் இறக்கிவிட்ட விஷ்ணு, அவன் பைக் இன் சைட் இல் மாட்டி வைத்து இருந்த பையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு பைக்கை பார்க் செய்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு அங்கு இருந்து நகர்ந்தான்.

பார்க்கிங் ஏரியாவுக்குள் நுழைந்த விஷ்ணுவை பார்த்த உடனே அவனை அடையாளம் கண்டு கொண்ட செக்யூரிட்டி, மரியாதையாக அவனை வரவேற்று தானே அவனுடைய பைக்கை பார்க் செய்வதாக சொல்லி அவனுடைய சாவியை பெற்று கொண்டு பைக்கை பார்க் செய்து விட்டு மீண்டும் அவன் சாவியை கொண்டு வந்து அவனிடமே கொடுத்தான்.

அதற்குள் தான் ஷாலினியுடன் ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டதாக சிவாவிற்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் விஷ்ணு. விஷ்ணுவிடம் இருந்து வந்த மெசேஜை அடுத்த கணமே பார்த்துவிட்ட சிவா, சித்தார்த்திற்கு ஸ்னாக்ஸ் வாங்கி தருவதாக சொல்லி அவனை கூட்டி கொண்டு அங்கு இருந்த கேன்டீனுக்கு சென்று விட்டான்.

ஹாஸ்பிடல் வாசலில் நின்று கொண்டு இருந்த ஷாலினி இன் அருகே வந்த விஷ்ணு, அவளை அழைத்து கொண்டு ரிஷப்ஷனில் ரித்திகாவை எங்கே அட்மிட் செய்து இருக்கிறார்கள் என்று விசாரித்து தெரிந்து கொண்டு உள்ளே சென்றான். விஷ்ணுவும், ஷாலினியும், ரித்திகாவை அட்மிட் செய்ய பட்டு இருந்த அறைக்கு அருகே வரும்போது அங்கே கௌத்தமும், ரித்திகாவின் பெற்றோர்களும் மட்டும் தான் இருந்தனர்.

அங்கு கௌத்தம் இருப்பதை கவனித்த ஷாலினி, அவன் யாரென்று அடையாளம் கண்டு கொண்டாள். கௌத்தமை பார்த்த விஷ்ணுவிற்கு அவன் யாராக இருப்பான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதனால் அவன் யாரென்று ஷாலினியிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.

ஷாலினியை கவனித்த ரேவதி, அவளை சோகமான முகத்துடன் வரவேற்றாள். ஷாலினியுடன் வந்து இருக்கும் விஷ்ணுவை ரேவதி கவனித்தாள். அவளுக்கு இவன் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் ஷாலினியே சொல்லட்டும் என்று நினைத்த ரேவதி, விஷ்ணுவை பற்றி அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

பள்ளியில் இருந்து நேராக கிளம்பி இங்கே வந்து விட்டதால் ரித்திகாவிற்கு எந்த சத்தான உணவு வகைகளையும் தான்னால் வாங்கி வர முடியவில்லை என்று சொல்லி ரேவதியிடம் மண்ணிப்பு கேட்ட ஷாலினி, அடுத்த முறை வரும் போது தான் ஏதாவது வாங்கி வருவதாக சொன்னாள். “பரவால்ல மா அதனால என்ன.." என்றாள் ரேவதி.

அப்போது அவர்கள் வரும் போது ரித்திகாவின் பொருட்களை எடுத்து வந்தது ஷாலினிக்கு ஞாபகம் வர அதை அனைத்தையும் ரேவதி இடம் கொடுத்தாள். ரேவதி, ஷாலினி இடம் இருந்து அதை பெற்று கொண்டு பத்திரபடுத்தினாள். அப்போது ரித்திகா அட்மிட் செய்ய பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வந்தார் டாக்டர். அது வரை அமைதியாக ஓரமாக நின்று கொண்டு இருந்த கௌத்தம், டாக்டரை பார்த்தவுடன் வேகமாக அவர் அருகில் சென்று... “ரித்திக்கா இப்ப எப்படி இருக்கா டாக்டர்..??" என்று அக்கறையாக விசாரித்தான்.

கௌத்தமின் பேச்சு சத்தத்தால் அவனையும், டாக்டரையும், அங்கு இருந்த அனைவரும் கவனித்தனர். ரித்திகாவின் பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு எதுவும் தவறாக நடந்து இருக்க கூடாது என்று நினைத்து பயந்தவர்கள், பதட்டத்துடன் டாக்டரின் அருகே சென்று அவளை பற்றி விசாரித்தனர்.

டாக்டர்: பயப்படாதீங்க ரித்திகாவிற்கு ஒன்னும் ஆகல. அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சுருச்சு. ஆனா அவங்களுக்கு இன்னும் ஃபீவர் தான் குறையல. அதனால அவங்கள அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம். இனி கவலை பட ஒன்னுமில்ல. அவங்க சீக்கிரம் சரி ஆயிடுவாங்க.

டாக்டரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பின் தான் ரித்திகாவின் பெற்றோர்களுக்கு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது. இருந்தாலும் அவர்களுக்கு தன்னுடைய மகளை கண்ணார பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்பதால் டாக்டரிடம் அவளை நாங்கள் சென்று பார்க்கலாமா..?? என்று கேட்டார்கள்.

டாக்டர், ரித்திகாவை தொந்தரவு செய்யாமல் ஒவ்வொருவராக சென்று பார்க்கும்படி அறிவுறுத்தி விட்டு அங்கு இருந்து சென்றார். முதலில் ரேவதி தான் உள்ளே சென்றாள். ரித்திகாவை அப்படி பார்க்கும்போது ரேவதியின் தாயுள்ளம் வேதனையில் வாடியது. 💔 இதே போல் ரித்திகாக்கு முன் ஒரு நாள் டைபாய்டு காய்ச்சல் வந்த போது மிகவும் கஷ்டப்பட்டு அவள் அதில் இருந்து மீண்டு வந்தாள்.

அதே போல் மீண்டும் காய்ச்சல் வந்து ரித்திகா இப்படி கஷ்டப்படுகிறாளே என்று நினைக்கும் போதே ரேவதியின் இதயம் வலித்தது. ரித்திகா அதிகம் கஷ்டப்படாமல் அவளுக்கு சீக்கிரம் குணமாகி விட வேண்டும் என்று அனைத்து கடவுளையும் வேண்டினாள் ரேவதி. ரேவதி உள்ளே வந்ததில் இருந்து அவளை ரித்திகா கவனித்து கொண்டு தான் இருந்தாள். தன்னை பார்த்தும் தன்னுடைய தாய் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதை வைத்து அவள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள் ரித்திகா. அதனால் அவளே ரேவதியிடம் பேச தொடங்கினாள்.

ரித்திகா: எனக்கு ஒன்னும் இல்லம்மா. நான் நல்லா தான் இருக்கேன். நீயும், அப்பாவும் பயப்படாதீங்க. டைபாய்ட் ஃபீவர் தானே சீக்கிரம் சரியாயிடும்.

ரேவதி: உனக்கு டைபாய்டு பிவேர் தான் வந்து இருக்குடன்னு எப்படி தெரியும்...??

ரித்திகா டாக்டர் தான் மா சொன்னாரு. என் கிட்ட பேசிட்டு தான் உங்க கிட்ட சொல்றேன்னு வெளியில போனாரு.

ரேவதி: ம்ம்.. உனக்கு இப்ப எப்படி இருக்கு..?? ஏதாச்சு பெயின் இருக்கா..??

ரித்திகா பெயின் லாம் இல்ல மா. கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவு தான். நான் ஸ்கூல்ல தானே இருந்தேன்.. அப்போ மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அப்புறம் என்ன ஆச்சு என்ன யார் இங்க ஹாஸ்பிடல் -ல அட்மிட் பண்ணது..??

ரேவதி: ரித்திகா மயங்கி விழுந்தவுடன் சித்தார்த் பிரச்சனை செய்தது, சித்தார்த்தின் அப்பா அங்கே வந்து அவனை சமாதானப்படுத்தி ரித்திகாவை இங்கு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தது, மானசாவின் சஸ்பென்ஷன், சந்தோஷ், கௌத்தம் மற்றும் ஷாலினியின் வருகை என அனைத்தையும் ரித்திகாவிடம் தெளிவாக சொன்னவள்; இன்னும் சித்தார்த்தும் அவனுடைய அப்பாவும் கூட ரித்திகா கண் முழித்த பின் அவளை பார்த்து விட்டு செல்வதாக சொல்லி அங்கேயே காத்திருப்பதாகவும் அவளிடம் சொன்னாள்.

தன்னால் இத்தனை பேர் சிரமப்பட்டு இருக்கிறார்களே என்று நினைக்கும் போது ரித்திகாவிற்கு சங்கடமாகவும், வருத்தமாகவும் இருந்தது. ரித்திகாவை பார்ப்பதற்காக வெளியே இத்தனை பேர் காத்திருப்பதால் வெகு நேரம் தான் உள்ளே இருப்பது சரியாக இருக்காது என்று நினைத்த ரேவதி, ராகவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

ரேவதி வெளியே வந்தவுடன் சுதாகர் வேகமாக அந்த அறைக்குள் சென்றார். அவர் அத்தனை முறை ரித்திகா வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தும், அவள் பிடிவாதமாக வேலைக்கு சென்று இப்படி மயங்கி விழுந்து இருந்ததால் அவருக்கு ரித்திகாவின் மீது இன்னும் கோபம் இருக்க தான் செய்தது. ஆனாலும் அவருக்கு ரித்திகாவின் மீது இருக்கும் பாசம் கோபத்தை விட அதிகமானது என்பதால் தன் மகளை பார்த்தவுடன் அவருடைய அனைத்து கோபங்களையும் மறந்து அக்கறையாக அவளிடம் பேசினார்.

சுதாகர் வெளியே வந்தவுடன் ஷாலினியும், விஷ்ணுவும், ரித்திகாவின் பார்க்க உள்ளே சென்றனர். ஷாலினி அங்கே வருவதை பார்த்து மகிழ்ந்த ரித்திகா அவளுடன் விஷ்ணுவும் அங்கே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அன்று கோயிலில் செண்பகத்துடன் விஷ்ணுவை பார்தது அவளுக்கு இன்னும் ஞா
பகத்தில் இருந்தது.

- நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.