தாபம் 38

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 38: என் கனவு நீதானடி..

ஷாலினியிடம் ரித்திகாவை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்த லாவண்யா, அவள் அருகே சென்றாள். தனக்கு பின்னே வந்து கொண்டு இருந்த விஷ்ணுவை கவனிக்காத லாவண்யா, ஷாலினியை பார்த்தவுடன்... வேக வேகமாக ராகவியை பற்றி பேசி கொண்டு இருந்தாள்.

அவர்கள் பேசி கொண்டு இருப்பதை கவனித்து கொண்டே அவர்கள் அருகே வந்த விஷ்ணு; ராகவி, சித்தார்த் என்று அவர்கள் பேசியதை அரை குறையாக கேட்டு விட்டு அந்த பெயர்கள் தனக்கு நன்கு பரிச்சயமானவை என்பதால்.. அவர்களுக்கு என்னவாயிற்று என்று கேட்க வேண்டும் என்று நினைத்தவன், ஷாலினி ஐ அழைத்தான்.

ஷாலினி, லாவண்யா இருவருமே விஷ்ணுவை திரும்பி பார்த்தனர். ஏற்கனவே ஷாலினி, ராகவியை பற்றி நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்ததால்... விஷ்ணுவை பார்த்தவுடன், “இவன் இப்ப எதுக்கு வந்து நம்மள கூப்பிடுறான்?" என்று நினைத்து கடுப்பானாள். விஷ்ணுவிற்கு ஷாலினியை தெரியுமா? என்று முதலில் ஆச்சரியப்பட்ட லாவண்யா, பின் எது எப்படியோ ஷாலினியை வைத்தே விஷ்ணு விடம் நெருங்கி பழகி விட வேண்டும் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.

விஷ்ணு: “ஏதோ.. சித்தார்த், ரித்திகான்னு எண்ணமோ பேசிட்டு இருந்தீங்க... என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா?" என்று ஷாலினியை பார்த்து கேட்டான்.

ஷாலினி: அது எதுக்கு உங்களுக்கு.. ? முதல்ல நாங்க பேசுறத நீங்க ஒட்டு கேட்டதே தப்பு. இதுல எங்க கிட்டேயே வந்து என்ன ஆச்சு? ஏதாச்சுன்னு வேற கேட்டுட்டு இருக்குறீங்க?

விஷ்ணு: ஷாலினி அவனிடம் முகத்தில் அடித்த மாதிரி பேசியது அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது. இருந்தாலும் விஷயம் சித்தார்த்தை பற்றியது என்பதால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் அக்கரையில் மீண்டும் அவளிடம் பேசினான்.

“ஏங்க இப்ப கோச்சுக்கிறீங்க? எனக்கு தெரிஞ்சு டான்ஸ் டீச்சர் ராகவி சிஸ்டர் மட்டும் தான் ரித்திகான்ற பேர்ல இந்த ஸ்கூல்ல இருக்காங்க. அதான் அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையான்னு அக்கறைல கேட்டேன். அது ஒரு தப்பா?" என்று அவனுடைய முகத்தை பாவமாக வைத்து கொண்டு ஷாலினியை பார்த்து சோகமாக கேட்டான். 😞

ஷாலினி: பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் இருக்கும் அப்பாவி குழந்தை போல விஷ்ணு தன்னுடைய முகத்தை சோகமாக வைத்து கொண்டு இருப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. “நம்ம தான் கொஞ்சம் ஓவரா பேசிட்டமோ?" என்று தன் மனதிற்குள் நினைத்தவள், இருந்தாலும் அவனிடம் மன்னிப்பு கேட்க மனமின்றி.. “உங்களுக்கு ராகவி அக்காவ தெரியுமா?" என்று மட்டும் கேட்டாள்.

லாவண்யா: “தெரியாம தான் அவங்க டான்ஸ் டீச்சர்னு கரெக்டா சொல்லுவாரா இவரு? என்ன ஏதுன்னு அக்கறையா கேட்க வந்தவர் கிட்ட நீ தான் தேவையில்லாம கோபமா பேசிட்ட ஷாலு..." என்று விஷ்ணுவிற்கு வக்காலத்து வாங்கினாள்.

விஷ்ணு: “பரவால்ல விடுங்க." என்று லாவண்யாவை பார்த்து சொன்னவன், பின் ஷாலினியை பார்த்து... “எனக்கு ரித்திகா சிஸ்டர்ர நல்லாவே தெரியும். ஒரு நாள் எங்க அம்மாவுக்கு கோயில்ல Fire ஆக்சிடென்ட் ஆகி இருக்கும். அப்ப அவங்க தான் எங்க அம்மாவ காப்பாத்தினாங்க. நான் இந்த பக்கம் வரும் போது எதர்ச்சியா நீங்க பேசுறது கேட்டுச்சு. அதான் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டேன். ப்ளீஸ் இப்பவாது அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க." என்றான்.

ஷாலினி விஷ்ணுவிடம் பேசுவதற்காக தன் வாயை திறந்தாள். அதற்குள் முந்தி கொண்ட லாவண்யா, அவளே தான் மற்றவர்களிடம் நடந்தது என்னவென்று கேட்டு தெரிந்து கொண்ட அனைத்தையும் ஒன்று விடாமல் விஷ்னுவிடம் சொன்னாள். அனைத்தையும் கவனமாக கேட்ட விஷ்ணுவுக்கு இவ்வளவு நடந்து இருக்கிறது, வருனே இங்கு வந்து ரித்திகாவையும், சித்தார்த்தையும், அழைத்து சென்று இருக்கிறான். ஆனால் இங்கேயே இருக்கும் அவனுக்கு ஏன் யாரும் இதை பற்றி உடனே தெரிவிக்கவில்லை? என்று தன் மனதிற்குள் கோபப்பட்டான்.😒

இதை பற்றி விஷ்ணு யோசித்து கொண்டு இருக்க, லாவண்யாவே மீண்டும் பேச தொடங்கினாள். விஷ்ணுவை பார்த்த லாவண்யா, “நாங்க ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்ச உடனே ராகவி அக்காவ பாக்க ஹாஸ்பிடலுக்கு போலாம்னு இருக்கோம். நீங்க வரிங்களா?" என்றாள். இவள் ஏன் இப்போது இவனையும் தங்களுடன் சேர்ந்து வருமாறு அழைக்கிறாள் என்று லாவண்யாவை முறைத்து பார்த்தாள் ஷாலினி. 🤨

லாவண்யா அதை கவனித்தாலும், இப்போது ஷாலினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மன நிலையில் அவள் இல்லை. விஷ்ணுவை பார்க்க பார்க்க இன்னும் அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பு அதிகமாகி கொண்டே இருந்தது. அதனால் அவனோடு செலவிட கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானது என்று நினைத்தவள், விஷ்ணுவை தனக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். 🥰

விஷ்ணு யோசித்து பார்த்தான். லாவண்யா சொல்லியதை எல்லாம் வைத்து பார்த்தால் ரித்திகாவின் உடல் நிலை சரி இல்லாமல் இருக்கிறதே தவிர சித்தார்த் நன்றாக தான் இருக்கிறான் என்று அவனுக்கு தோன்றியது. ஏனென்றால் சித்தார்துக்கு ஏதாவது சீரியஸ் ஆக ஆகி இருந்தால்.. இந்நேரம் அவனுக்கு வருனே தகவல் தெரிவித்து இருப்பான் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.

அதனால் சிவாவிற்கு கால் செய்து என்ன ஆனது என்று பிறகு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவன், ஷாலினி இடமும், லாவண்யா இடமும், தானும் சாய்ந்திரம் அவர்களோடு மருத்துவமனைக்கு வருவதாக சொல்லிவிட்டு அங்கி ருந்து நகர்ந்தான். விஷ்ணு சொன்னதை கேட்டு ஷாலினி, தன்னுடைய முகத்தில் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் இருந்தாள். விஷ்ணுவும் தங்களோடு வரப்போகிறான் என்று நினைத்து மகிழ்ந்த லாவண்யா, அவளுடைய அனைத்து பற்களும் அழகாக வெளியில் தெரியும் படி பெரியதாக அவனை பார்த்து சிரித்தாள். 😁 😁

அவர்களோடு பேசிவிட்டு நேராக பிரின்சிபல் சாரதாவின் அறைக்கு சென்றான் விஷ்ணு. சாரதாவை பார்த்தவன், இவ்வளவு நடந்தும் சித்தார்த்தை பற்றி ஏன் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று அவளிடம் கோபப்பட்டான். ☹️ எனக்கு இருந்த பதட்டத்தில் அதை உங்களிடம் தெரிவிக்க மறந்துவிட்டேன் என்று விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டாள், சாரதா. “நீங்க சொல்லலை ஓகே. மானசாவுக்கு என்ன ஆச்சு? அவங்க ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல.. ?"என்று மானசாவை பற்றி சாரதாவிடம் விசாரித்தான் விஷ்ணு.

மானசாவின் மீதும் தவறு இருப்பதாகவும், ரித்திகா லீவு கேட்டும் மானசா அவளுக்கு லீவு தராததால்... காய்ச்சலோடு ராகவி இங்கு வந்து.. மற்ற குழந்தைகளுக்கு அவளிடம் இருந்து நோய் பரவி விட்டால் என்ன செய்வது.. ?" என்று மானசாவை கேள்வி கேட்ட விஷ்வா, அவளை சஸ்பெண்ட் செய்து விட்டதாக விஷ்ணுவிடம் சொன்னாள் சாரதா.

வருண் செய்தது தான் சரி என்று நினைத்த விஷ்ணு, இதற்கு மேலும் சாரதாவிடம் கேள்வி கேட்டு அவரை தர்ம சங்கடமான நிலையில் நிற்க வைக்க வேண்டாம் என்று அங்கு இருந்து கிளம்பினான். அங்கு இருந்து வந்த விஷ்ணு, தன்னை சுற்றி யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் சிவாவுக்கு கால் செய்தான். சிவா, ரித்திகாவுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. ஆனால் அவளுக்கும், சித்தார்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னதை கேட்ட பின் தான் விஷ்ணுவிற்கு நிம்மதியாக இருந்தது.

ஈவ்னிங் லாவண்யா உடனும், ஷாலினியுடனும், ரித்திகாவை பார்ப்பதற்காக தான் அங்கே வருவதாக சொன்ன விஷ்ணு; அவன் அங்கே வரும் போது, சித்தார்த் அங்கே இல்லாத படி பார்த்து கொள்ள சொன்னான். ஏனென்றால் சித்தார்த், விஷ்ணுவை அங்கே பார்த்துவிட்டால்... விஷ்ணு, ஷாலினிக்காக ஒரு சாதாரணமான ஆசிரியராக அங்கே வேலை பார்ப்பது வீணாகிவிடும். விஷ்வா நாராயணன் குரூப்ஸ் உடைய தலைவர் என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும் சித்தார்த் உடைய அப்பா பெரிய பணக்காரர் என்று அந்த பள்ளியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

விஷ்ணு, ஷாலினியிடம் ஒரு சாதாரணமான நபராக பழகி அவளுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறான். அதனால் தன்னுடைய அடையாளத்தை முடிந்த வரை அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கவனமாக இருந்தான். சிவாவிடம் விஷ்ணு பேசிவிட்டு அவன் காலை கட் செய்யும் போது சரியாக இன்டர்வல் பீரியட் முடிந்து இருந்தது. அதனால் அடுத்து அவன் செல்ல வேண்டிய வகுப்புக்கு சென்று விட்டான் விஷ்ணு.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின்...

பள்ளி நேரம் முடிந்து ஓவர் பெல் அடித்தது. மாணவர்கள் அனைவரும் தங்களுடைய வகுப்பு அறையில் இருந்து வெளியே வந்து பள்ளி பேருந்தில் ஏறி கொண்டு இருந்தனர். ஷாலினியும், லாவண்யாவும், ஸ்டாப் ரூமில் இருந்தனர். அப்போது ஷாலினி, லாவண்யாவிடம் அவர்கள் செல்லும் போது ரித்திகாவை பொருட்கள் அனைத்தையும் இங்கு இருந்து மறக்காமல் எடுத்து கொண்டு சென்று அவளிடம் கொடுக்க வேண்டும் என்று ஞாபகப்படுத்தினாள்.

அதை கேட்ட லாவண்யா, அங்கு இருந்த ரித்திகாவுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தாள். அப்போது எதேச்சையாக அங்கு ஓரமாக இருந்த ஜன்னல் வழியாக விஷ்ணு ஸ்டாஃப் ரூமை நோக்கி வந்து கொண்டு இருப்பதை கவனித்த லாவண்யா, வேறு ஏதாவது ரித்திகாவுடைய பொருட்கள் டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில் இருக்கும். அதை தேடி எடுத்து கொண்டு வா என்று ஷாலினியை அங்கு இருந்து அனுப்பி வைத்தாள்.

லாவண்யா பிளான் பண்ணி விஷ்ணு அங்கே வருவதற்கு முன் ஷாலினியை வேறு ஒரு பக்கம் அனுப்பி வைத்துவிட்டதை அறியாத விஷ்ணு, அவளை பார்க்க போகும் ஆர்வத்தில் மகிழ்ச்சியாக அங்கே வந்தான். 🥰 ஷாலினியின் பெயரை சொல்லி அவளை அழைத்த படியே உள்ளே வந்த விஷ்ணு; அவள் அங்கே இல்லாததை பார்த்து... ஒரு வேளை அவள், ரித்திகாவை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு வராமல் தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டாளோ என்று நினைத்து வருத்தப்பட்டான். 😞

விஷ்ணுவை பார்த்தவுடன் தனக்குள் வெட்க பட்டு கொண்ட லாவண்யா, அவனை அழைத்து அங்கு இருந்த சேரில் அமர சொன்னாள். விஷ்ணுவிற்கு லாவண்யா விடம் பேச சுத்தமாக இன்ட்ரஸ்ட் இல்லை. இதில் ஷாலினி தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டாள் போல என்று நினைத்து வருத்தத்தில் இருந்தவன்; லாவண்யா சொன்னதை மதித்து சேரில் அமராமல் அவளை பார்த்து, “ஷாலினி எங்க? நம்ம கூட வரேன்னு சொன்னாங்களே... வீட்டுக்கு கிளம்பிட்டாங்களா?" என்று வருத்தமாக கேட்டான். 😞

அவன் முன்னே இருக்கும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், இல்லாத ஷாலினியை பற்றி விசாரிக்கிறானே என்று லாவண்யாவிற்கு விஷ்ணுவின் மீது கோபமும் ஷாலினி இன் மீது பொறாமையும் தோன்றியது. லாவண்யா, விஷ்ணு கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் சொல்ல தன் வாயை திறப்பதற்கும்.. ஷாலினி உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“இந்த சலங்கை மட்டும் தான் அங்க இருந்துச்சு. இத தவிர வேற ஒன்னும் இல்ல லாவண்யா." என்று சொன்ன படியே அந்த அறைக்குள் வந்தாள் ஷாலினி. அது வரை வாடிய மலராக இருந்த விஷ்ணுவின் முகம், புதிதாக பூத்த மலர் போல ஷாலினியின் குரலை கேட்டவுடன் மலர்ந்து விட்டது. அவளை பார்த்து புன்னகைத்தான் விஷ்ணு. 😁

விஷ்ணுவை பார்த்தவுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல், ஷாலினி ராகவி உடைய பொருட்களை பேக் செய்ய தொடங்கினாள். ஷாலினி வேண்டும் என்றே தன்னை இக்னோர் செய்கிறாளோ என்று நினைத்து வருத்தபட்டான் விஷ்ணு. ஷாலினியும், லாவண்யாவும், ராகவியுடைய பொருட்களையும், தங்களுடைய பொருட்களையும், எடுத்து கொண்டு விஷ்ணுவுடன் ஸ்டாப் ரூமை விட்டு வெளியே வந்தனர்.

விஷ்ணு தன்னை ஒரு சாதாரணமான ஆளாக காட்டி கொள்ள வேண்டும் என்று பெரிதும் மெனக்கெட்டான். அதனால் அவன் எப்போதும் பயன் படுத்தும் அவனுடைய விலை உயர்ந்த காரை எல்லாம் இப்போது அவன் பயன்படுத்துவது இக்ல்லை. இந்த பள்ளிக்கு வந்து செல்வதற்காகவே புதிதாக விலை குறைவான ஒரு சாதாரண பைக் ஐ வாங்கி கொண்டான். இன்றும் அவன் அந்த பைக் இல் தான் பள்ளிக்கு வந்து இருந்தான்.

அந்த பைக் ஐ வாங்கியதில் இருந்தே அந்த பைக்கில் ஷாலினியுடன் ஒரு ரவுண்ட் செல்ல வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. இன்று அதற்கு சரியான ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும் நிலையில்... அவனோடு பைக் இல் வருமாறு அவளிடம் கேட்டால் அதை ஷாலினி ஒப்பு கொள்வாளா? என்று அவனுக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவன் கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து, ஷாலினியுடன் பேச தன் வாயை திறந்தான்.

விஷ்ணு பேசுவதற்கு இடையூறாக சத்தமாக லாவண்யாவின் மொபைல் போன் அலறியது. அதில் கடுப்பானான் விஷ்ணு. இருந்தாலும் அவன் வெளியில் எதையும் காட்டி கொள்ளவில்லை. லாவண்யா உடைய அம்மா தான் அவளுக்கு கால் செய்து இருந்தாள். அதை பார்த்த லாவண்யாவிற்கு அந்த கால் ஐ அட்டன் செய்வதற்கு எரிச்சலாக இருந்தது. வேறு யாராவதாக இருந்தால் காலை கட் செய்துவிட்டு விஷ்ணுவுடன் சென்று இருப்பாள்.

ஆனால் இப்போது இவள் அவளுடைய அம்மாவின் காலை கட் செய்து விட்டால்.. இதை வைத்தே அவளுடைய அம்மா, அண்ணன், என்று அவளுடைய குடும்பமே கூட்டு சேர்ந்து கொண்டு அவளை வைத்து சிறப்பாக ஒரு சம்பவம் செய்து இருதியில் அவள் வேலைக்கே செல்ல வேண்டாம் என்று சொல்லி அவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி சாவடிப்பார்கள். அதை எல்லாம் நினைத்து பார்த்த லாவண்யா, வேறு வழி இல்லாமல் கால் ஐ அட்டெணட் செய்தாள்.

லாவண்யாவின் அம்மா: கிளம்பிட்டியா?

லாவண்யா: அவளவு தான் மா. ஸ்கூல்ல இருந்து கிளம்பிட்டேன். எங்க கூட வேலை பாக்குற ஒரு அக்காவுக்கு உடம்பு சரியில்ல. அவங்கல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. வர வழியில அவங்கள பார்த்துட்டு வீட்டுக்கு வந்துடறேன்.

லாவண்யாவின் அம்மா: நீ அங்க எல்லாம் போக வேணாம். நீ அங்க போயிட்டு வீட்டுக்கு வந்தா லேட் ஆயிடும். ஆறு மணிக்கு கோயிலுக்கு போகணும். அதனால உடனே கிளம்பி வீட்டுக்கு வா.

லாவண்யா: கோயிலுக்கா இப்ப எதுக்கு மா திடீர்னு?

லாவண்யாவின் அம்மா: அது எல்லாம் உன் கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல. உன்ன வரியான்னு கேட்கல. வான்னு சொல்றேன். இப்ப நீ உடனே கிளம்புற அவ்ளோ தான்.

லாவண்யா: “ஆறு மணிக்கு கோயிலுக்கு போறதுக்கு இப்ப என்ன மா? நான் போயிட்டு வரனே..." என்று அவள் சொல்லி கொண்டு இருக்க...

அதை கேட்க தான் லாவண்யாவின் அம்மா லைனில் இல்லை. லாவண்யா பேச தொடங்கும் போதே அவள் காலை கட் செய்து இருந்தாள். லாவண்யாவிற்கு அவளுடைய தாயின் மீது கோபம் கோபமாக வந்தது.😡 லாவண்யாவின் ஆசையில் ஒரு லாரி மண்ணை கொட்டி விட்டாள் அவளுடைய அம்மா. இப்போது லாவண்யாவிற்கு வேறு வழி இல்லை. அவள் அம்மா சொன்னது போல் உடனே கிளம்பி அவளுடைய வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் அவள்.

வாடிய முகத்துடன் விஷ்ணுவையும், ஷாலினியையும், பார்த்த லாவண்யா; “எங்க அம்மா உடனே என்ன வீட்டுக்கு கிளம்பி வர சொல்றாங்க. என்னால இப்ப உங்க கூட வர முடியாது சாரி. வேணா நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க." என்று சோகமாக சொன்னாள். 😞

ஷாலினி: “என்ன நாங்க ரெண்டு பேரும் மட்டும் போகனுமா?" என்று அதிர்ச்சியாக கேட்டாள். 😳

விஷ்ணு: அவனும் ஷாலினியும் மட்டும் தனியாக செல்ல போவதை நினைத்து அவளிடம் அதை பேச வேண்டும், இதை பேச வேண்டும், என்று எல்லாம் கற்பனை குதிரையை கிளப்பி மகிழ்ச்சியில் காற்றில் மிதக்க தொடங்கினான்.

லாவண்யா. “ஆமா ஷாலு. அம்மா வர சொல்லும் போது நான் என்ன பண்றது? போய் தான் ஆகணும்." என்ற தன்னுடைய முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொன்னாள். 😞 அவள் விஷ்ணுவோடு தனியாக சென்றால் அவனை புரிந்து கொண்டு பேசி, பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தாள். ஆனால் விதி வலியது போல.. நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடந்து விட்டால் விதிக்கு என்ன வேலை? இப்போது அவளே தன்னுடைய வாயால் ஷாலினியை விஷ்ணுவுடன் செல்லும் படி சொல்லும் நிலைமை வந்துவிட்டது.

ஷாலினி முதலில் விஷ்ணுவோடு தனியாக செல்வதற்கு தயங்கினாள். பழகியது கொஞ்ச நாளாக இருந்தாலும் ரித்திகவிற்கும் அவளுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அதனால் அவளுடைய மனது ரித்திகாவை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று அவளிடம் சொல்லி கொண்டே இருந்தது. அதனால் வேறு வழி இன்றி விஷ்ணுவுடன் செல்வதற்கு சம்மதித்தாள் ஷாலினி.

மூவரும் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தனர். விஷ்ணு தன் மனதிற்குள் ரெக்கை கட்டி வானில் பறந்து கொண்டு இருந்தான். விஷ்ணு அவனுடைய புது பைக்கை ஸ்டார்ட் செய்து ஷாலினியை அவன் பின்னே அமரும் படி கண்களால் சைகை செய்தான். ஷாலினி அவனை தன்னுடைய கண்களால் எரித்து விடும் அளவிற்கு முறைத்தாள். 😒 🤨

சிறிது தயக்கத்துடன் தன் கையில் இருந்த bagஐ விஷ்ணுவிடம் கொடுத்தாள் ஷாலினி. அதை வாங்கிய விஷ்ணு, அந்த bike-ன் சைடில் அதை மாட்டினான். ஒரு சப்போர்ட்க்காக விஷ்ணுவின் தோலை ஒரு கையால் பிடித்த ஷாலினி, விஷ்ணுவின் பின்னே அவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள். சைடு மிரரில் ஷாலினியின் முகத்தை பார்த்து திருப்தியாக புன்னகைத்த விஷ்ணு, பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கு இருந்து கிளம்பினான். 😁

ஷாலினியும், விஷ்ணுவும், அங்கு இருந்து செல்லும் வரை அங்கு நடந்த காட்சியை கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்த லாவன்யாவின் வயிறு பொறாமை தீயால் கொழுந்து விட்டு எறிந்தது. அவள் காதுகளில் இருந்து புகை வராத குறை தான். 🔥

அந்த அழகான மாலை பொழுதில் சீரான வேகத்தில் தன் மனதை கொள்ளை கொண்டவளை அவன் ஆசை பட்ட படியே அவளுக்காக அவன் வாங்கிய பைக்கில்.. அவன் பின்னே அமர வைத்து பைக் இல் சென்று கொண்டு இருந்தான் விஷ்ணு. இன்னும் ஷாலினி உடைய கை விஷ்ணுவின் தோலில் தான் இருந்தது.

ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுவதை விட்டு விட்டு தன் மீதிருக்கும் அவளுடைய கையை பார்த்து பார்த்து வெட்க பட்டு சிரித்து கொண்டு இருந்தான் விஷ்ணு. ☺️😁 ஷாலினியின் முகத்தை சைட் மீரரில் கவனித்தான் விஷ்ணு. அவள் காலையில் வேலைக்கு கிளம்பும் போது பேருக்கு அரை குறையாக போட்டு வந்து இருந்த மேக்கப் கூட அவளை கைவிட்டு இருந்த நிலையிலும் அழகு பதுமையாக இருந்த ஷாலினி விஷ்ணுவின் கண்களுக்கு ஒரு கவிதையாக தெரிந்தாள். 😍

“நான் பயணிக்கும் இந்த இரு சக்கர வாகனத்தில் இடைவெளி இருந்தும்,

மானசீகமாக உன்னை கட்டி அணைக்க ஏங்குகிறது என் மனம்... 🤗

காற்றின் வேகத்தையும் கிழித்து கொண்டு செல்கிறது...

என்னுடைய காதல் வாகனம்.... 🏍️ ❤️

இனி என்னை விட என் வாகனம் கூட உன்னை எதிர்பார்க்கும்... 😍

இனி எப்போது உன்னை சுமந்து செல்லும் வரம் கிடைக்கும் என்று..." 🥰

இவ்வாறு ஷாலினியை நினைத்து தன் மனதிற்குள் கவிதையாய் பேசி கொண்டு இருந்தான் விஷ்ணு. இது எல்லாம் அவனுக்கே புதிதாக இருந்தது. இது வரை விஷ்ணு, அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ அழகான, படித்த, பணக்கார பெண்களை எல்லாம் பார்த்து இருக்கிறான். ஆனால் யார் மீதும் ஏற்படாத ஒரு ஈர்ப்பு ஷாலினியை பார்த்த உடனே அவனுக்கு அவள் மீது ஏற்பட்டது. 😍

ஏனோ தெரியவில்லை ஷாலினியை பார்க்கும் போது எல்லாம்.. “அவள் உனக்கானவள்.." 😍 🥰 என்று அவனுடைய மனது அவனிடம் சொல்லி கொண்டே இருக்கும். இதை எல்லாம் யோசித்து பார்த்த விஷ்ணு, “இவ என்னமோ பண்றா.. இந்த ஷாலினி கிட்ட என்னமோ இருக்கு டா விஷ்ணு.... எப்படி இருந்த உன்ன எப்படி ஆக்கிட்டா பாரு.. இதுவரைக்கும் அண்ணாவும், அந்த பிராத்தனா பிசாசும் தான் உன்ன கிருக்குன்னு சொல்லிட்டு இருப்பாங்க.. இப்ப நீ உண்மையாவே காதல் கிறுக்கன் ஆயிட்ட போலவே.. 😂 கவிதை -லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட..." 😍 என்றவன், வெட்கத்துடன் சிரித்து கொண்டே..

கவிதையே தெரியுமா?

என் கனவு நீதானடி... 💭

இதயமே தெரியுமா? 😍 ❤️

உனக்காகவே நானடி... 🥰

இமை மூட மறுக்கின்றதே ஆவலே... ☺️

இதழ் சொல்ல துடிக்கின்றதே... 😘

காதலே... ❤️👩‍❤️‍👨❤️

என்று வாய்விட்டு பாடிய படியே பைக் ஐ ஓட்டி கொண்டு இருந்தான் விஷ்ணு. அதை கேட்டு ஷாலினி கடுப்பானாள். 😒

ஷாலினி: “ஹலோ! ரித்திகா அக்காவுக்கு உடம்பு சரி இல்லைன்னு அவங்கள ஹாஸ்பிடலுக்கு பாக்குறதுக்கு போயிட்டு இருக்கோம். நீங்க ஜாலியா லவ் சாங் பாடிட்டு வரீங்க? எப்படி உங்களால இப்படி எல்லாம் இருக்க முடியுது?” என்று கேட்டாள்.

- நேசம் தொடரும்

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 38
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.