தாபம் 37

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 37: விஷ்வாவிற்கு திருமணம்

ஹாஸ்பிடலில் ரித்திகாவை அட்மிட் செய்துவிட்டு வருண் அங்கேயே காத்திருப்பதை அறிந்து அவனை பார்க்க வந்த ஹரி, வருணிடம் அவன் ஆராதனாவை காதலிப்பதாக ஒப்பு கொண்டான். பின் அவர்கள் இருவரும் எப்படியாவது செண்பகத்தை சமாதான படுத்தி, ஆராதனாவை நாராயணன் பேலஸுற்க்கு அழைத்து சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

வருணிடம் பேசிவிட்டு ஆராதனாவை கவனித்து கொள்வதற்காக அவள் அட்மிட் செய்ய பட்டு இருந்த அறைக்கு சென்று விட்டான் ஹரி. ரித்திகா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறைக்கு வெளியே அவளுடைய பெற்றோர்களுடன் அமர்ந்து இருந்தான் சித்தார்த். சித்தார்த்தை கவனித்த படி அங்கே நின்று கொண்டு இருந்தான் சிவா.

அப்போது சந்தோஷ் இன்னும் அங்கேயே இருப்பதை கவனித்த ரேவதி, அவனை வீட்டுக்கு செல்லுமாறு சொன்னாள். கௌத்தம் ஐ பார்த்த சுதாகர், நீங்கள் இருவருமே வீட்டுக்கு செல்லுங்கள்... நாங்கள் ரித்திகாவை பார்த்து கொள்கிறோம் என்றார்.

சந்தோஷ்: “பரவால்ல ஆன்ட்டி. நான் வீட்டுக்கு போனாலும் சும்மா தானே இருக்க போறேன்.. அதுக்கு உங்க கூட இங்கயே இருக்கேன். உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும்ல.." என்று ரேவதியை பார்த்து சொன்னான்.

ரேவதி: இல்ல சந்தோஷ். அங்க பாட்டி தனியா இருப்பாங்கல.. சோ நீ வீட்டுக்கு கிளம்பி போ பா.

சந்தோஷ்: அட்லீஸ்ட் ரித்திகா மயக்கம் தெளிநஞ்சு கண் முழிக்கட்டும் ஆன்ட்டி. நான் அவளை பாத்துட்டு கிளம்புறேன் ப்ளீஸ்.

ரேவதி: சரி பா.

கௌத்தம் சந்தோஷை பார்த்தவன், “நீங்க வேணா கிளம்புங்க ப்ரோ. அதான் ஆண்டி, பாட்டி தனியா இருப்பாங்கன்னு சொல்றாங்களே... நீங்க போய் அவங்கள பாருங்க. ரித்திகாவுக்கு மயக்கம் தெளிஞ்ச உடனே நாங்க உங்களுக்கு கால் பண்றோம். அப்ப வந்து ரித்திகாவை பாருங்க" என்றான்.

சுதாகர்: “அதுவும் கரெக்டு தானே பா. வயசு ஆனவங்க வீட்ல தனியா இருக்க கூடாது. நீ கிளம்பு. உன் நம்பரை‌ என் கிட்ட குடுத்துட்டு போ. ரித்திகாவுக்கு நினைவு திரும்புன உடனே நான் உனக்கு கால் பண்றேன். நீ அப்புறமா வந்து பாரு." என்றார்.

சுதாகர் இப்படி சொல்லும் போது அவரை எப்படி எதிர்த்து பேசுவது என்று நினைத்த சந்தோஷ், வேறு வழி இல்லாமல் தன்னுடைய நம்பரை சுதாகர் இடம் கொடுத்து விட்டு... ஏதாவது தேவை பட்டால் கால் செய்யுமாறு சொல்லி விட்டு கௌத்தம் ஐ முறைத்து விட்டு அங்கு இருந்து சென்றான். சுதாகர் கௌத்தமிற்க்கும் ஏன் தேவை இல்லாத சிரமம் என்று நினைத்து அவனையும் கிளம்ப சொன்னார்.

கௌத்தம்: “அங்கிள் அவ்வளவு தான் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் முடிய போகுது. இதுக்கு மேல அங்க நான் திரும்பி போய் என்ன பண்ண போறேன்? ஆண்ட் நான் என் வீட்டுக்கு போனாலும் என்னை கேள்வி கேக்கிறதுக்கோ, வான்னு உள்ள கூப்பிடுறதுக்கோ, அங்க யாரும் இருக்க மாட்டாங்க. அப்புறம் அங்க போய் நான் என்ன பண்ண போறேன்? அதுக்கு நான் உங்க கூட இங்கயே இருக்கேன்."

சுதாகர்: ஏம்பா உன் அப்பா, அம்மா, உன் கூட இல்லையா?

ரேவதி: அவங்க வேற ஊர்ல இருக்காங்களா?

கௌத்தம்: “எனக்கு என் அப்பா, அம்மா, யாருன்னும் தெரியாது. அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா, இல்லையான்னும், தெரியாது." என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

ரேவதி: “சாரி பா. தெரியாம கேட்டுட்டோம். என்ன ஆச்சு?" என்று உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.

கௌத்தம்: நீங்க எதுக்கு ஆன்ட்டி சாரி சொல்றீங்க? அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. நான் குழந்தையா இருக்கும் போதே என்னை யாரோ ஒரு அனாதை ஆசிரமத்தில கொண்டு வந்து போட்டுட்டாங்க. நான் அங்க தான் வளந்தேன். படிச்சது எல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல் தான். நான் ஸ்கூல் படிக்கிறப்பவே இருந்தே பார்ட் டைம் ஜாப் போக ஆரம்பிச்சிட்டேன்.

எனக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதனால கிடைக்கிற வேலைய எல்லாம் செஞ்சு அதுல வர்ற காசுல டான்ஸ் கிளாஸ் போனேன். நான் 12த்ல நல்லா படிச்சு நல மார்க் வாங்குனேன். அதனால எனக்கு ஒரு பெரிய காலேஜ்ல பிரீ சீட் கிடைச்சுடுச்சு. காலேஜ் போக ஆரம்பிச்ச உடனே அந்த ஆசிரமத்தில இருந்து வெளியில வந்து தனியா ஒரு பாய்ஸ் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன்.

மறுபடியும் பார்ட் டைம் ஜாப் போனேன். டான்ஸ் க்ளாஸ் போனேன். டான்ஸ் நல்லா ஆட கத்துக்கிட்டேன். அப்புறம் காலேஜ்ல படிச்சு முடிச்சுட்டு டான்ஸ் மாஸ்டர் ஆயிட்டேன். இந்த ஸ்கூல்ல வேலை கிடைக்கவும் இங்கே வந்து சேந்துட்டேன். ஸ்கூலுக்கு பக்கத்திலேயே ஒரு வீடு வாடகைக்கு பாத்து இப்ப அங்க தான் இருக்கேன்.

சுதாகர்: “வருத்தப்படாத பா கௌத்தம். தனியா இருந்து கஷ்டப்பட்டு சுயமா இவ்வளவு தூரம் நீ வந்திருக்க. இதுக்கு மேலயும் நீ மேல போவ. நீ நல்லா இருப்ப." என்றவர், ஆதரவாக கௌத்தம் இன் முதுகில் தட்டி கொடுத்தார்.

இந்த வார்த்தைகளும், அரவணைப்பும், கௌத்தமிற்கு மிகவும் புதிதாக இருந்தது. இப்படி பெரியவர்கள் இடம் இருந்து கிடைக்க பெறும் அன்பை கௌத்தம் அவனுடைய வாழ்க்கையில் ஒரு போதும் அனுபவித்தது இல்லை. அதனால் உணர்ச்சிவசப்பட்ட கௌத்தம், சுதாகரை கட்டி பிடித்துக் கொண்டான்.

எப்போதும் பெரிதாக தன்னுடைய உணர்ச்சிகளை மற்றவர்களிடம் காட்ட விரும்பாத கௌத்தம், சுதாகரிடம் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அவனுடைய மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் ரித்திகாவின் குடும்பத்தின் மீது அவனுக்கு ஏற்பட்டது. ரித்திகாவும் சரி, அவளுடைய குடும்பமும் சரி, எப்போதும் எளிமையாகவும், நேர்மையாகவும், இருக்கின்றனர். அவர்களுடைய அந்த குணம் தான் அனைவரையும் அவர்கள் மேல் எளிதில் அன்பு காட்ட செய்கிறது.

கௌத்தம் அவரை கட்டி பிடித்தவுடன் சுதாகரால் அவனுடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அவர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, பின் தலைமை ஆசிரியராகவும், பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதனால் அவருடைய வாழ்க்கையில் அவர் ஏராளமான பசங்களை பார்த்து இருக்கிறார் என்பதால் அவர் முன் நிற்கும் இந்த கௌத்தமை புரிந்து கொள்வது அவருக்கு பெரிய விஷயமாக இல்லை. ரேவதிக்கும் கௌத்தமை பிடித்துவிட்டது.

ரேவதி: உனக்கு யாரும் இல்லைன்னு நினைச்சு வருத்த படாத கௌத்தம். நாங்க இருக்கோம். உனக்கும் ஓகேன்னா நீ எங்கள அப்பா, அம்மான்னு கூட கூப்பிடலாம். நாங்களும் எங்களுக்கு ஒரே பொண்ணு மட்டும் தான் இருக்கா.. அவ கூட ஒரு பையன் இல்லையே நினைச்சு ரொம்ப வருத்த பட்டு இருக்கோம்.

சுதாகர்: ஆமா கௌத்தம்.

கௌத்தம்: “தேங்க்ஸ் அம்மா. தேங்க்ஸ் அப்பா." என்று புன்னகைத்த படி சொன்னான். 😁

பின் சுதாகரும், ரேவதியும், கௌத்தம் உடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

கௌத்தமை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தான் சிவா. கல்லூரி காலத்தில் இருந்தே சிவாவும், கௌத்தமும், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தனர். கௌத்தம் எப்போதும் தன்னை மற்றவர்களிடம் ஒரு ஸ்டைலிஷ் ஆன ராக்கேட் பாய் ஆகவே காட்டி கொள்வான். கௌத்தமும், சிவாவும், கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்பதால் வந்த முதல் நாளில் இருந்தே பேசி பழகிவிட்டனர்.

சிவா எந்த ஒரு விஷயமானாலும் பொறுமையாகவும், நிதானமாகவும், அதை அணுகுவான். பெரும்பாலும் சிவாவிற்கு கோவமே வராது. கௌத்தமோ எதற்கெடுத்தாலும் கோபப்படுபவன். அவனுடைய இந்த குணத்தால் அவனுடன் பயிலும் சக மாணவர்களே அவனுடன் நெருங்கி பேச தயங்குவார்கள். சிவா உடைய குணத்திற்கு அவன் கௌத்தம் இடம் எந்த பிரச்சனையும் செய்யாமல் அவனை பொறுத்துக் கொள்வான். அதனால் அவர்களின் நடுவே நல்ல நட்பு இன்றும் தொடர்கிறது.

ஆனால் கௌத்தம் ஐ சிவா அறிந்த நாளில் இருந்து... சிவாவை தவிற கௌத்தம் வேறு யாரிடமும் தன்னுடைய தனி பட்ட வாழ்க்கையை பற்றி பேசியதும் இல்லை, அவனுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதும் இல்லை. அதனால் இப்போது அவனை இப்படி ரித்திகாவின் பெற்றோர்களுடன் பார்க்க ஆச்சரியப்பட்டான் சிவா.

கௌத்தமை பற்றி சிறிது நேரம் யோசித்த சிவாவிற்கு இறுதியில் ஒன்றே ஒன்று மட்டும் தான் தோன்றியது. ரித்திகாவிடம் அவளுடைய குடும்பத்தினரிடமும் ஏதோ ஒரு மாஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் கள்ளம் கபடமற்ற அவர்களுடைய குணமாக தான் இருக்கும் என்று நினைத்தான் சிவா.

நாராயணன் பேலஸுல்....

செண்பகம் லிவிங் ஏரியாவில் உள்ள நீண்ட சோபாவின் நடுவே தனியாக அமர்ந்து இருந்தாள். அப்போது வெள்ளை வேட்டி சட்டையில்.. பட்டையும், கொட்டையும் ஆக 45 வயது மதிக்க தக்க ஆண் உள்ளே வந்தார். அவருடன் ஒரு இளைஞன் கையில் லேப் டாப் உடன் வந்தான். அவர்களை வரவேற்ற செண்பகம், அங்கு இருந்த சோபாவில் அவர்களை அமர சொல்லிவிட்டு சுகந்தியை அழைத்து அவர்களுக்கு காபி கொண்டு வர சொன்னாள் செண்பகம்.

செண்பகம்: எப்படி இருக்கீங்க ஆறுமுகம்? பாத்து ரொம்ப வருஷம் ஆச்சு...

ஆறுமுகம்: நல்லா இருக்கேன் மா. நீங்க, தம்பிங்களாம் எப்படி இருக்கீங்க?

செண்பகம்: எல்லா நல்லா இருக்கோம் ஆறுமுகம். நம்ம வருணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன். அதான் உங்களை வர சொன்னேன். வருணுக்கு பொருந்துர மாதிரி ஒரு நல்ல பொண்ணா நீங்க தான் பார்த்து சொல்லணும்.

ஆறுமுகம்: நம்ப வருண் தம்பியோட அறிவுக்கும், திறமைக்கும், எல்லா பணக்காரங்களும் பொண்ணு தர்ரத்துக்கு நீ நான்னு போட்டி போட்டுட்டு வருவாங்க மா. நீங்க எந்த மாதிரி பொண்ண எதிர் பாக்கிறீங்கன்னு சொன்னீங்கன்னா அதே மாதிரியே பார்த்துரலாம்.

செண்பகம்: “வருணிற்க்கு ஏத்த பொண்ணா இருக்கணும்ன்னு மட்டும் பாத்தா எங்க ஸ்டேடஸ்க்கு மேட்ச் ஆகுற மாதிரி நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்கிற அழகான, அறிவான, படிச்ச பொண்ணா உங்க கிட்ட பாக்க சொல்லி இருப்பேன்.

ஆனா இப்ப வருணிற்க்கு பொண்டாட்டியா மட்டும் இல்லாம என் பேரன் சித்தார்த்துக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்கிற மாதிரி ஒரு பொண்ணு பாக்கனும்." அந்த பொண்ணு எப்படி இருக்கணும்னா... என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவளுடைய மனதில் ரித்திகாவின் முகம் தான் வந்தது. அதனால் தன்னை அறியாமல் ரித்திகாவின் குணம் மற்றும் தோற்றம் எப்படி இருக்குமோ அதை அப்படியே பட்டியல் இட தொடங்கினாள்.

அந்த பொண்ணு எவ்வளவு சாதாரணமான, வசதி இல்லாத குடும்பத்தில இருந்து வந்த பொண்ணா இருந்தாலும் பரவால்ல. வருணுக்கும், இந்த குடும்பத்துக்கும் ஏத்த மாதிரி அவ அழகா, கண்ணுக்கு லட்சணமா, புத்திசாலியா, குடும்ப பாங்கான நல்ல பொண்ணா இருக்கணும்.

வருனை கல்யாணம் பண்ணி கிட்டு இந்த வீட்டுக்கு வர போற பொண்ணு இந்த வீட்டோட மூத்த மருமகள் ஆ மட்டும் கிடையாது நாராயணன் குரூப்ஸ் ஓட தலைவியாவும் இருப்பா. அதனால அவளுக்கு எல்லாத்தையும் சமாளிக்கிற திறமை இருக்கணும். அவளுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு அடுத்து வரப்போற ரெண்டு மருமகளுக்கும் அவ ஒ எக்ஸாம்பிளா ஆ இருக்கணும்.

இது எல்லாத்தையும் தாண்டி முக்கியமான விஷயமே... அவ சித்தார்த் ஐ இன்னொருத்தி மகனா நெனைக்காம.. அவளோட சொந்த பையனா நினைச்சு நல்லது, கெட்டது, சொல்லி கொடுத்து நல்லபடியா பாசம் காட்டி வளக்கணும். இத்தன பொறுப்பையும் அவர் நல்லபடியா செய்யறதுக்கு முதல்ல ரொம்ப பொறுமைசாலி இருக்கணும்.

ஆறுமுகம்: நீங்க என்ன மாதிரி பொண்ணு எதிர் பாக்குறீங்கன்னு எனக்கு புரியுது மா. இந்த காலத்துல அதிகமா பணம் இருக்கிற பொண்ண கூட கண்டு பிடிச்சிடலாம். ஆனா நல்ல குணம் இருக்கிற பொண்ண கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.

செண்பகம்: ஆமா! அதனால தான் நான் உங்களை வர சொல்லி இருக்கேன். எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை. எங்க குடும்பத்துக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சு குடுங்க. வருணுக்கு அப்புறம் இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்க. இப்பவே ஹரிக்கு வயசு ஆகிட்டே போகுது.. அதனால சீக்கிரமா ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் பண்ணனும்.

இந்த பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி முடிக்கிறதுக்குள்ள அடுத்து பிராத்தனாவுக்கு கல்யாண வயசு வந்துரும். காலா காலத்துல எல்லாருக்கும் செய்ய வேண்டியது எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டா.. நான் கடைசி காலத்தில நிம்மதியா இருக்கலாம்ன்னு பாக்குறேன்.

ஆறுமுகம்: வருண் தம்பிக்கு கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் அடுத்து அடுத்து எல்லாருக்கும் உடனே கல்யாணம் பண்ணிடலாம் மா. நம்ம கிட்ட நிறைய வரன் இருக்கு. தம்பியோட போட்டோவும், ஜாதகமும், இருந்தா குடுங்க மா.

செண்பகம் ஒரு பைலில் வர்ணுடைய முழு பயோ டேட்டாவை ரெடி செய்து வைத்திருந்தாள். அதை எடுத்து ஆறுமுகத்திடம் கொடுத்தாள். அதை பெற்று கொண்ட ஆறுமுகம், திருப்தியாக புன்னகைத்து.. அதை தன்னுடன் வந்து இருந்த அசிஸ்டன்ட் பையனிடம் கொடுத்தான். தன் அருகில் இருந்த அவளுடைய ஹாண்ட் பேக் ஐ எடுத்த செண்பகம், அதில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் நோட்டு கட்டை எடுத்து ஆறுமுகத்திடம் அட்வான்ஸாக கொடுத்தாள்.

அதை மகிழ்ச்சியாக பெற்று கொண்ட ஆறுமுகம், தன்னுடைய பேக் இல் இருந்த சில பெண்களுடைய ப்ரோபைல்களை அவளிடம் கொடுத்துவிட்டு.. சில பெண்களின் ப்ரோபைலை லேப்டாப்பிலும் போட்டு காட்டினான். அதில் இருந்த ஒவ்வொரு பெண்ணை பற்றியும் ஆறுமுகம் விளக்கி கொண்டு இருக்க அதை எல்லாம் கவனமாக கேட்டு கொண்டு இருந்த செண்பகம், வருண் வீட்டிற்கு வந்தவுடன் அவனிடமும் இது பற்றி கலந்து பேசி விட்டு ஒரு முடிவு சொல்வதாக சொன்னாள்.

சித்தார்த்தின் பள்ளியில்...

ஆறாவது பீரியட் முடிந்து இன்டர்வல் பீரியட் தொடங்குவதை உணர்த்தும் வகையில் பெல் அடித்தது. அப்போது மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக அவர்களுடைய வகுப்பறையில் இருந்து வெளியே வந்து அங்கும், இங்கும் சுற்றி கொண்டு இருக்க, ஆசிரியர்களும் வகுப்பு அறையில் இருந்து தங்களுடைய ஸ்டாப் ரூமிற்க்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஆசிரியர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு அவர்களுக்குள் பேசி கொண்டு இருப்பதைக் கவனித்தாள் லாவண்யா. அவர்கள் அனைவரும் ரித்திகாவையை பற்றித்தான் பேசி கொண்டு இருந்தனர். அங்கு இருந்த ஒரு ஆசிரியை சித்தார்த்தின் அப்பா மிகவும் ஹன்ட்சம் ஆக இருந்ததாகவும், அவர் எப்படியும் ஒரு பிசினஸ் மேன் ஆக தான் இருப்பார் என்றும் சொல்லி கொண்டு இருந்தாள்.

இன்னொரு ஆசிரியை ”சித்தார்த்துக்கு அம்மா இல்ல தானே..." என்றவள்; சித்தார்த்தை பற்றியும், அவனுடைய குணத்தை பற்றியும், பேச தொடங்கினாள். அங்கு இருந்த இன்னொருத்தி சித்தார்த் நிறைய முறை லன்ச் பீரியட் இல் ரித்திகா உடன் சேர்ந்து சாப்பிடும் போது தான் பார்த்து இருப்பதாக சொன்னாள்.

ஒருவேளை சித்தார்த்தின் அப்பாவுக்கும் புதுசா வந்த இந்த ரித்திகாவிற்கும் ஏதாவது கனெக்சன் இருக்குமோ? என்ற அடிப்படையில் அங்கு இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி மாறி மாறி தங்களுக்குள் தங்கள் வாய்க்கு வாந்தபடி எல்லாம் பேசி கொண்டு இருந்தனர். லாவண்யா அங்கே ரித்திகா பெயரும், சித்தார்த்தின் பெயரும், அடிபடுவதை கவனித்து.. அவர்கள் அருகே சென்று என்னவாயிற்று என்று விசாரித்தாள்.

லாவண்யாவும், ரித்திகாவும், ஃபிரண்ட்ஸ் ஆக இருப்பதை அறிந்து இருந்த அவர்கள் ரித்திகாவை பற்றி அவளிடமே தவறாக பேச துணியவில்லை. அதனால் ரித்திகா அதிக காய்ச்சலால் மயங்கி விழுந்ததையும், சித்தார்த் பிரச்சினை செய்ததால் அவனுடைய அப்பாவே வந்து ரித்திகாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றதையும் மட்டும் அவர்கள் அவளிடம் சொன்னார்கள்.

இவ்வளவு நடந்திருக்கிறது... இது நமக்கு தெரியாம போச்சே என்று நினைத்த லாவண்யா, இதை பற்றி ஷாலினி இடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து, அவளை சுற்றி முற்றி தேடினாள். அப்போது தூரத்தில் வந்து கொண்டிருந்த விஷ்ணு அங்கே இருந்த லாவண்யாவை பார்த்தான்.

தன் எதிரே வேறு ஒரு பக்கமாக சென்று கொண்டு இருந்த ஷாலினியை கண்டு கொண்ட லாவண்யா, சத்தமாக அவளை பெயர் சொல்லி அழைத்தாள். லாவண்யா போட்ட சத்தம் விஷ்ணுவிற்கும் தெளிவாக கேட்டதால் ஷாலினி இருந்த இடத்தை திரும்பி பார்த்தான். அவனுக்கு ஷாலினியிடம் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

ஷாலினியிடம் ரித்திகாவை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்த லாவண்யா, அவள் அருகே சென்றாள். தனக்கு பின்னே வந்து கொண்டு இருந்த விஷ்ணுவை கவனிக்காத லாவண்யா, ஷாலினியை பார்த்தவுடன்... வேக வேகமாக ரித்திகாவை பற்றி பேசி கொண்டு இருந்தாள்.

அவர்கள் பேசி கொண்டு இருப்பதை கவனித்து கொண்டே அவர்கள் அருகே வந்த விஷ்ணு; ரித்திகா, சித்தார்த் என்று அவர்கள் பேசியதை அரை குறையாக கேட்டு விட்டு அந்த பெயர்கள் தனக்கு நன்கு பரிச்சயமானவை என்பதால் அவர்களுக்கு என்னவாயிற்று என்று கேட்க வேண்டும் என்
று நினைத்தவன், ஷாலினியை அழைத்தான்.

- நேசம் தொடரும்
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.