ஹாய் ஃபிரண்ட்ஸ்..
இன்னும் ஏன் வருணும், ரித்திகாவும் சந்திக்கவில்லை? என்ற கேள்வி ஒரு வாசகராக உங்கள் மனதில் எழுவது நியாயம் தான். பட் நீங்க புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இது அவங்கள பத்தின ஸ்டோரி மட்டும் அல்ல. இது ஒரு அழகிய மற்றும் நீண்ட குடும்பத்தொடர். அதனால எல்லா கேரக்டருக்கும் இம்பார்ட்டன்ஸ் உண்டு.
இவர்கள் முக்கியமானவர்கள், இவர்கள் முக்கியம் இல்லாதவர்கள் என யாரும் இல்லை. குறிப்பாக வருண், ரித்திகா இருவருக்கும் ஒருவரை ஒருவர் சுத்தமாக பிடிக்காது. அப்படி இருக்கும்போது, அவர்களை விதி எப்படி இணைக்கிறது? திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை எப்படி அமைகிறது என்று விவரிப்பதுதான் கதை. அதனால் அவர்கள் சந்தித்தது முதல் காதல் வயப்படுவது வரை கதை அதன் போக்கில் மெதுவாக நகரும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் ♥️ உங்களை டிசப்பாய்ண்ட் செய்யக்கூடாது என்பதற்காகத் தான் விரைவாக அடுத்த கட்டத்திற்கு கதையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று என்னால் முடிந்தவரை ஒரு நாளைக்கு மூன்று எபிசோட் கூட போட்டுக் கொண்டிருக்கிறேன். அதையும் நினைத்து பாருங்கள். நன்றி 🙏
அத்தியாயம் 36: ஆராதனாவின் வாழ்க்கைக்கு என்ன பதில்?
வருண், சிவாவை விட்டு ரித்திகாவின் பெற்றோர்களை அவர்களுடன் சாப்பிட வருமாறு அழைத்தான். ரேவதி, ரித்திகாவை இப்படியே விட்டுவிட்டு எப்படி வருவது என்று தயங்க; கௌத்தமும், சந்தோஷும், கோரஸாக ரித்திகாவை தாங்களே பார்த்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
இதற்கு மேலும் ரேவதியாளும், சுதாகராளும், சிவாவிடம் மறுத்து பேச முடியவில்லை. அதனால் அவனுடன் சென்றனர். இம்முறை சித்தார்த், ரேவதியின் கையை பிடித்து கொண்டான். சித்தார்த்தை பாசமாக பார்த்த ரேவதி, அவனுடைய கையை இறுக்கி பிடித்து கொண்டாள். அதை கவனித்த வருணின் மனம் பொறாமையால் பொங்கியது.🙄 😒
ஏற்கனவே அவனுக்கான சித்தார்த்தின் அன்பு கிடைக்காமல் இருந்த நிலையில், அதை பங்கு போட ரித்திகா வந்து விட்டாள் என்று நினைத்து கடுப்பில் இருந்த வருணிற்கு; இப்போது அவளுடைய குடும்பமும் சித்தார்த்துடன் நெருங்கி பழகுவது எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் சுதாகர் மற்றும் ரேவதியின் மீது அவனுக்கு ஒரு இனம் புரியாத மரியாதை ஏற்பட்டிருப்பதை அவனால் மறுக்கவும், மறைக்கவும் முடியவில்லை.
வருண் முன்னே நடக்க; சிவா, ரித்திகாவின் பெற்றோர்கள் மற்றும் சித்தார்த்துடன் அவன் பின்னே நடந்து வந்தான். வருண் அவர்களை அங்கு இருந்த ஒரு வி.ஐ.பி வெயிட்டிங் ரூமிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான். அந்த வெயிட்டிங் ரூம் ஒரு ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் ரூமின் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் இருக்கும்.
இது இங்கு அட்மிட் ஆகி இருக்கும் பேஷண்ட்களுடன் வந்தவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அந்த இடம். இது மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்பதால் பொதுவாகவே வி.ஐ.பிகளுக்கு என்று பிரத்தியோகமான தங்குமிடம் எப்போதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டு தயாராக இருக்கும்.
இப்போது வருண் அவர்களை கூட்டி கொண்டு வந்தது வி.ஐ.பி அறைகளை விட இன்னும் ஸ்பெஷல் ஆனது. இந்த அறைகள் எப்போதும் நாராயணன் குடும்பத்தினருக்காக மட்டும் ஒதுக்க படுவது. இங்கு அவர்களை தவிர வேறு யாரும் எப்போதும் அனுமதிக்க பட மாட்டார்கள். வருண், ரித்திகாவை இங்கே அட்மிட் செய்தவுடனே அவனுக்காக இந்த அறை தயார் செய்ய பட்டு அதற்கான கீ கார்டு அவனிடம் கொடுக்க பட்டு விட்டது.
அவனிடம் இருந்த கீ கார்டை வைத்து அந்த அறையை ஓபன் செய்தான் வருண். அந்த அறையின் அளவை பார்த்தால்... அது ஒரு அறை தான் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு வீடு போல் இருந்தது அந்த அறை. அந்த அறையின் ஒரு மூலையில் 2 பேர் தாராளமாக தூங்கும் அளவிற்கு பெரிதான 4 பெட்டிகள் போட பட்டு இருந்தது.
அது மட்டும் இன்றி பெரிய சோபாக்களும், டைனிங் டேபிள் மற்றும் அட்டாச்ட் பாத்ரூம் உடன் இருந்தது அந்த அறை. வருண், அவர்களை உள்ளே அழைத்து வர; சுதாகரும், ரேவதியும், அந்த அறையை ஆச்சரியமாக பார்த்தனர். அந்த அறை சீலிங் முதல் ஃப்லோர் வரை உயர்தர டைல்ஸ்கள் ஆல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சித்தார்த்தின் அப்பா பணக்காரர் ஆக இருப்பதால் அவனுக்காக இந்த அறையை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள் போல என்று நினைத்து கொண்டனர் ரித்திகாவின் பெற்றோர்கள். ஆனால் பாவம் இந்த மருத்துவமனையே அவர்கள் முன் இருக்கும் இந்த வருணிற்கு சொந்தமானது தான் என்று அவர்களுக்கு தெரிய வில்லை.
வருண், அவர்களை வரவேற்று அந்த சோபாவில் அமர வைத்து; ரிசப்ஷனுக்கு கால் செய்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அனைத்து உணவுகளையும் கேட்டு கேட்டு ஆர்டர் செய்தான். ரித்திகாவின் பெற்றோர்களுக்கு அவர்களுடைய மகள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் ருசிக்காக சாப்பிட மனம் இல்லாததால் பசிக்காக ஏதோ சாப்பிட்டனர்.
சித்தார்த்துக்கு புடித்த உணவுகளையும் அவன் ஆர்டர் செய்து இருந்தான். சித்தார்த்திற்கு பசி இருந்தாலும் அதை தன் கைகளால் எடுத்து எப்படி சரியாக சாப்பிடுவது என்று அவனுக்கு தெரியவில்லை. அதனால் அவன் அந்த உணவுகளை மேலும் கீழும் சிந்தி கொண்டு இருந்ததை பார்த்த வருண், அவனுக்கு ஊட்ட முயற்சி செய்தான்.
ஆனால் வருணிற்கும் அதை சரியாக அவனுக்கு ஊட்டி விட தெரியவில்லை. அவர்களை கவனித்த ரேவதி, வருணிடம் தானே அவனுக்கு ஊட்டி விடுவதாக சொல்லி.. அவனிடம் இருந்த ஸ்பூனை வாங்கி சித்தார்த்திற்கு ஊட்டி விட்டாள். ரேவதி ஊட்டி விட சமத்து பிள்ளையாக சாப்பிட்டான் சித்தார்த். சித்தார்த் சாப்பிடுவதை பார்த்து திருப்தி அடைந்த வருணும், சிவாவும், தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
சித்தார்த் சாப்பிட்டு முடித்தவுடன், தானும் சாப்பிட்டு விட்டு சுதாகருடன் ரித்திகாவை பார்ப்பதாக சொல்லி விட்டு அங்கு இருந்து கிளம்பினாள் ரேவதி. அதை கவனித்த சித்தார்த், தானும் அவர்களுடன் போவதாக சொன்னான். வருணிற்கு இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதை நேரில் சென்று அட்டென்ட் செய்யவில்லை என்றாலும் வீடியோ கான்பரன்சில் ஆவது அட்டன் செய்யலாம் என்று நினைத்த வருண், அவனை சிவாவுடனும், ரித்திகாவின் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தான்.
பின் தன்னுடைய வேலைகளை முடிந்த வரை மொபைல் போனை பயன் படுத்தியே முடித்து விட நினைத்து அதை செய்து கொண்டு இருந்தான் வருண். ஹரியின் மேனேஜர் தர்ஷன், அந்த ஹாஸ்பிடலில் அங்கும், இங்கும் சுற்றி கொண்டு இருந்த சிவாவை எதர்ச்சியாக பார்த்தான். பின் சிவாவிடம் பேசிய தர்ஷன், வருண் அங்கே ரித்திகாவை அட்மிட் செய்து விட்டு; அவன் இங்கேயே சித்தார்த்துடன் காத்திருப்பதை தெரிந்து கொண்டு அதை அவனுடைய பாஸ் ஹரியிடம் சொன்னான்.
ஆராதனா அட்மிட் செய்ய பட்டு இருந்த அறையில் இருந்தான் ஹரி. அவளுக்கு கொடுக்க பட்டு இருந்த மருந்தின் வீரியத்தால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தாள் ஆராதனா. ஆராதனாவை இங்கே அவன் அட்மிட் செய்ததில் இருந்து அவளை விட்டு ஒரு அடி கூட நகராமல் இருந்தான் ஹரி. அவன் அவளிடம் நார்மலாக எவ்வளவு தான் பேச முயன்றாலும், தன்னால் தான் அவளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சி அவனுடைய மனதை துளைத்து கொண்டு இருந்தது.
அதனால் ஆறுதலுக்காக வருணை சென்று பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு வரலாம் என்று நினைத்த ஹரி, அவன் அறைக்கு சென்றான். ஹரி, வருண் இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவன் உள்ளே வந்ததை கூட கவனிக்காத வருண், தன்னுடைய மொபைலில் ஆபீஸ் சம்பந்தமான வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.
ஹரி: பிஸியா இருக்கியா..?
வருண் அப்போது தான் ஹரி வந்ததை கவனித்தவன், அவனுடைய முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டு) ஆமா கொஞ்சம் பிசி தான். ஹால்ஃப் அன் ஹௌர் -ல ஒரு மீட்டிங் இருக்கு. ஏதாச்சும் இம்பார்டன்ட் ஆனா விஷயம்னா பரவால்ல சொல்லு.
ஹரி: “இம்பார்டன்ட் லாம் ஒன்னும் இல்ல. நீ வர்க்க பாரு. நான் போயிட்டு அப்புறம் வரேன்.” என்று சொல்லிவிட்டு திரும்பி வெளியே செல்ல போனான்
வருண்: ஒரு நிமிஷம், என்ன ஆச்சு..? ஆராதனா நல்லா இருக்கா தானே...?
ஹரி: திரும்பி உள்ளே வந்து, சோபாவில் அமர்ந்து, “அவ நல்லா தான் இருக்கா. நான் தான் நல்லா இல்ல.” என்றான்.
வருண்: இப்போ உனக்கு என்ன தான் டா பிரச்சனை..? நான் தான் நீ என்ன டிசைட் பண்ணாலும் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு சொன்னேன்ல... அப்புறம் என்ன...?
ஹரி: நீ ஈசியா சொல்லிட்ட. ஆனா எனக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியல வருண்.
வருண்: ஏதாச்சு பண்ணி தானே ஆகணும்..?
ஹரி: என்னால டக்குனு ஒரு டிசிஷன் எடுக்க முடியல. உனக்கே தெரியும்ல வருண்... சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் எனக்காகவே அவ வாழ்ந்துட்டு இருக்கா. இனியும் இருப்பா. ஆனா நான் அவ வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.
வருண்: நீ என்ன டீன் ஏஜ் பையனா...? தெரியல புரியலைன்னு, வந்து கதை சொல்லிட்டு இருக்க. அவ உன்ன நம்பரா. சோ அவ லைஃப்க்கு நீ தான் ரெஸ்பான்ஸ்சிபிள். ரொம்ப டிலே பண்ணாத. அவ உனக்கு வேணும்ன்னு நெனச்சின்னா... சீக்கிரம் ஏதாச்சும் ஒரு டிசிசன் எடு.
ஹரி: அவ எனக்காக இவ்வளவு பண்ணும் போது... அவ வேண்டாம் -ன்னு என்னால யோசிக்க முடியல.
வருண்: ஓ அப்ப அவ மட்டும் தான் உன்ன லவ் பண்றா..? நீ அவள லவ் பண்ணல... அப்படி தானே..?
ஹரி: நான்லாம் அவள லவ் பண்ணல. அவ என்ன இவ்வளவு லவ் பண்றாளே -ன்னு நினைக்கும் போது என்னால அவள ஹர்ட் பண்ண முடியல அவ்வளவு தான்.
வருண்: ஓ... நீ அப்படி வர்ர.. சரி..!! சரி.. !! நீ ஒன்னும் அவ்வளவு கஷ்ட பட வேண்டாம். நான் வேணா என் தங்கச்சிக்கு வேற பையனை பாத்து கல்யாணம் பண்ணி வச்சிற்றேன்.
ஹரி: அப்ப பையன் லாம் பாத்து ரெடியா வச்சி இருக்க போல..?
வருண்: இனிமே தான் பார்க்கணும். எதுக்கு வெளியில போய்லாம் மாப்பிள்ளை தேடிக்கிட்டு ? அதான் நம்ப சிவா இருக்கானே... நல்ல பையன். நம்ம ஆராதனாவ நல்லா பாத்துப்பான். நான் இப்ப ஒரு வார்த்தை சொன்னா போதும். ஏன் ஏதுக்குன்னு கேட்காம ஆராதனை கழுத்துல தாலி கட்டுவான்.
ஹரி: டேய் வருண், இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா டா..? ஆராதனாவுக்கு, சிவா ஆ? இதுக்கு நீ என்ன சொன்னாலும் ஆராதனா ஒத்துக்க மாட்டா. சிவாவும் தான்.
வருண்: நான் தான் ஆல்ரெடி சொன்னேன்ல எனக்கு ஆராதனாவும் பிரார்த்தனா மாதிரி தான். அவளுக்கு என்னலாம் செய்யனுமோ அதுலாம் செஞ்சு நான் கல்யாணம் பண்ணி வப்பேன் டா. நான் சொன்னா என் தங்கச்சி கேப்பா. சிவாவ பத்தி யோசிக்கவே தேவையில்ல. இப்பவே நான் அவன கால் பண்ணி வர சொல்றேன். நீயே கேளு.
வருண், நிஜமாகவே சிவாவிற்கு கால் செய்ய, அவனுடைய மொபைலை பிடுங்கி அந்த காலை கட் செய்தான் ஹரி.
வருணிடம் இருந்து ஒரு கால் வந்து அது கட்டாகி விடவும் அதை கவனித்த சிவா, மீண்டும் அவனுக்கு அழைத்தான். ஹரி காலை கட் செய்தும், சிவா மீண்டும் வருணிற்கு கால் செய்வதால் கடுப்பான ஹரி, அவனே கால் ஐ அட்டன் செய்து பேசினான்.
சிவா: ஹலோ...
ஹரி: “மூடிட்டு கால்ல கட் பண்ணு டா. திருப்பி கூப்புட்டீன்னா கடுப்பாயிருவேன்.” 😡 🤬 என்று சொல்லிவிட்டு அவன் காலை கட் செய்தான்.
சிவா “ஹரி சார் தானே கால்ல அட்டென்ட் பண்ணுனது... என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு..? ஏன் இப்படி பொங்குறாருன்னு தெரியலையே...?” என்று யோசித்தவன், “ஒருவேளை திருப்பியும் ஆராதனா மேடம் கூட சண்டை போட்டு இருப்பாரோ..? இருந்தாலும் இருக்கும்.” என தானாகவே நினைத்து மொபைலை வைத்து விட்டு, சித்தார்த்தின் அருகே சென்றான்.
வருணின் அறையில்...
சிவாவிடம் இருந்து வந்த காலை ஹரி அட்டென்ட் செய்து பேசி விட்டு கட் செய்ததை பார்த்த வருண், அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான். 🤭 😁
வருண்: இப்பவும் நீ ஆராதனாவ லவ் பண்ணலை -ன்னு சொல்ல போறியா..?
ஹரி: ஆமா... நான் அவள லவ் பண்றேன். இப்ப இல்ல. சின்ன வயசுல இருந்தே லவ் பண்ண்றேன். போதுமா? 😒
வருண்: அதான் எனக்கு தெரியுமே...
ஹரி: அதான் தெரியுதுல... அப்புறம் ஏண்டா இப்படிலாம் பண்ற... 🤨
வருண்: நீ தான் டிசிஷன் எடுக்க முடியல... டிசிஷன் எடுக்க முடியலன்னு புலம்பிட்டு இருந்த. அதான் உன்ன டெசிஷன் எடுக்க force பண்னேன்.
ஹரி: அது சரி..!! நான் மட்டும் டிசைட் பண்ணி என்ன வருண் பண்றது? இதுக்கு அம்மா ஒத்துக்க மாட்டாங்க இல்ல? எனக்கு அம்மா ரொம்ப இம்பார்டன்ட் டா.
வருண்: அப்ப ஆராதனா இம்பார்டன்ட் இல்லையா?
ஹரி: அவளும் இம்பார்டன்ட் தான். அம்மாவுக்கும், அவளுக்கும், நடுவுல மாட்டிக்கிட்டு நான் தான் முழிக்கிறேன்.
வருண்: அம்மா பேசிக்காவே ரொம்ப நல்லவங்க. நம்ம எல்லாரும் சேர்ந்து பேசுனா அவங்க புரிஞ்சுக்குவாங்க. உனக்காக ஆவது ஆராதனாவ ஏத்துக்குவாங்க.
ஹரி: அம்மா நல்லவங்க தான். பட் ஆராதனாவ மட்டும் வில்லி மாதிரி பாக்கிறாங்களே...
வருண்: அதெல்லாம் ஆராதனா நம்ம வீட்டுக்கு வந்தான்னா.. அவ கூட பழகி பாத்து புரிஞ்சுக்குவாங்க. ப்ரீயா விடு பாத்துக்கலாம்.
ஹரி: அப்ப அவ நார்மல் ஆன உடனே இங்க இருந்து நேரா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாமா?
வருண்: என்ன பிரதர் ரொம்ப அவசர படுறீங்க போலவே... நான் அவள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போலாம்ன்னு தான் சொன்னேன். நீ இப்பவே கூட்டிட்டு போலாம்ன்னு சொல்ற... 🤨 😂
ஹரி: அப்ப அவள திருப்பியும் தனியா ஹாஸ்டல்ல விடனுமா..? 😞
வருண்: இல்ல... இல்ல.. டா. நான் சும்மா சொன்னேன். நீ சொன்ன மாதிரியே அவள வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம். என்ன பிரச்சனை வந்தாலும் சரி பாத்துக்கலாம்.
ஹரி: அவ அண்ணன் பிரச்சனை பண்ணா?
வருண்: அவனுக்கு நம்ப திருப்பி குடுக்க வேண்டியது நிறைய இருக்கு. அவன் பிரச்சனைக்கு வந்தான்னா.. எல்லாத்துக்கும் சேத்து வச்சு திருப்பி குடுத்தறலாம்.
ஹரி: ஆமா வருண், அவன ஏதாச்சு பண்ணியே ஆகணும்.
வருண்: ம்ம்... ஓகே ஹரி.. எனக்கு மீட்டிங் இருக்கு. அப்புறம் பேசலாம். இப்ப போய் ஆராதனாவ பாரு.
ஹரி “சரி” என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஆராதனா அட்மிட்
செய்ய பட்டு இருந்த அறைக்கு சென்று விட்டான்.
– நேசம் தொடரும்...
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.