அத்தியாயம் 30: மயங்கி விழுந்த ரித்திகா
லஞ்ச் பீரியட் முடிந்து ஐந்தாவது பீரியட் தொடங்குவதை உணர்த்தும் வகையில் பெல் அடித்தது. அதுவரை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த ரித்திகா, அந்த சத்தத்தால் திடீரெனக் கண் விழித்து எழுந்து அமர்ந்தாள்.
மாணவர்கள் அனைவரும் டான்ஸ் பயிற்சிக்கு அங்கே வரத் தொடங்கியிருந்தனர்.
முதல் வகுப்பு “ஏ" பிரிவு மற்றும் “பி" பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அந்த பீரியட் டான்ஸ் பீரியடாக இருந்தது. அதனால் அந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வரிசையாக உள்ளே வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த கௌதம், ரித்திகாவை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு அவனே அனைவரையும் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான்.
அங்கு 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அவர்களைப் பார்த்த ரித்திகா, "இத்தனை பேரையும் அவன் ஒருத்தனால சமாளிக்க முடியாது" என்று நினைத்தவள்... கௌதமைப் பார்த்து, "எங்களுக்காக நீங்க சிரமப்பட வேண்டாம்" என்று சொன்னாள். அதற்கு ரித்திகாவைப் பார்த்து முறைத்தான் கௌதம். 😒
கௌதம் தன்னை முறைக்கவும் பயந்துபோன ரித்திகா, அமைதியாகிவிட்டாள். அப்போது உள்ளே வந்துகொண்டிருந்த மாணவர்கள் வரிசையில் ஆர்வம் இன்றித் தன்னுடைய தலையைக் கீழே குனிந்தபடி உள்ளே வந்துகொண்டிருந்தான் சித்தார்த். அவன் தன்னுடைய குட்டி தலையை மேலே தூக்கிச் சுற்றி முற்றிப் பார்க்கும்போது அவனுடைய கண்களில் ஓரமாக அமர்ந்திருந்த ரித்திகா தென்பட்டாள்.
அதுவரை தன்னுடைய முகத்தைச் சுருக்கி வைத்திருந்த சித்தார்த், ரித்திகாவைப் பார்த்தவுடன் "1000 வாட்ஸ் புன்னகை" சிந்தினான். 😁 அதுவரை லஞ்ச் பீரியடின்போது ரித்திகா ஏன் தன்னை பார்க்க வரவில்லை? என்று அவள் மீது கோபமாக இருந்த சித்தார்த், அவளைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தவன்... 😍 ஓடிச்சென்று அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
அந்தக் காட்சியை கௌத்தமும், அங்கு இருந்த மற்ற குழந்தைகளும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ரித்திகாவுக்குத் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பது யார் என்று கீழே குனிந்து பார்க்காமலே அவளால் அது சித்தார்த் தான் என்று உணர முடிந்தது. ரித்திகாவுக்கும் அவனைப் பார்த்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அதனால் வழக்கம் போல் அவனைத் தூக்கிக் கொஞ்சதான் நினைத்தாள்... ஆனால் அப்போதுதான் அவளுக்குக் காய்ச்சல் அடித்துக்கொண்டிருப்பது அவளுக்கு ஞாபகம் வந்தது.
தனக்கு இருக்கும் காய்ச்சல் சித்தார்த்துக்கும் பரவிவிடக்கூடாது என்று நினைத்துப் பயந்த ரித்திகா, அவசரமாக அவனைத் தன்னிடம் இருந்து விலக்கி நிற்க வைத்தாள்.
ரித்திகாவின் அந்தக் செயல் சித்தார்த்தின் பிஞ்சு மனதைக் காயப்படுத்தியது. கண்ணீர் தேங்கிய கண்களுடன் ரித்திகாவைப் பரிதாபமாகப் பார்த்தான் சித்தார்த். 🥺
அவனுடைய குழந்தை மனதிற்கு எப்போதும் தன்னிடம் சிரித்துப் பேசி விளையாடும் தன்னுடைய ராத்திகாவுக்கு இப்போது தன்னை பிடிக்காமல் போய்விட்டது போல என்று தோன்றியது. அப்படி நினைத்துப் பார்க்கும்போதே சித்தார்த்தின் மனம் வலித்தது. 💔
அப்போது அவன் ரித்திகாவின் அருகே நின்றுகொண்டிருந்த கௌதமைத் தலை முதல், கால் வரை பார்த்தான்.
கௌதமுடைய தோற்றம் சித்தார்த்தை பயமுறுத்தியது. சித்தார்த் கௌதமைப் பார்த்து பயந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கௌதம் ஸ்டைல் என்று நினைத்து... அவனுடைய தலையை இரு பக்கத்திலும் ஒரு விதமாக கரண்டி வைத்து இருந்தான். நடுவில் இருந்த முடியை ஜெல் போட்டு செட் செய்து வைத்திருந்தான்.
அவனுடைய இரு காதிலும் கருப்பு நிறக் கடுக்கன் அணிந்திருந்தான்.
அவனுடைய கழுத்தில் டெத்லி ஹாலோஸ் பென்டென்ட் செயின் தொங்கிக்கொண்டிருந்தது. போதாத குறைக்கு பல வண்ணக் கயிறுகளால் செய்யப்பட்ட ஒரு மொத்தமான பிரேஸ்லெட்டை அணிந்திருந்தான். இளம் வயதுப் பெண்களின் பார்வைக்கு வேண்டுமானால் அவன் ஒரு ரெமோவைப் 😍 போல் தெரிந்திருக்கக்கூடும்.
சித்தார்த்தின் கண்களுக்கு சிறு குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அவர்கள் சாப்பிடும்போது அடம் பிடித்தால்... "அங்க பாரு... அங்க போறாருல்ல, அந்த பூச்சாண்டி அங்கிள்... அவர் கிட்ட உன்னை பிடிச்சு கொடுத்திடுவேன். ஒழுங்கா சாப்பிடு" என்று மிரட்டுவதற்காக கைகாட்டும் அந்த பூச்சாண்டி அங்கிளுக்குத் தேவையான பத்து பொருத்தமும் அவனிடம் பக்காவாக இருந்தது. 😂🤣
ஒருவேளை இவனைப் பார்த்துதான் தன்னுடைய ரித்தி பயந்துபோய் தன்னிடம் பேச மாட்டேங்கிறாள் போல... என்று நினைத்த சித்தார்த்; ரித்திகாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். தன்னிடம் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ளும் அந்தக் குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்க்கும்போது "என் கிட்ட வராத." என்று சொல்வதற்கு ரித்திகாவுக்கு மனம் இல்லை என்றாலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தாள்.
இவ்வாறு அவள் நினைத்துக்கொண்டிருக்க; அங்கே உள்ளே வந்திருந்த மற்ற குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் பேசியபடியும், சிரித்தபடியும், விளையாடியபடியும், மிகுந்த சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அந்த சத்தம் அந்த பெரிய ஹாலைத் தாண்டியும்.. அங்கு இருந்த வராண்டா வரை கேட்டுக்கொண்டிருந்தது.
அதைக் கேட்டு கடுப்பான கௌதம்; ரித்திகாவையும், சித்தார்த்தையும் விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தை நோக்கிச் சென்று அவர்களை அமைதிப்படுத்தும் பணியில் இறங்கினான்.
கௌதம் எவ்வளவு முயன்றும் அவனால் அங்கு இருந்த மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நொடிக்கு நொடி அவர்கள் போடும் சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
ஏற்கனவே ரித்திகாவின் தலை வெடித்துவிடும் அளவிற்கு வலித்துக்கொண்டிருந்தது. இதில் அந்தக் குழந்தைகள் போடும் சத்தம் அவளைப் பெருமளவில் பாதித்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத ரித்திகா, தன்னுடைய இரு கையாலும் அவளுடைய தலையை அழுத்திப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தாள். ரித்திகாவுக்கு என்ன நேர்ந்தது என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவளிடம் ஏதோ சரியாக இல்லை என்று நினைத்தான் சித்தார்த்.
ரித்திகா தாங்க முடியாத தலைவலியால் தவித்துக்கொண்டிருந்தாள். அப்போது மானசா ஒவ்வொரு வகுப்புக்கும் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்த மானசாவிற்கு டான்ஸ் பயிற்சி ஹாலில் இருந்து அதிகப்படியான சத்தம் கேட்டது. அதனால் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று நினைத்த மானசா, உள்ளே வந்தாள்.
மானசா உள்ளே வரும்போது
120-க்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் அவர்களோடு போராடிக்கொண்டிருந்தான் கௌத்தம். ஓரமாக சித்தார்த்துடன் நின்றுகொண்டிருந்த ரித்திகா, தன்னுடைய கையை தலையில் வைத்து அழுத்திப் பிடித்தபடி இருந்தாள்.
அங்கே கௌத்தம் உயிரைக் கொடுத்து குழந்தைகளைக் கண்ட்ரோல் செய்ய போராடிக்கொண்டிருக்கும் போது... ரித்திகா இப்படி சாவகாசமாக நின்று கொண்டிருக்கிறாளே என்று அதைப் பார்த்துக் கோபப்பட்ட மானசா, வேகமாக அவள் அருகே சென்று அவளைத் தன் வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டத் தொடங்கினாள்.
மானசாவின் எரிச்சலூட்டும் பேச்சு ரித்திகாவுக்கு இருந்த வேதனையில் எண்ணெய் ஊற்றுவதைப்போல் இருந்தது. அவளுக்கு இருந்த தலைவலியால் அவளால் மானசாவிற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அதனால் அமைதியாகவே இருந்தாள். கௌத்தம் அந்தக் குழந்தைகளுடன் பிசியாக இருந்ததால் மானசா உள்ளே வந்ததையும், அவள் ரித்திகாவுடன் பேசிக்கொண்டிருப்பதையும் அவன் கவனிக்கவில்லை.
மானசா உச்சகட்ட கோபத்தில் சத்தமாக ரித்திகாவுடன் பேசிக் கொண்டிருக்க... பாவம் ரித்திகாதான் அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை. ரித்திகாவின் உடம்பில் இருந்த சக்தி எல்லாம் வடிந்துவிட்ட நிலையில்... ஆதரவின்றித் தரையில் மயங்கி சரிந்தாள்.
மானசா அவளின் மனதைப் புண்படுத்தி இங்கு இருந்து அவளை விரட்டிவிட வேண்டும் என்று தான் நினைத்தாளே தவிர அவளுக்கு இப்படி ஆகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவளும் ரித்திகாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.
ரித்திகா திடீரென மயங்கித் தரையில் விழுந்து பேச்சுமூச்சின்றி கிடப்பதைப் பார்த்த சித்தார்த், பயந்து அழத் தொடங்கிவிட்டான். மானசாவிற்கு ரித்திகா மயங்கி விழுந்ததை விட சித்தார்த் அழுவதுதான் அவளுக்கு பயமாக இருந்தது. ஒருவேளை அழுது அழுது அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் யார் வருணுக்குப் பதில் சொல்வது என்று நினைத்துப் பயந்த மானசா, நேராக ரித்திகாவைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டு சித்தார்த்தின் அருகே சென்றவள், அவனைத் தன் கையில் தூக்கிக்கொண்டு சமாதானப்படுத்த முயன்றாள்.
மானசா அவனைத் தூக்க முயன்றதால் இன்னும் பயந்து சத்தமாக அழுதான் சித்தார்த். முகத்தில் 4 கோட்டிங் எக்ஸ்ட்ரா மேக்கப் போட்டிருந்த மானசா, அவனின் கண்களுக்குப் பார்ப்பதற்குப் பேயைப் போல் தெரிந்தாள். "என்னை விடு... என்னை விடு..." என்று மானசாவைத் தன்னுடைய கைகளால் பலமாக அடித்த சித்தார்த்... கதறிக் கதறி அழுதான். 😭
சித்தார்த் அடித்த அடியின் வலியைப் பொறுக்க முடியாமல் மானசா அவனை கீழே இறக்கிவிட்டாள்.
மானசாவின் பிடியில் இருந்து வெளியே வந்த சித்தார்த், ரித்திகாவின் அருகே சென்று அவளின் முகத்தைப் பிடித்து ஆட்டியபடி "ரித்தி எந்திரி... ரித்தி எந்திரி..." என்று சத்தமாக கத்தியவன்... கதறி... கதறி அழுதான். 😭
சித்தார்த்தின் அழுகுரல் அந்த பெரிய ஹால் முழுவதும் எதிரொலித்தது. அதைக் கேட்டு அவன் பக்கம் திரும்பிய கௌத்தம், ரித்திகா கீழே மயங்கி விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
அதுவரை குழந்தைகளுக்கு நடுவே நின்றுகொண்டிருந்த கௌத்தம், அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு ரித்திகாவின் அருகே ஓடி வந்தான்.
கௌத்தம் ரித்திகாவைத் தொடப்போக அவனுடைய கையைத் தட்டிவிட்டான் சித்தார்த். சித்தார்த்திற்கு யாரைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருந்தது. அவர்கள் தன்னுடைய "ராகா"வை ஏதாவது செய்து விடுவார்கள் என்று நினைத்துப் பயந்த சித்தார்த்.. யாரையும் அவள் அருகே நெருங்கவிடவில்லை.
ரித்திகாவை யாரும் நெருங்கா வண்ணம் ரித்திகாவின் மீது ஏறிப் படுத்துக்கொண்ட சித்தார்த் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். கௌத்தமுக்கு வந்த கோபத்திற்கு சித்தார்த்தை இழுத்து இரண்டு அடி அடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவனே அப்படி நினைத்தாலும் அவனால் அடித்து விட முடியுமா என்ன..? சித்தார்த் தான் வருணின் மகன் ஆயிற்றே...
சித்தார்த், வருணின் மகன் என்று அறிந்த சிலருள் கௌத்தமும் ஒருவன் என்பதால் வருணின் மகனை அடித்துவிட்டுத் தன்னுடைய உயிரை இழப்பதற்கு அவன் தயாராக இல்லை.
இருப்பினும் அவனால் ரித்திகாவையும் அப்படியே விட்டுவிட முடியாது என்பதால் மானசாவை கோபமாகப் பார்த்தவன், 😡 அவளை ஏதாவது செய்யும்படி அவசரப்படுத்தினான்.
அவளுக்கும் ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை. முதலில் இது பற்றி அனைவருக்கும் இன்பார்ம் செய்ய வேண்டும் என்று நினைத்த மானசா, முதலில் பிரின்சிபால் சாரதாவுக்குத் தன்னுடைய மொபைலில் இருந்து கால் செய்து இன்பார்ம் செய்துவிட்டு.. பின் வருணின் மேனேஜர் சிவாவுக்குக் கால் செய்து சித்தார்த் தொடர்ந்து அழுது கொண்டிருப்பதாக மட்டும் சொல்லிவிட்டு காலை கட் செய்துவிட்டாள்.
தன்னுடைய குடும்பத்தினரைப் பற்றிய எந்த சிறிய தகவலாக இருந்தாலும் கூட தன்னிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என்று வருண், சிவாவிடம் அறிவுறுத்தி இருப்பதால்... இதைப்பற்றி அவனிடம் உடனே சொல்ல வேண்டும் என்று நினைத்த சிவா, அவனுடைய ஆபீஸ் ரூமுக்கு வந்தான். சிவா, வருணின் ஆபீஸ் ரூம் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரும்போது... வருண் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
வருண் நேரத்திற்கு சரியாக சாப்பிடுவதே அதிசயம். இப்போது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இதைப்பற்றி அவனிடம் சொல்ல வேண்டுமா..? என்று நினைத்து ஒரு நிமிடம் தயங்கினான் சிவா. இருந்தாலும் விஷயம் சித்தார்த்தைப் பற்றியது என்பதால்.. இப்போது இவன் அதை சொல்லாமல் விட்டுவிட்டால்.. தன்னுடைய பாஸ் தன்னைக் கொன்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்த சிவா, வேறு வழியில்லாமல் மானசா தன்னிடம் சொன்னதை எல்லாம் விளக்கமாக வருணிடம் சொன்னான்
.
-நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 30
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.