தாபம் 26

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 26: ஜான்வியின் கல்லறை

வருணின் ஆபீஸ் ரூமில்…


சிவா, ரித்திகாவைப் பற்றி ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்று வருணிடம் சொல்கிறான். அதைக் கேட்டு ஆர்வமான வருண், "ஏதாவது சீரியஸா இருக்கா?" என்று சிவாவிடம் கேட்கிறான்.

சிவா: "சீரியஸாலாம் ஒன்னும் இல்ல சார். நீங்க தான் அந்த பொண்ணு எது பண்ணாலும் உங்களுக்கு அப்டேட் பண்ணனும்னு சொன்னீங்க இல்ல... அதான் ஒரு சின்ன அப்டேட் இருக்கு.. அத உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்." இன்றைய சாதாரணமாக சொன்னான்.


வருண்: "ஓ... என்ன விஷயம்?" என்று ஒரு பேனாவை கையில் வைத்து தட்டியபடி கேட்க,

சிவா: "பெருசா ஒன்னும் இல்ல சார். அந்த பொண்ணு புதுசா ஒரு ஸ்கூட்டி வாங்கி இருக்கா." என்றான்.


ஒருவேளை தன் குடும்பத்தினருக்கு எதிராக சதி செய்வதற்காக யாரிடமிருந்தாவது பெரியதாக பணம் வாங்கி இருப்பாள் என்று தன் மனதில் நினைத்த வருண், "ரொம்ப காஸ்ட்லியான ஸ்கூட்டியா?" என்று கேட்டான்.

சிவா: "அட போங்க சார். அந்த பொண்ணாவது.... காஸ்ட்லியா வாங்குறதாவது.... இருக்கிறதிலேயே விலை கம்மியா ஒரு ஸ்கூட்டியை வாங்கி இருக்கா. அதுக்கும் முழுசா காசு கூட கொடுக்காம இ.எம்.ஐல போய் வாங்கி இருக்கா." என்றவன், வருணின் முகத்தில் ஏதேனும் உணர்ச்சிகள் தெரிகிறதா என்று அவனை உற்றுப் பார்த்தான்.

வருணின் முகத்தில் இருந்து அவனால் எதையும் படிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் அவனே பேசத் தொடங்கினான்.

சிவா: "சார்... !!! நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க...
நீங்களும் அந்த பொண்ணு இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அவளை ஃபாலோ பண்ணிட்டு இருக்கீங்க. நானும் தனியா ஒரு ஸ்பெஷல் டீம் வெச்சு அந்த பொண்ணோட லொகேஷன் ஹிஸ்டரிலிருந்து கால் ஹிஸ்டரி வரைக்கும் எல்லாத்தையும் செக் பண்ணி பார்த்திட்டேன். சஸ்பிசியஸா எதுவுமே இல்லை.
நம்மளும் டெரோரிஸ்ட்டை போலீஸ் வாட்ச் பண்ற மாதிரி அந்த பொண்ணை எல்லா ஆங்கிளிலிருந்தும் வாட்ச் பண்ணியாச்சு. நீங்க சந்தேகப்பட்ட மாதிரி எதுவுமே கிடைக்கல சார். அப்போ அந்த பொண்ணு இன்னசென்ட்னு தானே அர்த்தம்?
நம்ம இருக்கிற முக்கியமான வேலையெல்லாம் விட்டுட்டு அந்த பொண்ணு பின்னாடி போய் சுத்தி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோம்னு எனக்கு தோணுது சார். நீங்க என்ன நினைக்கிறீங்க...?" என்றவன், நேராக வருணின் முகத்தை அப்போதுதான் பார்த்தான்.


வருண் சிவாவை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். 🤨

சிவா: "ஐயையோ... !! 🙄 சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டியேடா சிவா... இவர் வேற இப்படி முறைக்கிறாரே.. என்ன சொல்லப்போறாரோ.. தெரியலையே.." என்று தன் மனதிற்குள் நினைத்தவன்; வருணை அமைதியாகப் பார்த்து... "நான் ஏதாச்சும் தப்பா சொல்லியிருந்தா சாரி சார்." என்று பவ்யமாகச் சொன்னான்.


வருண்: "சொல்ல வந்தது எல்லாத்தையும் சொல்லிட்டீன்னா கிளம்பு..." என்று முறைத்தபடியே சொன்னான். 😒


விட்டால் போதும் என்று நினைத்த சிவா உடனே அங்கிருந்து "தேங்க்யூ சார்." என்று சொன்னவன் கிளம்பிவிட்டான்.
சிவா அங்கிருந்து சென்றவுடன் சிறிது நேரம் ரித்திகாவைப் பற்றி யோசித்தான் வருண். ஒரு நிமிடம் அவனுக்கும் சிவா சொன்னது போல் ரித்திகா இன்னசென்ட்டாகத்தான் இருப்பாளோ என்று தோன்றியது.

அடுத்த நிமிடமே அவள் அப்படி நல்லவளாக இருந்தாலும் கூட அவளை ஏன் தன் குடும்பத்தினரிடமும், தன் மகனிடமும் நெருங்கிப் பழக விட வேண்டும்...? என்று நினைத்தவன், எது எப்படி இருந்தாலும் அவளை தன் குடும்பத்தில் இருந்து பிரிப்பதே நல்லது என்று நினைத்தான்.


பின் தனக்கிருந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தன்னுடைய ஆபீஸிலிருந்து கிளம்பியவன், நாராயணன் பேலஸை நோக்கி விரைந்தான். அவன் தன்னுடைய வீட்டை வந்தடையும்போது மணி இரவு 10:00 ஆகி இருந்தது. தன்னுடைய காரை பார்க்கிங்கில் நிறுத்தியவன், அவனுடைய பிரம்மாண்டமான நாராயணன் பேலஸ்க்குள் வந்தான்.


சித்தார்த்திற்கு தன்னுடைய அம்மாவை பற்றிய ஞாபகம் வந்தாலே பயந்து எப்போதும் அழுவான் என்பதால் இன்று ஜான்வியுடைய பிறந்தநாள் என்று அவனுக்கு யாரும் தெரியப்படுத்தவும் இல்லை. அதைப்பற்றி அவர்களுக்குள்ளும் பேசிக்கொள்ளவும் இல்லை. அதனால் இன்று அவளுடைய பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு நாராயணன் பேலஸ் விழாக் கோலம் பூண்டு இருக்கவில்லை.

அது வழக்கம் போல் சாதாரணமாகத்தான் இருந்தது.
அதுவும் மணி இரவு பத்தைக் கடந்து விட்டதால்.. தேவையற்ற லைட்டுகள் அனைத்தையும் அணைத்துவிட்டு முக்கியமான இடங்களில் மட்டும் லைட் எரிய விடப்பட்டு இருந்தது. அமைதியாக வெறிச்சோடிப் போயிருந்த தன்னுடைய மாளிகை போன்ற வீட்டை சுற்றி முற்றிப் பார்த்த வருண், நேராக கார்டனுக்குள் சென்றான்.


அந்த கார்டனின் வழியாக வீட்டின் பின் பக்கத்திற்குச் சென்றான் வருண். அவனுடைய கையில் ஒரு பிளவர் பொக்கே இருந்தது. அந்த ஃப்ளவர் பொக்கேவில் 99 சிவப்பு ரோஜாக்களும், அதன் நடுவே ஒரு வெள்ளை ரோஜாவும் இருந்தது. அந்த உயர்தர பிளவர் பொக்கேயைச் சுற்றி அழகாக சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.


அந்த பொக்கேயை கையில் ஏந்தியபடி இருட்டான அந்த இடத்திற்கு தனியாகச் சென்றான் வருண். தன்னுடைய மொபைல் போனில் இருந்த டார்ச்சை உபயோகப்படுத்தி அதன் உதவியால் முன்னே சென்றான் வருண். பின் அங்கு இருந்த ஒரே ஒரு லைட் சுவிட்சை வருண் ஆன் செய்தவுடன் அந்த இடமே ஒளிமயமானது.


அங்கே இருந்த பெரிய பூந்தோட்டம் பல வண்ண லைட்டுகளின் உதவியால் சொர்க்கம் போல் ஜொலித்துக்கொண்டு இருந்தது. அந்த தோட்டத்தின் நடுவே ஒரு புல்வெளி இருக்க... அதன் இரு பக்கமும் அந்த இடத்தை சுற்றி பல வகையான பூக்கள் பயிரிடப்பட்டு பூத்து குலுங்கி இருந்தது. அந்த மலர் வனத்தின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த புல் வெளியில் நடந்து அதற்கு உள்ளே சென்றான் வருண்.
அந்தப் பாதையின் முடிவில் வெள்ளைக் கற்களினால் ஆன ஒரு சிறிய மண்டபம் இருந்தது.

அது ஒரு சிறிய தாஜ் மகாலை போல் அழகாக இருந்தது. அதன் அருகே கனத்த இதயத்துடன் சென்றான் வருண். அந்த மண்டபத்தின் உள்ளே ஒரு கல்லறை இருந்தது. அதில் ஜான்வி என்று தாங்கத்தால் பொறிக்கப்பட்டு அதன் மேல் ஜான்வியின் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

அந்த ப்ளாக் அண்ட் வைட் புகைப்படத்தில் அழகாகச் சிரித்துக்கொண்டு இருந்தாள் ஜான்வி.
ஜான்வியின் சமாதிக்கு அருகே சென்ற வருண் மண்டியிட்டு அமர்ந்து அவன் கொண்டு வந்த பூங்கொத்தை அதன் மீது வைத்தான். அவன் இதயம் முழுவதும் நிறைந்திருந்த ஜான்வியின் நினைவுகள் அவனை அழுத்திக்கொண்டு இருந்தது.

அவனை அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் ஜான்வியின் சமாதியின் மேல் விழுந்தது.
அங்கு இருந்த மயான அமைதி வருணை ஏதோ செய்தது. தாங்க முடியாத மன அழுத்தத்தில் இருந்தான் வருண்.

பின் அங்கிருந்து எழுந்தவன், அங்கு ஓரமாக வைக்கப்பட்டு இருந்த மெழுகுவத்தி ஸ்டாண்டை எடுத்து வந்தான். அந்த சமாதியின் அருகில் ஒரு மர டேபிள் இருந்தது.
அந்த டேபிளின் டிராயரை திறந்து அதில் இருந்த மெழுகுவர்த்தியும், தீப்பெட்டியையும், எடுத்து வந்து அதை ஸ்டாண்டின் மேல் வைத்து மெழுகுவர்த்தியைப் பொருத்தினான் வருண்.


பின் அந்த இடத்தை சுற்றி முற்றிப் பார்த்தான் வருண். அந்த இடம் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. பின் சில நிமிடங்கள் அவளுடைய கல்லறையை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தவன், அங்கு ஓரமாகப் போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து அமர்ந்தான்.
வருண்: எப்போதும் மன நிம்மதியின்றி தவிக்கும் போதும், ஜான்வியின் நினைவில் ஆழ்ந்திருக்கும் போதும் இங்கே வந்து இந்த பெஞ்சில்தான் அமர்ந்து ஜான்வியின் சமாதியைப் பார்த்துக்கொண்டு இருப்பான்.

இப்போதும் அதையேதான் செய்துகொண்டு இருந்தான். அவன் இங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஜான்வியுடன் இருப்பது போலவே உணர்வான். இப்போதும் அவனுக்கு அப்படித்தான் இருந்தது.
எத்தனை மணி நேரங்கள் கடந்தது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து அந்த சமாதியைப் பார்த்துக்கொண்டு இருந்தவன் மனம் முழுவதும் ஜான்விதான் நிறைந்து இருந்தாள்.

பின் தன்னை அறியாமல் அப்படியே அந்த பெஞ்சில் சாய்ந்து படுத்து தூங்கிவிட்டான் வருண். இப்படியே சில மணி நேரங்கள் கடந்திருக்க மணி நல்லிரவு 2:00 ஆகி இருந்தது.
அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வருணிற்கு ஒரு கனவு வந்தது.

அந்தக் கனவில்...
அழகான காலை வேளையில்…


ஆள் அரவமற்ற தார் சாலையின் ஒரு கார் சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது. அந்தக் காரின் பின் சீட்டில் சாதாரண வெள்ளை சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த வருண், இரண்டரை வயதான தன் மகன் சித்தார்த்தை தன்னுடைய மடியில் உட்கார வைத்து அவனுடன் சிரித்துப் பேசி விளையாடிக்கொண்டு இருந்தான்.


அவன் அருகில் வெள்ளை நிற லாங் கவுன் அணிந்திருந்த நிறைமாத கர்ப்பிணியான ஜான்வி தன்னுடைய கணவனும், மகனும், செய்யும் சேட்டைகள் அனைத்தையும் பார்த்து ரசித்தபடி சிரித்துக்கொண்டு இருந்தாள். 😍🥰


அப்போது சித்தார்த் தன்னுடைய குட்டிக் கைகளால் வருணின் நெஞ்சில் பாக்சிங் செய்வது போல் குத்தி விளையாடிக்கொண்டு இருந்தபடி "நான் தான் சூப்பர் ஹீரோ!" என்று கத்திக்கொண்டு இருந்தான்.


சித்தார்த் தன்னை அடித்துக்‌ கொண்டு இருப்பது தனக்கு நிஜமாகவே வலிக்கிறது என்பதைப் போல் "ஐயோ... !!! அம்மா... !!! வலிக்குது..." 😢 என்று வலியில் முனகுபவனைப் போல் நடித்துக்கொண்டு இருந்தான் வருண்.


சித்தார்த்: "வலிக்கட்டும்... !! நல்லா வலிக்கட்டும்... !! நான் தான் ஸ்ட்ராங்கான பாய்." என்றவன், தன்னுடைய பிஞ்சுக் கைகளால் அவனுடைய அப்பாவை அடித்து விளையாடிக் கொண்டு இருந்தான்.


வருண்: தன் மகனிடமிருந்து பாசமாகக் கிடைக்கும் அடிகளை எல்லாம் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு இருந்தவன், தங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த 🤭 தன்னுடைய காதல் மனைவியைப் பார்த்து... "அடியே இப்படி உன் புருஷனை உன் மகன் வெளுத்து வாங்கிட்டு இருக்கான்.. 😒 நீ பாட்டுக்கு பார்த்து சிரிச்சுட்டு இருக்க...? இவனை என்னன்னு கேட்க மாட்டியா...?" 🤨 என்று கேட்க,


ஜான்வி: "ஆமா... !! நீ இப்போ கம்ப்ளைன்ட் பண்ணுவ.. நான் அவனை என்னன்னு கேட்டு மிரட்டி அடிக்கப் போனா... நீ ஏன் என் பையனை அடிக்கிறன்னு என்கிட்டயே சண்டைக்கு வருவ. தேவையா எனக்கு...? அன்ட் நீ கொடுக்கிற செல்லத்திலதான் பேபி இவன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான். என்னோட லிட்டில் சேம்ப்ஸ் ரொம்ப குட் பாய். உன் கூட சேர்ந்தாதான் இவன் இப்படி எல்லாம் ஓவரா பண்ணிட்டு இருக்கான்.

சோ முதல்ல அப்பாவுக்கு இரண்டு அடி கொடுத்து கரெக்ட் பண்ணிட்டா உன் பையன் தானா கரெக்ட் ஆயிடுவான்." என்றவள், வருணின் தலையில் செல்லமாக இரண்டு கொட்டு கொட்டினாள்.


வருண்: அவள் மெதுவாகக் கொட்டியது அவனுக்கு மிகவும் வலித்து விட்டதைப்போல் தன்னுடைய தலையை ஒரு கையால் வேகமாக அழுத்தித் துடைத்தவன் ஜான்வியைப் பார்த்து... "ஏய்.... வலிக்குதுடி... 🥺 உன் புருஷன் பாவம் தானே... 😒 இப்படி எல்லாம் அடிக்க கூடாது சரியா...? 😥" என்று தன்னுடைய முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான். 😢

ஜான்வி: "ஐயையோ... !!! போதும் டா... நடிப்பைப் போடாத!" என்றவள், வாய் விட்டுச் சிரித்தாள். 😂
ஜான்வி க்யூட்டாக அப்படி முகத்தை வைத்துக்கொண்டு பேசுவதைப் பார்த்த வருண், அவளைப் பார்த்துச் சிரித்தவன் 😁 சித்தார்த்தை அணைத்துக்கொண்டு அவளுடைய தோளில் சாய்ந்தான். ஜான்வியும் அவன் மேல் சாய்ந்துகொண்டாள். வருண் மற்றும் ஜான்வியின் மனம் முழுவதும் மகிழ்ச்சியும் காதலும் நிறைந்திருந்தது. 😍 ❤️ 🥰

அன்பான அப்பா அம்மா மற்றும் அழகான குழந்தை என அவர்கள் அந்தத் தருணத்தை குடும்பமாக
மிகவும் என்ஜாய் செய்தனர். 😍

-நேசம் தொடரும்....

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 26
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.