தாபம் 25

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 25: முத்தமிட்ட உதடுகள் உளருதே...

வெகு நேரமாக மயக்கத்தில் இருந்த ஆராதனா கண் விழித்தவுடன் அங்கு இருந்த நர்ஸ் ஐ பார்த்து "நான் ஹரியை பார்க்க வேண்டும்" என்று கெஞ்சி கொண்டு இருந்தாள். அதை கதவுக்கு வெளியே நின்று பார்த்து கொண்டு இருந்த ஹரி, மனம் பொறுக்காமல் உள்ளே சென்றான். மெதுவாக ஆராதனாவிம் முன் வந்து நின்றான் ஹரி. அவர்கள் இருவருக்கும் பிரைவசி கொடுக்க விரும்பிய நர்ஸ் அங்கு இருந்து சென்று விட்டாள்.


ஹரியை பார்க்கும் வரை ஹரி... ஹரி.. என்று வாய் விடாமல் பிதற்றிக் கொண்டு இருந்த ஆராதனா அவனை பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்து போய் விட்டாள். வலி நிறைந்த கண்களுடன் ஆராதனாவையை பார்த்து கொண்டு இருந்தான் ஹரி. ஆராதனா மெல்லிய தேகம் உடையவள்.


அவளுடைய மெல்லிய தேகம் அதிக ரத்தப் போக்கின் காரணமாக இன்னும் மெலிந்து காணப்பட்டது. அவளுடைய நிலா போன்ற ஒளி வீசும் முகம் இன்னும் வெளிர்த்து காணப்பட்டது. எலும்பு கூட்டின் மேல் தோலை போர்த்தி செய்ய பட்ட ஒரு பொம்மை போல் இருந்தாள் ஆராதனா. அவளை அப்படி பார்த்த ஹரியின் மனம் வலித்தது. 💔

ஹரி தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை உணர்ந்த ஆராதனா, தன் தலையை உயர்த்தி அவனை பார்த்தாள். ஆராதனாவை விட ஹரியை பற்றி வேறு யார் தான் அறிந்து இருக்க கூடும்? அவனை பார்த்தவுடன், அவன் கண்களில் தெரியும் வலியை புரிந்து கொண்டாள் ஆராதனா. அதை உணர்ந்தவளின் மனம் குற்ற உணர்ச்சியால் நிரம்ப... அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவளுடைய கன்னத்தை தொட்டது. 😢


"விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ... 😭"
"உயிரிலே நினைவுகள் தழும்பூதே ..."
"கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே ... 😢 💔"
"முத்தமிட்ட உதடுகள் உளருதே .... 💋"
"நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்... 😍"
"என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்... 😢 😭"
"நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே... ❤️"
"அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே... 🌹"


ஏற்கனவே வேதனை தீயில் வெந்து கொண்டு இருந்த ஹரியால் ஆராதனா அழுவதை தாங்கி கொள்ளவே முடியவில்லை

ஹரி: "போதும் -டி. நீ ஆல்ரெடி நிறைய அழுதுட்ட. இதுக்கு மேலயும் அல வேண்டாம்." என்று வலி நிறைந்த குரலில் சொன்னான். 💔

"டி" இந்த ஒரு வார்த்தை ஆராதனாவின் மன கவலை அனைத்தையும் போக்கும் மருந்து போல் செயல் பட்டது. அந்த வார்த்தை செய்த மாயத்தில்... ஹரியை விரக்தி புன்னகை சிந்தினாள் ஆராதனா. 😁 இந்த வார்த்தையை அவன் வாயில் இருந்து மீண்டும் கேட்பதற்காக அவள் எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் என்று அவளுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்..


எப்போதும் ஆராதனாவை தன்னிடம் இருந்து விலக்கி வைப்பதற்காக பார்மல் ஆகவே அவளிடம் பேசுவான் ஹரி. சில வருடங்களுக்கு பின் இன்று தான் ஹரி அவர்கள் காதலித்த நாட்களில் அவளிடம் பேசுவதை போல் அவளுடன் உரிமையாக பேசுகிறான். அவன் தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றாலும் இப்படி சகஜமாக தன்னிடம் பேசினால் கூட போதுமானது என்று தன் மனதுக்குள் நினைத்தாள் ஆராதனா.


ஹரி: "இப்ப எப்படி இருக்க? உனக்கு ஏதாவது வேணுமா? சொல்லு கொண்டு வர சொல்றேன்" என்று அக்கறை நிறைந்த குரலில் கேட்டான்.
ஆராதனா: சில நொடிகள் அமைதியாக இருந்தவள், தன் மனதிற்குள்; "எனக்கு நீ தான் வேணும்" என்று நினைத்தவள், அவனிடம்... "ஏன் எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா ஹீரோ?" என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். 😢

ஹரி அவள் தன்னை தான் குறிப்பிடுகிறாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அதுவும் சில வருடங்களுக்கு பின் அவள் வாயால் அவள் தன்னை ஹீரோ என்று அழைப்பதை கேட்டவனின் மனம் வலித்தது. தன்னை ஹீரோவாக அவளுடைய மனதில் நினைத்து வாழ்ந்து கொண்டு இருப்பவளின் வாழ்க்கையில் ஒரு வில்லனை போல் நடந்து கொண்டு விட்டோமே என்று நினைத்த ஹரி, தன்னையே ஒரு கேவலமான ஆளாக நினைத்து வெட்கப் பட்டான்.


பின் அவளோடு இணைந்து மகிழ்ச்சியாக செலவிட்ட ஒவ்வொரு தருணங்களையும் நினைத்து பார்த்தவன், இனி அவளை ஒரு போதும் கஷ்ட படுத்த கூடாது என்று தன்னுடைய மனதில் ஒரு சபதம் எடுத்தான். பின் குற்ற உணர்ச்சியுடன் அவளை பார்த்து வலி நிறைந்த புன்னகையை சிந்தியவன், 😁
"இந்த உலகத்துல இருக்குற எல்லா சந்தோஷத்தையும் அனுபவிக்கிறதுக்கு உனக்கு தகுதி இருக்கு. ஆனா உன்ன என் கூட வச்சுக்குறதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு தான் தெரியல ஆரு.. ஐ அம் சாரி. நான் உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன். எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல." என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.


ஆராதனா: "நீ ஏன் சாரி சொல்ற? நான் அந்த குடும்பத்தில பிறந்தது என்னோட தப்பு. நீ என்ன விட்டு ஏன் போனன்னு எனக்கு தெரியும். அந்த குடும்பத்தில பொண்ணா பொறந்த பாவத்துக்கு எனக்கு இந்த பனிஷ்மென்ட் தேவை தான்னு நானும் அமைதியா இருந்தேன். ஆனா ஒரு கட்டத்துக்கு மேல என்னால நீ இல்லாம இருக்க முடியல. எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்துச்சு.‌ இந்த குடும்பம் தானே எல்லாத்துக்கும் காரணம்... அந்த குடும்பத்தில இருந்து வெளியில் வந்துட்டா நீ திருப்பியும் என் கூட பேசுவன்று நினைச்சேன். ஆனா அப்பவும் நீ என்ன இக்னோர் பண்ணி கிட்டே இருந்த. இருந்தாலும் எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்துச்சு உனக்கு என் மேல இருக்கிற கோபம் ஒரு நாள் குறைஞ்சு நீ பழைய படி என் கிட்ட பேசுவன்னு. ஆனா நான் எதிர்பாத்த மாதிரி எதுவுமே நடக்கலையே...


போக போக நான் தான் உன்ன லவ் டார்ச்சர் பண்ணிட்டு இருக்குனோன்னு எனக்கு தோனிருச்சு. அதனால தான் தான் செத்து போனா ஆச்சு நீ நிம்மதியா இருப்ப -ன்னு இப்படி பண்ணுனேன். ஆனா வழக்கம் போல இப்பயும் நான் உன்னை டார்ச்சர் தான் பண்ணி இருக்கேன் போல அதுக்கு நான் தான் உன் கிட்ட சாரி கேக்கணும் ஐ அம் சாரி." என்று வருத்தம் தோய்ந்த குரலில் மூச்சு வாங்க பேசினாள். 🥺


ஹரி: "உன் மேல எந்த தப்பும் இல்ல. அது எனக்கு புரியாமையும் இல்ல. இப்ப தேவை இல்லாததை பத்தி எல்லாம் பேச வேண்டாம். நீ நல்லா ரெஸ்ட் எடு. டாக்டர் கிட்ட உனக்கு சாப்பிடறதுக்கு என்ன குடுக்கிறது -ன்னு கேட்டு நான் எடுத்துட்டு வரேன். மொதல்ல எதாவது கொஞ்சம் சாப்பிடு ஓகே வா." என்று உணர்ச்சிகள் பொங்க சொன்னான். இத்தனை நாட்களாக வெளியில் அவளிடம் கோபமாக நடந்து கொண்டாலும், உள்ளுக்குள் அவனுக்கு அவள் மீது இருந்த காதல் இன்றளவிலும் அப்படியே தான் இருந்தது.


ஆராதனா: "ம்ம்ம்... நீ சாப்டியா?"

ஹரி: "சாப்பிட்டேன். இப்ப தான்..."

ஆராதனா: "நெஜமாவா? 🤨"

ஹரி: "நெஜமா தான் டி."

ஆராதனா: "நீ எப்டி சாப்பிட்டு இருப்பன்னு எனக்கு தெரியும். உனக்கும் சாப்பாடு கொண்டுட்டு வர சொல்லு. சேர்ந்து சாப்பிடலாம்."

ஹரி: "நான் தான் சாப்பிட்டேன்ன்னு சொல்றேன்ல கேக்க மாட்டியா?"

ஆராதனா எதுவும் பேசாமல் அவனை முறைத்து பார்த்தாள். 😒

இவள் எப்படியும் தான் சொல்வதை கேட்க போவதில்லை என்று உணர்ந்த ஹரி அவள் சொன்னபடியே செய்தான்.


வெகு நாட்களுக்கு பின் இன்று ஹரியோடு தனியாக இருக்க வாய்ப்பு கிடைத்ததால் உள்ளம் மகிழ்ந்தாள் ஆராதனா.


பைக் ஷோரூம் இல்...

ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய சுதாகரும், ரேவதியும், ரித்திகாவும், ஷாலினியும், லாவண்யாவும் ஷோ ரூமிற்கு உள்ளே சென்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து ராகுவிக்கு ஏற்ற மாதிரி ஒரு ஸ்கூட்டியை தேடி பிடித்தனர். அந்த ஸ்கூட்டி கருப்பு நிறத்தில் இருந்தது. ரித்திகாவுக்கு ஏற்கனவே ஸ்கூட்டி ஓட்ட தெரியும் என்பதால் அந்த ஸ்கூட்டியை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தாள்.


அவர்கள் தேர்வு செய்து இருந்த ஸ்கூட்டி அனைவருக்கும் பிடித்து இருந்தது. அந்த ஸ்கூட்டியின் விலை ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. ரித்திகா ஏற்கனவே புது வீடு மாற்றியதற்காகவும், வீட்டு உபயோக பொருட்கள் புதிதாக வாங்குவதற்காகவும், நிறைய பணம் செலவழித்து இருந்தாள். அதனால் இப்போது அவளுடைய கையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக இல்லை.


அவள் ஏற்கனவே சுதாகரிடம் சொன்னது படி தவணையில் வண்டியை வாங்குவதற்காக முன்பணமாக பத்து ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதியை இஎம்ஐ யில் மாதா மாதம் செலுத்தும் வகையில் செய்து கொண்டாள்.

ஸ்கூட்டியை வாங்கிய பின் ரித்திகா ஓடி வர, மற்ற நால்வரும் ஆட்டோவில் ரித்திகாவை பின் தொடர்ந்து ஒரு கோயிலுக்கு வந்தனர்.
அந்த ஸ்கூட்டிக்கு பூஜை போட்டு விட்டு மீண்டும் ரித்திகா தன்னுடைய ஸ்கூட்டியில் அவளுடைய வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் நால்வரும் அவளை பின் தொடர்ந்து நாராயணன் பேலஸ்க்கு வந்தனர்.

ஷாலினியும், லாவண்யாவும், ரித்திகா புது ஸ்கூட்டி வாங்கி இருப்பதற்காக ட்ரீட் கெட்டதால் அவர்களையும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றவள் அவர்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி கொடுத்தாள்.
சிறிது நேரம் ரித்திகா உடன் அவளுடைய வீட்டில் இருந்து விட்டு லாவண்யாவும், ஷாலினியும், மணி மாலை 6:00 ஐ கடந்து விட்டதால் அங்கு இருந்து கிளம்பி தங்களுடைய வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பும் வரை உற்சாகமாக இருந்த ரித்திகா, அவர்கள் கிளம்பியதும் சோர்வாக தன்னுடைய அறைக்கு சென்றவள் படுத்து கொண்டாள்.


வருணின் ஆஃபீஸ் ரூமில்...


மணி இரவு 8 ஆகி இருந்தது.
அந்த ஆஃபிஸ் இல் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேரமாகவே தங்களுடைய வீட்டிற்கு சென்று இருந்தனர். இவ்வளவு நேரம் ஆகியும் தன்னுடைய வீட்டிற்கு செல்ல மனமில்லாத வருண், அவனுடைய கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான்.

அவனுடைய கைகள் இரண்டும் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தாலும் அவன் மனம் முழுவதும் ஜான்வி தான் நிறைந்து இருந்தாள்.
அப்போது அவனுடைய ஆபீஸ் ரூம் கதவை தட்டிய படி உள்ளே வந்த சிவா... "சார் உங்க கிட்ட ரித்திகாவ பத்தி ஒன்னு சொல்லணும்" என்றான்.

ரித்திகாவின் பெயரை கேட்டவுடன் தான் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே நிறுத்திய வருண் ஆர்வமாக சிவாவை பார்த்தான்.


சிவா: "நீங்க சொன்ன மாதிரியே அந்த பெண்ணுக்கே தெரியாம நம்ம டீம் வச்சு அவளை ஃபாலோ பண்ணோம்." என்று சொல்ல,

வருண்: "என்னாச்சு? எனிதிங் சீரியஸ்?" இன்று அவளைப் பற்றி ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கும் அதை வைத்து அவளை சித்தார்த்தை விட்டு விரட்டி அடித்து விடலாம் என்ற எண்ணத்து
டன் ஆர்வமாக கேட்டான்.

-நேசம் தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.