தாபம் 22

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 22: ஜான்வியின் பிறந்த நாள்

வருண், நாராயணன் பேலஸை வந்தடைந்தான். அப்போது மணி நள்ளிரவு 1:30 ஆகி இருந்தது. அவன் வரும் வழியிலேயே செண்பகத்திற்கு கால் செய்து ஹரியின் நண்பனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் அவன் அவனை பார்த்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் இருப்பதாகவும் தான் மட்டும் வீட்டிற்கு வருவதாகவும் சொல்லி இருந்தான்.


அதனால் எப்போதும் அவர்களுடைய வருகைக்காக லிவிங் ரூம் சோஃபாவில் அமர்ந்தபடி காத்திருக்கும் செண்பகம் இப்போது அவர்களுக்காக காத்திருக்காமல் அவளுடைய அறைக்கு தூங்க சென்று விட்டாள்.


வருண் தன்னுடைய வீட்டிற்குள் வரும் போது அந்த வீடே மயான அமைதியில் இருந்தது. அவனை வரவேற்பதற்கு அங்கே யாரும் இல்லை.
ஹாஸ்பிடலுக்கு சென்று வந்து இருந்ததால் நேராக தன்னுடைய அறைக்கு சென்ற வருண், குளித்து ரெஃப்ரெஷ் ஆகி விட்டு பாத் ரூமில் இருந்து வெளியே வந்தான்.

அவனுக்கு திடீரென்று சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எனவே சித்தார்த்தின் அறைக்கு சென்றான் வருண்.


சித்தார்த்தின் அறையில்…


வருண் அந்த அறையின் கதவை திறந்தபடி உள்ளே வந்தான். சித்தார்த் பெட்டில் வசதியாக போர்வை போர்த்திக் கொண்டு சௌகரியமாக தூங்கிக் கொண்டு இருந்தான். சுகந்தி அந்த பெட்டின் அருகே தரையில் ஒரு பாயை விரித்து அதில் படுத்து இருந்தாள். இருவருமே அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் வருண் அங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.


சித்தார்த்தின் அருகே சென்ற வருண், தன்னுடைய மகனின் தூய்மையான சலனமற்ற முகத்தை பார்த்தான். அதுவரை ஜான்வியின் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டு இருந்தவனுக்கு சித்தார்த்தின் அருகாமை பெரிய ஆறுதலாக இருந்தது.
அமைதியாக சிறிது இடைவெளி விட்டு சித்தார்த்தின் பெட்டில் அவனுக்கு அருகே படுத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான் வருண்.

சில நிமிடங்கள் அப்படியே கடந்தது. திடீரென்று அந்த இடத்தின் குளுமை அதிகமாவதை போல் உணர்ந்தான் வருண். அவனுடைய உடல் அப்பட்டமாக நடுங்கியது.
அந்த ரூமில் ஏசி ஓடிக் கொண்டு இருந்தது. சித்தார்த்தும், சுகந்தியும், போர்வையை போர்த்தியபடி படுத்து இருந்தார்கள்.


ஆனால் அவன் எந்த போர்வையும் போர்த்திக் கொண்டு இருக்கவில்லை. அதனால் தான் அவனுக்கு குளுறுகின்றது போல என்று நினைத்தவன், அதை பெரிதாக நினைக்கவில்லை.
இன்னும் சில மணி நேரங்களில் விடிய போகிறது என்பதால் அது வரை பொறுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், மீண்டும் அப்படியே படுத்து கொண்டான்.


சித்தார்த்திற்கு ஏசியின் கூலிங்கை குறைத்தாலும், ஆஃப் செய்தாலும், அவனுக்கு தூக்கம் வராது என்பதால் அப்படி எதையும் செய்து அவனுடைய மகனின் உறக்கத்தை அவன் கெடுக்க விரும்பவில்லை.
சில நிமிடத்திற்கு பின் மீண்டும் ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்தான் வருண்.


அதனால் தன்னுடைய கண்களை திறந்தவன், எழுந்து அமர்ந்தான். அரை தூக்கத்தில் சுற்றி முற்றி பார்த்தான் வருண். அவனுடைய கண்களுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அவனுடைய நாசி எதையோ உணர்வதை போல் இருந்தது.


அவனுக்கு அந்த அறையில் ஏதோ ஒரு நறுமணம் வீசுவதை போல் இருந்தது. அது என்னவென்று அவனுடைய மூளை தானாக சிந்திக்கத் தொடங்கியது. அது என்ன வாசனை என்று அவன் கண்டு அறிந்த தருணம் அவனுடைய தூக்கம் எல்லாம் பறந்து தூரச் சென்றது. ஆம் இது அதே வாசனைதான். அவன் காரில் இருக்கும் போது வந்த அதே வாசனை. இது ஜான்வி உபயோகப்படுத்தும் பிரத்தியேகமான பெர்ஃப்யூமின் வாசனை.
அதை எல்லாம் நினைத்து பார்த்த வருண், எதையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அவன் எப்போதும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் அவனுக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது போல என்று நினைத்தவன், அங்கு இருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தான்.
அதில் மணி 3:30 என்று காட்டியது. அவன் எப்போதும் விடியற்காலையில் எழுந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவன் என்பதால் தன்னுடைய அறைக்கு சென்று சிறிது நேரம் ஆபீஸ் வேலையை பார்த்து விட்டு ஜாகிங் செல்லலாம் என்று நினைத்தவன் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். அவன் நினைத்ததை போல் அவனுடைய அனைத்து வேலைகளையும் சரியாக செய்து முடித்தான்.


காலை பொழுது அழகாக விடிந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை.....
ரித்திகாவின் வீட்டில்...
எப்போதும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அரக்க பறக்க எழுந்து கிளம்பும் ரித்திகா, இன்று விடுமுறை என்பதால் சிறிது நேரம் நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவள்; அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தாள்.


ஆனால் ரேவதியும், சுதாகரும், வழக்கம் போல் விடியற்காலையில் எழுந்து கொண்டவர்கள், தங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மற்ற நாட்களில் "நேரம் ஆகிவிட்டது சீக்கிரமாக எழுந்து வா.." என்று ரித்திகாவை எழுப்பும் ரேவதி கூட இன்று தன் மகளை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து தூங்கட்டும் என்று விட்டுவிட்டாள்.


சில நேரங்களில் "சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்" என்று சொல்வதை போல் ரேவதியே மனம் வந்து ரித்திகாவை தூங்க விட்டாலும்... ரித்திகாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்து அவளை எழுப்பி விட்டது. யார் இந்த நேரத்தில் தனக்கு கால் செய்கிறார்கள் என்று அரை தூக்கத்தில் குழப்பத்துடன் தன்னுடைய மொபைலை எடுத்து பார்த்தாள் ரித்திகா.


காலர் ஐடியில் ஷாலினி உடைய பெயர் இருந்தது. சலிப்பாக இருந்தாலும் ஷாலினியின் பெயரை பார்த்தவுடன் சிரித்த முகத்துடன் கால் ஐ அட்டெண்ட் செய்து பேசினாள் ரித்திகா. 😁 மறு முனையில் ஷாலினி உடைய உற்சாகமான குரல் ரித்திகாவுக்கு கேட்டது.


ஷாலினி: "குட் மார்னிங் அக்கா." என்று உற்சாகமான குரலில் சொல்ல,


ரித்திகா: "குட் மார்னிங் ஷாலினி" என்று கொட்டாவி விட்டபடியே சொன்னாள். 🥱


ஷாலினி: "என்ன அக்கா இன்னும் தூக்கம் போகலையா உங்களுக்கு...?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். 😅

ரித்திகா: "அடியே... தூங்குறவளுக்கு கால் பண்ணி இன்னும் தூக்கம் போலையா-ன்னு வேற கேக்குற பாத்தியா இது உனக்கே நியாயமா இருக்கா...?" என்று பாவமாக கேட்டாள். 😪

ஷாலினி: "சாரி...!! சாரி...!! அக்கா. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா...?" என்று அவசரமான குரலில் கேட்டாள்.

ரித்திகா: "அட பரவாயில்லை விடு. அதுக்கு எதுக்கு இத்தனை சாரி...?"

ஷாலினி: "சரிக்கா."

ரித்திகா: "மார்னிங்கே கால் பண்ணி இருக்க என்ன விஷயம்?" என்று கேட்க,

ஷாலினி: "அது பெருசா ஒன்னும் இல்ல அக்கா. நானும், லாவண்யாவும் வெளில போகலாம்னு இருக்கோம். அதான் நீங்களும் வரீங்களா-ன்னு கேட்கலாம்-ன்னு கால் பண்ணேன்." என்றாள்.


ரித்திகா: "வெளிலையா?? எங்க போறோம்...? எப்ப போறோம்?"


ஷாலினி: "எங்க போறோம்ன்னுலாம் தெரியாதுக்கா. வெளியில போன உடனே எங்க எல்லாம் போகணும்னு தோணுதோ அங்க எல்லாம் போக வேண்டியது தான். நீங்க இப்போ நான் வரேன்ன்னு ஒரு வார்த்தை சொன்னா இப்பவே கிளம்பலாம்." என்றாள்.


ரித்திகாவுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அவள் இருந்த களைப்பில் இப்போது மணி என்ன என்று பார்ப்பதற்கு கூட அவளுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது. அதனால் ஷாலினியிடமே... "இப்போ டைம் என்ன?" என்று கேட்டாள்.


ஷாலினி: "9:00 மணி ஆகுது அக்கா." என்று சொல்ல,

ரித்திகா: "அதுக்குள்ள 9:00 ஆயிடுச்சா?" என்று ஆச்சரியமாக கேட்டாள். 🙄 😪


ஷாலினி: "பின்ன நீங்க பாட்டுக்கு இப்படி தூங்கிட்டு இருந்தீங்கன்னா நைட்டு 9:00 மணியே ஆயிடும்." என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொன்னாள். 😂 🤣


ரித்திகா: "அட ஏண்டி... நீ வேற சும்மா இரு. எனக்கு வெளியில போற வேலை இருக்கு. 10 மணிக்கு அங்க இருக்கணும். இப்ப கெளம்புனா தான் அங்க பத்து மணிக்குள்ள போக முடியும். நான் வேற டைம் பார்க்காம இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நல்ல வேளை நீ கால் பண்ணுன இல்லைன்னா இன்னும் தூங்கிட்டு தான் இருந்து இருப்பேன்." என்றாள்.

ஷாலினி: "சரி அக்கா. அங்க போயிட்டு எப்ப வருவீங்க...?"
ரித்திகா: "ஆஃப்டர் நூன் வந்துருவேன்."


ஷாலினி: "அப்ப ஓகே அக்கா. நீங்க வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணுங்க. நம்ம அப்புறமா கிளம்பலாம்."


ரித்திகா: "அச்சோ...!!! நீங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க."


ஷாலினி: "பரவாயில்லை அக்கா. பொறுமையா போய்க்கலாம். நீங்க ப்ரீ ஆயிட்டு கால் பண்ணுங்க ஓகேவா...?"


ரித்திகா: "ஓகேமா பாய்."

ஷாலினி: "பாய்." என்றவள், காலை கட் செய்து விட்டாள்.
ரித்திகா தன்னுடைய பெட்டில் இருந்து வேகமாக எழுந்தவள் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பினாள்.

எப்போதும் போல் இன்று சுடிதார் அணியாமல் ஒரு குர்தாவும் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து இருந்தாள் ரித்திகா. அந்த ஆடை இன்னும் அவளை இரண்டு வயது குறைத்து சிறு பெண்ணாக காட்டியது.
தன்னுடைய வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்த ரித்திகா, ஒரு ஆட்டோவை பிடித்து அதில் ஏறி அமர்ந்தாள்.


பின் ஆட்டோகாரரிடம் தான் செல்ல வேண்டிய அட்ரஸை சொன்னாள். சில நிமிட பயணத்திற்கு பின் அந்த ஆட்டோ ஒரு பெரிய கேட்டின் முன்னே வந்து நின்றது. ஆட்டோகாரருக்கு பணத்தை கொடுத்து விட்டு கீழே இறங்கி அந்த கேட்டின் முன் வந்து நின்ற ரித்திகா, அதில் இருந்த பெயரை மேலே அண்ணாந்து பார்த்து படித்தாள்.


அங்கு இருந்த நேம் போர்டில்... "ஜான்வி ஆதரவற்றோர் இல்லம்" என்று பெரிதாக எழுதி இருந்தது. அதை தன் மனதிற்குள் படித்த ரித்திகா, தான் வர வேண்டிய இடத்திற்கு சரியாக வந்து விட்டதாக நினைத்து உள்ளே சென்றாள். அந்த இல்லமே விழா கோலம் பூண்டிருந்தது. அங்கு இருந்த ஒவ்வொரு மூலை முடுக்கும் சுத்தம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அதை எல்லாம் பார்த்த படியே ரிசப்ஷனுக்கு வந்தாள் ரித்திகா.

ரிசப்ஷனிஸ்ட் வேறு வேலையில் பிஸியாக இருந்ததால் அங்கே யாரும் இல்லை. அதனால் அந்த இல்லத்தின் மேனேஜருக்கு கால் செய்த ரித்திகா, தான் இங்கே வந்திருக்கும் விஷயத்தை சொன்னாள். அந்த மேனேஜர் அவருக்கு இருந்த அனைத்து வேலையையும் முடித்து இருந்ததால் ரித்திகா அழைத்தவுடன் ரிசப்ஷனுக்கு வந்தார்.


மேனேஜர்: ரித்திகாவை பார்த்தவர், "நீங்க தான் ரித்திகாவா மா...?" என்று மரியாதையாக கேட்டார்.


ரித்திகா: தன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் வயதானவரை பார்த்தவள்... 'இவர் தான் மேனேஜராக இருப்பாரு போல' என்று நினைத்தவள், "எஸ் சார்." என்றாள்.


மேனேஜர்: "எனக்கு கரூர் ஹோம் ஓட அட்மின் மேடம் கால் பண்ணி நீங்க வருவீங்க-ன்னு சொன்னாங்க. ரொம்ப தேங்க்ஸ் மா. உங்களை மாதிரி சின்ன பசங்க எல்லாம் இந்த மாதிரி நல்ல காரியங்கள் செய்யறதுக்கு வாலண்டியரா வர்றது ரொம்ப பெரிய விஷயம்." என்று சொல்ல,


ரித்திகா: "ஐயோ...!!! சார் எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க...? பெரிய பணக்காரங்களா இருக்கிறவங்களால இங்க லட்ச லட்சமா டொனேஷன் கொடுக்க முடியும் அதனால அவங்க கொடுக்குறாங்க.
என்ன மாதிரி சாதாரண குடும்பத்துல இருக்கிறவங்களால பணம் காசு லாம் கொடுக்க முடியாது. என்னால முடிஞ்சதை நான் செய்யணும்ன்னு நினைக்கிறேன். அதனால தான் நான் இங்கே வரேன். எனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் இந்த பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவ்வளவு தான். முன்னாடி நான் இதை எங்க ஊர்ல செஞ்சுட்டு இருந்தேன். இப்போ நான் இந்த ஊருக்கு வந்துட்டதுனால இங்க வந்து இருக்கேன். நான் பெருசா வேறு எதுவும் செஞ்சிடல சார்." என்றாள்.


மேனேஜருக்கு ரித்திகாவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. தன்னுடைய பேத்தியின் வயதில் இருக்கும் இவளுக்கு தான் எத்தனை நல்ல குணம் என்று நினைத்து மகிழ்ந்தவர், சிரித்துக் கொண்டே அவளை பார்த்து... "சரி மா.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்-ன்னு தெரியுமா உனக்கு...?" என்றார்.


ரித்திகா: "ஸ்பெஷலா...? என்ன ஸ்பெஷல்-ன்னு எனக்கு தெரியல சார்."


மேனேஜர்: "இந்த ஹோம் ஓட ஓனர் ஜான்வி மேடம் இருக்காங்கல்ல இன்னைக்கு அவங்களோட பிறந்த நாள்."


ரித்திகா: "ஓ அப்படியா சார்...? சாரி எனக்கு தெரியாது. ஆனா அவங்க இறந்துட்டாங்க-ன்னு கேள்வி பட்டேன்..."


மேனேஜர்: "ஆமா மா. பாவம் அவங்க ரொம்ப நல்லவங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. அவங்க சாகுறதுக்கு முன்னாடி ஒரு சில ஊர்ல மட்டும் தான் அவங்க பேர்ல இந்த மாதிரி ஹோம் இருந்துச்சு. அவங்க இறந்ததுக்கு அப்புறம் அவங்க குடும்பத்துல இருந்து அவங்க ஞாபகமா தமிழ்நாடு முழுக்க எல்லா ஊர்லயும் ஹோம் திறந்து இருக்காங்க." என்றார்.


"இந்த ஹோம் தான் மொத மொதல்ல அவங்க ஸ்டார்ட் பண்ணது. அதனால அவங்களோட பிறந்த நாள் அ கொண்டாடுறதுக்கு அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க இங்க வருவாங்க. அதான் இந்த ஏற்பாடு எல்லாம்" என்று சுற்றி நடந்து கொண்டு இருந்த ஏற்பாடுகளை கைகாட்டினார்.


ரித்திகா: ஒரு முறை சுற்றி முற்றி பார்த்தவள், பின் அவரை பார்த்து... "ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்க நானும் செய்றேன்." என்றாள்.


மேனேஜர்: "நீ டீச்சர் தானே மா?"

ரித்திகா: "எஸ் சார்."

மேனேஜர்: "பின்னாடி சின்ன பசங்களை எல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியாம எல்லாரும் கஷ்ட பட்டுட்டு இருக்காங்க எல்லா பிள்ளைங்களும் அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீ வேணா அந்த பிள்ளைகளை போய் கொஞ்ச நேரம் பாத்துக்கிறியா மா?" என்று கேட்க,

ரித்திகா: "கண்டிப்பா நான் பாத்துகிறேன்." என்றவள், அவர் சொன்ன இடத்திற்கு சென்றாள்.


அந்த இடத்தில் நிறைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஒருவரோடு ஒருவர் விளையாடி சத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு நடுவே சென்ற ரித்திகா முதல் ஐந்து நிமிடம் அவர்களோடு சேர்ந்து விளையாடியவள் பின் ஆசிரியராக அவதாரம் எடுத்தாள்.


அங்கே இந்த குழந்தைகளிடம் "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா" என்று சமாதானப்படுத்தி அவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு பக்கமாக உட்கார வைத்து விட்டு ஒவ்வொரு குழந்தையாக அழைத்து "உனக்கு பாட தெரியுமா...? ஆட தெரியுமா...?" என்று அவர்களுடைய திறமைகளை வெளியே கொண்டு வரும் பொருட்டு ஒவ்வொரு குழந்தையாக அழைத்து பேசினாள்.


சில குழந்தைகள் "நான் பாடுகிறேன்" என்று பாடினர். சில குழந்தைகள் "நான் ஆடுகிறேன்" என்று ஆடினர். அவர்களை எல்லாம் பார்த்து நன்கு ஆட தெரிந்தவர்களின் பெயரை தனியாக ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டாள்.

பிற்காலத்தில் அவள் இங்கு வரும்போதெல்லாம் அவர்களுக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் கழித்து. அந்த இல்லத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர். அப்போது அந்த பெரிய கேட்டின் முன் ஒரு ஆடம்பரமான கருப்பு ஸ்போர்ட்ஸ் கார் வந்து நின்றது. அந்த இல்லத்தின் மேனேஜர் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அந்த காரில் இருந்து இறங்கி வரப்போகிறவர்களை வரவேற்பதற்காக வெளியே பூங்கொத்துடன் காத்திருந்தனர்.


முதலில் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டின் பக்க கதவை திறந்தபடி கீழே இறங்கி வந்தான் சிவா. பின் டிரைவர் சீட்டில் இருந்து கீழே இறங்கி வந்தான் வருண். அங்கு இருந்தவர்கள் இந்த காட்சியை ஆச்சரியமாக பார்த்தனர். ஏனென்றால் பொதுவாக பாஸ் ஐ அருகில் உட்கார வைத்து அவர்களுடைய மேனேஜர் அல்லது டிரைவர் தான் காரை ஓட்டி வருவார்கள்.

ஆனால் இங்கேயோ மேனேஜரை தனக்கு அருகில் உட்கார வைத்து விட்டு காரை சி.இ.ஓ. ஓட்டிக் கொண்டு வருவது வித்தியாசமாக இருந்தது.
வருண் விற்கும் ஜான்விக்கும் இரண்டு வருடத்திற்கு முன் நடந்த ஆக்சிடென்ட்டி
ல் இருந்து அவன் யாரையும் நம்புவதில்லை. அதனால் எங்கே சென்றாலும் அவனே தான் காரை டிரைவ் செய்து கொண்டு செல்வான்.

-நேசம் தொடரும்.

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.