தாபம் 21

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 21: இது ஜான்வியின் குரல்…

போதுமான அளவிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட பின் ஆராதனாவின் உடல் நிலை சற்று முன்னேறியது. இருப்பினும் அவள் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தாள். அவள் இருந்த ரூமிற்கு வெளியே வருணும், ஹரியும், திவ்யாவும், வெயிட் பண்ணிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த அறையில் இருந்து சீஃப் டாக்டர் வெளியே வந்தார். வருணும், ஹரியும், வேகமாக எழுந்து டாக்டரின் அருகே சென்றனர்.


ஹரி: "ஆராதனா இப்போ எப்படி இருக்கா...? அவ உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே டாக்டர்...?" என்று பதட்டம் கலந்த வருத்தமான குரலில் கேட்டான்.

டாக்டர்: "நத்திங் டு வரி மிஸ்டர் ஹரி. அவங்களுக்கு நிறைய பிளட் லாஸ் ஆகி இருக்கு. அது தான் பிரச்சினையே. இப்போ வருண் சார் பிளட் கொடுத்துட்டதால அவங்க கண்டிஷன் ஸ்டேபிள் ஆயிருக்கு. இருந்தாலும் அவங்க அப்சர்வேஷன்ல இருக்கணும். அவங்களுக்கு கான்சியஸ் வந்தவுடனே நார்மல் ஆயிட்டாங்கன்னா... நார்மல் வார்டுக்கு ஷிப்ட் பண்ணிருவோம்." என்றார்.


ஹரி: "தேங்க்யூ டாக்டர்." என்று மனதார நன்றி சொன்னான். 🙏


வருண்: "ஆராதனா இங்க இருக்கிறது வெளில யாருக்கும் தெரிய கூடாது. முக்கியமா அவ அண்ணனுக்கும், அவ ஃபேமிலிக்கும். புரிஞ்சுதா டாக்டர்?" என்று கடுமையான குரலில் கேட்டான்.

டாக்டர்: "புரியுது சார். நான் ஆல்ரெடி இதை பத்தி எல்லார் கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன். நத்திங் டு வொரி சார்." என்று பயந்த குரலில் சொல்ல,

வருண்: "ஓகே. இந்த ஃப்ளோரா ஃபுல்லா பிளாக் பண்ணுங்க. வேற எந்த பெசன்ட் ஐயும் இங்க அலோ பண்ணாதீங்க. இந்த ஏரியா வ ஃபுல்லா ரெஸ்ட்ரிக்ட் பண்ணிடுங்க." என்றான்.

டாக்டர்: "ஒகே சார்."

வருண்: "ம்ம்ம்."

டாக்டரிடம் பேசிவிட்டு சற்று தூரம் தள்ளி வந்து தன்னுடைய மொபைல் ஃபோனை எடுத்து அவனது அசிஸ்டன்ட் சிவாவிற்கு அழைத்தான் வருண். இரண்டு ரிங்கில் கால் ஐ எடுத்தான் சிவா.


ஹரியின் ஆடை முழுவதும் ஆராதனாவின் ரத்தம் இருந்ததால் அவன் மாற்றிக்கொள்வதற்கு வேறு நல்ல உடையை எடுத்து வர சொன்னவன், பின் அங்கு இருந்த சூழ்நிலையை விளக்கி அவனுடன் ஹரியின் அசிஸ்டன்ட் தர்ஷன் ஐயும் அழைத்து வர சொன்னான்.


வருண் சொன்னபடி ஹரிக்கான ஆடையை எடுத்துக்கொண்டு பின் தர்ஷன் ஐயும் தன்னுடன் சில நிமிடங்களில் அழைத்து வந்தான் சிவா. சிவாவும், தர்ஷனும் அங்கே வந்தவுடன் அனைத்தையும் அவர்களை பார்த்து கொள்ள வருண், அங்கே ஓரமாக நின்று அழுது கொண்டிருந்த திவ்யாவிடம் சென்றான் வருண்.


திடீரென்று வருண் அவள் முன்னே வந்து நிற்கவும் பயந்து விட்டாள் திவ்யா. அவளுக்கு ஹரியுடன் பேசவே பயமாக இருக்கும். பின் அவள் எப்படி வருணின் முன்னே தைரியமாக நிற்பாள்.

வருண்: "உன் பேரு திவ்யா தானே...?" என்று உணர்ச்சியற்ற குரலில் அவளை பார்த்து கேட்டான்.


திவ்யா: அவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசன் போன்றவன், தன்னுடைய பெயரை தெரிந்து வைத்திருக்கிறானே... என்று ஆச்சரியப்பட்ட திவ்யாவிற்கு வாயில் இருந்து வார்த்தை வெளியே வர மறுத்தது. அதனால் ஆம் என்று அவளுடைய தலையை ஆட்டினாள்.

வருண்: "ஆராதனாவுக்கு இப்படி ஆனது உன்னையும் ஹரியையும் தவிர வேற யாருக்காவது தெரியுமா...?" என்று கேட்க,

திவ்யா: "நோ சார். நாங்க ஆராதனாவை வெளில கூட்டிட்டு வரும் போது கூட ஹாஸ்டல் வார்டன் கூட அங்க இல்ல. எனக்கு தெரிஞ்சு வேற யாருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை." என்று திக்கி திணறி பயந்த குரலில் பேசினாள்.


வருண்: "ஓகே. இதுக்கு மேலயும் யாருக்கும் தெரிய கூடாது. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்." என்று சொல்ல,
திவ்யா: "எஸ் சார்." என்றாள்.

வருண்: "ஓகே. நீ இப்போ ஹாஸ்டலுக்கு போ. அங்க எல்லாத்தையும் சரி பண்ணு. இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்க இருக்க கூடாது. ஆராதனாவுக்கு யாராச்சு கால் பண்ணி அவ ரொம்ப நேரமா அட்டென்ட் பண்ணல -ன்னா சந்தேகம் வந்துரும். அதனால நீ அவளுக்கு வர கால் எல்லாத்தையும் அட்டென்ட் பண்ணி சமாளிச்சுக்கோ.
அவ ஃபேமிலில இருந்து கால் வந்தா நீ அட்டென் பண்ணாத. எப்படியும் அவ அட்டென்ட் பண்ண மாட்டா. சோ அவங்களுக்கு அதுல ஆச்சரியப்பட எதுவும் இருக்காது. எதுவும் சஸ்பிஷியஸ்ஸா நடக்காம பாத்துக்கோ. உன் கூட என்னோட அசிஸ்டன்ட் சிவா வருவான்.
உனக்கு அவர் ஹெல்ப் பண்ணுவாரு. நீ எத நினைச்சும் பயப்பட தேவை இல்லை. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்." என்று உறுதியான குரலில் சொன்னவன், திவ்யாவை, சிவாவுடன்... ஒரு காரில் அவர்களுடைய ஹாஸ்டலுக்கு செல்லும்படி அனுப்பி வைத்தான்.
திவ்யாவிற்கு அவன் சொல்வதையெல்லாம் மறுத்து பேசுவதற்கு எந்த தைரியமும் இல்லை என்பதால் வேறு வழி இன்றி யார் என்றே தெரியாத அந்த சிவாவுடன் செல்வதற்கு சம்மதித்தாள்.

சிவா முன்னே செல்ல... அவன் பின்னே பயந்த படி சென்றாள் திவ்யா. சிவா நடந்து செல்வது.. அவளுக்கு அவன் ஓடுவது போல் இருந்தது. அதனால் அவனுடைய வேகத்திற்கு திவ்யாவால் ஈடு கொடுக்க முடிய வில்லை. ஓட்டமும் நடையுமாக அவன் பின்னே சென்று கொண்டிருந்தாள். இருந்த பயத்தில் அவளுக்கு வேர்த்து கொட்டியது.
வேகமாக தன்னுடைய காருக்கு அருகே வந்த சிவா காரை திறந்தான்.

அப்போது தான் தன்னுடன் வந்து கொண்டிருந்தவள் எங்கே என்று பின்னே திரும்பி பார்த்தான். திவ்யா சிறிது தூரத்தில் வேகமாக பயந்த படி நடந்து வந்து கொண்டிருந்தாள். வேர்க்க விருவிருக்க அவள் வந்து கொண்டிருப்பதை பார்த்த சிவாவிற்கு அவள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கிய படி ஒரு மூலையில் ஒதுங்குவதற்காக ஓடி வரும் க்யூட் ஆன பூனையை குட்டி போல் தெரிந்தாள். 😍


அப்போது தான் அவளுடைய ஆடையிலும் ஆராதனாவின் ரத்தம் கரையாக இருப்பதை பார்த்தான் சிவா. அவன் ஒரு டீ சர்ட் அணிந்து அதற்கு மேல் ஒரு ஜாக்கெட் அணிந்து இருந்தான். அதனால் வேகமாக தன்னுடைய ஜாக்கெட்டை கழட்டினான்.

சிவா தன்னுடைய ஜாக்கெட்டை கழட்டுவதற்கும், திவ்யா அவனுடைய காரின் அருகே வருவதற்கும் சரியாக இருந்தது. அதனால் "இவன் ஏன் இப்படி அவனுடைய சட்டையை கழட்டுகிறான்...?" என்று நினைத்து பயந்து அவனை ஆச்சரியமாக பார்த்த படியே நின்று கொண்டிருந்தாள். 🙄
சிவா திவ்யாவின் அருகே சென்றான். திவ்யாவின் இதயம் வேகமாக துடித்தது. ஏதோ தவறாக நடக்க போகிறது என்று அவளிடம் சொல்லி கொண்டே இருந்த அவளுடைய மனசாட்சி எச்சரிக்கை அலாரம் அடித்தது. சிவா அவளுடைய அருகே செல்ல செல்ல அவள் பின்னே சென்று கொண்டே இருந்தாள்.


திவ்யாவின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்ததால்... சிவா, அவள் பயந்து பின்னே சென்று கொண்டு இருப்பதையும், அவன் அவள் முன்னே சென்று கொண்டு இருப்பதையும்.. அவன் கவனிக்க வில்லை. திவ்யா உச்ச கட்ட பதட்டத்தில் இருந்தாள். வார்த்தை தந்தி அடிக்க பேச முடியாமல் தயங்கிய படியே அவனை பார்த்து பேச தொடங்கினாள் திவ்யா.


திவ்யா: அவனுடைய கண்களை நேராக பார்த்தவள், "இப்ப.... இப்ப... எதுக்கு நீங்க என் பக்கத்தில வரீங்க..?" என்று திக்கித் திக்கி கேட்டாள். 🙁


அப்போது தான் அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று உணர்ந்தான் சிவா. தனக்குள் குறும்பாக சிரித்து கொண்டவன், அவளோடு சிறிது நேரம் விளையாடி பார்க்க நினைத்தான்.
சிவா: "ஏன்..!! எதுக்கு நான் உன் பக்கத்துல வரேன்னு உனக்கு தெரியாதா...?" என்று எரிச்சலாக கேட்பது போல் கடுகடுவென்று அவனுடைய வார்த்தைகள் இருந்தன.


திவ்யா: அவள் பயத்தின் உச்ச கட்டத்திற்கே சென்று விட்டாள். திக்கிய குரலில்.... "எதுக்கு..?" 🙄 🙁 என்று தன்னுடைய இரு கண்களையும் விரித்து பயத்துடன் நடுங்கி கொண்டே அவனை பார்த்த படி கேட்டாள். 🙄


சிவாவிற்கு இன்னும் அவளோடு விளையாடி பார்க்க வேண்டும் என்று தான் ஆசையாக இருந்தது. ஆனாலும் இப்போது தான் அவளுடைய ஃப்ரெண்ட் ஆராதனா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறாள். அந்த பதட்டதில் இருந்தே அவள் இன்னும் வெளியே வந்து இருக்காத நிலையில்.. இன்னும் அவளை அவன் பதட்ட படுத்தி பார்க்க விரும்ப வில்லை.


சிவா: "நீ இப்படியே தான் உன்னோட ஹாஸ்டலுக்கு போக போறியா...?" என்று அவளுடைய கண்களை பார்த்தபடியே கேட்டான்.

திவ்யா: "இப்படியே தான் போக போறியான்னா... அப்புறம் வேற எப்படி போறது...?" என்று தன் மனதிற்குள் நினைத்தவள், "ஆமா...!!! அதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா...?" என்று பயந்த குரலில் கேட்டாள்.


சிவா: அவளை தலை முதல் கால் வரை ஒரு முறை பார்த்தவன், "உனக்கு இப்படியே போகுறதுல பிரச்சினை இல்லாம இருக்கலாம். ஆனா உன்னை இப்படி பாக்கறவங்க என்ன நினைப்பாங்கன்னு நீ யோசிச்சு பார்க்க மாட்டியா..?" என்று கடுமையான குரலில் அவளை பார்த்து கேட்டான்.


அப்போதும் அவன் எதை பற்றி பேசி கொண்டிருக்கிறான் என்று திவ்யாவிற்கு புரியவில்லை. அவனை குழப்பமாக பார்த்தாள். அவள் இப்படி திரு திரு என்று முழிப்பதை பார்த்த சிவா மனதிற்குள் சிரித்தவன், வெளியே அவளை பார்த்து முறைத்தான்.


திவ்யா: "ஏன் இவன் நம்மள இப்படி பாத்து முறைக்கிறான்...?" என்று தன் மனதிற்குள் நினைத்தவள், அப்போது தான் தன்னுடைய ஆடையை கீழே குனிந்து பார்த்தாள்.


அவளுடைய ஆடை முழுவதும் ரத்த கறை இருந்தது. இப்போது தான் அவளுக்கு இவ்வளவு நேரம் அவன் எதை பற்றி பேசி கொண்டிருந்தான் என்று புரிந்தது. அதை நினைத்தவள் மானசீகமாக அவளுடைய தலையில் அடித்து கொண்டாள். பின் அவனை பார்த்து லேசாக சிரித்தாள், "சாரி" என்றாள். 😁


சிவா: "சிரிச்சது போதும். இந்த இத போட்டுட்டு வந்து கார்ல ஏறு" என்றவன் அவனுடைய ஜாக்கெட்டை அவளிடம் கொடுத்து விட்டு டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்தான்.

சமத்து பிள்ளையாக அவன் சொன்னதை போல் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு அமைதியாக கார் இல் அவன் அருகே வந்து அமர்ந்தாள் திவ்யா.


செல்லும் வழியில் யாரையோ மொபைலில் தொடர்பு கொண்ட சிவா, அந்த ஹாஸ்டல் இன் வெளியே யாராவது சந்தேகத்திற்க்கு இடமாக சுற்றி திரிகிறார்கள் ஆ என்று விசாரித்து அப்படி யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அவன் நேராக ஆராதனாவின் ஹாஸ்டலுக்கு திவ்யாவுடன் சென்றான்.


சில நிமிட பயணத்திற்கு பின் இருவரும் ஹாஸ்டலை வந்து அடைந்தனர். யாரும் கவனிக்காத வண்ணம் அங்கு ஓரமாக சென்று காரை நிறுத்தி விட்டு திவ்யாவை யார் கண்ணிலும் படாமல் உள்ளே அழைத்து சென்றான் சிவா. இருவரும் ஆராதனாவின் அறைக்கு சென்றனர்.


அந்த அறை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் சிந்தி இருந்தது. அதை அனைத்தையும் இருவரும் சேர்ந்து சுத்தம் செய்து விட்டு அந்த அறையை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர். பின் தன்னுடைய நம்பரை சிவா, திவ்யாவிடம் கொடுத்து விட்டு ஏதாவது பிரச்சினை என்றால் அவளை தனக்கு அழைக்க சொல்லி விட்டு அவளை அங்கேயே விட்டு விட்டு சென்றான். திவ்யாவிற்கு தான் அந்த அறையில் தனியாக இருப்பதற்கு பயமாகவே இருந்தது. அதனால் ஒரு தலையணையை கட்டி பிடித்த படி அங்கு இருந்த கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டாள். சிவா அங்கு அவன் வந்து சென்ற தடையமே இன்றி மீண்டும் ஆராதனா அட்மிட் செய்ய பட்டு இருந்த மருத்துவமனைக்கு சென்று விட்டான்.


மருத்துவமனைக்கு வந்த சிவா, நேராக வருணை சென்று பார்த்து அவன் சொன்ன வேலை எல்லாம் கச்சிதமாக தான் செய்து முடித்து விட்டதாக சொன்னான். அவை அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த வருண், அங்கே இருந்த ஹரியை திரும்பி பார்த்தான்.
அவன் முகம் இன்னும் வருத்தத்தில் தான் இருந்தது. இப்போது வீட்டுக்கு செல்லலாம் வா என்று அழைத்தால் அவன் கண்டிப்பாக வர மாட்டான் என்று அவனுக்கு தெரியும் அதனால் சிவாவையும், தர்ஷன் ஐயும் ஹரியுடன் இருக்க சொல்லி விட்டு ஹரியின் அருகே சென்ற வருண் அவனிடம் பேசினான்.


வருண்: ஹரியின் அருகே சென்று அவனுடைய தோலின் மீது தன்னுடைய கையை ஆதரவாக.
ஹரி: அதுவரை தன்னுடைய தலையை கீழே குனிந்து இருந்தவன், மேலே நிமிர்ந்து வருணை பார்த்தான்.
வருண்: "நம்ப ரெண்டு பேருமே எதுவும் சொல்லாம வீட்டில இருந்து கிளம்பி வந்துட்டோம். அம்மா வேற கால் பண்ணிட்டே இருக்காங்க. உனக்கும் கால் பண்ணுவாங்க நீ அட்டென்ட் பண்ணி பேசாத. நீ பேசினா உன் வாய்ஸ் அ வச்சி உனக்கு ஏதோ பிரச்சினைன்னு கண்டு பிடிச்சுடுவாங்க. நான் அம்மாவுக்கு கால் பண்ணி உன் பிரண்டுக்கு உடம்பு சரி இல்ல சோ நீ அவங்க கூட ஹாஸ்பிடல்ல இருக்கன்னு சொல்லிறேன். நான் இப்போ கிளம்புறேன். ஏதாவது எமர்ஜென்சி -ன்னா எனக்கு கால் பண்ணு ஓகேவா..?" என்றான்.


ஹரி: அவனை நன்றி கலந்த மரியாதையுடன் பார்த்தவன் "ஓகே வருண்" என்றான்.
ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்த வருண் தன்னுடைய காரை எடுத்து கொண்டு எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் அவன் பாட்டிற்கு மனம் போன போக்கில் காரை டிரைவ் செய்து ஒரு பாதையில் சென்று கொண்டு இருந்தான். அவனுடைய முகம் இறுகி இருந்தது. அவனுடைய சிந்தனை முழுவதும் ஜான்வி தான் நிறைந்து இருந்தாள். அப்போது நேரம் மணி நள்ளிரவு 12 ஐ கடந்து இருந்தது.


ஜான்வி ஐ நினைத்த படியே எப்போதும் அவர்கள் காரில் லாங் டிரைவ் செல்லும் போது அவர்கள் கேட்கும் பாடல்களின் பிளே லிஸ்ட்டை பிளே செய்து அதை மெய் மறந்து கேட்ட படியே கார் ஐ டிரைவ் செய்து கொண்டு இருந்தான். இதே காரில் அவன் அருகில் அவனுடைய மனைவி ஜான்வி அமர்ந்து கொண்டு அவனை பார்த்து கொண்டு இருப்பதை போல் அவனுக்கு ஒரு பிரம்மை தோன்றியது.


ஜான்வி யின் அருகாமையை உணர்ந்தான் வருண். அவன் காரின் ஜன்னலை திறந்து வைத்து இருந்ததால் வெளியே இருந்து சிலு சிலு வென்று காற்று குழுமையாக உள்ளே வந்து கொண்டு இருந்தது. ஆள் அரவமற்ற ரோட்டில் வருணின் உடைய கார் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது.
அப்போது அங்கு அடித்து கொண்டு இருந்த காற்றில் ஜான்வி எப்போதும் பயன் படுத்தும் பெர்ஃபூம் இன் மனம் வருவதை போல் உணர்ந்தான் வருண். அந்த மணம் அவனை ஏதோ செய்தது. சிறிது நேரம் அவன் சுய நினைவில் இல்லாதவனை போல் இருந்தான்.


அப்போது அவன் காரை டிரைவ் செய்ய மறந்து விட்டான். அவனுடைய கண்ட்ரோல் இல்லாத -தால் கார் தன் போக்கிற்கு வேகமாக சென்று கொண்டு இருந்தது. வருண் எதையும் கவனித்ததாக தெரியவில்லை. அவன் ஏதோ பித்து பிடித்தவன் போல் இருந்தான்.


கடிவாளம் இல்லாத குதிரை போல் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்த அந்த கார் நேராக ஒரு மரத்தின் மேல் மோதும் படி சென்று கொண்டு இருந்தது. அவ்வளவு தான் ஒரு நொடி தாமதித்தாலும் மோதி விடும் என்ற நிலையில்.... "வருண்" என்று அவனை யாரோ சத்தமாக அழைப்பதை போல் உணர்ந்தான் வருண்.


அந்த குரல் அந்த குரலை அவன் எப்படி மறப்பான்? அது அவனுடைய மனைவி ஜான்வியின் குரல். அதை அனைத்தையும் ஞாபக படுத்தி பார்த்தவனுக்கு அவை அனைத்தும் ஏதோ கனவு போல் இருந்தது. அவன் எப்போதும் பிராக்டிகல் ஆக யோசிப்பவன் என்பதால் இவை அனைத்தும் அவன் ஜான்வியை பற்றி நினைத்து கொண்டே இருந்ததால் நடந்து இருக்க கூடும் என்று நினைத்
தவன், தன் காரை திருப்பி நேராக நாராயணன் பேலஸுற்க்கு சென்றான்

-நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.