அத்தியாயம் 109: ரித்திகாவை பார்த்தா தான் பயமா இருக்கு (பார்ட் 2)
இதற்கு முன் சிவா பிரச்சனை என்று சொன்னது கூட விஷ்வாவிற்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. இறுதியாக அவன் தன்னுடைய கல்யாணத்தை பற்றி சொன்னது தான் அவனுக்கு இப்போது பெரிய பிரச்சினையாக தோன்றியது. அதனால் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு, தன்னுடைய கையை முட்டுக்கொடுத்து அதில் தன்னுடைய தலையை பொருத்தியவன், “நான் அம்மா கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லி தப்பு பண்ணிட்டேனா..??? இவ்ளோ சீக்கிரமா பொண்ணு ரெடி பண்ணிட்டாங்க...!!! அதுவும் அந்த ராகவிய போய்.... ஏற்கனவே அவ என் பையனை என் கிட்ட இருந்து பாதி புடிங்கிட்டா. இன்னும் நான் அவள கல்யாணம் பண்ணி இவளை அவனோட அம்மாவாகிட்ட அவ என் கிட்ட இருந்து அவனை மொத்தமாவே பரிச்சுக்குவா...!!!
இந்த பிரவீன கூட ஈஸியா லெப்ட்ல டீல் பண்ணிட்டு போயிடலாம் டா. எனக்கு இந்த ராகவிய பாத்தா தான் பயமா இருக்கு. பாக்க இத்துனூண்டு இருந்துகிட்டு, அவ என்ன... என்ன... பண்றா பாரு ...!!! 😒 என் பையனையும் கரெக்ட் பண்ணிட்டா, இப்ப என் அம்மாவையும் கரெக்ட் பண்ணிட்டா." என்று சொல்லிவிட்டு தன்னுடைய தலையை இல்லை என்பது போல் ஆட்டியவன், “நோ..!!!!!. என்னால இவள கல்யாணம் பண்ணிக்க முடியாது. அம்மா இத பத்தி என் கிட்ட பேச வந்தாங்கன்னா, எப்படியாவது அவங்கள கன்வின்ஸ் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தணும்." என்று சிவாவை பார்த்து சொன்னான்.
சிவா: “பாஸ்...!!! எனக்கு என்னமோ உங்களுக்கும், அந்த ராகவி பொண்ணுக்கும், தான் கல்யாணம் நடக்கும்னு உள்ளுக்குள்ள ஸ்ட்ராங்கா தோணுது. நீங்க ஏன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி கன்சிடர் பண்ண கூடாது...??? அந்த பொண்ணு நல்லவங்களா தான் இருக்காங்க...????" என்று கேட்டான்.
விஷ்வா: “டேய் முதல்ல வாய கழுவு டா. சும்மா கூட, எனக்கு அவ கூட கல்யாணம் நடக்கும்ன்னு சொல்லாத. அவ இந்த உலகத்திலயே பெரிய உத்தமியா கூட இருக்கட்டும். அதுக்காக எல்லாம் என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்று ஸ்ட்ராங்காக சொன்னான்.
சிவா: “நீங்க இப்போ இப்படி சொல்றீங்க... ஆனா ஃப்யூச்சர்ல என்ன நடக்கும்னு நம்ப வெயிட் பண்ணி பாக்கலாம்." என்றான் ஒரு சிறு புன்னகையுடன். 😁 😁 😁 ஆனால் அவனுக்குள் விஷ்வா விற்கும் ராகவிக்கும் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு ஆசை இருந்தது.
அவன் சிறு வயதில் இருந்தே விஷ்வாவுடன் இருக்கிறான். அதனால் ஜான்வியின் இறப்பிற்கு முன் இருந்த விஷ்வாவிற்கும், இப்போது இருக்கும் விஷ்வாவிற்கும், இருக்கும வித்யாசத்தை அவன் நன்கு அறிந்து வைத்து இருந்தான். என்ன தான் விஷ்வா அவனுக்கு முதலாளியாக இருந்தாலும் அவர்களின் இடையே ஒரு அண்ணன், தம்பிக்கான பாசம் இருந்தது. அதனால் அவன் விஷ்வாவை பழையபடி மகிழ்ச்சியாக பார்க்க வேண்டும் என்று மனதார ஆசைப்பட்டான். ❤️
சித்தார்த்தின் பள்ளியில்....
இன்டர்வெல் என்பதால் ராகவியுடன் ஷாலினி கேண்டின்கு வந்து இருந்தாள். விஷ்ணுவும் அடிக்கும் வெயிலுக்கு ஏதாவது சில்லென்று குடிக்கலாம் என்று நினைத்து அவனும் கேண்டினுக்கு வந்தான். விஷ்ணு கேன்டீன் பக்கம் சென்று கொண்டு இருப்பதை, ஒரு பக்கம் கிரவுண்டில் இருந்து வந்து கொண்டு இருந்த வைஷாலியும், இன்னொரு பக்கம் ஷாலினியையும் ராகவியையும் தேடி கொண்டு அங்கே வந்த லாவண்யாவும் கவனித்தனர்.
அதனால் வைஷாலியும், லாவண்யாவும், விஷ்ணுவுடன் தங்களுடைய நேரத்தை செலவிட விரும்பி, அவர்களும் கேண்டினை வந்து கொண்டு இருந்தனர். கேண்டின்குள் வந்த விஷ்ணு, அங்கே இருந்த ராகவியையும், ஷாலினியையும், கவனித்தான். அதனால் மகிழ்ச்சியாக அவர்களின் அருகே சென்றவன், வேண்டுமென்றே ஷாலினியை பார்த்து; “ஹாய் டி" என்றவன் ராகவியை பார்த்து சிரித்து கொண்டே “ஹாய் அக்கா" என்றான். 😍 🥰
ஷாலினி: ராகவியின் முன்னேயே விஷ்ணு தன்னை “டி" என்று அழைத்ததால் கோபப்பட்டவள், “இப்ப எதுக்கு டா எல்லார் முன்னாடியும் என்ன டீ போட்டு கூப்பிடுற..." என்று வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு போனாள். 😠
விஷ்ணு: ஷாலினியின் அருகே சென்று குனிந்தவன் அவளுடைய காதுகளில், “அப்போ யாரு இல்லாத நேரத்தில டி போட்டு கூப்பிட்டா... பரவாயில்லையா டி...???" என்று கேட்டவன் அந்த“டி" ஐ அழுத்திச் சொன்னான். 😂 😂 😂
அவனுடைய திடீர் நெருக்கத்தால், ஷாலினிக்கு அவளுடைய உடம்பெல்லாம் வெட்கத்தில் கூசியது. ☺️ 🥰 அதனால் தன்னுடைய வெட்கத்தை மறைப்பதற்காக அவன் மீது கோபப்படுபவளை போல் நடித்த ஷாலினி, அவனை விட்டு சற்று தள்ளி நின்று தன் கையில் இருந்த நோட்டை வைத்து அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினாள். வைஷாலி இங்கே வந்ததில் இருந்து, அவனால் ஷாலினியுடன் பள்ளியில் அதிகமாக பேசி பழக முடியவில்லை. பள்ளி நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனையும், சிம் கார்டையும் போல ராகவியும், ஷாலினியும், ஒன்றாகவே சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
அதனால் விஷ்ணு அவளை மிகவும் மிஸ் செய்து இருந்தான். ராகவி அமைதியாகவே நின்று கொண்டு அவர்களின் செல்ல சண்டையை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள். ராகவியைத் தவிர அங்கு இருந்த மற்ற அனைவரும், (பள்ளி மாணவர்கள் உட்பட) அவர்களை “என்னுங்கடா நடக்குது இங்க...???" என்பது போல பார்த்து கொண்டு இருந்தனர். விஷ்ணு ஷாலினிக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ,அவள் கொடுத்த அடிகளை மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு இருந்தான்.
அப்போது முதலில் ஸ்டாப் ரூவிற்குள் நுழைந்த வைஷாலியின் கண்களில் அந்த காட்சி பட்டது. இது சாதாரண நண்பர்களின் சண்டை என்று அவளால் நினைக்க முடியவில்லை. அவள் விஷ்ணுவையும் அவனுடைய கண்களையும் கூர்ந்து கவனித்தாள். விஷ்ணுவின் கண்களில் அவன் ஷாலினியை பார்க்கும்போது இது வரை வைஷாலி அவனுடைய கண்களில் கண்டிடாத ஏதோ ஒரு புதுவித உணர்ச்சி தெரிவதை கண்டாள். ஏனென்று தெரியவில்லை, அவளுடைய கண்களுக்கு விஷ்ணு இது வரை அவள் பார்த்ததை விட இப்போது அவன் ஷாலினியோடு இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
அதை நினைக்கும் போதே, அவளுடைய மனம் வலித்தது. 💔 அதனால் அங்கு இருந்து வெளியே செல்வதற்காக திரும்பினாள். அப்போது அவளையும், விஷ்ணுவையும், கவனித்த படி லாவண்யா அவளின் முன்னே நின்று கொண்டு இருந்தாள். லாவண்யாவை பார்த்த வைஷாலி பார்மாலிட்டிக்காக புன்னகைக்க முயற்சித்தாள். 😁 ஆனால் இப்போது வைஷாலி என்ன மன நிலையில் இருக்கிறாள் என்று சரியாக புரிந்து கொண்ட லாவண்யா, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்.
வைஷாலி அங்கே வந்த போதே லாவண்யாவும் அங்கே வந்துவிட்டாள். அந்தக் காட்சி எப்படி வைஷாலியை எரிச்சல் ஊட்டியதோ, லாவண்யாவிற்கும் அப்படி தான் இருந்தது. அந்த சில நொடி இடைவேளியில் லாவண்யாவின் மனதில் ஒரு திட்டம் உதித்தது. இந்த வைஷாலி விஷ்ணுவின் அத்தை மகள் என்றால், சிறுவயதில் இருந்து அவளை பார்த்து பழகிய விஷ்ணு அவளை காதலிப்பதாக இருந்தால்; எப்பையோ அவளை காதலிக்க தொடங்கி இருப்பான். இத்தனை வருடங்களாகியும் விஷ்ணுவிற்கு இவள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றால், இனி எப்போதும் வரப்போவதில்லை என்று நினைத்து சந்தோஷப்பட்ட லாவண்யா, இவளை வைத்து ஷாலினியை விஷ்ணுவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தாள்.
ஒரு பக்கம் வைஷாலியால் தானே ஷாலினி தன்னை விட்டு பிரிந்து சென்றாள் என்று விஷ்ணுவிற்கு வைஷாலியின் மீது கோபம் வரும். அதனால் அவள் மீது வெறுப்பு வரும். 😡 இன்னொரு பக்கம் ஷாலினி ஆட்டத்தில் இருந்து விலகி விடுவாள். இறுதியில் மீதம் இருக்கும் நாம், விஷ்ணுவிற்கு ஆறுதல் சொல்லும் பெயரில் ஸ்கோர் செய்து விடலாம். என்று நினைத்த லாவண்யா, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கணக்கு போட்டாள்.
வைஷாலி இருந்த மன நிலையில் இப்போது அவளுக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை. அதனால், அங்கு இருந்த லாவண்யாவை புறக்கணித்து நடந்து செல்ல முயன்றாள். லாவண்யாவிற்கு அவளை வைத்து காய் நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்ததால், வேண்டுமென்றே அவளை தடுத்து நிறுத்தி பேச தொடங்கினாள்.
லாவண்யா: “விஷ்ணுவும், ஷாலினியும், இவ்ளோ குளோசா இருக்கிறத பாத்து நீங்க டென்ஷன் ஆகி இங்க இருந்து கிளம்பி போறீங்களா....???" என்று அக்கரையாக பேசுபவளை போல் கேட்டாள். 😟
வைஷாலி: அவள் சொன்னது உண்மை தான் என்றாலும் அது உண்மை என்று இவளிடம் தான் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவள், “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..!!! அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தானே.... அவங்கள பாத்து நான் ஏன் டென்ஷன் ஆகணும்...???" என்று கேஷுவலாக சொல்பவளை போல் சொன்னாள்.
லாவண்யா: அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவள், “பாவம் வைசாலி நீங்க. ரொம்ப அப்பாவியா இருக்கீங்க." என்றாள் கிண்டலாக. 😂 😂 😂
வைஷாலி: அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பானவள், “ஏன் அப்படி சொல்றீங்க...???" என்று கேட்டாள். 😒
லாவண்யா: “உங்களுக்கு இது தெரியாதுன்னு நினைக்கிறேன். விஷ்ணு, ஷாலினிய லவ் பண்றாரு. நீங்க அவரோட அத்தை பொண்ணு தானே இத பத்தி அவரு உங்க கிட்ட கூட சொல்லலையா..???" என்று கேட்டு வைசாலியை ஏற்றி விட்டாள்.
லாவண்யா சொன்னதை கேட்ட வைஷாலியின் இதயம் ஒரு நொடி அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டது. 💔 இது உண்மையாக இருக்கக் கூடாது என்று ஒரு நொடியில் தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் வேண்டிய வைஷாலி கலங்கிய கண்களுடன் லாவண்யாவை பார்த்து, “நீங்க என் கிட்ட பொய் தானே சொல்றீங்க...!!! இல்ல அத விளையாட்டுக்கு சொல்றீங்களா..??? ப்ளீஸ் லாவன்யா இந்த மாதிரி சென்சிடிவ்வான விஷயத்துல எல்லாம் விளையாடாதீங்க. நான் எனக்கு விவரம் தெரிந்த நாளில இருந்து என் விஷ்ணு மாமா எனக்கு தான்னு நினைச்சு நான் வந்துட்டு இருக்கேன். ப்ளீஸ் நீங்க அத சும்மா சொன்னீங்கன்னு என் கிட்ட சொல்லுங்க." என்று தழுதழுத்தக் குரலில் பேசினாள். 🥺 😥
லாவண்யா: “ஐயோ வைஷாலி..!!! இந்த மாதிரி விஷயத்துல போய் யாராவது விளையாடுவாங்களா...??? அவங்க ரெண்டு பேருமே என்னோட பிரண்டு. அவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாதா...???? விஷ்ணு உங்களோட அத்தை பையன்றதுனால, உங்களுக்கு அவர் மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்குமோன்னு எனக்கு தோணிக்கிட்டே இருந்துச்சு. அதனால, தான் இந்த உண்மை உங்களுக்கு தெரியணும்னு உங்க கிட்ட சொல்றேன். நீங்க பாவம் அவரையே நெனச்சு உங்க லைஃபை கெடுத்துக்க கூடாது இல்ல அதான் சொல்றேன்." என்று சர்க்கரை ஆக பேசினாள்.
லாவண்யா இறுதியாக சொன்னதை கேட்ட வைஷாலியின் ஒரே கடைசி நம்பிக்கையும் சுக்குநூறாக உடைந்து விட்டது. 💔 இப்போது லாவண்யா அவளிடம் சொன்னது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்; இன்னொரு பக்கம் அவளே நேரில் ஷாலினிக்கும் விஷ்ணு விற்கும் இடையே இருந்த நெருக்கத்தை தன் கண்களாலேயே கண்டாளே.... அப்படி இருக்கும் போது இது பொய் என்று அவளால் எப்படி நினைக்க முடியும்..???? அதனால் இது உண்மை தான் என்ற முடிவிற்கு வந்த வைஷாலி தீர்க்கமாக லாவண்யாவை பார்த்தவள், “அவங்க ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் லவ் பண்றாங்களா...???" என்று வலி நிறைந்த குரலில் கேட்டாள். 💔 😣 😟
லாவண்யா: சேச்சே..!!! அப்படி எல்லாம் இல்ல. விஷ்ணு சார் தான் லவ் பண்றேன்னு சொல்லி ஷாலினி பின்னாடி சுத்திட்டு இருக்காரு. ஷாலினி இன்னும் அவருக்கு ஓகே சொல்லல.
இது போதும் என்று நினைத்த வைஷாலி, “ஓகே இதை பத்தி நீங்க என் கிட்ட சொன்னதுக்கு தேங்க்ஸ் இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்." என்று சொன்னவள் அங்கு இருந்து செல்லப் போனாள். மீண்டும் அவளை தடுத்து நிறுத்திய லாவண்யா, “ஒரு நிமிஷம்..!!! நான் ஏதோ உங்க மேல இருக்கிற அக்கறையில இத பத்தி உங்க கிட்ட சொல்லிட்டேன். நான் தான் இத உங்க கிட்ட சொன்னேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அப்புறம் எங்களோட ஃப்ரெண்ட்ஷிப் ஸ்பாயில் ஆயிடும்." என்று நல்லவளை போல் சொன்னாள்.
வைஷாலி: “எனக்கு புரியுது. டோன்ட் வரி. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்." என்றவள், அங்கு இருந்து சென்றுவிட்டாள்.
பின் இதை எதைப்பற்றியும் தனக்கு தெரியாது என்பது போல; சாதாரணமாக ராகவியின் அருகே சென்று அமர்ந்து கொண்ட லாவண்யா, அவர்களுடன் இணைந்து ஸ்நாக்ஸ் வாங்கி உண்டு மகிழ்ந்தாள். 🥰
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 109
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.