Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 137

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 137

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 137

சித்தார்த், ஆருத்ரா இருவரும் சியாவின் பழைய புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து கலங்கிய கண்களுடன் அந்த ரூமிற்குள் நுழைந்த ஜானகி “சித்தார்த், ஆருத்ரா.. நீங்க ரெண்டு பேரும் இப்ப ரொம்ப எமோஷனலா இருக்கீங்கன்னு எனக்கு புரியுது. நடக்கிறது எல்லாத்தையும் உடனே புரிஞ்சுக்கிற வயசு இல்ல உங்களுக்கு. அதனால தான் நாங்க நேரடியா உங்க கிட்ட எதையும் சொல்லாம இப்படி ஒரு விஷயத்தை பண்ணினோம்.

அதுக்காக நீங்க தேன்மொழி மேல் கோபப்படுறது கொஞ்சம் கூட சரி இல்ல.‌ அவளுக்கும் உங்க அப்பாவுக்கும் கல்யாணம் நடக்க போறதே அந்த செகண்ட் வரைக்கும் அவளுக்கு தெரியாது. உங்க அப்பாவுக்கும் தெரியாது. எல்லாத்தையுமே நானும், உங்க ஆகாஷ் சித்தப்பாவும் சேர்ந்து தான் பண்ணோம்.‌ அதுவும் அர்ஜுனை கோமால இருந்து ரெக்கவர் பண்றதுக்காக தான் பண்ணோம்.

நாங்க மட்டும் தேன்மொழியை அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இருந்திருந்தா, செத்துப்போன உங்க அம்மா சியாவை நினைச்சு நினைச்சு அர்ஜுன் கடைசி வரைக்கும் கோமாவுலயே இருந்திருப்பான். அது தான் வேணுமா உங்களுக்கு? நாங்க தேன்மொழியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதனால, அவனும் சியாவை மறந்துட்டு இப்போ தேனு கூட நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கான். உங்களுக்கும் மறுபடியும் உங்க அம்மா கிடைச்சிட்டாங்க.

எல்லாமே நல்லாதானே போயிட்டு இருக்கு! 
தேன்மொழி உங்கள பாசமா பார்த்துக்கிறா.. இத்தனை நாளா அவ உங்க அம்மா இல்லைன்னு நீங்க ஒரு செகண்ட் கூட யோசிக்காத அளவுக்கு அவ உங்க கிட்ட நல்ல விதமா நடந்துட்டு இருந்திருக்கா. அவள போய் நீங்க ஆன்டின்னு எல்லாம் கூப்பிட்டு அவ உங்க மேல வச்சிருக்க பாசத்தை அசிங்கப் படுத்தலாமா? தேன்மொழி தான் உங்க அம்மா. சியா செத்துப் போயிட்டான்றதை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும். உங்களுக்கு கஷ்டமா இருந்தாலும் இது தான் உண்மை.” என்று குழந்தைகளுக்கு உண்மையை புரிய வைக்கும் எண்ணத்தில் அனைத்தையும் விளக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்.

தேன்மொழியுடன் இருக்கும் போது தனது அம்மாவுடன் இருப்பதைப் போன்ற உணர்வு ஆருத்ராவிற்கு எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் அவள் தேன் மொழியின் பாசம் பொய் என்றோ, அவள் தனது அம்மா இல்லை என்றோ சொல்ல முடியாமல் அமைதியாகவே இருந்தாள். இருப்பினும் சியா இறந்து விட்டாள் என்று நினைக்கும் போது பாவம் அதை அந்த சிறுமியால் தாங்க முடியவில்லை. அமைதியாக இருந்தாலும் ஆருத்ராவின் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்க, தனக்கும் அழுகை வந்தாலும் ஆருத்ரா அழுவதை பார்க்க முடியாமல் அவள் கண்ணீரை துடைத்து விட்ட சித்தார்த், “போதும் பாட்டி. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நாங்க எதையும் கேட்க ரெடியா இல்ல. நீங்க என்ன பண்ணீங்க, இதுக்கப்புறம் என்ன பண்ண போறீங்கன்னு எல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்ல.

நீங்க என்ன சொன்னாலும் எங்களுக்கு இனிமே அவங்க தேன்மொழி ஆன்ட்டி மட்டும் தான். அவங்களால எங்க மம்மி ஆக முடியாது.‌ சும்மா அவங்கள பத்தி வந்து எங்க கிட்ட பேசி எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. இனிமே நான் ஆருத்ராவ பாத்துக்குறேன். நீங்க இங்க இருந்து போங்க ப்ளீஸ்!” என்றான்.

தனக்காக தன் அண்ணன் இவ்வளவு தூரம் பேசுகிறான் என்று நினைத்து நெகிழ்ந்த ஆருத்ரா அவன் மீது சாய்ந்து கொண்டு அழ, “அர்ஜுன் வர்ற வரைக்கும் இவங்கள கொஞ்ச நேரம் தனியாக விடுவோம். முதல்ல யார் இவங்க கிட்ட இதையெல்லாம் சொல்லி இவங்கள இப்படி குழப்பி விட்டதுன்னு கண்டுபிடிக்கணும். அவங்க யாருன்னு மட்டும் தெரியட்டும், அப்புறம் இருக்கு.” என்று நினைத்து ஜானகி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த ரூமை விட்டு வெளியேறினாள்.

காலேஜுக்கு சென்றிருந்த ஆதவன் தேன்மொழி பிரசண்டாக இருப்பதால் அவளுக்கு பிடித்த உணவுகளை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்து அவனுக்கு தெரிந்தவரை எதையெல்லாம் அவள் விரும்பி சாப்பிடுவாளோ அனைத்தையும் வாங்கிக் கொண்டு “அக்கா.. அக்கா!” என்றபடி கதவு திறந்திருந்ததால் நேரடியாக அவளது ரூமிற்குள் நுழைந்தான்.

அங்கே தேன்மொழி ‌ கட்டிலில் படுத்துக் கொண்டு அழுதபடி இருக்க, அவள் அருகில் சோகமே உருவாக அமர்ந்திருந்த விஜயா “அடியேய்.. ஏதோ சின்ன புள்ளைங்க தெரியாம பேசிருச்சு. மாப்பிள்ளை வந்து அவங்க கிட்ட பேசி அவங்களுக்கு  புரிய வச்சிடுவாரு. சும்மா அதையே நினைச்சுட்டு இருக்காத.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.

அங்கே என்ன நடக்கிறது? என்று புரியாமல் குழப்பத்துடன் தேன்மொழியின் அருகில் சென்று அமர்ந்த ஆதவன் “ஓய் தேனு என்ன ஆச்சு..?? ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்க? மாமா கூட சண்டை போட்டியா?” என்று பதட்டத்துடன் கேட்டான். “பெரியவங்க கூட சண்டை இருந்தா கூட என்னை ஏதுன்னு பேசி சரி பண்ணிக்கலாம். நம்ம சொல்ல வர்றதை கேட்காம நான் நினைக்கிறது தான் சரின்னு பேசுற சின்ன பிள்ளைகளை என்ன பண்ண முடியும்?” என்ற விஜயா நடந்துவற்றை ஆதவனிடம் தெரிவித்தாள்.

விஜயா சொன்னதைப்போல அர்ஜுன் அனைத்தையும் சரி செய்து  விடுவான் என்று சொல்லி தேன்மொழியை சமாதானப்படுத்திய ஆதவன் “இங்க பாரு.. நான் உனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாத்தையும் தேடித் தேடி வாங்கிட்டு வந்துருக்கேன். இந்த முதல்ல இதை சாப்பிடு. அவங்க தான் பாவம் சின்ன பசங்க அவங்களுக்கு எதுவும் புரியல. நீ பெரிய பொண்ணு தானே..

‌ அவங்களுக்கு டைம் கொடுக்கணும். அவங்களே தானா கொஞ்ச நல்ல சரியாயிடுவாங்கன்னு நெனச்சு நார்மலா இருக்க ட்ரை பண்ண மாட்டியா?  இப்படி நீ அழுதுகிட்டே இருந்தா மட்டும் சரியாயிடுமா எல்லாம்? அக்கா  என்னக்கா நீ.. முதல்ல எந்திரிச்சு உக்காரு!” என்று சொல்லி அவளை எழுப்பி அமர வைத்து அவன் தான் வாங்கி வந்ததை அவளுக்கு ஊட்டி விட்டான்.

தேன்மொழிக்கு கொஞ்சம் கூட அதை சாப்பிடும் எண்ணம் வரவில்லை. இருப்பினும் தான் அழுது அழுது தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்து பயந்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதவன் சொன்னதற்காக கொஞ்சமாக சாப்பிட்டாள்.

ஆபீஸில் முக்கியமான வேலைகள் ஏராளமாக இருந்தாலும் கூட, இந்த சூழ்நிலையில் தேன்மொழியும் குழந்தைகளும் தான் தனக்கு முக்கியம் என்று நினைத்த அர்ஜுன் அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். முதல் வேலையாக அவன் நேரடியாக குழந்தைகள் இருக்கும் அறைக்கு செல்ல, அவன் வரும்வரை சாப்பிடாமல் கூட அதே இடத்தில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த சித்தார்த், ஆருத்ரா இருவரும் அவனை கோபமாக பார்த்தார்கள்.

ஆருத்ரா எதுவும் பேசாமல் இருக்க, தன் அப்பாவை பார்த்தவுடன் எழுந்து அவன் அருகில் சென்ற சித்தார்த் “அவங்க எங்களோட stepmother இல்லைன்னு நீங்க பொய் சொல்ல போறீங்களா?” என்று அழுது அழுது சிவந்த கண்களுடன் கேட்டான். தேன்மொழி குழந்தைகள் இருவரையும் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஒருபோதும் பார்க்கவில்லை என்று அர்ஜுனிற்க்கு நன்றாக தெரியும். ‌

ஆனால் இப்போது சித்தார்த் கேட்ட கேள்விக்கு அவன் அப்படி பதில் சொன்னாலும், தேன்மொழி அவர்களை பெற்றவள் இல்லை என்பது தான் உண்மை என்று ஆகிவிடும். அதனால் அர்ஜுன் இல்லை என்று தலையாட்ட, அதுவரை காட்டிலில் அமர்ந்திருந்த ஆருத்ரா ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டு “நான் மம்மிய பாக்கணும் டாடி. சித்தார்த் அண்ணாவாவது அவங்கள அடக்கம் பண்றதுக்கு முன்னாடி லாஸ்ட்டா ஒரு தடவை பாத்திருக்கான். நான் அப்படி கூட அவங்கள பாக்கல. I miss her so much. எனக்கு இப்ப தெளிவா யோசித்து பார்த்தா தான் சியா மம்மிக்கும், இப்ப இருக்கிறவங்களுக்கும் இருக்கிற டிஃபரென்ஸே புரியுது. எனக்கு என் மம்மி தான் வேணும். நான் இப்பவே அவங்கள பாக்கணும். மம்மி நம்ம வீட்ல தானே இருக்காங்க.. நான் அவங்களை பாக்கணும். என்ன ரஷ்யா கூட்டிட்டு போங்க ப்ளீஸ்!” என்று குரல் தழுதழுக்க சொல்லிவிட்டு அழுதாள்.

உடனே சித்தார்த்தும் அர்ஜுனை பார்த்து “நானும் ரஷ்யா போகணும். I want to see my mom’s grave. மம்மி ஒரு தடவை கூட நாங்க அவங்கள வந்து பார்க்கலைன்னு நினைச்சு எவ்ளோ ஃபீல் பண்ணி இருப்பாங்க! பட் நீங்க அவங்கள பத்தி எல்லாம் இப்போ கேர் பண்றதே இல்லைல்ல டாடி! உங்களுக்கு உங்களோட நியூ wife என் மம்மியோட substitution ஆயிட்டாங்க.. சோ நீங்க எங்க மம்மியை மறந்துட்டு அவங்க கூட ஜாலியா இருக்கீங்க.. wow.. it’s so good to see.” என்று sarcastic-ஆக சொன்னான்.

அவன் வேறு என்ன சொல்லி இருந்தாலும் அர்ஜூன் அதை சித்தார்த் எமோஷனலாகி ஏதோ பேசுகிறான் என்று நினைத்து விட்டிருப்பான். ஆனால் அவன் தேன்மொழியை சியாவின் சப்ஸ்டியுஷன் என்று சொன்னதை அர்ஜுனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வந்த கோபத்தில் சித்தார்த்தின் கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்த அர்ஜுன்  “உன் டாடி கிட்ட இப்படி தான் பேசுவியா நீ? What do you mean by substitution ah..?? husband and wife relationship-ன்னா என்னன்னு உனக்கு இந்த வயசுலயே நல்லா தெரிஞ்சுருச்சோ? உங்க அம்மா சியா எனக்கு  பொண்டாட்டினா, தேன்மொழியும் அப்படித் தான்.  லீகலா ரெண்டு பேரையுமே நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
 
தேன்மொழி பாக்குறதுக்கு சியா மாதிரி இருக்கிறதுனால மட்டும் தான் நான் அவளை ஏத்துக்கிட்டேன்னு நினைக்கிறியா நீ? நீங்க ரெண்டு பேரும் அவளை அம்மாவா ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான், நான் அவளை என் wife-ஆவே பாக்க ஆரம்பிச்சேன்.

உன் ஏஜுக்கு இதையெல்லாம் நான் சொல்லி எக்ஸ்ப்ளைன் பண்ணா உனக்கு புரியுமா? சொல்லு டா புரியுமா? சின்ன பையன்னா, உன் வயசுக்கு தகுந்த மாதிரி தான் யோசிக்கணும்,  பேசணும். நீ என் கிட்ட பேசின மாதிரி போய் தேன்மொழி கிட்ட பேசினா, அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்..!! இந்த சின்ன வயசுல என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு இவ்ளோ பெரிய பிள்ளைங்களுக்கு இந்த வீட்ல அம்மாவா வாழனும்னு அவளுக்கு என்ன தலை எழுத்தா?

அவ உங்க மேல எவ்ளோ பாசமா இருக்கான்னு இவ்ளோ நாள் ஆகியும் உங்களுக்கு தெரியலையா? அவள போய் ஆண்டின்னு கூப்பிட உனக்கு எப்படி டா மனசு வந்துச்சு? அவ பாவம்.. ரொம்ப நேரமா அதையே நினைச்சு நினைச்சு அழுதுகிட்டே இருந்து இருக்கா.. ச்சே.. உன்னை எல்லாம் என்ன சொல்றதுனே எனக்கு தெரியல. நீ தேவை இல்லாம யோசிச்சு எல்லாரையும் தப்பா நினைக்கிறது இல்லாம ஆருத்ராவுக்கும் அதை சொல்லிக் கொடுத்து அவளையும் கெடுக்கிற. இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல சித்தார்த்.” என்று ஆத்திரம் பொங்க கேட்டான்.

அவன் அடித்த அடியில் சித்தார்த்தின் கன்னத்தில் அர்ஜுனனின் ஐந்து விரல்களும் பதிந்திருந்தது. ஷாக் ஆகி அப்படியே தரையில் அமர்ந்து விட்டான் சித்தார்த். இதுவரை இந்த அளவிற்கு அர்ஜுன் வீட்டில் உள்ளவர்களின் மீது குறிப்பாக குழந்தைகள் மீது கோவப்பட்டதில்லை என்பதால் அவனை கண்டு பயந்து போன ஆருத்ரா இரண்டடி பின்னே சென்று நின்று விட்டாள்.

குழந்தைகளின் மனதை மாற்ற அர்ஜுன் செய்யப் போவது என்ன?

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured