அத்தியாயம் 122: ரித்திகா தான் உன் அம்மா (பார்ட் 1)
நாராயணன் பேலஸில்…
சூர்யா, செண்பகம் மற்றும் சித்தார்த்துடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான். அப்போது தூக்கத்தில் இருந்து கண் விழித்த சீத்தா, தன்மகள் தர்ஷினியிடம் சூர்யாவை சென்று அழைத்து வரும் படி சொல்லி அனுப்பினாள். சூர்யா செண்பகத்துடன் ஹாலில் இருப்பதை கவனித்த தர்ஷினி, அங்கே வந்து அவனை அழைப்பதாக சொல்லி அழைத்தாள். அதனால் தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக தர்ஷினியுடன் அங்கு இருந்து சென்று விட்டான் சூர்யா.
டி.வி. யில் ஓடிக் கொண்டு இருந்த சீரியலை சித்தார்த் பார்த்துக் கொண்டு இருந்தான். இப்போது ஹாலில் செண்பகத்தையும், சித்தார்த்தையும், தவிர வேறு யாரும் இல்லை. அதனால் விஷ்வா மற்றும் ராகவிக்கு நடக்க இருக்கும் திருமணத்தை பற்றி சித்தார்த்திடம் பேசுவதற்கு இது தான் சரியான தருணம் என்று நினைத்த செண்பகம், அப்படியே மெது மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கினாள். சித்தார்த்தோ, மும்முறமாக டிவி பார்த்து கொண்டு இருந்தான்.
செண்பகம்: “சித்து கண்ணா.. உன்னோட கிளாஸ்ல உனக்கு புது ப்ரண்ட்ஸ் யாராவது கிடைச்சிருக்காங்களா…???” என்று கேட்டாள்.
சித்தார்த்: ஏதோ ரகசியம் சொல்வதை போல செண்பகத்தின் அருகே சென்று அவளுடைய காதில் மெதுவாக, “ஆமா பாட்டி. அது எப்படி உங்களுக்கு தெரியும்…??? அவ பேரு டோரா. அவ ரொம்ப அழகா, க்யூட்டா, இருப்பா தெரியுமா..???” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
செண்பகம்: அவனை குழப்பமாகப்பமாக பார்த்தவள், “ஒரு பொம்மை படத்துல ஒரு புள்ள பெய்ய மாட்டிக்கிட்டு திரியுமே அது பேர் தானே டோரா…!!! இப்ப எல்லாம் பொம்பள பிள்ளைகளுக்கு டோரா, கீறான்னுலாமா பேர் வைக்கிறாங்க..???” என்று கேட்டாள். 😳
செண்பகத்தை பார்த்து அழகாக புன்னகையைத்த சித்தார்த், “ஐயோ பாட்டி..!!! அவ பேரு பூஜா. அவ அழகா டோரா மாறி முடி வெட்டி இருப்பாளா… அதனால நானும், ராகாவும், அவள டோரான்னு தான் கூப்பிடுவோம்.” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு சொன்னான். 🤦 😂 😂 😂
செண்பகம்: “ஓ..!!! அப்படியா சரி சரி. அந்த பொண்ணு அவளோட அப்பா அம்மாவ பத்தி எல்லாம் ஏதாவது உன் கிட்ட சொல்லி இருக்காளா…???” என்று அர்த்தமாக கேட்டாள்.
சித்தார்த்: “ம்ம்ம்… அவ நிறைய சொல்லுவா. அவளும், அவங்க அப்பாவும், அம்மாவும், சேந்து வெளில நிறைய இடத்துக்கு போவாங்களாம். டெய்லியும் அவளோட அம்மா தான் அவளுக்கு சமைச்சு தருவாங்களாம். அவங்க கூட இருந்தாலே ஜாலியா இருக்கும்னு சொல்லுவா.” 👪 என்று உற்சாகமாக சொல்லத் தொடங்கி சோகமாக சொல்லி முடித்தான்.
செண்பகம்: அவனும் அது போன்ற குடும்பத்திற்காக ஏங்குகிறான் என்று புரிந்து கொண்டவள், “உனக்கும் உங்க அப்பா, அம்மா, கூட அந்த மாதிரி எல்லாம் ஜாலியா இருக்கணும்னு ஆசையா இருக்கா…???” என்று கேட்டாள்.
சித்தார்த்: தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டவன், “ஆமா பாட்டி. ஆனா எனக்கு தான் அம்மாவே இல்லையே..!!! அவங்க என்ன விட்டுட்டு சாமி கிட்ட போய்ட்டாங்கன்னு நீங்க தானே சொன்னீங்க..!!! இப்ப அவங்க எனக்காக திருப்ப வர மாட்டாங்களா…????” என்று சோகமான குரலில் கேட்டான். 😒 😞
செண்பகம்: சித்தார்தின் தாடையை பிடித்து நிமிர்த்தி அவனை தன்னை பார்க்க செய்தாள். சித்தார்த்தின் கண்கள் கலங்கி இருந்தது. 🥺 😟 அவனுடைய அந்த கண்கள் செண்பகத்தின் முடிவு சரி தான் என்று இன்னொரு முறை அவளுக்கு உணர்த்துவது போல இருந்தது. அதனால் சித்தாரத்தை தூக்கி தன்னுடைய மடியில் அமர்த்தி வைத்துக் கொண்டவள், “ஒரு தடவ சாமி கிட்ட போனவங்க, திரும்பி வர மாட்டாங்க சித்தார்த். ஆனா சாமி, அவங்க போனதுக்கு அப்புறம் நம்ம தனியா கஷ்டப்படுவோம்ன்னு, அவங்களுக்கு பதிலா வேற யாரையாவது நமக்காக அனுப்பி வைப்பாரு.
அதே மாதிரி நம்ப சித்து குட்டிக்கு ஒரு புது அம்மாவ இங்க கூட்டிட்டு வந்துடலாமா..??? அவங்க உன்ன நல்லா பாத்துப்பாங்க. நீயும் உங்க அப்பா, அம்மா, கூட சேந்து ஜாலியா இருக்கலாம். உனக்கு ஓகேவான்னு சொல்லு.. பாட்டி உடனே உனக்கு ஒரு புது அம்மாவ ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்..” என்று ஆர்வமான குரலில் சொன்னாள்.
செண்பகம் கேட்டதற்கு சில நிமிடங்கள் எதுவும் பதில் பேசாமல் எதையோ யோசித்த படி அமைதியாகவே இருந்தான் சித்தார்த். சித்தார்த்தின் அமைதியான தோற்றத்தை வைத்து அவனுடைய மனதில் என்ன ஓடுகிறது என்பதை செண்பகத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், “என்ன டா..!!! அமைதியாவே இருக்க.. அப்போ உனக்கு அம்மா வேணாமா..???” என்று கேட்டாள்.
சித்தார்த்: இல்லை என்று தன்னுடைய தலையை ஆட்டியவன், “எனக்கு அம்மா வேணும். எனக்கு அம்மா இருந்தா நான் ரொம்ப ஹேப்பியா இருப்பேன். ஆனா, அந்த புது அம்மாவ எனக்கு பிடிக்கவில்லைன்னா என்ன பண்றது…???” என்று தன்னுடைய முகத்தை சோகமாக வைத்து கொண்டுு சொன்னான். 😞
செண்பகம்: “அத பத்தி எல்லாம் நீ ஏன் டா தங்கம் கவலை படுற..??? நீயே உனக்கு அம்மாவா யார் வந்தா நன்றாக இருக்கும்ன்னு சொல்லு. பாட்டி அவங்களே உனக்கு அம்மாவா கூட்டிட்டு வரேன். அப்புறம் நீ அவங்க கூட ஹேப்பியா இருக்கலாம் ஓகேவா…???” என்று கேட்டாள்.
சித்தார்த் தன்னுடைய தலையை ஒரு பக்கமாக சாய்த்தவன்; அவனுடைய குட்டி வீரர்களை எடுத்து அவனுடைய கன்னத்தில் வைத்து லேசாக தட்டிய படி தனக்கு அம்மாவாக யார் வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். 🤔 சித்தார்த் எப்படியும் ராகவியின் பெயரை தான் சொல்லுவான் என்றாலும், அதை அவனுடைய வாயலே சொல்லி கேட்பதற்காக செண்பகம் அவனையே ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தாள். 😍
தன்னுடைய அம்மாவை பற்றி யோசித்துப் பார்த்த சித்தார்த்துக்கு, முதன் முதலில் அவன் ராகவியை பார்த்த காட்சி தான் ஞாபகத்துக்குு வந்தது. பின் அவன் ராகவியோடு செலவிட்ட ஒவ்வொரு தருணங்களையும் நினைத்துப் பார்த்தான். அவற்றை எல்லாம் நினைத்துப் பார்ப்பது கூட அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் தன்னை அறியாமல் புன்னகைத்தான். 😁😁 😁
அவனுடைய முகத்தில் இலையோடும் புன்னகையை கவனித்த செண்பகம், “முடிவு பண்ணிட்டான் போலயே…!!!” என்று நினைத்தவள் சித்தார்த்தை பார்த்து, “சொல்லு டா…!! என் சித்து குட்டிக்கு யாரு அம்மாவா வந்தா நல்லா இருக்கும்னு தோணுது…???” என்று கேட்டாள்.
சித்தார்த்: “என் ராகா தான் பாட்டி. அவ தான் என்னோட பெஸ்ட் பிரண்டு. அவ எனக்கு அம்மாவா இருந்தா சூப்பரா இருக்கும். அவ எப்பவுமே என் கூடவே இருப்பல்ல…!!! அவ அப்பா மாதிரி எப்பவுமே டெரராவே இருக்க மாட்டா. அவ என்ன மாதிரி, ரொம்ப ஸ்வீட்டு.” என்று சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக சொன்னான். 😁 😁 😁
அவன் சொன்னதை கேட்ட செண்பகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அவனை கட்டிப்பிடித்து அவனுடைய கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தவள், “ஆமான் டா தங்கம் கரெக்டா சொன்ன. ராகவி உன்னையும், உன் அப்பாவையும், நல்லா பாத்துப்பா. நான் உங்க அப்பாவுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீ வளந்து பெரிய பையன் ஆனோனே உங்க அம்மாவ நல்லா பாத்துக்கணும் சரியா…???” என்று கேட்டாள். 😍 😘
சித்தார்த்: “அப்ப நிஜமாலுமே ராகா நம்ம வீட்டுக்கு வர போறாளா…???” என்று நம்ப முடியாமல் ஆர்வமான குரலில் கேட்டான். 😳
செண்பகம்: “ஆமா சித்தார்த். உனக்காக உன்னோட ராகா உன் அம்மாவா இங்க வரப்போறா. இனிமே இந்த வீட்ல இருக்க எல்லாருமே சந்தோஷமா இருக்க போறோம்.” உற்சாகம் நிறைந்த குரலில் மன நிறைவுடன் சொன்னாள். 😁 😁 😁
சித்தார்த்: “அப்ப ராகா தான் என்னோட புது அம்மாவா…??? எனக்கு அம்மா கிடைச்சுட்டாங்களா…???” என்று செண்பகத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு கேட்டான். 🤗 😁 😁
செண்பகம்: “ஆமா. இனிமே ராகவி தான் உன்னோட அம்மா. அதனால ராகவிய நீ அவ, இவனெல்லாம், பேசக்கூடாது. ஒழுங்கா, மரியாதையா, அம்மான்னு கூப்பிடனும்.” என்று அறிவுறுத்தினாள்.
செண்பகம் சொன்னது அனைத்தும் தனக்கு புரிந்து விட்டது என்பது போல் தன்னுடைய தலையை வேகமாக ஆட்டிய சித்தார்த், “நான் இனிமே அவள ராகா அம்மான்னு கூப்பிடுகிறேன். நான் சீக்கிரம் வளர்ந்து பெரிய பையன் ஆனதுக்கப்புறமா அவள நல்லா பாத்துக்குறேன். ஓகேவா பாட்டி…???” என்று தன்னுடைய ஓட்டை பல் தெரிய அழகாக புன்னகைத்த படி கேட்டான். 😁 😁 😁
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)