Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 64

போதையடி நீ எனக்கு CH 64

by Thenaruvi Tamil Novels
157 views

அத்தியாயம் 64

“எல்லாம் உன்னால தாண்டி. பண்றதையும் பண்ணிட்டு ஏன் வேர்க்குது எனக்கு மட்டும் குளிருதுன்னு கதை பேசுறா! ஐயோ கடவுளே இவளை திட்ட கூட முடியலையே!

வேற யாராவது ஒரு பொண்ணா இருந்தா கூட வேணும்னே பண்றான்னு நினைக்கலாம். ஆனா இவளுக்கு தான் ஒன்னுமே தெரியாதே.. குழந்தை மாதிரி எதுவும் புரியாம இவ இஷ்டத்துக்கு எதையாவது ஒன்ன பண்றா..  பட் அதுல மாட்டிக்கிட்டு நான் தான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்க வேண்டியதா இருக்கு.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட ரிஷி அவள் கையைப் பிடித்து மெல்ல அவளை தன்னை விட்டு நகர்த்தி படுக்க வைத்தான்.

ம்..ம்..ஹும்.. ம்..ம்..ஹும்..  என உடனே சிணுங்கிய கீர்த்தனா “இப்ப நீ ஏன் என்னை தள்ளுற? அப்ப நான் கேட்கும் போது உனக்கு என் மேல கோவம் இல்லைன்னு சொன்ன தானே.. அப்புறம் என்ன இப்ப மட்டும் தள்ளுற? என்ன கீழே தள்ளி விடப்போறியா ரிஷி?” என்று சோகமாக கேட்க,

“ஐயோ இல்ல தாயே இல்ல.. நான் கீழே விழுந்தாலும் விழுவேன். உன்னை எல்லாம் கீழ தள்ளி விடமாட்டேன் கவலைப்படாத.. எனக்கு சும்மாவே யார் மேலயும் அதிகமா கோபம் வராது.

சும்மா சும்மா நான் கோபப்பட்டேன்னு சொல்லி நீயே என்ன கோபப்படுத்தாத.. உனக்கு நான் அவ பக்கத்துல படுக்கணும் அவ்வளவு தானே.. இப்ப நான் உன் பக்கத்துல தான் இருக்கேன்.. இந்தா இந்த பில்லோவை கட்டி புடிச்சுகிட்டு கம்முனு தூங்கு. எனக்கும் தூக்கம் வருது நானும் தூங்கணும்.” என்ற ரிஷி அவனுக்கு அருகில் கிடந்த தலையணையை எடுத்து தங்கள் இருவருக்கும் நடுவில் போட்டுவிட்டு வேறு புறமாக திரும்பி படுத்தான்.

அவனது செய்கையில் திருப்தி அடையாத கீர்த்தனா இம்முறை தன் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கூர்மையான விழிகளுடன் அவனைப் பார்த்தாள். தங்களுக்கு நடுவில் ஏதோ ஒரு  பில்லோ இருப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அதை எடுத்து தூக்கி கிடாசியவள், மெல்ல நகர்ந்து அவன் அருகில் சென்று பின்னே இருந்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் முதுகில் முகம் புதைத்து “இப்ப தான் சூப்பரா இருக்கு. எனக்கு உன் கூட இப்படி தூங்கும் போது குளிரவே இல்ல. நீ நல்லா சூடா இருக்க.. எனக்கு இதுதான் புடிச்சிருக்கு. நான் இப்படித் தான் தூங்க போறேன் போ!” என்று நமுட்டு சிரிப்புடன் சொல்லிவிட்டு அவனது முதுகில் முகம் புதைத்து அவனது பரந்த புஜங்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிம்மதியாக தன் கண்களை மூடி உறங்க தொடங்கினாள்.

அவளது அதனங்கள் அவன் முதுகில் உரசி கொண்டிருந்ததால் அவளது சீரான இதயத்துடிப்பை ரிசியால் உணர முடிந்தது. அந்த உணர்வு அவனுடைய காதல் அணுக்களை எல்லாம் தோண்டி அவன் உடலை தீப் பிடிக்க வைக்க, இப்போது அவனது இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. 

அதை என்னவோ தன் கையால் பிடித்து தடுத்து நிறுத்துபவனைப் போல தனது நெஞ்சில் கை வைத்த ரிஷி, “எனக்கு தனுகூட இருக்கும்போது கூட இப்படி எல்லாம் ஆனதே இல்ல. இந்த பொண்ணு என்னை போட்டு ரொம்ப படுத்துறா. சம் டைம்ஸ் இவள சும்மா பார்த்தா கூட எனக்கு டெம்ட் ஆகுது. இதுல இவ்ளோ பக்கத்துல இவள வச்சுக்கிட்டு இவ பண்றதெல்லாம் சமாளிச்சுக்கிட்டு நைட் ஃபுல்லா எப்படி நான் என்ன கண்ட்ரோல் பண்ணி நல்ல பையனாவே இருக்கிறது?

ஐயோ கடவுளே.. இவ பேரண்ட்ஸ்க்கு இதெல்லாம் தெரிஞ்சது நான் என்னை என்ன நினைப்பாங்க? கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது கூட ஓகே. அதுக்கு முன்னாடி நான் இப்படி எல்லாம் இது கூட ரூம் சேர் பண்ணதை இவளே போய் தெரியாம அவங்க கிட்ட உளறுனா கூட, கண்டிப்பா அவங்க நான் இவ கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்னு என்னை கேவலமா நினைப்பாங்க. பட் இவ அதையெல்லாம் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாளே!” என்று தனக்கு தானே புலம்பினான்.

பின் அவர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் இரண்டாவது விஷயம். இப்போது எந்த தவறும் நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருப்பதால், தன் கண்களை மூடி படுத்திருந்த ரிஷி தன் அம்மா இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகு இப்போது தான் முதல்முறையாக கடவுளின் மீது நம்பிக்கை வைத்து “ஜெய் ஆஞ்சநேயா.. ஜெய் ஆஞ்சநேயா.. ஜெய் ஆஞ்சநேயா..!!” என்ற மந்திரத்தை ஏதோ விரதத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் பக்தன் போல துதிக்க தொடங்கினான்.

அவன் அதை எத்தனை முறை மீண்டும் மீண்டும் சொன்னான் என அவனுக்கே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஆஞ்சநேயரின் அருளால் அவனுக்கு தூக்கம் வந்து விட்டது. அவன் மனம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பிறகு அவனுக்குள் இருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கலைந்து விட்டது.

தன்னையும் அறியாமல் கீர்த்தனாவின் பக்கம் திரும்பிப் படுத்த ரிஷி அவள் தன்னை விடாமல் கம் போட்டு ஒட்டவைத்ததை போல ஒட்டிக் கொண்டே இருந்ததால் தானும் அவளை தன்னுடன் சேர்ந்து இறுக்கி பிடித்துக் கொண்டு பல நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினான். அவர்கள் இருவருக்குமே மற்றொருவரின் அருகாமை பெரும் மன ஆறுதலையும், பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது.

காலை பொழுது அழகாக முடிந்தது..

ரிஷியின் தாத்தா வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. மற்றவர்களுக்கு முன்பாக விடியற்காலையிலேயே எழுந்து கொண்ட தாத்தா இள வயதினருடன் போட்டி போடும் அளவிற்கு உயிர்ப்புடன் ஓடி ஆடி மற்றவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவர் முகத்தில் ஒரு பிரகாசமும் சந்தோஷமும் தெரிந்தது.. அது ரிஷி மற்றும் கீர்த்தனாவின் திருமணம் நடக்கவிருக்கும் சந்தோஷம்.

ஆனால் அந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக கீர்த்தனாவின் குடும்பத்தினர்கள் சம்மதிக்க வேண்டும். அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றாலும், அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்ததால் தாத்தா சந்தோஷமாக இருந்தார்.

அங்கே இன்னொரு பக்கம் சீக்கிரமாக எழுந்து குளித்து கிளம்பிய தீரஜ் இன்று ஆனந்தகுமார் அவனுக்காக பார்த்திருக்கும் மணப் பெண்ணான தேவி ஜுவல்லர்ஸ் ஓனரின் மகள் பிருந்தா தேவி லண்டனில் இருந்து இந்தியா வருகிறாள் என்பதால் அவளை நேரடியாக ஏர்போர்ட்டில் சென்று வரவேற்பதற்காக கிளம்ப தொடங்கினான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)‌

You may also like

Leave a Comment

About Me

Featured