Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 55

போதையடி நீ எனக்கு CH 55

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 55

“நான் இந்த நிலைமையில இருக்கும்போது அவ வீட்ல போய் பொண்ணு கேட்டா குடுப்பாங்களா தாத்தா?” என்று ரிஷி உடைந்த குரலில் கேட்க, “கண்டிப்பா குடுப்பாங்க ரிஷி.. என் பேரனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு ஏன் அவங்க சொல்ல போறாங்க?

அந்த பொண்ணு இப்ப மன நிலைமை பாதிக்கப்பட்டு இருக்கா.. இந்த நிலைமையில அவளை உன்னை விட யார் பத்திரமா பாத்துக்க முடியும்? அவங்க நேர்ல வந்து இங்க பார்த்தாங்கனா, அந்த பொண்ணு மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கேன்னு அவங்களுக்கே புரிஞ்சிடும். அதனால எதைப் பத்தியும் யோசிக்காம அந்த பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை அவளுக்கு புரியிற மாதிரி இதை பத்தி பேசிட்டு நேரா அவளோட பெத்தவங்கள வர சொல்லி பேசுவோம். 

அவங்க கிட்ட பேசாம இதுக்கு முடிவு கிடைக்காது. அந்த பொண்ணை அவ குடும்பத்து கிட்ட இருந்து பிரிச்சு வைக்கிறது எப்படிப் பார்த்தாலும் நியாயமே இல்ல.” என்றார் தாத்தா. 

“ஓகே தாத்தா, நடக்கிறது நடக்கட்டும். நான் போய் அவ கிட்ட பேசி பார்க்கிறேன். அவளும் பாவம் தான் அவளுக்கு அவளை யாருனே தெரியல. அவ கிட்ட போய் கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசினா, அவளுக்கு எங்க புரிய போகுது?” என்று ரிஷி சோகமாக சொல்லிவிட்டு தன் தலையை கீழே குனிந்து கொள்ள, “எல்லாம் நீ சொல்ற மாதிரி சொன்னா அவளுக்கு புரியும். நீ போய் அவளை கூட்டிட்டு வா. நானே அந்த பொண்ணு கிட்ட பேசுறேன்.” என்றார் தாத்தா. 

சரி என்ற ரிஷி தனது வீல்சேரை இயக்கிக் கொண்டு வெளியில் சென்று நித்திலாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். “ஹாய் தாத்தா! நீங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சிட்டீங்களா? இப்ப நம்ம சாப்பிட போறோமா?” என்று நித்திலா தாத்தாவைப் பார்த்து ஆசையுடன் கேட்க, “ஏன் மா கண்ணு உனக்கு அதுக்குள்ள பசி எடுத்துருச்சா? காலையில நீங்க கிளம்பும்போது இந்த பையன் ரிஷி உன்னை சாப்பிட வச்சு கூட்டிட்டு வரலையா?” என்று அவளிடம் கேட்டார் தாத்தா. 

“வரும்போது நாங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு தான் வந்தோம் தாத்தா. ஆனா இப்ப ரொம்ப நேரம் ஆயிடுச்சு இல்ல அதனால என் வயிறு உள்ள போயிடுச்சு. இங்க பாருங்க.. அதான் எனக்கு பசிக்குது!” என்ற நித்திலா தட்டையாக இருந்த அவளது வயிற்றை தொட்டு காட்டினாள். 

“தாத்தா எவ்ளோ இம்பார்டன்டான விஷயம் பேசணும்னு சொல்லிட்டு இருக்காரு.. இவ என்ன நான் இப்ப கூட பசிக்குதுன்னு பேசிட்டு இருக்கா! பாக்குறதுக்கு குட்டியா இருந்தாலும் முரட்டு ஃபுட்டியா இருக்காளே இவ!” என்று நினைத்த ரிஷி “நம்ம அப்புறம் சாப்பிட்டுக்கலாம். தாத்தா உன்  கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாரு முதல் அது என்னன்னு கேளு.” என்றான். 

இப்போதைக்கு சாப்பாடு வேண்டாம் என்று அவன் சொன்னதை கேட்டவுடன் நித்திலாவின் முகம் பியூஸ் போன பல்பு போல மாறிவிட, சோகமாக அவள் தாத்தாவை பார்த்து “சொல்லுங்க தாத்தா! நீங்க என்ன பேசணும்?” என்று பாவமாக கேட்டாள். 

ஏற்கனவே அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த தாத்தா “இதுல தனியா பேசுறதுக்கு ஒன்னும் இல்ல. எல்லாருக்கும் தெரிய போற விஷயம் தான். உன் முகத்தை பார்த்தாலே நீ கொலை பசியில இருக்கேன்னு நல்லா தெரியுது. வாங்க எல்லாரும் டைனிங் டேபிள்ல போய் உக்காந்து சாப்பிட்டுகிட்டே பேசலாம்.” என்று சொல்ல, 

அதைக் கேட்டு சந்தோஷப்பட்ட நித்திலா “வாவ் சூப்பர் தாத்தா.. நம்ம உடனே போய் சாப்பிடலாம்.. இல்ல பேசலாம்.. இல்லல்ல.. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்!” என்று சொல்லிவிட்டு அப்பாவியாக சிரிக்க, “பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு இப்படி அப்பாவி தனமா மூஞ்சிய வச்சு சிரிச்சே இவ எல்லாத்தையும் சமாளிச்சிடறா.” என்று நினைத்த ரிஷி அவளை அழைத்துக் கொண்டு தாத்தாவுடன் சாப்பிடுவதற்காக வெளியில் டைனிங் ஏரியாவிற்கு சென்றான். 

பல வருடங்களுக்கு பிறகு தாத்தா தனது பரம்பரை வீட்டிற்கு வந்திருப்பதால் அங்கே இருந்தவர்கள் விதவிதமான உணவு வகைகளை சமைத்து வைத்திருக்க, இத்தனை நாட்களாக அதற்காகவே காத்திருந்ததைப் போல விழிகள் விரிய அனைத்தையும் பார்த்த நித்திலா தாத்தா எதையோ சொல்ல வந்தார் என்பதை எல்லாம் மறந்துவிட்டு தனது முழு கவனத்தையும் சாப்பாட்டில் வைத்து ஒரு வெட்டு வெட்ட தொடங்கினாள். 

தாத்தா இவளிடம் என்ன சொல்ல போகிறார் அதற்கு இவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என தெரியாததால் எதிர்பார்ப்புடன் ரிஷி அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருக்க, “உனக்கு சாப்பாடு புடிச்சிருக்குதா மா?” என்று தாத்தா மெல்ல பேச்சை தொடங்கினார். 

“ம்ம்.. புடிச்சிருக்கு தாத்தா.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த பிரியாணி தான் என்னோட ஃபேவரிட். நீங்க எவ்வளவு கொடுத்தாலும் நான் சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். எனக்கு அந்த அளவுக்கு புடிச்சிருக்கு.”  என்று நித்திலா உணர்ச்சிவசப்பட்டு சொல்ல, அன்புடன் அவளை பார்த்து சிரித்த தாத்தா “உனக்கு என் பேரன் ரிஷியை பிடிச்சிருக்கா மா? நீ எங்க கூட இங்கயே இருந்துடுரியா?

நம்ம தினமும் விதவிதமா இந்த மாதிரி நிறைய சாப்பிடலாம். ரிஷியும் எப்பவும் உன் கூடயே இருப்பான். நீ இந்த வீட்ல எங்க கூட இருந்தா நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். கண்டிப்பா உன்னையும் நாங்க சந்தோஷமா  வச்சுக்குவோம். யாரும் உன்னை எதுவும் பண்ணிடாம பத்திரமா பாத்துக்குவோம்.” என்றார். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured