Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 54

போதையடி நீ எனக்கு CH 54

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 54

தாத்தா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரிஷி தலை குனிந்து அமைதியாக இருக்க, “உண்மையைக் கண்டு பயந்து ஓடக் கூடாது ரிஷி. உங்க அம்மா இருந்து இருந்தா என்ன சொல்லி இருப்பாளோ இப்ப அதைத் தான் நான் உன் கிட்ட சொல்ல போறேன். நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. 

திடீர்னு அவ காணாம போயிட்டா அவ எங்க இருக்காளோ அவளுக்கு என்ன ஆச்சோன்னு நெனச்சு நம்ம எவ்ளோ பயப்படுவோம்.. அதே மாதிரி தானே பொண்ணை பறிகொடுத்துட்டு அவங்களும் பரிதவிச்சுட்டு இருப்பாங்க.. நமக்கு அந்த பொண்ணோட தேவை இருக்குனு சுயநலமா நம்ம யோசிக்க ஆரம்பிச்சா, நமக்கும் உங்க அப்பனோட குடும்பத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகுது? 

கண்டிப்பா என் பேரன் இப்படி எல்லாம் செல்பிஷா யோசிக்கிறவன் இல்ல. இந்த சூழ்நிலை உன்ன இப்படி யோசிக்க வச்சுடுச்சுன்னு எனக்கு புரியுது. ஒருவேளை அந்த பொண்ண உனக்கு ரொம்ப புடிச்சி இருக்கலாம். 

அதனால அவளை இழந்துட கூடாதுன்னு நீ நினைக்கலாம். அதுல தப்பு இல்ல. ஆனா அவளை பெத்தவங்க கிட்ட இருந்து நீ அவளை பிரிச்சு வைக்கணும்னு நினைக்கிறது தப்பு. அந்த பொண்ணுக்கு பின்னாடி உடம்பு சரியாகி அவ பழைய படி மாறினா கூட நடந்தது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கும் போது அவ உன்ன பத்தி என்ன நினைப்பானு யோசிச்சு பாத்தியா ரிஷி?” என்று நியாயமான கேள்விகளை அடுக்கடுக்காக அவனிடம் கேட்டார் தாத்தா. 

தாத்தாவின் பேச்சைக் கேட்ட பிறகு தன் மீது எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம்   என்று புரிந்து கொண்ட ரிஷி “நீங்க சொல்றது எல்லாமே சரி தான். நான் என்ன பத்தி மட்டும் யோசிச்சு கூடாது. என்னை எல்லாரும் நடிச்சு  ஏமாத்துறாங்கன்னு அந்த அப்பாவி பொண்ணை என் தேவைக்காக நான் கடைசி வரைக்கும் பொய் சொல்லி ஏமாத்த பாத்துட்டேன். 

அவ குடும்பத்துல இருக்கிறவங்க ஓயாம போலீஸ் ஸ்டேஷன் போய் இன்னமும் அவங்க பொண்ண பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுராதனு சலிக்காம விசாரிச்சுட்டு தான் இருக்காங்க. எனக்கு அவளை விட்டுக் கொடுக்க கொஞ்சம் கூட விருப்பமில்ல. அதே சமயம் அவ குடும்பத்துக்கிட்டு இருந்து அவளை நம்ம பிரிச்சு வைக்கிறதும் நல்லா இருக்காது.

இப்ப நான் என்ன பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க தாத்தா. நீங்க என்ன சொன்னாலும் அது என் நல்லதுக்காக தான் இருக்கும்னு நான் நம்புறேன்.” என்று அவளை பிரிய நேருமோ என்ற சோகத்துடன் சொன்னான். 

“அவளை கடைசி வரைக்கும் உன் கூட வச்சிக்கிறதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு. அது தான் நியாயமான வழியும் கூட .” என்று தாத்தா என்றார், ஏதோ ஒரு வழி இருக்கிறது என்று தாத்தா சொன்னதை கேட்ட உடனேயே  சந்தோஷப்பட்ட ரிஷி ஆர்வமான முகத்துடன் “என்ன வழி சொல்லுங்க தாத்தா.. எதுவா இருந்தாலும் கண்டிப்பா நான் என் அம்முக்காக செய்வேன்.” என்றான். 

“பெருசா ஒன்னும் இல்ல. நீ மீட்டிங்ல ஆல்ரெடி எல்லார் கிட்டயும் சொன்னது தான். நீதான் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்டியே.. அப்புறம் அந்த கல்யாணம் எப்ப நடந்தா என்ன? 

அந்த பொண்ண பெத்தவங்கள நேர்ல பார்த்து நடந்தது எல்லாத்தையும் சொல்லி முறைப்படி உனக்காக நான் அவங்க கிட்ட போய் பொண்ணு கேட்கிறேன். நம்ம வீட்ல சம்மதம் பண்றதுக்கு யாருக்கு தான் கசக்க போகுது? கண்டிப்பா அவங்க சரின்னு தான் சொல்லுவாங்க. எல்லாம் நல்லபடியா கூடி வந்தா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கௌரவமா சந்தோஷமா வாழுங்க. அதுக்கப்புறம் உங்களை யாராலயும் பிரிக்க முடியாது. அந்த பொண்ணை சரி பண்றதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு நம்ம பார்க்கலாம்.

எனக்கு இது சரியா வரும்னு தோணுது ரிஷி. நீதானே சொன்ன உங்க அம்மா தான் அவளை உன் கண்ணுல காட்டினான்னு… இந்த பொண்ணு தான் நம்ம குடும்பத்து மருமகன்னு உங்க அம்மா தெய்வமா இருந்து முடிவு பண்ணி இருந்தா, நடுவுல புகுந்து யாராலையும் அதை மாத்திட முடியாதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றார் தாத்தா. 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured