அத்தியாயம் 49
“மத்தவங்க உன் மேல நம்பிக்கை இல்லாம இருக்காங்க. இப்ப அவங்களுக்கு நீ என்ன பதில் சொல்ல போற ரிஷி?” என்று தாத்தா கேட்க, நேராக நிமிர்ந்து அமர்ந்த ரிஷி “நீங்க இதுவரைக்கும் பேசினதுல யாரும் ஒரு விஷயத்தை கவனிக்கல. இந்த கம்பெனியோட founder and my mother அவங்களுடைய உயில்ல ஒரு விஷயத்தை தெளிவாக எழுதி இருக்காங்க.. அது என்னன்னா, அவங்களுக்கு அப்புறமா மிஸ்டர் சேர்மன் அதாவது என் தாத்தா, அவர் விருப்பப்படுற வரைக்கும் எல்லா பொறுப்பையும் அவரே எடுத்து நடத்தலாம்.
அவருக்கு அப்புறமா எனக்கு கல்யாணமாகி வாரிசு வந்ததுக்கு அப்புறம் பொறுப்புகள் எனக்கு வரும். இல்லைனா அது என் சிஸ்டர் குஷிக்கு கூட போகலாம். பட் இதுல எங்கயுமே அவங்க ஒருவேளை என்னாலையோ, என்னோட பிளட் ரிலேஷன்ஸ் யாராலையும் இந்த கம்பெனியை எடுத்து நடத்த முடியலைன்னா, மொத்தத்தையும் நாங்க just because Mr Anand Kumar என்னோட பயாலஜிக்கல் ஃபாதரா இருக்கிறாருன்றதுக்காக அவருக்கோ, அவரோட பையனுக்கு கொடுக்கணும்னு எங்கயும் மென்ஷன் பண்ணல.
இப்ப மிஸ்டர் ஆனந்தகுமார் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிறதுனால, எங்க அம்மாவோட ஹஸ்பண்ட் அவர் தான்னு இப்ப அவர் தன்னை கிளைம் பண்றதுலயும், அதன் மூலமா கிடைக்கிற benefits-ஐ எதிர்பார்க்கிறதுலயும் எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.
அவரும், அவரோட சன் தீரஜூம் இந்த கம்பெனிக்காக வொர்க் பண்ணி இருக்காங்கறதுனால, அவங்களோட இப்ப இருக்கிற பொசிஷனுக்கு தகுந்த மாதிரியான சலுகைகள் மட்டும் தான் அவர்களுக்கு கிடைக்கும், கிடைக்கணும்.
அண்ட் என்னோட ரெஸ்பான்சிபிலிட்டிசை fulfill பண்றதுக்கான கெப்பாசிட்டி எனக்கு இருக்குதா இல்லையான்னு இந்த கம்பெனிக்கு நான் சிஇஓ ஆனதுல இருந்து இந்த கம்பெனிக்காக நான் பண்ணதை வச்சு நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க.
அண்ட் என்னோட பர்சனல் லைஃப் பத்தி பேசணும்னா, எனக்கு அப்புறம் என்னோட வாரிசு யாருன்ற உங்களோட கேள்வி நியாயமானது தான். இப்ப எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்காங்க. அவங்களுக்கு உடம்பு சரியானத்துக்கு அப்புறமா நானும் அவங்களும் மேரேஜ் பண்ணிக்க போறோம்.
என்னோட பாடி கண்டிஷனை கன்சிடர் பண்ணி எனக்கு வாரிசு வருமா வராதான்னு நீங்க கவலைப்படறதுக்கு பதிலா, இப்ப இயர் எண்டிங் வந்துட்டு இருக்குறதுனால ஆடிட்டீங்கள நம்ம ஃபோக்கஸ் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
எனக்கு என்னோட வாரிசு யாருன்னு அனௌன்ஸ் பண்றதுக்காக ஒன் இயர் டைம் வேணும். அந்த ஒரு வருஷத்துக்குள்ள, எனக்கும் நித்திலாவுக்கும் குழந்தை இல்லனா எல்லா பொறுப்பையும் என்னோட சிஸ்டர் குஷி கிட்ட ஒப்படைக்க நான் ரெடியா இருக்கேன்.
அவங்களுக்கு இந்த ஒரு வருஷத்துக்குள்ள ட்ரெய்னிங் கொடுத்து அவங்களையும் எனக்கு ஈக்குவலான ஒரு ஆளா உருவாக்கணும்னு நான் ஆசைப்படுறேன். இந்த ஒரு வருஷம் முடியும்போது, நான் இதே மாதிரி இங்கே ceoவா இருக்கணுமா கூடாதான்னு இதே மாதிரி ஒரு மீட்டிங் வச்சு முடிவு பண்ணிக்கலாம்.
பட் அப்பயும் என்னோட தாத்தா மிஸ்டர் சேதுபதி தான் இங்க சேர்மனா இருப்பாருன்றதுனால அவர் என்ன முடிவு எடுத்தாலும், மத்த போட் மெம்பர்ஸ் அவர் கூட சேர்ந்து அதை ஏத்துக்கிட்டா கண்டிப்பா நானும் ஏத்துக்குறேன். This is my final decision.” என்று ஒரே மூச்சாக பேசி முடித்தான்.
அவனது சிறிதும் தடுமாற்றம் இல்லாத தீர்க்கமான பேச்சைக் கேட்டு அங்கிருந்து அனைவரும் வாய் அடைத்து போய்விட்டார்கள். இப்போது அவன் மீதும், அவனது நிர்வாகத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று யாராலும் அங்கே சொல்ல முடியாமல் போய்விட்டது.
தன் பேரனை பெருமையுடன் பார்த்த தாத்தா “ரிஷியோட முடிவை நான் ஏத்துக்குறேன். ஒருவேளை ரிஷிக்கு வாரிசு வராம போனா கூட, நிர்வாக பொறுப்புகளை ஏற்று நடத்துற அளவுக்கு குஷிக்கு எக்ஸ்பீரியன்ஸ் வரும்போது, அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவளுக்கு பொறக்க போற குழந்தையை என்னோட அடுத்த வாரிசா நானே அறிவிப்பேன்.
குஷி முன்னாடி நின்னு எல்லாத்தையும் பாத்துக்கிட்டாலும், நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நானும், எனக்கு அப்புறம் என் பேரன் ரிஷியும் கடைசி வரைக்கும் இந்த கம்பெனிக்கு ஒரு தூனா இருப்போம். இந்த கம்பெனி என் பொண்ணோட கனவு. அதை அவளோட வாரிச தவிர வேற யாரும் கட்டி காப்பாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. இதுக்கு மேலையும் நீங்க வோட்டிங் நடத்தணும்னு நினைச்சா தாராளமா நடத்தலாம். பட் ரிஷி கேட்ட மாதிரி அவருக்கு ஒன் இயர் டைம் கொடுக்கிறது தான் கரெக்டா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.” என்று சொல்லி விட்டார்.
அவரது தீர்க்கமான பேச்சைக் கேட்ட பிறகு அங்கே இருந்த யாருக்கும் மீண்டும் ஆனந்தகுமார் பக்கம் பேசும் அளவிற்கு தைரியம் வரவில்லை. அதனால் ஒரு வழியாக அனைவரும் சேர்ந்து ரிஷிக்கு அவன் கேட்ட மாதிரி திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தகப்பனாக ஒரு வருடம் காலக்கெடு கொடுக்க முடிவெடுத்தார்கள்.
அதே சமயம் வெளிநாட்டில் இருக்கும் குஷியை இந்தியா வரவழைத்து அவளை கம்பெனி பொறுப்புகளை இப்போதில் இருந்தே கவனித்துக் கொள்ள வைக்க வேண்டும் என்று மற்றவர்கள் கோரிக்கை விடுத்ததால், அவளது உயிருக்கு ஆனந்தகுமார் குடும்பத்தினால் ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தாலும், இப்போது வேறு வழியில்லை என்பதால் அனைத்திற்கும் தாத்தாவும், ரிஷியும் சரி என்றார்கள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)