Home போதையடி நீ எனக்குபோதையடி‌ நீ எனக்கு CH 48

போதையடி‌ நீ எனக்கு CH 48

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 48 

தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய நித்திலா மீண்டும் சென்று அமைதியாக ரிஷியின் அருகில் நின்று கொண்டாள். நிரஞ்சனாவின் குழந்தை தருண் அங்கே புதிய மனிதர்கள் ஏராளமானவர்கள் இருப்பதால் அவர்களைப் பார்த்து அழுது கொண்டே இருந்தான். 

அதனால் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு அவள் வெளியில் செல்ல, வளர்ந்த குழந்தையான நித்திலாவிற்கும் அங்கே அனைவரின் முன்னிலையிலும் பொம்மை போல நின்று கொண்டிருக்க அசோகர்யமாக இருந்ததால் அவளும் நிரஞ்சனாவை பின் தொடர்ந்து வெளியில் சென்று விட்டாள். 

குழந்தையை பார்த்துக் கொண்டு இருக்கும் நிரஞ்சனா நித்திலாவை கவனிக்காமல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த திலீப் “நான் போய் அவங்கள பார்க்கிறேன்.” என்று ரிஷியின் காதுகளில் கிசுகிசுத்து விட்டு வெளியில் சென்றான். 

அவர்கள் சென்ற பிறகு மீட்டிங் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஆனந்தகுமார் ஓட்டெடுப்பு பற்றி பேச தொடங்கினார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த தாத்தா “ஒருவேளை என்னோட சப்போர்ட் யாருக்குன்னு நான் இப்பவே சொல்லிட்டா, அப்ப கூட இங்கே ஓட்டிங் நடக்குமா?” என்று நிதானமான குரலில் கேட்டார். 

அவர் சாதாரணமாக பேசினாலும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் “யார் பொறுப்புல இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். என்னை மீறி நீங்க  ஓட்டிங் பண்ணுவீங்களா?” என்று அனைவரையும் பார்த்து கேட்கும்படி இருந்ததாக அங்கே இருந்த அனைவரும் நினைத்தார்கள். 

தனது தந்தையாக இருந்தால் கூட உரிமையாக ஏதேனும் பேசலாம். தனது இறந்து போன மனைவியின் அப்பாவிடம் என்ன சொல்லி சமாளித்து தன் மகனை அதிகாரத்தில் அமர வைப்பது என்று தெரியாமல் ஆனந்தகுமார் விழி பிதுங்கி நிற்க, “என்னங்க அந்த ஆளு எல்லாரும் மிரட்டிட்டு இருக்கான்.. நீங்க எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க! 

இத்தனை வருஷமா இந்த கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நீங்களும், என் பையன் தீரஜூம் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீங்க.. இப்ப எல்லாமே அந்த ரிஷிக்கு போறத வேடிக்கை பாத்துட்டு நம்ம சும்மா இருக்கணுமா?” என்று ரேகா ஆனந்தகுமாரிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருந்தாள். 

“அந்த ஆள மீறி இங்க எதுவும் பண்ண முடியாது. நானே என்ன நடக்குமோன்னு தெரியாம பதட்டத்தில இருக்கேன். நீ வேற சும்மா ஏதாவது பேசி என்னை டென்ஷன் பண்ணாத டி.” என்று மெல்லிய குரலில் இறுக்கமான முகத்துடன் தன் மனைவியிடம் சொன்னார் ஆனந்தகுமார். 

அங்கே இருந்த சேர் பர்சனங்களில் ஒருவர் “உங்களோட ஆதரவை நீங்க யாருக்கு கொடுக்கப் போறீங்க சேர்மன் சார்? உங்களோட முடிவுல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. 

ஆனா ரிஷிக்கு இப்படி ஆனதுக்கு அப்புறமா அடுத்து இந்த பொறுப்பு யாருக்கு போகப்போகுதுன்னு யோசிச்சு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துருச்சு. 

நீங்க இப்ப எடுக்க போற முடிவு இன்னையோட முடிய போறதில்ல. உங்களோட அடுத்த வாரிசு யாருன்னு நீங்க அறிவிக்கும்போது, அவங்க நாளைக்கு இந்த கம்பெனியோட இன்னொரு வாரிச அடையாளப்படுத்தற ஒரு ஆளா இருக்கணும்ல! 

நம்ம கம்பெனி இப்ப நல்லா போயிட்டு இருக்கு. ரிஷி சாரோட மேனேஜ்மென்ட்ல எந்த குறையும் இல்ல. ஆனா அவரோட ஹெல்த் கண்டிஷன் தான் எங்களை அவரோட capabilities மேல சந்தேகப்பட வைக்குது. 

இதை சொல்றது நானா இருந்தாலும் இங்க இருக்கிறவங்க எல்லாரோட மனசுலையும் அது தான் இருக்கு சார். நான் சொல்லி அது உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல. 

நம்மளோட former chairman மோகனா மேடம் எழுதி வச்ச உயில்படி அவங்களுக்கு அப்புறமா அவங்களுடைய கம்பெனிய நிர்வாகம் பண்ற உரிமை உங்களுக்கும் அவங்களோட ரெண்டு குழந்தைகளுக்கும் இதுக்கு.  

நீங்க ரொம்ப நாளா ஆபீஸ் விஷயங்கள் எதுளையும் தலையிடாம இருந்துட்டீங்க. அதனால நேரடியா ரிஷி கிட்ட பொறுப்பு போச்சு. இப்ப தனக்கு இருக்கிற பொறுப்புகளை சரியா செய்ய முடியாத நிலையில ரிஷி சார் இருக்கிறதுனால அடுத்து இதை நம்ம குஷி மேடம் கிட்ட சட்டப்படி ஒப்படைக்க வாய்ப்பு இருக்கு. 

ஆனா அவங்களுக்கு அதுக்கான வயசும், எக்ஸ்பீரியன்ஸும் இல்லாததுனால நம்மளால அந்த முடிவை எடுக்க முடியாதுன்ற பட்சத்துல, அடுத்து மோகனா மேடமோட ஹஸ்பண்ட் என்ற உரிமையில மிஸ்டர் ஆனந்தகுமாருக்கும், அவரோட பையன் தீரஜுக்கும் இந்த நிர்வாக பொறுப்புகளை ஏத்துக்கிறதுக்கான தகுதி இருக்குனு நாங்க நம்புறோம். 

ஒருவேளை மிஸ்டர் ரிஷியால கல்யாணம் பண்ணி அவருக்குன்னு ஒரு வாரிசை பெத்துக்க முடியலன்னா  மோகனா மேடம் எழுதி வச்ச உயில்படி அவரால கம்பெனிய நிர்வாகம் பண்ண முடியாது. கம்பெனிக்கு கீழ வர சொத்துகளுக்கு மட்டுமே அவர் உரிமையாளரா இருப்பார்ன்னு கிளியரா இருக்கு. 

இப்ப நாங்க அடுத்து என்ன பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க சார். கண்டிப்பா உங்க முடிவு எதுவா இருந்தாலும் நாங்க அதுக்கு கட்டுப்படுவோம்.‌” என்று தெளிவாக சூழ்நிலையை விளக்கினார். 

அவரைத் தொடர்ந்து அங்கிருந்த மற்றவர்களும் தங்களது கருத்துக்களை மாறி மாறி தெரிவிக்க தொடங்கினார்கள். ஓட்டிங் எடுக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் முடிவாக இருந்தது. முதலில் அனைவரும் பேசுவதை அமைதியாக கேட்ட தாத்தா அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ரிஷியை பார்த்து “உன்னால இந்த கம்பெனியை நல்ல விதமா எடுத்து நடத்த முடியும்னு இங்க நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லைன்னு டைரக்ட்டாவே சொல்லிட்டாங்க. இப்ப இவங்களுக்கு நீ என்ன பதில் சொல்ல போற ரிஷி?” என்று தன் பேரன் ரிஷியை பார்த்து கேட்டார் தாத்தா. 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured