Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 43

போதையடி நீ எனக்கு CH 43

by Thenaruvi Tamil Novels
182 views

அத்தியாயம் 43 

ரிஷியின் பிரம்மாண்ட அலுவலகத்தை நித்திலா வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டு இருக்க, அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொண்ட ரிஷி “அம்மு.. நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு தானே?

நீ இங்க யார் கிட்டயும் வாய தொறந்து பேசவே கூடாது. உனக்கு வாய் பேசவே வராது. யாராவது உன் கிட்ட வந்து ஏதாவது கேட்டாலும் நீ ஆக்ஷன் பண்ணி தான் ரிப்ளை பண்ணனும்.”  என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான். அனைத்தும் புரிந்தது என்பதைப் போல இடவலமாக தலையாட்டினாள் அவள். 

நிரஞ்சனாவின் குழந்தை தருண் நித்திலாவை பார்த்து கொஞ்ச நேரம் தான் ஆகி இருக்கிறது என்றாலும் கூட அவளிடம் நன்றாக ஒட்டிக் கொண்டான்.  நிரஞ்சனா தன் மகனைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்க, அவன் அழுதபடி நித்திலாவிடம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தான். 

“அச்சோ நம்ம கிட்ட வர்றதுக்காக இந்த குட்டி பையன் இப்படி அழுகிறானே.. என் டெம்பிள் வேற நான் வாயை திறந்து யார் கிட்டயும் பேசவே கூடாதுன்னு சொல்லிட்டான். 

இப்ப நான் தருண் கிட்ட அழுகாதன்னு கூட சொல்ல முடியாது.” என்று நினைத்த நித்திலா குழந்தையை நிரஞ்சனாவிடம் இருந்து வாங்கி தனது தோள்களில் போட்டு தட்டிக் குடுக்க தொடங்கினாள். 

அவர்கள் அனைவரும் மெல்ல நடந்து அலுவலகத்திற்குள் நுழைத்தார்கள். அவர்கள் லிப்டில் ஏறுவதற்குள் தருண் நித்திலாவின் தோள்களில் சாய்ந்து தூங்கியே விட்டான். அதை பார்க்க குழந்தைகளை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு நன்றாக தெரிந்திருப்பது போல இருந்தது. 

அனைத்தையும் கவனித்தபடி லிஃப்டில் அவர்களுடன் பயணித்த ரிஷி “இவளை பாத்தா mentally disturbed மாதிரியா இருக்கு? தெளிவாக இருக்கிற மனுஷங்க எல்லாம் இவளை மாதிரி மூளை குழம்பி போனவங்களை பைத்தியம்னு சொல்றாங்க. 

ஆனா அவங்க தான் நிஜமாவே ரொம்ப ஸ்வீட்டா இருக்காங்க. இந்த நார்மல் மனுஷன் தான் அடுத்தவனை எப்படி அழிக்கிறது, மத்தவன் சந்தோஷமா இருந்தாலே அவனை எப்படி கஷ்டப்பட வைக்கிறதுன்னு யோசிக்கிற அளவுக்கு ரொம்ப டேஞ்சரா இருக்கான்.

அவங்களோட கம்பேர் பண்ணும்போது என் அம்மு எவ்வளவோ பரவாயில்லை.” என்று நினைத்தான். 

சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் ஒரு பெரிய மீட்டிங் ஹாலிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்கான இருக்கையில் சென்று அமர, அவர்களுக்கு பின்னே ரிஷியின் பாதுகாவலர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். 

“நம்ம ஆபீஸ்ல நடக்கப்போற மீட்டிங்கு இவ்வளவு பாடிகார்ட்ஸ் தேவையா ரிஷி? இது எல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல!” என்று அவன் அப்பா ஆனந்தகுமார் கேட்க, “இது எங்க அம்மாவோட ஆர்டர் மறந்துட்டீங்களா? எப்பயும் என்னோட பிரைவேட் பாடிகார்ட்ஸ் என் கூடவே இருக்கணும்னு அவங்க ஸ்கிரிப்ட்டா சொல்லி இருக்காங்க. 

அவங்களோட ரூல்ஸை ஃபாலோ பண்ணாம இருந்ததால தான் இப்ப நான் இந்த நிலைமையில இருக்கேன். இதுக்கு மேலயும் நான் முட்டாளா இருப்பேன் என்று நினைக்கிறீர்களா மிஸ்டர் ஆனந்த் குமார்?” என்று கேட்டுவிட்டு சிரித்தான் ரிஷி. 

“உங்க அப்பா உன் மேல வச்சிருக்கற பாசம் உனக்கு எப்பயுமே புரியாத ரிஷி? அவர் தீரஜை விட உன் மேல தான் நிறைய அன்பு வச்சு இருக்கிறாரு. 

நீ என்னை உங்க அம்மாவ ஏத்துக்க மாட்டேங்குற. இதுக்கு அப்புறமும் அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். அது பரவாயில்ல, எனக்கு பழகிப்போச்சு. 

ஆனா உங்க அப்பாகிட்ட இப்படி பேசி எதுக்குப்பா அவரே கஷ்டப்படுத்துற?” என்று ரேகா நல்லவளை போல கேட்க, அவளை எல்லாம் ஒரு ஆளாகவே மதிக்காமல் எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரிஷி தன் வாயை திறந்து தெரியாமல் கூட எதுவும் பேசவில்லை. 

அதனால் கடுப்பான ரேகா “சரியான திமிரு புடிச்சவன். பெரியவங்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு கூட சொல்லிக் கொடுக்காம இவன் ஆத்தாக்காரி போய் சேர்ந்துட்டா..

இவனும் அவ கூடையே போய் சேர்ந்திருக்க வேண்டியது தானே.. இவன் மட்டும் இல்லைனா, இவன் தங்கச்சி குஷி எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல. 

நாங்க போட்ட பிளான்ல இருந்து எப்படியோ தப்பிச்சு வந்து இப்ப எங்களுக்கே  யமனா நிக்கிறான்.” என்று தனக்குள் ரிசியை மனதில் திட்டிக் கொண்டிருந்தாள்‌.

“என்ன மாம் இப்ப எதுக்கு அவனையே முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க? நமக்கு அவனை பிடிக்காதுன்னு தான் ஆல்ரெடி எல்லாருக்குமே தெரியுமே.. அதை இப்படி பார்த்து வேற ரிஜிஸ்டர் பண்ணனுமா? 

அது சரி, இவன் மீட்டிங்கு திலீப்பை கூட்டிட்டு வந்தது ஓகே. கூட வந்திருக்கிறது யாரு? அந்த கல்யாணமான பொண்ணு திலீப் பொண்டாட்டி நிரஞ்சனா தானே.. 

அவளோட குழந்தைகள் தூக்கி வச்சிட்டு இருக்குற இந்த பொண்ணு யாரு? இவளை நான் எங்கயுமே பார்த்த மாதிரியே இல்லையே! இவளை பத்தி அப்பா கிட்ட அவன் ஏதாவது சொன்னானா?” என்று ரேகாவிடம் கேட்டான் தீரஜ். 

அவன் சொன்ன பிறகு தான் நித்திலாவையும், அவள் கையில் இருக்கும் தருணையும் கவனித்த ரேகா “இவ யாருன்னு தெரியல டா. இதுக்கு முன்னாடி இவளை நான் ரிஷி கூட பார்த்ததே இல்லை. 

ஒருவேளை இவள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நம்ம போர்ட் மெம்பர்ஸ் முன்னாடி சொல்றதுக்குத் தான் அவன் இவளை கூட்டிட்டு வந்து இருப்பானா?” என்று சந்தேகமாக கேட்க, 

“இருந்தாலும் இருக்கும் மாம். இந்த சொத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் நம்மளே இது நம்ம கையை விட்டு போக கூடாதுன்னு நினைக்கிறோம்.. 

இது எல்லாத்துக்கும் இவனும் இவன் தங்கச்சியும் தான் வாரிசு. அவன் சும்மா இருப்பானா? இவன் எங்க போறான் என்ன பண்றான்னு கண்டுபிடிக்க நானும் ஒரு வாரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். 

என்னால எதுவும் கண்டுபிடிக்க முடியல. இந்த பொன்னையும் நம்ம கண்ண படாம இவன் மறைத்து வைத்திருக்கான் போல இருக்கு. ஆனா அவளை பாருங்களேன்.. பாக்குறதுக்கு ஆளே ஒரு மார்க்கமா இருக்கான். தலையில வேற அடிபட்டு இருக்கு!” என்றான் தீரஜ். 

“அவ யாரா இருந்தா எனக்கு என்ன டா? ரிஷி மட்டும் அவளைத் தான் கட்டிக்க போறேன்னு சொல்லட்டும், அப்புறம் இருக்கு அவளுக்கு. மொத்தமா இவங்க எல்லாரையும் மேல அனுப்பி வச்சுருவேன்.” என்று வஞ்சத்துடன் சொன்ன ரேகா தனக்கு எதிரில் உள்ள சேரில் அமர்ந்து இருக்கும் ரிஷியை எரித்துவிடும் பார்வை பார்த்தாள். 

– முத்தங்கள் தொடரும் 💋 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured