Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 32

போதையடி நீ எனக்கு CH 32

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 32 ‌

அவள் தனக்கு என்ன ஆனது என்று கேட்டவுடன் ரிஷிக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த அனைத்து கசப்பான விஷயங்களும் ஞாபகம் வரத் தொடங்கியது. அவன் எதை மறக்க நினைக்கிறானோ அதை இப்போது நித்திலா ஞாபகப்படுத்தி விட்டதால் அதுவரை பிரகாசமாக இருந்த அவனது முகம் சட்டென்று வாடியது. 

அனைத்தையும் பார்த்து புரிந்து கொள்ளும் மனநிலையில் நித்திலா இப்போது இல்லாமல் இருந்தாலும் கூட, ஏனோ அவளது ரிஷி சோகமாக இருப்பதை அவள் மனதால் உணர முடிந்தது. உடனே அவள் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “இங்க வா.. என் பக்கத்துல வா, நான் உன்னை நல்லா பார்க்கணும்.” என்று தன் ஒற்றை கையால் சைகை செய்து அவனை தன் அருகில் வரச் சொன்னாள். 

அவனும் எதுவும் பேசாமல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அவள் அருகில் வீழ்ச்சாரில் செல்ல, அவன் தன் பக்கம் வந்தவுடன் ஆதரவாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு நித்திலா “உனக்கு கால்ல அடிபட்டுருச்சா? அதான் இப்படி இந்த சேர்லயோ உட்கார்ந்து இருக்கியா? உனக்கும் என்ன மாதிரி வலிக்குதா? இந்த டாக்டர் அக்கா ஊசி போட்டு உன்னை கொடுமை படுத்துறாங்களா?” என்று ஒவ்வொரு கேள்வியாக தன் தலையை ஆட்டி ஆட்டி அவனை பார்த்து அக்கறையுடன் விசாரித்தாள். 

தன் மனதிற்குள் உள்ள மொத்த பாரமும் அவள் முகத்தை பார்த்தவுடன் ஒரே நொடியில் மயமாக மறைந்ததைப் போல உணர்ந்த ரிஷி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் “நீ temporary patient. அதான் உனக்கு சீக்கிரம் சரியாகனும்னு உனக்கு ஊசி எல்லாம் போடுறாங்க. 

நான் பர்மனென் பேஷன்ட். எனக்கு எல்லாம் என்ன பண்ணாலும் சரியாக அதுன்னு என்ன இப்படியே விட்டுட்டாங்க. இதுக்கு அப்புறம் என்னால நடக்க முடியாது. எந்த டாக்டராலயும் என்ன நடக்க வைக்க முடியாது.” என்று உடைந்த குரலில் சொன்னான். 

அவனைப் பார்க்கவே நிரஞ்சனாவிற்கு பாவமாக இருந்தது. அவனிடம் ஆறுதலாக ஏதேனும் பேசலாம் என நினைத்தாலும் அவன் நித்திலாவுடன் இருக்கும்போது சந்தோஷமாக இருக்கிறான் என்பதால், தான் இடையில் சென்று அவர்களது பேச்சில் குறிக்கிட வேண்டாம் என நினைத்து அமைதியாக நின்றாள். 

“ஏன் அப்படி சொல்ற? அதெல்லாம் உனக்கு சரியாகும். நான் சொல்றேன். நான் சொன்னா அது கண்டிப்பா நடக்கும் தெரியுமா?” என்று நித்திலா அவன் கையைப் பிடித்து அதன் மீது தன் முகத்தை சாய்த்து கொண்டு அன்புடன் சொல்ல, “ஓஓ.. நீ சொன்னா நடந்துடுமா? அப்படி நடந்தா தான் பரவாயில்லையே.. பட் என்ன செக் பண்ண டாக்டர்ஸ் எல்லாருமே என்னால இதுக்கப்புறம் நடக்க முடியாது. இனிமே நான் வீழ்ச்சாரில தான் இருக்கணும்.  இந்த Paralysis தானா சரியானா தான் உண்டு. ஆனா அதுக்கும் வாய்ப்பு கம்மிதான்னு சொல்லிட்டாங்களே!” என்றான் ரிஷி. 

“உன் கிட்ட இப்படியெல்லாம் நெகட்டிவா யார் சொல்றது? அவங்க சரியான லூசா இருப்பாங்க. நானு உன் கூடவே இருந்து உன்ன நடக்க வைக்கிறேன் ஓகேவா? சீக்கிரமாவே நீ எந்திரிச்சு நடந்து வரணும். அப்ப தான் நம்ம ரெண்டு பேரும் ஜாலியா ஓடிப் பிடிச்சு விளையாட முடியும்.” என்று நித்திலா நம்பிக்கையுடன் பேச, 

“பார்றா.. உன்னால என்ன சரி பண்ண முடியுமா? எப்படி இவ்ளோ confident-ஆ சொல்ற?” என்று அவளது முகத்தை தன் ஒரு கையில் ஏந்திக் கொண்டு மற்றொரு கையால் அவளது அடிபட்டு இருந்த தலையை லேசாக அவளுக்கு வலிக்காத வண்ணம் வருடியவாறு கேட்டான் ரிஷி. 

“அதுவா.. அதெல்லாம் எனக்கு ரொம்ப ஈசி. நான் நெனச்சா ஒரே செகண்ட்ல cure பண்ணிடுவேன். ஏன்னா நான் ஒரு க்யூட் ஏஞ்சல். எனக்கு நிறைய பவர் இருக்கும். என் பவரை வச்சு நான் உன்ன காப்பாத்தறேன் சரியா?” என்ற நித்திலா அவன் தனக்கு செய்ததைப் போலவே கொஞ்சம் எக்கி அவனது தலை முடியை லேசாக தருது மிருதுவான விரல்களால் வருடினாள். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற ஃபேஸ்புக் குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured