Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 73

சாபமாய் வந்த என் உயிரே CH 73

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 73 

“என் கூட இருக்கும்போது அவரோட எக்ஸ் வைஃப் கூட இருக்கிற மாதிரி இருக்குன்னு அவர் எதுக்கு சொல்லணும்? அதை என்ன மீனிங்ல அவர் சொல்லி இருப்பாருன்னு எனக்கு புரியலையே! ஒருவேளை அவருக்கு என்ன புடிச்சிருக்கான்னு எனக்குள்ள அவர் என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல கிஸ் பண்ணதுக்கு அப்புறமா ஒரு டவுட் வந்துச்சு. அந்த டவுட்டை கன்ஃபார்ம் பண்ற மாதிரி தானே இப்ப அவர் பிஹேவியர் இருக்கு!” என்று தனக்குள் யோசித்து குழம்பி கொண்டு இருந்தாள் அமுதா. 

அப்போது “இப்ப எதுக்கு கிடைச்சிருக்கிற கொஞ்ச நேரத்துலயும் தூங்காம நீ கண்ட தான் போட்டு யோசிச்சிட்டு இருக்க? அவர மாதிரி பெரிய ஸ்டார் போயும் போயும் உன்ன லவ் பண்ணுவாங்களா? அப்படியே லவ் பண்ணாலும், உன்னை என்ன அவர் கட்டிக்கவா போறாரு? ஏற்கனவே அவருக்கு இரண்டு தடவை கல்யாணம் ஆயிடிச்சு. 

அத உன் மைண்ட்ல நல்லா கேட்டு வச்சுக்கோ. அதுவும் இல்லாம இன்னும் ரெண்டு மூணு நாள்ல உனக்கும் கல்யாணம் ஆகப்போகுது. அப்புறம் வெற்றி தான் உன் புருஷன் அவன் கூட தான் நீ வாழ போற.” என்று அவள் மண்டையில் மானசிகமாக தட்டி அவள் மனசாட்சி உண்மை நிலையை அவளுக்கு புரிய வைத்ததால் “அதுவும் சரி தான்.. நான் தேவையில்லாம யோசிக்கிறது டைம் வேஸ்ட்.” என்று நினைத்து உறங்க தொடங்கினாள் அமுதா. 

அவள் பதினோரு மணி வரை நன்றாக எந்த தொந்தரவுகளும் இன்றி உறங்கிக் கொண்டு இருக்க, அவளது அறை கதவை வந்து தட்டினான் வெற்றி. அப்போதும் தெரிந்து கொள்ள மனம் வராமல் “எனக்கு தூக்கம் வருது வெற்றி. என்ன டிஸ்டர்ப் பண்ணாத.” என்று அவள் அறை தூக்கத்திலேயே சொல்ல, “இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ நீ? ஏற்கனவே மணி 12 ஆக போகுது. சீக்கிரம் போய் குளிச்சிட்டு கிளம்பி வா. இன்னைக்கு ஷூட்டிங் இருக்கு. அங்க போற ஐடியா இருக்கா இல்லையா உனக்கு?” என்று கதவிற்கு வெளியே நின்று கொண்டு கத்தி கேட்டான் வெற்றி. 

அவன் மதியம் 12 மணி ஆகப்போகிறது என்று சொன்னதை நம்ப முடியாமல் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த அமுதா வேகமாக சென்று கதவை திறந்து “என்ன சொல்ற மணி 12 ஆக போகுதா? இவ்வளவு நேரமா என்னை எதுக்கு தூங்க விட்ட? காலையில 9:00 மணிக்கு ஷூட்டிங் போகணும்னு உனக்கு தெரியாதா? நான் லேட்டா போனா என்னென்ன சொல்லி திட்டுவாங்களோ தெரியல! நான் தான் ஏதோ தெரியாம இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். அதுக்குன்னு அப்படியே போகட்டும்னு போன போகுதுன்னு விற்றுவியா நீ?” என்று அவனிடம் கோபமாக கேட்டாள். 

“ஏய் லூசு இப்ப எதுக்கு கத்துற? காலையில ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்க. லஞ்சுக்கு அப்புறம் தான் ஷூட்டிங் நடக்க போகுது. நீ இப்ப தூங்கி எந்திரிச்சு கிளம்புன கரெக்ட்டா இருக்கும்னு தான் தூங்கிட்டு இருக்கிற உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு இவ்ளோ நேரமா நான் பொறுமையா இருந்தேன். சூட்டிங் கேன்சல் ஆனது கூட தெரியாம நான் உன்னை கண்டுக்காம விட்டுட்டேன்னு என்னவே திட்டுரியா நீ? முதல்ல போய் சாப்பிட்டு கிளம்புற வேலையை பாரு.” என்று வெற்றி சொல்ல, அதிர்ச்சியில் அவனைப் பார்த்த அமுதா “என்ன சொல்ற.. நெஜமாவே காலையில ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்களா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள் அமுதா‌. 

“ஆமா, இன்னைக்கு ஷூட்டிங்க்கு விஜய் சாரும் வரப்போறாராம். அவர் தான் மத்தியானத்துக்கு மேல ஷூட்டிங் வெச்சிக்கலாம்னு சொல்லிட்டாருன்னு காலையில சீக்கிரமாவே அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருத்தர் எனக்கு மெசேஜ் பண்ணி இருக்காரு. நீ தூங்கிட்டு இருந்த. அதான் நான் உன் கிட்ட எதுவும் சொல்லல. சரி, பேசி டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா போய் கிளம்பு போ!” என்று அவளிடம் சொல்லிவிட்டு சாப்பிடுவதற்காக சென்று விட்டான் வெற்றி. 

குழப்பமான முகத்துடன் மீண்டும் தனது ரூமிற்குள் வந்த அமுதா “நடக்கிறது எதையும் என்னால நம்பவே முடியல. விஜய் சார் எதுக்காக மார்னிங் ஷூட்டிங்கை கேன்சல் பண்ணாரு? ‌ ஒருவேளை எனக்காக இருக்குமா? நான் நைட் ஃபுல்லா தூங்காம இருந்ததினால எனக்காக யோசிச்சு இப்படி பண்ணிருக்காரா என்ன? சில சமயம் ரீசரே இல்லாம என் மேல அவர் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறாரு. சில சமயம் என்ன ஸ்பெஷலா ட்ரீட் பண்றாரு. என்னால அவரை புரிஞ்சிக்கவே முடியல.” என்று யோசித்தாள். 

பின் வழக்கம்போல “அவரை புரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்?” என்று நினைத்து தனது வேலையை பார்க்க சென்று விட்டாள். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் எல்லாம் போட்டு தயாராகி அன்றைய சீனியில் நடிப்பதற்காக கூடி இருந்தார்கள். 

இப்போது கதையில் அடிக்கடி சந்திக்கும் விஜய் மற்றும் அமுதாவிற்கு நடுவில் மெல்ல ஒரு நட்பு பிறந்திருந்தது. அதே சமயம் விஜய் தனது பெற்றோர்களைப் பற்றி ஒரு பக்கம் விசாரிக்க தொடங்குகிறான். விஜய் மற்றும் அமுதாவின் உறவுக்கு நடுவில் பாலமாக இருக்கிறாள் அபிநயா. விஜயின் காதலியாக இருக்கும் மோனிஷா அவன் திடீரென தன்னை அவாய்ட் செய்வதாக உணர்ந்து அவனை காண மதுரைக்கு வருகிறாள். 

இந்த காட்சிகளைத் தான் அவர்கள் அங்கே படமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அமுதா உடன் சேர்ந்து நடிக்கும் போது விஜய் மிகவும் நேச்சுரலாக நடிப்பதாக நினைத்த மோனிஷா, “இன்னைக்கு உங்களுக்கும் எனக்கும் கிலோசா நிறைய சீன் இருக்கு. அதுல ஒன்னு ரெண்டு ஆல்ரெடி ஷூட் பண்ணியாச்சு. என் கூட நடிக்கும் போது நீங்க நல்லா தான் நடிச்சிங்க. ஆனா அமுதா கூட இருக்கும்போது நேச்சுரலா உங்களுக்குள்ள இருந்து வர எமோஷன் என் கூட இருக்கும்போது வரலைன்னு எனக்கு ஏன் தோணுது? ஏற்கனவே உங்களுக்கும் எனக்கும் நடுவுல மறுபடியும் உங்க வைஃப் அனாமிகா வந்துட்டாங்கன்னு நான் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்ப புதுசா இந்த அமுதா வேற பிராப்ளமா வந்து நிற்கிறா. இது எல்லாத்தையும் தாண்டி எப்படி நான் உங்க கிட்ட என் மனசுல இருக்குற லவ்வ சொல்லப்போறேன் விஜய்?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டு அவனை பாவமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 

அந்நேரம் அந்த சீனில் வெற்றிகரமாக நடித்து முடித்த விஜய் அமுதாவுடன் ஏதோ பேசியபடி தனது கேரவனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சிரித்த முகமாக அவனை நோக்கி வந்த இளம் பெண் ஒருத்தி “how are you my Sugar Lips! நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்று தன்னுடைய இனிமையான குரலில் கேட்டபடி அவன் அருகில் சென்று அவனை இறுக்கமாக கட்டி பிடித்தாள். 

தங்களை சுற்றி ஏராளமானவர்கள் இருந்ததால் வேறு வழியில்லாமல் பதிலுக்கு அவளை கட்டிப்பிடித்த விஜய் “தெரியும் தெரியும்.. நீ என்ன கண்டிப்பா மிஸ் பண்ணி இருப்ப. விடாது கருப்புனு சொல்லுவாங்க இல்ல அந்த மாதிரி என் பின்னாடியே சுத்திட்டு இருக்குற தானே உன் வேலை!” என்று நக்கலாக மெல்லிய குரலில் சிரித்துக் கொண்டே அவளிடம் கேட்டான். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதைக் கண்டு ஒரு பக்கம் அமுதாவின் முகம் வாட, இன்னொரு பக்கம் மோனிஷா அனைவரையும் எரித்து விடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். 

விஜயை விட்டு பிரிந்த அனாமிகா அவன் அருகில் அமுதா நிற்பதை பார்த்துவிட்டு “ஓ ஹாய்.. உங்க பேர் என்ன? நீங்க தான் இந்த மூவில இண்டர்வியூஸ் ஆகப் போறே செகண்ட் ஹீரோயினா?” என்று கேட்க, “நான் ஃபோட்டோல எல்லாம் பார்த்ததை விட இவங்க நேரில் ரொம்ப அழகா இருக்காங்க. கண்டிப்பா விஜய் சாரோட வைஃப்பா இருக்கிறதுக்கு இவங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு.” என்று நினைத்த அமுதா தயக்கத்துடன் “என் பேரு அமுதா. இது தான் என்னோட ஃபர்ஸ்ட் மூவி மேடம்.” என்றாள். 

“நைஸ். You look pretty! Nice to meet you அமுதா!” என்று சொன்ன அனாமிகா அவளையும் கட்டிப்பிடித்தாள். பதிலுக்கு லேசாக அவளை கட்டி பிடித்த அமுதா விஜயை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை கவனித்த விஜய் “என்ன பாக்க வந்துட்டு இங்க அவ கூட என்ன பண்ணிட்டு இருக்க? உன் கூட பேச வேண்டியது எனக்கு நிறைய இருக்கு. நீ என் கூட வா பேபி.” என்று சொல்லி அனாமிக்காவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தனது கேரவனை நோக்கி சென்றான்‌. 

“மத்தவங்க கிட்ட தான் இவர் எரிஞ்சு எரிஞ்சு விழுவாரு போல இருக்கு. அனாமிகா மேடம் மட்டும் எவ்ளோ ஆசையா பேபின்னு கூப்பிடுறாரு! எல்லாரும் சொல்ற மாதிரி முன்னாடி இவங்களுக்குள்ள இருந்த பிராப்ளம் சால்வ் ஆகி மறுபடியும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க போல இருக்கு! எப்படியோ அவர் சந்தோசமா இருந்தா போதும்.” என்று நினைத்த அமுதா அடுத்த சீனிற்கு தயாரவதற்காக தனது கேரவனை நோக்கி நடந்தாள்.‌ 

நடக்கும் அனைத்தையும் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வெற்றி “விஜய் சாரும் அவருடைய வைஃப் அனாமிகாவும் ஒண்ணா இருக்குறத பாக்கவே எனக்கு குளுகுளுன்னு இருக்கு. இவங்கள மாதிரி நானும் என் அமுதா கூட சந்தோஷமா வாழ்வேன். எங்களுக்கு கல்யாணம் மட்டும் ஆகட்டும். அதுக்கப்புறம் இந்த வெற்றி யாருன்னு எல்லாருக்கும் தெரியும். என்ன ஆனாலும் சரி,   நான் என் பொண்டாட்டிய இப்படி படத்துல எல்லாம் நடிக்கவே விடமாட்டேன்.” என்று நினைத்துக் கொண்டான்.  

விஜய் அனாமிகாவுடன் தனியாக அவனுடைய கேரவனுக்கு செல்வதை பார்த்து கோபத்தில் பொங்கி கொண்டு இருந்த மோனிஷா அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் வெளியில் செல்ல தொடங்கினாள். வழக்கம்போல தன் மகளை சமாதானப்படுத்திய டைரக்டர் ஸ்ரீகாந்த் “நீ ஆசைப்பட்ட மாதிரி கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் விஜயும் ஒன்னா சேர்ந்து வாழ்வீங்க. அது உன் அப்பா உனக்கு பண்ற ப்ராமிஸ். உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லன்னா பரவால்ல. நீ என்ன நம்பு மோனி.” என்று சொல்லி அவளை அழைத்து சென்றார். 

அமுதாவுக்கு தோழியாக நடித்து தன் வாழ்க்கையையே வெறுக்கும் மனநிலையில் இருந்த அபிநயா அவளுக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியதால் தனது வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணிக்கு கால் செய்து சில சந்தேகங்களை கேட்டாள். “நான் தான் சொல்றேன்ல மா.. அதே மாதிரி பண்ணா சரியா வரும். அதுல இருந்து யாராலயும் தப்பிக்க முடியாது. அந்த அமுதா புள்ளையால அதுக்கப்புறம் நடிக்கவே முடியாது. வேற யாரும் கிடைக்கலைனா உங்களை தானே அப்புறம் ஹீரோயினா வச்சு படம் எடுத்தாகணும்!” என்று அவள் உறுதியாக சொல்ல, “நல்லது, இந்த விஷயத்துல யாருக்கும் நம்ம மேல சந்தேகமே வரக் கூடாது. எனக்கு வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி நீ இங்க கிளம்பி அந்த பொருளோட யாருக்கும் தெரியாம வந்துரு. அப்புறம் அத வச்சு என்ன பண்ணனும்னு நான் உனக்கு சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த அபிநயா வில்லத்தனமாக புன்னகைத்தாள். 

– காதல் மலரும் 🌹

You may also like

Leave a Comment

About Me

Featured