அத்தியாயம் 72
அமுதா அண்ணனடை போட்டு நடந்து செல்லும் அழகை ஆஆஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அவள் அவன் கண்களை விட்டு மறைந்து தன்னுடைய வீட்டிற்குள் பூனை போல பதுங்கி சென்று மறைந்து விட்டாள். ஆனாலும் அவன் பார்வை அவள் சென்ற சாலையில் இருந்து விலகவில்லை. அவர்களுக்கு இடையூறாக முன்பிருந்தே சுற்றிக்கொண்டு இருந்த நாய்கள் கூட்டம் மீண்டும் சத்தத்தை எழுப்ப, அதில் சுயநினைவு பெற்ற விஜய் “ச்சீ.. டேய் விஜய் என்ன டா இந்த அளவுக்கு காஜி ஆயிட்டியா நீ? அதுவும் என்ன டா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு? After all அவ ஒரு local village girl.. அவள போய் இப்படி முழுங்கற மாதிரி பாத்துட்டு இருக்க! இப்படி நீ பாக்குற அளவுக்கு அவ கிட்ட என்ன இருக்கு?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
“இவ கிட்டயா.. இவ கிட்ட என்ன இருக்குன்னு கரெக்டா தெரியல. பட் என்ன இம்ப்ரஸ் பண்ற அளவுக்கு ஏதோ ஒன்னு இருக்கு.” என்று அதற்கு அவன் மனசாட்சி பதில் சொல்ல, “என்ன எழவு இருந்தாலும் பரவால்ல. அது நமக்கு தேவையில்லை. எவ்வளவு பட்டாலும் ஏன் தான் இந்த புத்திக்கு அறிவு வரமாட்டேங்குதோ!” என்று நினைத்து தன் மனசாட்சியின் மண்டையில் அடித்து அதை ஆஃப் செய்த விஜய் தனது காரை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்பினான்.
அவனுக்கு இப்போது அடுத்து எங்கே போவது என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் இவ்வளவு நேரம் போதையில் இருந்ததாலும், தூங்காமல் தவித்ததாலும் அவனுக்கு இப்போது சோர்வாக இருந்தது. அவனையும் அறியாமல் அவன் கண்கள் அவ்வப்போது ஓய்விற்காக ஏங்கி மூடிக்கொள்ள, “இதுக்கு மேல தூங்காம நான் டிரைவ் பண்ணிட்டு இருந்தா கண்டிப்பா எங்கையாவது கொண்டு போய் மறைத்து மேல தான் விடுவேன். அப்புறம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கன்பார்ம்!” என்று நினைத்து அமுதா சொன்னதைப் போல மதுரையில் அவன் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸுற்க்கு சென்றான்.
அங்கே சென்று தனது ரூமில் உள்ள கட்டிலில் அவன் விழுந்தவுடன் “ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு டைம் கொஞ்சம் தான் இருக்கு. அதுக்குள்ள தூங்கி ரெஸ்ட் எடுங்க.” என்று அமுதா அவனிடம் சொன்னது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அதனால் உடனே டைரக்டர் ஸ்ரீகாந்துக்கு கால் செய்தான்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் “இந்த நேரத்துல இவன் எதுக்கு நமக்கு கால் பண்றான்?” என்று யோசித்தபடி அந்த அழைப்பை அட்டென்ட் செய்து “ஹலோ” என்றான். “நான் விஜய் பேசுறேன்!” என்று அவன் தனது கனீர் குரலில் சொல்ல, “சொல்லுங்க சார், உங்க நம்பர் என் கிட்ட இருக்கு. இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க.. ஏதாவது இம்பார்ட்டண்டான விஷயமா?” என்று பவ்வியமாக மரியாதையுடன் கேட்டான் டைரக்டர் ஸ்ரீகாந்த்.
“ப்ராப்ளம் எல்லாம் ஒன்னும் இல்ல. ஷூட்டிங்காக நான் விடிய விடிய சென்னையில இருந்து சோலோவா டிரைவ் பண்ணி மதுர வரைக்கும் வந்து இருக்கேன். என்னால காலையில சீக்கிரமா வர முடியாது. சோ ஷூட்டிங்கை பன்னெண்டு மணிக்கு மேல ஸ்டார்ட் பண்ணா போதும்.” என்று விஜய் உத்தரவிட, “ஆனா சார் நாளைக்கு உங்க சீனே இல்லையே.. நீங்க எனக்கு கால்ஷீட் கொடுக்காததுனால மத்த ஆக்டர்ஸ் எல்லாரையும் வைத்து ஷூட்டிங் பண்ணிக்கலாம்னு செட்டு கூட ரெடி பண்ணிட்டோம். உங்களால வர முடியலன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல சார். நீங்க நாளைக்கு ஃபுல்லா கூட ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் மத்தவங்கள வெச்சி ஷூட் பண்ணிக்கிறேன்.” என்று சொன்னான் ஸ்ரீகாந்த்.
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியாதா? நீங்க ஷூட்டிங் எடுக்குறேன்னு சூட்டிங் எடுக்கிறேன்னு நான் குடுத்திருக்க பட்ஜெட்டை எப்படி எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு நான் தான் பாத்துட்டு இருக்கனே.. இப்படியே உங்கள விட்டா சரிப்பட்டு வராது. இந்த படம் ஷூட் பண்ணி முடிக்கிற வரைக்கும் நான் எங்கயும் நகர்றதா இல்ல. நான் சொன்ன மாதிரி இந்த மூவி தீபாவளிக்கு ரிலீசாகணும்.
நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எனக்கு அக்டோபர்குள்ள சூட்டிங் முடிஞ்சு post production work ஸ்டார்ட் ஆகணும். இல்லைனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். என்ன பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்ன்னு நினைக்கிறேன்!” என்று விஜய் அவனை மிரட்டுவதை போல பேச,
“இவனை மாதிரி ஆளுங்க எல்லாம் ப்ரொடியூசரா வந்தா டைரக்டர் நிலைமை எல்லாம் இப்படித்தான் இருக்கும். என்ன பண்ணி தொலையறது.. வேற வழி!” என்று நினைத்து தனக்குள் புலம்பிக் கொண்ட டைரக்டர் ஸ்ரீகாந்த் “ஓகே சார், நீங்க சொன்னா சரி தான். நாளைக்கு ஆப்டர்நூன் நமது ஷூட்டிங் வச்சுக்கலாம். நாளைக்கு எடுக்க வேண்டிய சீன்ஸ் எல்லாத்தையும் நான் சேஞ்ச் பண்றேன். உங்களுக்கும் அமுதாவுக்கும் நாலு, அஞ்சு சீன்ஸ் இருக்கு. நாம நாளைக்கு அத ஷூட் பண்ணிடலாம்.” என்றான்.
தான் எதிர்பார்த்த பதில் ஸ்ரீகாந்திடம் இருந்து கிடைத்த பிறகு குஷியான விஜய் “ம்ம்ம்.. நாளைக்கு மார்னிங் ஷூட்டிங் இல்ல. யாரும் செட்டுக்கு வர வேண்டாம்னு இப்பவே எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பிட்டு அப்புறமா தூங்குங்க. நானும் தூங்க போறேன் குட் நைட்.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான். இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
வழக்கம் போல அவன் மனசாட்சி “இப்ப நீ தூங்குறதுக்காக ஷூட்டிங்கை postpone பண்ணியா? இல்ல அவ தூங்கறதுக்காக பண்ணியா?” என்று அவனிடம் கேள்வி கேட்க, “எவ்வளவு ஒருத்திக்காக நான் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்? இந்த விஜய் யாருக்காகவும் எப்பயும் இறங்கி போக மாட்டான். அதுவும் அந்த typical low class பொண்ணுக்காகவா? ச்சீ… ச்சீ.. வாய்ப்பே இல்லை. எனக்கு அவளை கண்டாலே சுத்தமா பிடிக்காது. அவ ஆளும் அவளோட டிரெஸ்ஸிங் சென்ஸும் ….!!” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான்.
தனது அசிஸ்டன்ட்டுக்கு கால் செய்து சூட்டிங் கேன்சல் ஆன விஷயத்தை சொல்லி மற்றவர்களுக்கு அதை தெரிவிக்க சொன்ன டைரக்டர் ஸ்ரீகாந்த் அடுத்து தன் மகள் மோனிஷாவிற்கு கால் செய்தார். தூங்கிக் கொண்டு இருந்த மோனிஷா தன் அப்பாவின் மீது இருந்த கோபத்தில் அந்த அழைப்பை துண்டித்தாள். “இவ வேற நேரம் காலம் புரியாம… என்ன டென்ஷன் பண்ணி சாவடிக்கறதுக்குனே இவ எனக்கு வந்து பொறந்திருப்பா போல இருக்கு!” என்று நினைத்து சலித்துக் கொண்ட டைரக்டர் ஸ்ரீகாந்த் தன் மகளுக்கு “நாளைக்கு ஷூட்டிங்கு விஜய் வர்றான். அப்ப கூட ஷூட்டிங்க்கு வர மாட்டேன்.. இந்த படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க போறியா நீ? நாளைக்கு உனக்கும் அவனுக்கும் கூட சீன்ஸ் இருக்கு.” என்று மெசேஜ் அனுப்பினார்.
அதைப் பார்த்துவிட்டு உடனே தன் அப்பாவிற்கு கால் செய்த மோனிஷா “இப்படியே விஜய் சார் பெயரை சொல்லி இன்னும் எத்தனை நாள் தான் அப்பா எனக்கு ஆசை காட்டிக் கிட்டே இருப்பீங்க! உங்களுக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா? I truly madly in love with him. என்னால அவரை இன்னொரு பொண்ணு கூட எல்லாம் பார்க்க முடியாது. ப்ளீஸ் என்ன இதுக்கு மேலயும் டார்ச்சர் பண்ணாதீங்க. இந்த மூவில என்னால நடிக்க முடியாது. என்ன விட்டுருங்க.” என்று சொல்லிவிட்டு அழுது கெஞ்சினாள்.
“நான் உனக்காக தான் மோனிஷா என்ன பண்ணிட்டு இருக்கேன். அது உனக்கு தான் புரிய மாட்டேங்குது. நீ அவனை லவ் பண்றேன்னு சொன்னா மட்டும் போதுமா? அவனுக்காக ஏதாவது பண்ணா தானே அவனும் உன்னை திரும்பி பார்ப்பான்! நீ அவன பாக்குறதுக்கு இருக்கிற ஒரே சான்ஸ் இந்த மூவியோட ஷூட்டிங் மட்டும் தான். இதுலயும் நடிக்க மாட்டேன்னு சும்மா பைத்தியம் புடிச்ச மாதிரி உளறிட்டு இருக்க!” என்று கோபமாக ஸ்ரீகாந்த் சொல்ல,
“இல்ல டாடி, நீங்க என்ன கன்வின்ஸ் பண்றதுக்காக ஏதாவது பேசாதீங்க. இதுக்கு மேல விஜய் எனக்கு கிடைப்பாருன்ற நம்பிக்கையை எனக்கு போயிடுச்சு. அவருக்கு அந்த அனாமிகாவை சுத்தமா பிடிக்காது அதனால தான் அவங்கள டிவர்ஸ் பண்றதுக்கு விஜய் சார் ரெடியா இருக்காருன்னு சொன்னீங்க. உங்க பேச்சை கேட்டு தான் நான் அவர் கூட கிளோஸ் பண்ணேன்.
கடைசியில என்ன ஆச்சுன்னு நீங்களே பாக்குறீங்க தானே! கோட்டை அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழணும்னு சொல்லிருச்சு. இப்ப அவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்காங்க. அப்ப அவங்களுக்குள்ள இருந்தா இஸ்யூஸ் எல்லாம் சரியாயிடுச்சுன்னு தானே அர்த்தம்! லாஸ்ட்ல நான் தான் இன்னும் விஜய் சார் எனக்கு கிடைப்பாருன்ற நம்பிக்கையில் ஜோக்கர் மாதிரி இருக்கேன் டாடி.” என்று சொல்லி அழுது புலம்பினாள்.
“ஐயோ கடவுளே இந்த ஒண்ணுத்துக்கும் உதவாதவள வெச்சுகிட்டு நான் என்ன தான் பண்ண போறனோ!” என்று நினைத்த ஸ்ரீகாந்த், “oh God மோனி என்ன ஸ்டுப்பிட் மாதிரி பேசிட்டு இருக்க! நீ பாட்டுக்கு அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழ போறாங்கன்னு அதை பார்த்து ஃபீல் பண்ணி எங்கேயோ போய் டோர லாக் பண்ணிக்கிட்டு ரூமுக்குள்ளேயே உட்கார்ந்து இருந்தா எல்லாம் சரியாயிடுமா? இங்க உனக்கு காம்பெடிஷன் அதிகம்.
அந்த அனாமிகாவை பார்த்து கூடவா நீ எதுவும் கத்துக்க மாட்ட? அவள விஜய் வேண்டாவே வேண்டாம்னு நினைக்கிறான். ஆனா அப்படி இருந்தும் அவ என்ன என்னமோ பண்ணி கடைசில அவன் வீட்டுக்கு திரும்பவும் போயிட்டா. பொண்ணுனா அந்த மாதிரி இருக்கணும். உனக்கு ஒன்னு வேணும்னா அது தானா உன் கைல வந்து விழுகாது. நீதான் அதுக்கான efforts-ஐ போட்டு அதை நடக்க வைக்கணும். சும்மா இப்படி அழுது புலம்பரத விட்டுட்டு உனக்கு நிஜமாவே விஜய் மேல லவ் இருந்துச்சுன்னா, அவன் வேணும்னு நினைச்சேனா நல்லா தூங்கி எந்திரிச்சு அழகா ரெடியாகி நாளைக்கு ஆப்டர்நூன் சூட்டிங்க்கு வந்து சேரு.” என்று கோபமாக சொல்லிவிட்டு அந்த அழைப்பை துதித்து விட்டான்.
தனது வீட்டிற்கு வந்து படுத்த அமுதா “நல்லவேளை யார் கண்ணுளையும் படாம வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் எனக்கும் வெற்றிக்கும் மேரேஜ் ஆகியிருக்கும். இந்த சிச்சுவேஷன்ல என்ன இந்த டைம்ல விஜய் சார் கூட மட்டும் யாராவது பார்த்திருந்தா பெரிய பிரச்சினையாகி இருக்கும். விஜய் சார் எனக்காக இங்க வரலைன்னு ஸ்ட்ராங்கா சொல்றாரு. ஆனா எனக்கு என்னமோ அவர் எனக்காக தான் வந்த மாதிரி ஃபீல் ஆகுது. பட் அவர் எதுக்கு எனக்காக வரணும்? என் கூட இருக்கும்போது அவரோட எக்ஸ் ஒய்ஃப் கூட இருக்குற மாதிரி இருக்குன்னு எதுக்கு சொல்லணும்?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
-காதல் மலரும் 🌹