நாயகன் 69
போதையில் இருந்த விஜய் “சரி மத்தவங்கள விடு, நீ என்னை லவ் பண்றியா? அத சொல்லு. உனக்கு என்னை நெஜமாவே அந்த அளவுக்கு பிடிக்குமா?” என்று அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான். அவன் அப்படி கேட்டவுடன், சினிமா நடிகர்களை பொதுவாக மக்கள் அனைவரும் காதலிப்பதாக சொல்வார்கள். அதைப்போலத் தான் இவனும் தன்னிடம் கேட்கிறான் போல என நினைத்துக் கொண்ட அமுதா “ஆமா சார், இன்னும் நான் சொன்னதை நீங்க நம்பலையா? சைல்ட் ஹூட் டேஸ்ல இருந்தே எனக்கு உங்க மேல கிரஷ் இருக்கு. ஹீரோன்னா எனக்கு அது நீங்க மட்டும் தான். உங்க மூவிஸ் எது வந்தாலும் நான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிடுவேன்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். இது எல்லாத்தையும் நான் உங்க கிட்ட இப்ப சொல்லிட்டு இருக்கேன்னு கூட என்னால நம்ப முடியல. உங்கள ஒரு தடவையாவது என் லைஃப்ல பார்த்தா கூட அது பெரிய விஷயம்னு நினைச்சேன். பட் இப்போ நான் உங்க கூட ஃபோன்ல பேசிட்டு இருக்கேன். உங்க நம்பர் என் கிட்ட இருக்கு. எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும், உங்கள நான் எவ்வளவு லவ் பண்றேன்னு டைரக்டா உங்க கிட்டயே சொல்றதுக்கு எனக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைச்சிருக்கு.
இந்த செகண்ட் ஏதோ ஒரு கடவுளால ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை மாதிரி ஃபீல் பண்றேன். நான் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் சார். உங்க படத்துல எனக்கு நடிக்கிறதுக்கு நீங்க பெரிய ஆப்பர்சூனிட்டி கொடுத்திருக்கீங்க. அதுக்கு நான் உங்களுக்கு எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது.” என்று உணர்ச்சிவசப்பட்டு தன் மனதில் இருந்தவற்றை எல்லாம் அவனிடம் கொட்ட தொடங்கினாள்.
தன்னை பாராட்டி யார் பேசினாலும் பொதுவாகவே போதை போல அதற்கு உடனே அடிமை ஆகி விடுவான் விஜய். ரணகளால் கொதித்து கொண்டு இருந்த அவன் மனதிற்கு அவள் பேசியது ஆறுதலாக இருக்க ஜிலு ஜில்லு என்று தன் மீது ஐஸ் வாட்டர் கொட்டுவதைப் போல அவனுக்கு ஜிவ்வென இருந்தது. அதனால் அவளுடைய இனிமையான குரல் தன் காதுகளில் கேட்பதை ரசித்து கொண்டு இருந்த விஜய் “எப்பயும் நீ தொன தொணன்னு லூசுத் தனமா பேசி என்ன டென்ஷன் பண்ணிக்கிட்டே இருப்ப.. பட் இன்னைக்கு என்னமோ நீ பேசறது எல்லாம் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு டி.. நீ பேசுறதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. அப்படியே ஏதாவது பேசு!” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அமுதா “நெஜமாவே நான் பேசுறது உங்களுக்கு புடிச்சிருக்கா சார்?” என்று நம்ப முடியாமல் கேட்க, “ஆமா டி.. எனக்கு உன்னைய புடிச்சிருக்கு. நீ பேசுறது கேட்க ரொம்ப பிடிச்சிருக்கு. நீ அப்படியே பேசிக்கிட்டே இருப்பியாம்.. நான் கேட்டுக்கிட்டே இருப்பனாம். எனக்கு தூக்கமே வரல. இன்னைக்கு நீதான் பேசி பேசி என்ன தூங்க வைக்க போற. எனக்காக என் கூட பேசுவியா மாட்டியா?” என்று அவளிடம் கெஞ்சும் தோரணையில் கேட்டான் விஜய்.
அவன் சில நாட்களுக்கு முன்பு “உன்ன மாதிரி ஒரு லோ கிளாஸ் பொண்ணு எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது. உன்னோட புத்தி ரொம்ப மட்டமா இருக்கு அமுதா. மிடில் கிளாஸ் ஆளுங்க எல்லாரும் இப்படித் தான் இருப்பாங்க.. ஹை கிளாஸ் பீப்பிள் கூட எவ்வளவு நாள் பழகினாலும், இந்த புத்தி உனக்கு மாறாது.” என்றெல்லாம் அவன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி அவளை அசிங்கப்படுத்தினான்.
ஆனால் இப்போது அவனே அவளைப் பிடிக்கும் என்கிறான்.. அதனால் “நெஜமாவே விஜய் சார் தான் நம்ம கிட்ட இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காரா? இல்ல வேற யாராவது அவர் வாய்ஸ்ல பேசி நம்ம கிட்ட prank பண்றாங்களான்னு தெரியலையே! பட் வாய்ஸ் மட்டும் இல்ல பேசுற விதம் கூட அப்படியே விஜய் சார் மாதிரி தான் இருக்கு. பொய் மாதிரி தெரியல. ஆனா இவருக்கு இப்படி கூட பேச தெரியுமா என்ன?
என் கூட பேசுறதுக்கு இவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கோ இல்லையோ.. இவர் இந்த மாதிரி ஸ்வீட்டா என் கிட்ட பேசினா, விடிய விடிய கூட நான் கேட்டுக்கிட்டே இருப்பேன். விஜய் சார் மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் கூட பேசுறதுக்கு சான்ஸ் கிடைச்சா, யார் அதை மிஸ் பண்ணுவாங்க? கடவுளுக்கு என் மேல வர வர soft corner டெவலப் ஆயிடுச்சு போல இருக்கு. அதான் ஏதோ என்ன சந்தோஷப்படுத்தி பார்த்து அவரும் சந்தோஷப்படுறாரு.” என்று நினைத்து குசியான அமுதா, “என்னமோ தெரியல எனக்கும் இன்னைக்கு தூக்கமே வரல சார். நீங்க தூங்குற வரைக்கும் கண்டிப்பா நம்ம பேசலாம். உங்க கூட பேசறதுக்கு எனக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு. இது எனக்கு ரொம்ப பெரிய விஷயம். கண்டிப்பா இந்த ஆப்பர்சூனிட்டிய நான் வேஸ்ட் பண்ண மாட்டேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
அவள் தன்னுடன் பேச தயாராக இருக்கிறாள் என்று கேட்டவுடன் மகிழ்ந்த விஜய் “சரி, அப்ப நீ ஏதாவது பேசு. நான் கேட்டுக்கிட்டே தூங்க ட்ரை பண்றேன்.” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோஃபாவில் சென்று படுத்தான். அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குள் இருந்தது. ஆனால் திடீரென்று பேச வேண்டும் என்றால் என்ன பேசுவது என்ற கேள்வி அவளுக்குள் எழும்ப, “திடீர்னு பேசணும்னா என்ன பேசறதுன்னு எனக்கு தெரியல சார். நீங்க வேணும்னா ஏதாவது கேளுங்க. நான் ஆன்சர் பண்றேன். இல்லைனா நான் உங்க கிட்ட ஏதாவது கொஸ்டின் கேட்கவா? ஒரு fan-ஆ உங்கள நேர்ல பார்த்தா உங்க கிட்ட இந்த கொஸ்டின் எல்லாம் கேட்கணும்னு நான் நிறைய யோசிச்சு வச்சிருந்தேன். இப்ப கேட்கட்டுமா?” என்று அவனிடமே கேட்டாள் அமுதா.
“அய்யய்ய.. எனக்கு இந்த கொஸ்டின் ஆன்சர் session எல்லாம் பிடிக்காது.. எனக்கு பேசுற மூடும் இல்ல. நீ பேசு நான் கேட்கிறேன் அவ்ளோ தான்.” என்று போதை ஏறிய குரலில் அவன் சொல்ல, “ம்ம்.. ஓகே, பட் என்ன பேசுறதுன்னு எனக்கு தெரியலையே சார்!” என்று அவனிடமே மீண்டும் சோகமாக கேட்டாள் அமுதா. சில நொடிகள் அமைதியாக யோசித்த விஜய் “அதான் நீ என்னோட மூவிஸ் எல்லாத்தையும் பாத்திருக்கேன்னு சொன்னியே.. நான் இதுவரைக்கும் 250 படத்துக்கு மேல நடிச்சிருக்கேன்.
அதுல என்னோட கேரக்டர் எப்படி இருந்துச்சு, நான் எப்படி பர்பாமன்ஸ் பண்ணேன்னு சொல்லு. நீதான் என்னோட எல்லா மூவியையும் பார்த்திருக்கியே.. அப்போ நீ அத பத்தி பேசினாலே பொழுது விடிஞ்சிடும்.” என்றான் விஜய்.
அவன் சொல்வது அவளுக்கும் சரி என்று பட, உடனே அவன் நடித்த திரைப்படங்களை தன் மனதிற்குள் பட்டியல் போட்ட அமுதா ஒவ்வொன்றாக விஜய் நடித்த கேரக்டரை பற்றி சொல்லி அதில் அவன் எப்படி எல்லாம் perform செய்தான் என்று ஒவ்வொரு சீனையும் விவரித்து அவனது ஸ்டைலையும் நடிப்பு திறமையையும் பாராட்டி பேசிக் கொண்டே இருந்தாள்.
நீ பேசிக் கொண்டே இரு பதிலுக்கு நான் பேசும் மனநிலையில் இல்லை என்று அவளிடம் சொல்லி இருந்த விஜய் இப்போது அவள் பேச தொடங்கியவுடன் அவனுக்கும் பேசும் ஆர்வம் தோற்றுக் கொண்டதால் அவள் எந்த குறிப்பிட்ட படத்தை சொன்னாலும் அந்த படம் தொடர்பாக நடந்த ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி அவளிடம் பேச தொடங்கினான்.
இப்போது அவர்கள் இருவருக்குமே தூங்கும் எண்ணம் இல்லாமல் போய் விட்டது. சோஃபாவில் படுத்திருந்த விஜய் எழுந்து அமர்ந்து அவன் இருந்த மினி பாரை விட்டு வெளியில் அவளிடம் பேசிக் கொண்டே வந்தான். அவனுக்கு வெளியில் சென்று காற்று வாங்கிக் கொண்டே இவளிடம் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே கார்டன் ஏரியாவுக்கு சென்றான்.
அமுதாவும் அவனைப் போலவே தனது மொபைல் ஃபோனை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அனைவரும் தூங்கியவுடன் பூனை போல மெல்ல பதுங்கி பதுங்கி நடந்து மொட்டை மாடிக்கு சென்றாள். அவர்கள் இருவரும் நேரம் செல்வது தெரியாமல் ஏதோ பல நாட்கள் பழகிய நண்பர்களைப் போல ஒருவருடன் ஒருவர் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அவளிடம் பேசியதில் விஜய்க்கு அடித்த போதை எல்லாம் ஓரளவிற்கு தெளிந்தது. ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவளிடம் பேசிக் கொண்டே இருந்தான். சில மணி நேரங்களுக்கு பிறகு அவன் தனது நார்மலான குரலில் “ஆமா இப்ப நீ எங்க இருக்க?” என்று கேட்க, “நானா.. மொட்டை மாடியில நின்னு பேசிட்டு இருக்கேன் சார். இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். எங்க வீட்ல இருக்குறவங்க எல்லாரும் அஞ்சு மணிக்கு எல்லாம் எந்திரிச்சிடுவாங்க. அதுக்குள்ள நான் கீழே போகணும் இல்லனா இங்கே நின்ன நான் ஃபோன் பேசிட்டு இருந்ததை கண்டுபிடிச்சிடுவாங்க.” என்றாள் அமுதா.
“ஓஹோ மாடியில தான் இருக்கியா..?? அப்ப உன்னால ஈஸியா கீழே வர முடியும் தானே!” என்று அவன் கேட்க, “ம்ம்.. மாடிக்கு போற படிக்கட்டு பின் வாசல் பக்கத்துல தான் இருக்கு. இப்படியே போனா ஈஸியா வெளியே போகலாமே! ஏன் சார் கேக்குறீங்க?” என்று அவனிடம் கேட்டால் அமுதா. “அப்ப வெளிய வா சொல்றேன்.” என்று விஜய் சொல்ல, “இந்த டைம்ல இவர் எதுக்கு என்னை வீட்டை விட்டு வெளியே வர சொல்றாரு?” என்று யோசித்து குழம்பிய அமுதா அவன் பேச்சுக்கு தான் மறுத்து ஏதேனும் பேசினால் அவன் கண்டிப்பாக தன் மீது கோபப்படுவான் என நினைத்து அவன் பேச்சைக் கேட்டு வெளியில் சென்றாள்.
அவள் பின் வாசல் வழியாக வெளியில் சென்று சுற்றி முற்றி பார்த்தவாறு “நான் பின்வாசல் வழியா வெளியே வந்துட்டேன் சார். இங்க யாருமே இல்ல ரோட்ல. என்னை எதுக்கு வெளிவர சொன்னீங்க?” என்று அவள் கேட்க, “உங்க வீட்டு பக்கத்துல சின்னதா ஒரு பிள்ளையார் கோயில் இருக்குல்ல... அங்க வா.” என்றான் விஜய். “சார்..!!” என்று உடனே அவள் இழுக்க, “என்ன இழுக்கிற? நான் தானே கூப்பிடுறேன்.. நான் கூப்பிட்டா வர மாட்டியா நீ?” என்று தன் குரலை உயர்த்தி கேட்டான் விஜய்.
– காதல் மலரும்