Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 68

சாபமாய் வந்த என் உயிரே CH 68

by Thenaruvi Tamil Novels

நாயகன் 68 

சாப்பிட்டு முடித்த அமுதா ‌ தனது ரூமிற்கு சென்று கையில் மொபைல் ஃபோனுடன் கட்டிலில் விழுந்தாள். விஜய் உடன் அவள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றியான சில நியூஸ்கள் சமூக வலைதளங்களில் சுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அமுதா அதில் நடிக்கப் போவதாக எந்த செய்தியும் அதில் போட்டிருக்கவில்லை. 

“இப்ப தானே சூட்டிங் ஸ்டார்ட் ஆகி இருக்கு..  அட்லீஸ்ட் பாதி படத்தையாவது எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் தான் யார் ஹீரோயின் என்னன்னு வெளியே சொல்லுவாங்க போல இருக்கு! வெயிட் பண்ணி பார்ப்போம். விஜய் சார் தான் ஹீரோ. அந்தப் படத்துல நான் ஹீரோயின்னு மத்தவங்க  சொல்றதை கேக்குறதுக்கு நான் ரொம்ப கியூரியாஸா இருக்கேன். 

நானும் அவரும் சேர்ந்து நடிக்கிறது இல்லாம,‌ படத்துக்காக ஃபோட்டோஷூட், லான்ச் ஈவென்ட், ப்ரோமோஷன் event-ன்னு எல்லாத்துக்கும் ஒன்னா போவோம். நான் அவர் பக்கத்துல இருப்பேன். ஐயோ அதை இப்ப நெனச்சாலும் ஹாப்பியா இருக்கே! அது என்னமோ தெரியல.. சின்ன வயசுல இருந்தே எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். ஒரு கடவுள் மாதிரி நான் நினைச்சுட்டு இருந்த ஒருத்தர், இப்ப எனக்கு ரொம்ப பக்கத்துல இருக்காருன்னு நினைச்சா ‌ எனக்கு கிடைச்ச பெரிய பிளசிங் மாதிரி இருக்கு இது. 

எத்தனை தடவை அவர பக்கத்துல இருந்து பார்த்தாலும், அவர திடீர்னு திரும்பி பார்க்கும்போது என் கண்ணுக்கு புதுசா ரொம்ப ஹாண்ட்ஸாமா தெரியுறாரு அவரு. அவருக்கு நிறைய‌  கேர்ள் ஃபேன்ஸ் இருக்கலாம். அவங்க எல்லாரும் அவரை தூரத்தில இருந்து பார்ப்பாங்க. இல்லைன்னா படத்துல பார்த்திருப்பாங்க. அவர் பக்கத்துல இருந்து நான் அவரை ரசிச்சு பார்க்கிற மாதிரி, அவர லவ் பண்ற மாதிரி வேற யாராலயும் அவர லவ் பண்ண முடியாது. இன்னமும் எனக்கு விஜய் சார் மேல அப்படி ஒரு கிரேஸ் இருக்கு. ஐ லவ் யு விஜய்!” என்று தன் மனதிற்குள் இன்னும் அவள் விஜயின் ரசிகையாகவே தன்னை நினைத்துக் கொண்டு அவன் ஃபோட்டோவை பார்த்து பேசிக் கொண்டு இருந்த அமுதா பழக்க தோஷத்தில் இதற்கு முன் அவள் செய்ததைப் போல மொபைல் ஸ்கிரீனில் தெரிந்த அவன் உருவத்திற்கு ஒரு முத்தம் வைத்தாள். 

அப்போது தான் சட்டென்று மின்னல் வெட்டுவதை போல அவளுடைய மனக்கண்களில் அவன் அவளை சம்மதமே இல்லாமல் சூட்டிங் நடக்கும்போது ஆசையாக முத்தமிட்டது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவள் வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறக்க, “அவர் ஏன் அப்படி செஞ்சாருன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியல. அதுக்கப்புறம் என்னால அவரை பாக்கவும் முடியல. மறுபடியும் இப்ப அவர் அனாமிகா மேடம் கூட சேர்ந்து வாழ போறாருன்னு ஆபீஸியல்லா கோர்டே சொல்லிடுச்சு. நடக்கிறது எல்லாத்தையும் எப்படி புரிஞ்சிக்கிறதோ..!!” என்று தனக்குள் பேசிக் கொண்டு இருந்தாள் அமுதா.  

அப்போது டங் என்ற  சத்தத்துடன் அவளுக்கு ஏதோ ஒரு நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருப்பதாக நோட்டிபிகேஷன் வந்தது. உடனே அதை ஓப்பன் செய்த அமுதா “நமக்கு யார் கால் பண்ணி இருக்காங்க?” என்று யோசித்தவாறு உள்ளே சென்று பார்த்தாள்‌. அவளுக்கு ஏதோ ஒரு தெரியாத நம்பரில் இருந்து இரண்டு முறை மிஸ்டுகால்கள் வந்திருப்பதாக நோட்டிபிகேஷன் வந்திருந்தது. மேலும் அந்த நம்பரில் இருந்து வந்த அழைப்பை யாரோ அட்டென்ட் செய்து பேசி இருப்பதும் அவளு க்கு தெரிந்தது. 

“எனக்கு வந்த காலை யார் அட்டென்ட் பண்ணது? ஒருவேளை வெற்றி அட்டென்ட் பண்ணி பேசி இருப்பானா? ஆனா அவன் இத பத்தி எதுவுமே சொல்லலையே! நம்பர் வேற ஃபேன்சியா இருக்கு! யார் கால் பண்ணி இருப்பாங்க?” என்று யோசித்துக் கொண்டு இருந்த அமுதா “இப்போ ரொம்ப லேட் ஆயிடுச்சு. இந்த நேரத்துல  நம்ம அவங்களுக்கு கால் பண்ணா நல்லா இருக்காது. மறுபடியும் கால் வந்தா பாத்துக்கலாம்!” என்று நினைத்து இருந்த தயக்கத்தில் அந்த நம்பருக்கு மீண்டும் கால் செய்ய நினைக்கவில்லை. 

ஆனால் நாம் சும்மா இருந்தாலும் நம் விதி சும்மா இருக்க விடாது  என்று சொல்வார்களே.. அதைப்போல அமுதாவின் விரல் பட்டு தெரியாமல் அந்த நம்பருக்கு கால் சென்று விட்டது. “ஐயோ கால் போயிருச்சே.. யாரு என்னன்னு தெரியல.. நான் இந்த டைம்ல கால் பண்ணா அவங்க தப்பா நினைச்சுக்குவாங்க.” என்று நினைத்து உடனே அவள் அந்த அழைப்பை துண்டித்து விட்டாள். 

தங்களது வீட்டில் உள்ள மினி பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்த விஜய் தனக்கு கால் வந்ததால் மொபைல்  ஃபோனை  எடுத்து பார்த்தான். ஸ்கிரீனில் அமுதாவின் நம்பரை பார்த்தவுடன் ஆர்வமாக அவன் அவளுடன் பேச நினைத்து காலை அட்டென்ட் செய்வதற்குள், அமுதா அந்த அழைப்பை துண்டித்து விட்டாள். அதனால் “இவளுக்கு எவ்வளவு தைரியம்? எனக்கு கால் பண்ணிட்டு நான் அட்டென்ட் பண்றதுக்குள்ள கட் பண்றாளா? நானே இவளுக்கு கால் பண்ண மாதிரி இருக்கணும்னு வேணும்னே இப்படி எல்லாம் பண்றாளா இவ? இரு டி உனக்கு இன்னைக்கு இருக்கு!” என்று நினைத்த விஜய் போதையில் அவளுக்கு கால் செய்தான். 

அதே தெரியாத எண்ணில் இருந்து மீண்டும் தனக்கு கால் வருவதை கண்டு பதற்றப்பட்ட அமுதா “என்ன உடனே நமக்கு கால் பண்றாங்க! யாருன்னு தெரியலையே!” என்று நினைத்து இந்த காலை அட்டென்ட் செய்யலாமா வேண்டாமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள். பின் “யாரா இருந்தா என்ன? அவங்க தானே எனக்கு கால் பண்ணி இருக்காங்க! அட்டெண்ட் பண்ணி என்னன்னு கேட்போம்.” என்று நினைத்து அவள் அந்த அழைப்பை அட்டென்ட் செய்து, “ஹலோ” என்றாள். 

அவளுடைய இனிமையான குரல் தனது செவிகளில் ஒலித்ததை கேட்ட பிறகு அதுவரை எரிமலையாய் கோபதாத்தில் கொதித்துக் கொண்டே இருந்த விஜய் அப்படியே பனிமலையாய் உருகி “ஹலோ” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவன் குரலை கேட்டு ஆடிப்போன அமுதா “இது விஜய் சார் வாய்ஸ் தானே! அவரா எனக்கு கால் பண்ணி இருக்காரு?” என்று நம்ப முடியாமல் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.‌

அவள் அமைதியாக இருந்ததால் “ஏய் அமுதா.. என்ன டி லைன்ல இருக்கியா இல்லையா?” என்று போதை ஏறிய குரலில் விஜய் அவளிடம் கேட்க, “இரு கன்ஃபார்மா விஜய் சார் தான். அவர் வாய்ஸை கேட்டா குடிச்சிருக்க மாதிரி தெரியுது. போதையில ஏதோ தெரியாம எனக்கு கால் பண்ணிட்டாரு போல.” என்று நினைத்த அமுதா அவசரமான குரலில் “இது விஜய் சார் தானே! சொல்லுங்க சார்.. நான் லைன்ல தான் இருக்கேன். நீங்க இந்த டைம்ல எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. அதான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்.” என்றாள். 

“ஏண்டி நான் உனக்கு கால் பண்ண கூடாதா?” என்று அவன் உரிமையுடன் கேட்க, “பண்ணலாமே சார்.. நீங்க எனக்கு கால் பண்ண கூடாதுன்னு நான் எப்ப சொன்னேன்? உங்களுக்கு என் கிட்ட பேசணும்னு தோணுச்சுன்னா நீங்க தாராளமா எனக்கு கால் பண்ணலாம்.” என்றாள் அமுதா.  “அப்புறம் எதுக்கு நான் கால் பண்ணும் போது நீ எடுக்காம இருந்த? நான் கடுப்பாகி கால கட் பண்ண போகும்போது லாஸ்ட்டா அந்த வெற்றி தான் அட்டென்ட் பண்ணி பேசினான். உன் கிட்ட பேசலாம்னு கால் பண்ணா அவன் வாய்ஸ் கேட்கும் போது எனக்கு எவ்வளவு இரிடேட் ஆகுது தெரியுமா?” என்று விஜய் போதையில் உலர, லேசாக சிரித்த அமுதா “நீங்க எனக்கு கால் பண்ணும் போது நான் ஷூட்டிங்ல இருந்தேன் சார். என் திங்க்ஸ் எல்லாமே அவன் கிட்ட தான் இருந்துச்சு. அதான் அவன் காலை அட்டென்ட் பண்ணி பேசி இருப்பான். 

இனிமேல் நான் அவன் கிட்ட எனக்கு வர காலை அட்டென்ட் பண்ண கூடாதுன்னு சொல்லிடுறேன். பட் இப்போ வரைக்குமே உங்க கிட்ட இருந்து கால் வந்தது பத்தி அவன் என் கிட்ட சொல்லவே இல்ல. எனக்கு தெரிஞ்சிருந்தா முன்னாடியே நான் உங்களுக்கு கால் பண்ணி பேசி இருப்பேன்.” என்றாள். 

“அவனுக்கு என்ன பார்த்தா பொறாமை. எங்க அவனுக்கு முன்னாடி நான் உன்னை கரெக்ட் பண்ணி தூக்கிட்டு போய்டுவனோன்னு பயம். அதான் அந்த இடியட் நான் கால் பண்ணதை உன் கிட்ட சொல்லி இருக்க மாட்டான்.” என்று விஜய் அவன் பாட்டிற்கு பேச, உண்மையாகவே அப்படி எல்லாம் இருக்குமா? என யோசிக்க தொடங்கிய அமுதா மீண்டும் சைலன்டானாள். 

  அவள் பேசாததால் மீண்டும் பேச தொடங்கிய விஜய் “ஏய் அமுதா..!!” என்று அவளை அழைக்க, “ம்ம்.. கேட்டுட்டு தான் இருக்கேன். சொல்லுங்க சார்!” என்றாள் அவள். “எனக்கு இப்ப மனசே சரியில்ல தெரியுமா? இது எல்லாம் என்ன மாதிரியான வாழ்க்கைன்னு இருக்கு. அப்படியே கடுப்பா இருக்கு. யாரையும் பிடிக்கல எதையும் பார்க்க பிடிக்கல. இப்படி ஒரு வாழ்க்கையை எதுக்கு வாழனும்னு இருக்கு.” என்று உடைந்த குரலில் அவளிடம் சொன்னான் விஜய். 

இதுவரை அவனை கெத்தாக ஒரு திமிர் பிடித்தவனாக மட்டுமே பார்த்து பழகி இருந்த அமுதாவிற்கு ‌ அவனுடைய இந்த பக்கத்தை பார்க்க புதிதாகவும் வியப்பாகவும் இருந்தது. இப்படியும் அவனால் பேச முடியுமா? என்று யோசித்த அமுதா, “என்னாச்சு சார் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க ஒரு ஸ்டார். எல்லாருக்கும் உங்களை பிடிக்கும்.‌ உங்கள நேர்ல ஒரு தடவையாவது பார்க்க முடியாதுன்னு தவம் கிடைக்கிறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. ஏன் உங்களை நேர்ல பார்க்கிற வரைக்கும் நான்மே அப்படித் தான் இருந்தேன். எனக்கு அந்த அளவுக்கு உங்கள புடிக்கும். என்ன மாதிரி உங்கள லவ் பண்றவங்க நிறைய பேர் இருப்பாங்க. 

அப்படி இருக்கும்போது, நீங்க ஏன் உங்க வாழ்க்கையையே வெறுத்த மாதிரி யாரையும் பிடிக்கல எதுவும் பிடிக்கலைன்னு சொல்றீங்க? உங்க கிட்ட எல்லாமே இருக்கு சார். சோ நீங்க எப்பயும் ஹாப்பியா இருக்கணும். எங்க ஹீரோவை அப்படி பாக்குறதுக்கு தான் நாங்க ஆசைப்படறோம். விஜய் சார்னா எப்பயும் கெத்து தான்.” என்றாள். 

உடனே போதையில் இருந்த விஜய் “சரி மத்தவங்கள விடு, நீ என்னை லவ் பண்றியா? அத சொல்லு. உனக்கு என்னை நெஜமாவே அந்த அளவுக்கு பிடிக்குமா?” என்று அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான். 

– காதல் மலரும்

You may also like

Leave a Comment

About Me

Featured