Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 66

சாபமாய் வந்த என் உயிரே CH 66

by Thenaruvi Tamil Novels
122 views

அத்தியாயம் 66 

அனாமிகாவை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு சென்று கொண்டு இருந்த விஜய் திடீரென்று அவனுக்கு அமுதாவை பற்றிய ஞாபகம் வந்ததால் தனது பர்சனல் நம்பரில் இருந்து அவளுக்கு கால் செய்தான். இன்னும் ஷூட்டிங் முடியாததால் அமுதா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டு இருக்க, அவளது மொபைல் ஃபோனை கையில் வைத்து இருந்த வெற்றி “நம்பர் பாக்க ஃபேன்சியா இருக்கே!  இந்த நேரத்துல தெரியாத நம்பர்ல இருந்து இவளுக்கு யார் கால் பண்றது?” என்று நினைத்தவாறு அந்த அழைப்பை அட்டென்ட் செய்து, “ஹலோ யாரு?” என்று கேட்டான்.‌ 

அமுதாவிடம் பேசலாம் என்று நினைத்து ஆசையாக அவளுக்கு கால் செய்திருந்த விஜய்க்கு அவளுடைய இனிமையான குரலுக்கு பதிலாக வெற்றியின் கரகரப்பான குரலைக் கேட்ட உடனேயே ஒரே கடுப்பாக  இருந்தது. அதனால் எதுவும் சொல்லாமல் அந்த அழைப்பை துண்டித்து விட்டான். 

“என்ன இது.. யாரோ கால் பண்ணாங்க.. நான் பேசுன உடனே எதுவும் சொல்லாம கட் பண்ணிட்டாங்க! சரி என்னமோ.. நம்பர் தப்பா போட்டிருப்பாங்க.” என்று நினைத்த வெற்றி அவனும் அமுதாவிற்கு அசிஸ்டன்டாக வேலை பார்ப்பதில் பிசியாக இருந்ததால் அவளது ஃபோனை தனது பேக்கில் போட்டுவிட்டு வேலையை பார்க்க சென்று விட்டான். 

அமுதாவிடம் பேச முடியாததால் இறுக்கமான முகத்துடன் இருந்த விஜய் “நான் அவளுக்கு கால் பண்ணா இவன் எதுக்கு எடுக்கிறான்? இவன் வாய்ஸை கேட்டாலே இரிடேட் ஆகுது.” என்று நினைத்து வேகமாக தனது காரை ஓட்டிக் கொண்டு மெரினா பீச் பக்கம் சென்று விட்டான். தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக முகத்தில் ஒரு மாஸ்கை மாட்டிக் கொண்டு தொப்பி ஒன்றை அணிந்த விஜய் கடற்கரையோரமாக சென்று நின்று அமைதியாக காத்து வாங்கிக் கொண்டிருந்தான். 

அந்த இடம் இரவு நேரத்தில் மக்கள் கூட்டத்தினால் சலசலப்புடன் இருக்க, அதையும் தாண்டி அந்த கடல் அலைகளின் சத்தம் அவன் மனதில் ஒரு இனிமையான நிசப்தத்தை ஏற்படுத்தியது. அவனைப் பார்க்கும் யாராக இருந்தாலும் அவனிடம் இருக்கும் அழகையும், திறமையும், வசதியையும் கண்டு பொறாமைப் படுவார்கள். மற்றவர்கள் தங்களுக்கும் வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கான ஒரு நிறைவான வாழ்க்கையை அவன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவனும் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டு தான் இருந்தான்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவன் மனதை வெறுமை சொன்னது. பணம், புகழ், அதிகாரம் இது மூன்றும் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று இதுவரை நினைத்துக் கொண்டு இருந்த விஜய் ஒரு திமிர் பிடித்த கெத்தான இளைஞனாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனுடைய அமைதியற்ற மனநிலையை, அவனது மனதிற்குள் இருக்கும் காலி இடத்தை, அவனது இதயத்தில் இருக்கும் குற்ற உணர்ச்சியை, எப்படி சமாளிப்பது என்று அவனுக்கே தெரியாததால் “இது எல்லாம் என்ன வாழ்க்கையோ!” என்று நினைத்து பெருமூச்சு விட்டான். 

அப்போது அவனுக்கு அருகில் ஒரு 22 வயது மதிக்கத்தக்க இளைஞன் கையில் தனது ஒரு வயது குழந்தையை வைத்துக் கொண்டு நிற்க, அவன் வயதை ஒத்த அவனுடைய மனைவி அவன் அருகில் நின்று அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.‌ அவர்கள் இருவரும் தங்களது குழந்தையுடன் ஜாலியாக விளையாடியபடி அவர்களது பொழுதை பீச்சில் கழித்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்களைப் போலவே அங்கே காதல் ஜோடிகள், திருமணமானவர்கள் குடும்பத்துடன் என ஏராளமானவர்கள் வந்து குவிந்திருந்தார்கள். அதை பார்த்து தனக்குள் கிண்டலாக சிரித்துக் கொண்ட விஜய் “எதுவும் இல்லாதவன்னு நான் நினைக்கிறவன் கூட எல்லாமே இருக்கிற மாதிரி இங்க ஹாப்பியா இருக்கான். ஆனா நான் எல்லாமே இருந்தும் என் மூஞ்சிய கூட வெளிய காட்ட முடியாம பிச்சைக்காரன் மாதிரி இப்படி ஒரு மணி நின்னுட்டு இருக்கேன். இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நான் எத்தனையோ சாதிச்சு இருந்தாலும் நிம்மதியாவும் சந்தோஷமாவும் மட்டும் என்னால இருக்க முடியல.” என்று நினைத்தான். 

அங்கே இருந்த குழந்தைகள் தனது அப்பாவை அப்பா அப்பா என்று சொல்லி அழைப்பதை கேட்கவே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவனும் இதுவரை இரண்டு திருமணங்கள் செய்து விட்டான். ஆனால் அதில் அவன் ஒரு நிறைவான வாழ்க்கையை இன்றுவரையிலும் வாழ முடியவில்லை. இதில் அவனுக்கு ஒரு குழந்தை என்று அவன் யோசித்துக் கொண்டே பார்க்கவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் “எனக்குன்னு ஒரு குழந்தை இருந்தா கூட நல்லா தான் இருக்கு இல்ல!” என்று அவனுக்கு ஒரு நிமிடம் தோன்றினாலும், பிரியா அவனுக்கு செய்த காரியம் பற்றி ஞாபகம் வந்தவுடன் அவனுடைய எண்ணமும், அதுவரை சாந்தமாக இருந்த அவனுடைய முகமும் ஒரே நொடியில் மாறிவிட்டது. 

அதனால் இப்போது அதுவரை அவன் ஃபர்ஸ்ட் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகளை கண்களில் கோபத் தீ கொழுந்துவிட்டு எரிய பார்க்கத் தொடங்கினான் விஜய். அதற்கு மேல் அவனால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. உடனே தனது காரை நோக்கி அவன் நடக்க தொடங்கி இருக்க, அப்போது அனாமிகாவின் நம்பரில் இருந்து அவனுக்கு கால் வந்தது. 

“இருக்கிற டென்ஷன்ல இவ வேறயா?” என்று நினைத்த விஜய் அதை கட் செய்து விட்டான். வனிதா அவர்களுக்காக புக் செய்து இருந்த டேபிளில் சென்று அமர்ந்து அவனுக்காக காத்திருந்த அனாமிகா “என்ன இவன் கால் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கறான்? இன்னிக்கி இங்க வருவானா மாட்டானா?” என்று யோசித்தவாறு மீண்டும் அவனுக்கு கால் செய்தாள். 

அதைக் கண்டு மேலும் கடுப்பான விஜய் “ஏய் இடியட்.. அங்க தாண்டி வந்துட்டு இருக்கேன். சும்மா நொய் நொய்ன்னு கால் பண்ணாத.” என்று அட்டென்ட் செய்து கடுகடுவென சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான். அவன் சத்தமாக கத்தத் தொடங்கியவுடன் காதில் இருந்து மொபைல் ஃபோனை எடுத்த அனாமிகா “ஐயோ என்ன ஹை பிட்ச்சுல பேசுறான்.. இதுக்கு முன்னாடி இவன் கிட்ட நான் பிரைவேட்டா தான் அசிங்கப்பட்டு இருந்தேன். 

இன்னிக்கி சும்மா இல்லாம நானே வெளியே போகலாம் வான்னு அவனை கூப்பிட்டு நான் சொன்னதை கேட்டு வனிதா ஆன்ட்டி வேற எங்களுக்கு டேபிள் புக் பண்ணி கொடுத்து அவனையும் வர சொல்லிட்டாங்க. இங்க வந்து எப்பயும் அவன் என் கிட்ட ரூடா பிஹேவ் பண்ற மாதிரி மத்தவங்க முன்னாடியும் அப்படி பண்ணிட்டா என்ன பண்றது? மானம் போய்டுமே! அவன் கூட தனியா வெளிய வரணும்னு டிசைட் பண்ணி அவசரப்பட்டுட்டோமோ!” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் மண்டையில் திடீரென பல்ப் எறிந்தது. உடனே சுட சுட ஒரு திட்டத்தை போட தொடங்கினாள். 

தனது காரில் வந்து ஏறிய விஜய் அவனுக்கு அனாமிகாவை பார்க்கும் எண்ணமே இப்போது வரை துளி கூட வராததால், தன் லேட்டாக வந்தால் அவள் கோபப்பட்டு அந்த ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பி போகட்டும் என்ற எண்ணத்தில் என்னவோ இரங்கல் நிகழ்ச்சியில் கார் போட்டி கொண்டு செல்பவனை போல சாலை ஓரமாக வேண்டுமென்றே மெதுவாக சென்றான். 

அப்படியாக அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு அவன் ஒன்றரை மணி நேரத்தில் சென்று சேர்ந்தான். ஆனால் அவனுக்கு ஆச்சரியமூட்டும் விதமாக அனாமிகா அங்கே அவனுக்காக காத்திருப்பது மட்டும் அல்லாமல், அவளுடன் சஞ்சனாவும் அமர்ந்திருந்தாள். 

“சஞ்சு.. நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்டபடி விஜய் அவர்கள் அருகில் செல்ல, “அண்ணி தான் அண்ணா நீங்க வர்றத்துக்கு லேட் ஆகுறதுனால தனியா இருக்கிறதுக்கு போரடிக்குதுன்னு சொல்லி எனக்கு கால் பண்ணி என்ன வர சொன்னாங்க. அம்மா டயர்டா இருக்குன்னு சொல்லிட்டாங்க. சஞ்சய் அவன் ஃபிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டான்.

இல்லனா நம்ம எல்லாரும் ஃபேமிலியா இங்க டின்னர் வந்திருக்கலாம். வந்து உட்காருங்க அண்ணா.. இன்னிக்கு நைட் நம்ம சேர்ந்து சாப்பிடலாம். இப்படி உங்க கூட வெளியே வந்து எவ்வளவு நாளாச்சு!” என்ற சஞ்சனா விஜயின் கையை பிடித்து அவனை டேபிளில் அமர வைத்தாள். 

ஒரு நமுட்டு சிரிப்புடன் விஜயை பார்த்த அனாமிகா “இவ்ளோ லேட் ஆகுறதுனால நீ வரமாட்டேன் நினைச்சேன். பரவால்ல விஜய்.. எவ்வளவு வேலை இருந்தாலும் கடைசியில் எனக்காக நீ வந்து இருக்கல்ல.. எனக்கு இதுவே போதும். I am happy today!” என்று சொல்ல, “போதும் டி நடிக்காத..  எனக்கு உன்ன பாக்க பாக்க அப்படியே ஆத்திராத்திரமா வருது. தனியா என் கிட்ட மாட்டுனா நான் உன்ன ஏதாவது பண்ணிடுவேன்னு பயத்துல என் தங்கச்சிய சில்ட் மாதிரி யூஸ் பண்றியா? என் மம்மியும், சஞ்சனாவும் உனக்கு சப்போர்ட் பண்றதுனால தானே என் வீட்ல வந்து ஜாலியா சுத்திட்டு இருக்க நீ! முதல்ல உன்னை அவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேண்டி.  அதுக்கப்புறம் டாடி திரும்ப வர்றதுக்குள்ள உன்னை இந்த வீட்டை விட்டு துரத்துறேன்.”  என்று நினைத்துக் கொண்ட விஜய் அங்கே அனாமிகா என்ற ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சஞ்சனாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அங்கே அவர்கள் பிரைவேட் விஐபி டேபிளை புக் செய்து இருந்தாலும் கூட, விஜய் தன் குடும்பத்தினருடன் இங்கே வந்திருப்பதை மோப்பம் பிடித்த சில வீடியோ ஆட்கள் எப்படியாவது அவர்களை ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஹோட்டலையே சுற்றிக் கொண்டிருந்தார்கள். அது வசதி படைத்தவர்கள் மட்டுமே செல்லும் இடம் என்பதால் பாதுகாப்பும் கூடுதலாகவே இருந்தது. இருப்பினும் சாப்பிட்டு முடித்து அவர்கள் மூவரும் வெளியில் வருவதை தவறாமல் அனைத்து பத்திரிகைக்காரர்களும் ஃபோட்டோ பிடித்தார்கள்.

விஜயின் பாடிகார்டுகள் அவர்களை சுற்றிக் கொண்டே இருந்ததால், யாராலும் அவர்களை நெருங்கி செல்ல முடியவில்லை. அனாமிகா விஜயின் காரில் ஏறி அவன் அருகில் அமர்ந்து கொள்ள, “இப்ப எதுக்கு நீ என் பக்கத்துல வந்து உட்கார்ற? உன் கார்ல போக வேண்டியது தானே! நீ என் கூட வந்துட்டா, அதை எடுத்துட்டு போறதுக்கு வேற தனியா ஆள் அனுப்பனுமா நானு?” என்று சிடுசிடுவென கேட்டான். 

“டோன்ட் வரி விஜய், இன்னிக்கு நான் உன் கூட தான் வீட்டுக்கு போகணும்னு கேப் புக் பண்ணி தான் வந்தேன். சஞ்சனா கூட கேப்ல தான் வந்தா.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து நக்கலாக சிரித்த அனாமிகா அவன் அருகில் அமர்ந்துகொள்ள, சஞ்சனா அவர்களை பார்த்து சிரித்தவாறு பின்னே சென்று அமர்ந்து கொண்டாள். இன்னும் இந்த பிசாசின் தொல்லைகளை எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டுமோ என நினைத்து மானசீகமாக தனது தலையில் அடித்துக் கொண்ட விஜய் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான். 

– காதல் மலரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured