அத்தியாயம் 65
“டேய் தினேஷ் என்ன டா பண்ணிட்டு இருக்க! எங்க போய் தொலைஞ்ச?” என்று தனது கணீர் குரலில் கேட்டபடி வெளியில் சென்றான் விஜய். அதுவரை தனது கேர்ள் ஃபிரண்டுடன் குசு குசுவென்று காதல் பொங்க பேசிக் கொண்டு இருந்த தினேஷ் “விஜய் சார் வந்துட்டாரு. நான் உன் கிட்ட அப்படி பேசுறேன் பேபி பாய்.” என்று அவசரமான குரலில் சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
பின் “இதோ வந்துட்டேன் வந்துட்டேன் பாஸ் கிளம்பலாமா?” என்று கேட்டபடி அவன் விஜயின் அருகில் செல்ல, அவனுடைய முக பாவனைகளை வைத்தே இவ்வளவு நேரமாக அவன் யாரிடம் பேசிக் கொண்டு இருந்திருப்பான் என்று கணித்துவிட்ட விஜய் “எவ்வளவு பட்டாலும் இந்த பசங்க திருந்தவே மாட்டீங்களா டா! என் லைஃப்ல நடக்கிறது எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தும், எப்படி தான் டா உனக்கு லவ் பண்ண தைரியம் வருது! பொண்ணுங்கள நம்பாதீங்க நம்பாதீங்கன்னு ஊர்ல இருக்கிற அத்தனை பேரும் குவி கூவி சொன்னாலும் உன்னை மாதிரி ஆளுங்க மட்டும் இதுக்குள்ள மாட்டிகிட்டு செத்தே தீருவேன்னு ஏன்டா அடம்பிடிக்கிறீங்க?” என்று சலிப்புடன் கேட்டான்.
“இல்ல பாஸ் நான் டைரக்டர் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். உங்க கிட்ட ஏதோ சீன் டிஸ்கஷன் பண்ணனும்னு சொன்னாரு. நீங்க பிஸியா இருக்கீங்கன்னு சொல்லிட்டு இருந்தேன்.” என்று சொல்லி தினேஷ் சமாளிக்க பார்க்க, அவன் அருகில் சென்று அவனுடைய தோள்களில் கை போட்ட விஜய் “டேய் நடிக்காத டா.. உன் மொகரக்கட்டைய பாத்தா நீ யார் கிட்ட பேசிட்டு இருந்தன்னு கூட என்னால கண்டு பிடிக்க முடியாதா? இப்படித் தான் ஒரு காலத்துல பிரியா பிரியான்னு பைத்தியக்காரன் மாதிரி ஒருத்தி பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்.
அவ என் வாழ்க்கையவே கெடுத்துட்டா டா. அந்த கல்நெஞ்சகாரி என்னமோ ஈஸியா செத்து மேல போய்ட்டா.. நான் தான் தினமும் நிம்மதியா தூங்க கூட முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கு இது எல்லாமே தேவை தான்னு நீயே வாலன்டியரா போய் எல்லாத்தையும் வாங்கி கட்டிக்கிட்டா உன்னை யாரால காப்பாத்த முடியும்? அனுபவிச்சு சாவு போ.” என்றபடி அவனுடன் சென்று தனது காரில் ஏறினான்.
காரை ஸ்டார்ட் செய்த தினேஷ் “என் ஆளு மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல பாஸ். அவ ப்யூர் கோல்ட். இந்த காலத்துல அவள மாதிரி ஒரு பொண்ணை எல்லாம் பார்க்கவே முடியாது.” என்று பெருமையாக சொல்ல, “ம்ம்ம்.. நானும் ஃபர்ஸ்ட் பிரியாவ லவ் பண்ணும்போது அப்படிதாண்டா நெனச்சேன். ஆனா அந்த எழவெடுத்தவள கல்யாணம் பண்ணி அவ கூட சேர்ந்து வாழும்போது தானே அவளோட லட்சணம் எல்லாம் தெரிஞ்சது… எவளும் இங்க உத்தமி எல்லாம் இல்ல. அதுவும் இப்ப என் பொண்டாட்டின்ற பேர்ல பாம்பு மாதிரி என் காலையே சுத்திட்டு இருக்கு பாரு ஒன்னு அதெல்லாம் பெரிய பிசாசு.. இதுங்க கிட்ட இருந்து எல்லாம் தப்பிச்சு ஒரு மனுஷன் நிம்மதியா வாழ பெரிய சாதனை தெரியுமா! எப்படி இருந்த என்னை இந்த பொம்பளைங்க இப்படி புலம்ப விட்டுட்டாளுங்கன்னு நினைக்கும்போதே எனக்கு அசிங்கமா இருக்குடா! தெளிவா இருக்கும்போதே இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க நிலைமைக்கு வந்துட்டேன்!” என்று சோர்வான குரலில் சொன்னான் விஜய்.
“பாஸ் உங்களுக்கு லைஃப்ல நிறைய நெகட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதுக்காக இந்த உலகத்துல இருக்கிற நிறைய சந்தோஷமான விஷயங்களை நீங்க இழக்குறீங்க. ஒன்னு, ரெண்டு பொண்ணுங்க தப்பா இருக்குறதுனால எல்லாரையும் நம்ம குறை சொல்ல முடியாது.. பொண்ணுங்கள ஹாண்டில் பண்ணி அவங்க கூட வாழ்றது எவ்வளவு கஷ்டமோ, அதை விட அவங்க இல்லாம வாழ்றது கஷ்டம்.
நீங்க உங்களுக்குள்ள இருக்கிறத மோஸ்ட்லி யார் கிட்டயும் ஷேர் பண்ணவே மாட்டீங்க. அதனால நெகட்டிவா உங்க மைண்ட்ல இருக்கிற thoughts எல்லாமே உள்ள suppress-ஆகி குப்ப மாதிரி சேர்ந்து இருக்கு. நீங்க இப்படியே இருந்தா ஒருநாள் உங்களோட எமோஷன் பிரஷர் குக்கர் மாதிரி சடனா பிளாஸ்டி ஆயிடும். சோ இப்படி விரக்தி மனநிலையிலயே சுத்திக்கிட்டு இருக்காம எங்கேயாவது ஒரு ட்ரிப் போய் உங்க மைண்ட் செட்டை சேஞ்ச் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். லாஸ்ட்டா உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் நீங்க எப்ப மீட் பண்ணீங்கன்னு எனக்கே ஞாபகம் இல்ல.” என்று தினேஷ் சொல்ல, “நான் என்ன காலேஜ் படிக்கிற பையனா தினேஷ்? ஃபிரண்ட்ஸ் கூட சுத்திக்கிட்டு ஜாலியா இருக்கிற ஏஜை எல்லாம் நான் கிராஸ் பண்ணி வந்துட்டேன். நீ சொல்ற மாதிரி என் மனசுல ஏதோ ஒரு வெறுமை இருக்க தான் செய்து. பட் என்ன பண்ணி அதை சரி பண்றதுன்னு தான் எனக்கு தெரியல.
பாப்போம்.. ஒவ்வொரு நாளும் வயசாகிட்டே இருக்கு. இன்னும் எத்தனை நாள் இருக்கப் போறேன்.. எல்லாம் இருக்கிற வரைக்கும் தான். என் தம்பியையும் தங்கச்சியையும் செட்டில் பண்ணிட்டா, நான் நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்.” என்றான் விஜய். “பாஸ் உங்களுக்கு ஜஸ்ட் 30+ தான் ஆகுது. அதுக்குள்ள ஏன் old age home-ல இருக்க தாத்தா மாதிரி பேசிட்டு இருக்கீங்க? ஐ திங்க் அனாமிக்கா மேடம் உங்களை இன்னைக்கு நல்ல வெச்சு செஞ்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்.
உங்கள பாத்து மத்தவங்க எல்லாரும் கதறி தான் நான் பார்த்து இருக்கேன். பட் அனாமிகா மேடம் உங்களையே கதற விடறாங்க போல.. என்ன ஆச்சு உங்களுக்கு? எப்பயும் கெத்தா இருப்பீங்க! இன்னைக்கு எல்லாத்தையும் பறிக்குடுத்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க!” என்று கேட்டுவிட்டு தினேஷ் அவனைப் பார்த்து லேசாக சிரிக்க,
விளையாட்டாக அவன் முதுகில் குத்திய விஜய் “சைடு கேப்ல என்ன தாத்தான்னு சொல்றியா நீ? I am still young and handsome. எத்தனை பொண்ணுங்க என் மேல crazy-யா இருக்காங்க தெரியுமா? என்னோட ஆக்டிங் ஸ்டைலை தாண்டி என் அப்பியரன்ஸ்காகவே எனக்கு நிறைய fans இருக்காங்க. விஜய்னாளே எப்பயும் மாஸ் தாண்டா. இன்னும் 30, 40 வருஷத்துக்கு நான் ஹீரோவா தான் நடிப்பேன். இந்த மொத்த சீனி இண்டஸ்ட்ரியும் கடைசி வரைக்கும் என்ன ஹீரோவா தான் பார்க்கவும்.” என்று தற்பெருமை பேச தொடங்கி விட, அவனைப் பார்த்து சிரித்த தினேஷ் “நீங்க எப்பயும் இப்படியே உங்கள பத்தி பெருமையா பேசிட்டு ஜாலியா இருங்க பாஸ். இதான் நல்லா இருக்கு.” என்று நினைத்தவன், “ஆமா ஆமா பாஸ் உண்மை தான்.” என்றான்.
தன்னுடைய நண்பர்களை கூட நாலு அடி தன்னை விட்டு விலக்கி வைத்திருக்கும் விஜய் இப்போது எல்லாம் யாரையும் முழு மனதார நம்பி பழகுவதே இல்லை. ஆனால் அவன் திரைத்துறையில் கால் பதித்த நாளில் இருந்து அது தொடர்பாகவும் சரி, அவனுடைய பிசினஸ் ரீதியான வேலைகளையும் சரி அவனுடன் உறுதுணையாக இருந்து கவனித்துக் கொள்வது தினேஷ் தான்.
அதனால் இத்தனை வருடங்களை அவனுடன் சேர்ந்து கடந்ததில் தினேஷ் உடன் மட்டும் விஜய்க்கு ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. வெளியில் எப்படி நடந்து கொண்டாலும், உள்ளுக்குள் தினேஷை சஞ்சய்க்கு ஈக்குவலாக தன் மனதில் ஒரு தம்பி ஸ்தானத்தில் வைத்து இருந்த விஜய், இப்படி தற்பெருமை பேசுவது, மனதில் இருப்பதை சொல்ல புலம்புவது என்று அவ்வப்போது அவனை டார்ச்சர் செய்வதை தனது முழு நேர வேலையாக வைத்திருந்தான்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அமுதா ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டு இருந்தாள். இன்று அவளுக்கு அவளுடைய ஃபிரண்டு கேரக்டராக நடிக்கும் அபிநயாவுடனும், அவளுடைய அப்பா கேரக்டரில் நடிப்பவருடனும் சீன் இருந்தது. தனக்கு அங்கே எந்த வேலையும் இல்லை என்றாலும் கூட, விஜயின் முன்னிலையில் நடிக்கும் போது எந்த தவறும் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அமுதா எப்படி நடிக்கிறாள் என்று பார்த்து தெரிந்து கொள்வதற்காகவே அங்கே வந்திருந்தாள் மோனிஷா.
“நான் ஹீரோயினா நடிக்க வேண்டியவ டி. என் இடத்தை தட்டி படிச்சிட்டு, உனக்கு சொம்பு தூக்குற மாதிரி ஒரு சப்போட்டிங் ரோல்ல என்ன நடிக்க வச்சிட்ட இல்ல.. நானும் சரி விஜய் சார் படத்துல நடிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கிறதே பெரிய விஷயம்னு போனா போய் தொலையுதுன்னு இத விட்டுட்டேன்.
ஆனா அதுக்காக உன்னை அப்படியே சும்மா விட மாட்டேன் அமுதா. அன்னைக்கு நான் உன் மேல ஆசிட் அட்டாக் ட்ரை பண்ணதுனால இப்ப வரைக்கும் எங்க அப்பா ஏதாவது பிரச்சனையாகிடும்ன்னு பயத்துல என்னை கோபத்தில திட்டிக்கிட்டே இருக்காரு. உன்னை இனிமே நான் எதுவும் பண்ண கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு. பட் அதுக்காக எல்லாம் நான் சும்மா இருக்க மாட்டேன். ஷூட்டிங் முடியறதுக்குள்ள நீ இந்த அபிநயாவை ஞாபகம் வச்சுக்கிற மாதிரி கண்டிப்பா நான் உனக்கு பெருசா ஏதாவது திருப்பி கொடுப்பேன்.” என நினைத்து தனது வில்லத்தனத்தை கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளாமல் தினம் தினம் அமுதாவின் மீது தனக்குள் எரிந்து கொண்டு இருக்கும் கோபத் தீயை எண்ணை விட்டு வளர்த்துக் கொண்டு இருந்தாள் அபிநயா.
இரவு எட்டு மணி. ஆபீஸில் வேலை சீக்கிரமாக முடிந்தால் எப்படியாவது கிளம்பி மதுரைக்கு சென்று ஷூட்டிங்கை பார்வையிடலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்த விஜய் ஆபீஸ் வேலை இரவு வரை இழுத்து விட்டதால் தனது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உராங்குட்டானை போல உர்ரென்று இருந்தான். இதில் டின்னர் டைம் வந்தவுடன் அவனுக்கு கால் செய்த வனிதா “நீயும் அனாமிகாவும் டின்னர் போறதுக்கு நான் டேபிள் புக் பண்ணிட்டேன்பா விஜய். இருக்கிற வர்க் பிரஷர்ல அவ கூட வெளிய போறத மறந்துடாத. நீங்க இப்படி அடிக்கடி தனியா மீட் பண்ணாத உங்களோட ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங்காகவும். நானும் சாப்பிடற டைம் ஆயிடுச்சு. சாப்பிட்டு நானும் போய் மாத்திரை போடுறேன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அதனால் வேறு வழி இல்லாமல் தனியாக தனது ஆபிஸில் இருந்து கிளம்பிய விஜய் வனிதா சொன்ன ஹோட்டலை நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தான். அவன் தனியாக கார் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டு இருந்ததால், மீண்டும் அவன் மனதை வெருமை தொற்றிக் கொள்ள ரேடியோவை ஆன் செய்தான். அதில் மழை நேரத்தில் வரும் பாடல் ஒன்று ஓட, அதை கேட்டவுடன் அவனுக்கு அமுதாவின் ஞாபகம் வந்தது. உடனே எதைப்பற்றியும் யோசிக்காமல் டைரக்டரிடம் இருந்து அவன் வாங்கி வைத்திருந்த அமுதாவின் மொபைல் எண்ணுக்கு தனது பர்சனல் நம்பரில் இருந்து கால் செய்தான் விஜய்.
– காதல் மலரும் 🌹