அத்தியாயம் 60
ஹாஸ்பிடலில் இருந்த விஜய்க்கு கால் செய்த தினேஷ் கோர்ட்டில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு “நான் இப்ப அங்க தான் வந்துட்டு இருக்கேன் பாஸ்.” என்றான். அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு முன்னே முந்திக் கொண்டு வனிதாவை காண ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாள் அனாமிகா.
அவள் தன்னை நோக்கி வருவதை கவனித்த விஜய் “என் பொண்டாட்டி உன்ன விட ரொம்ப ஸ்பீடா இருக்கா டா. அதுக்குள்ள அவ இங்கயே கிளம்பி வந்துட்டா. நீ பொறுமையா நாளைக்கு வந்து சேரு.” என்று சொல்லிவிட்டு தினேஷின் அழைப்பை துண்டித்தான். விஜயை பார்த்த உடனேயே வேகமாக அவனை நோக்கி ஓடிச் சென்ற அனாமிகா அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “ஹாய் பேபி! எப்படி இருக்க? நம்ம ரிசென்டா தான் மீட் பண்ணோம். ஆனா எனக்கு என்னமோ உன்ன பார்த்து உன் கூட பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. ஐ ரியலி மிஸ் யூ சோ மச்.
என் லவ் உனக்கு புரிஞ்சுதோ இல்லையோ, ஜட்ஜ் மேடம்க்கு நல்லா புரிஞ்சிருச்சு. அதான் மறுபடியும் நீயும் நானும் சேர்ந்து வாழ்வதற்கு அவங்க நமக்கு இன்னொரு ஆபர்சுனிட்டி கொடுத்திருக்காங்க. இந்த தடவை கண்டிப்பா நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணுவேன். உனக்காக நான் என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்கேன் பேபி. அது உனக்கு தான் புரிய மாட்டேங்குது. இனிமேலாவது நீயும் நானும் ஹாப்பியா இருக்கணும். இது நமக்கு கிடைச்சிருக்கிற லாஸ்ட் சான்ஸ்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
அவளது உடலில் இருந்து ஹேவியாக வந்து கொண்டிருந்த பர்ஃபியூம் வாசனை அவனை எரிச்சல் அடைய செய்தது. இந்த சந்தர்ப்பத்தை அவள் சரியாக பயன்படுத்திக் கொண்டாள். இறுதியாக அவன் அவளிடம் பேசி வைத்ததைப்போல இப்பொழுது அவள் நடந்து கொள்ளவில்லை என்பதால் அவள் மீது வந்த கோபத்தில் அப்படியே அவளை தன்னை விட்டு பிடித்து தள்ளி அவளுடைய கன்னத்தில் நான்கு வைத்து “என் மூஞ்சிலையே முழிக்காத ஒழுங்கா போயிரு. இங்க இருந்து.” என்று திட்டி அவளை துரத்த வேண்டும் என்று அவனுடைய கைகளும், இதழ்களும் துடித்தது.
ஆனால் தன் அருகில் நின்று தங்கள் இருவரையும் உற்சாகமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த சஞ்சனாவை கவனித்தவுடன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட விஜய் ஃபார்மாலிட்டிக்காக பதிலுக்கு அவளை ஹக் செய்துவிட்டு, “மம்மிய பாக்குறதுக்காக தானே வந்த.. நீ முதல்ல அவங்கள பாத்துட்டு இங்க இருந்து கிளம்பு. நம்ம விஷயத்தை பத்தி அப்புறம் பேசிக்கலாம். அவங்களுக்கு இப்படி ஆனதனால ஆல்ரெடி நான் மூடு அப்செட்டில் இருக்கேன். சோ எதையும் இப்ப நான் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.” என்று நிதானமான குரலில் சொன்னான்.
அவன் அவளிடம் இப்படி எல்லாம் ஃபார்மாலிட்டிக்காக கூட இப்படி எல்லாம் பேசுவதில்லை என்று நினைத்த அனாமிகாவிற்கு “பார்றா.. விஜய் நம்ம கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டான். இப்ப இவ்வளவு பொறுமையா பேசுறானே… இது எல்லாத்துக்கும் காரணம் வனிதா ஆன்ட்டியும், சஞ்சனாவும் தான். ஆன்ட்டிக்கு ஆல்ரெடி என்ன பத்தி நல்லா தெரியும். ஆனா சஞ்சனா எதுக்காக எனக்கு சப்போர்ட் பண்றான்னு தெரியல. எது எப்படி இருந்தாலும் அவ கிட்ட நல்ல விதமா பிஹேவ் பண்ணி விஜய்க்கு முன்னாடி முதல்ல நான் அவளை கரெக்ட் பண்ணனும்.
அவளுக்கும் எனக்கும் நடுவுல ஒரு ஸ்ட்ராங் ரிலேஷன்ஷிப் வந்துருச்சுனா, விஜய் கண்டிப்பா எங்க ரிலேஷன்ஷிப் பத்தி கன்சிடர் பண்ணுவான். அப்புறம் என்னையும் அவனையும் யாராலையும் பிரிக்க முடியாது.” என்று தோன்ற, விஜயின் அருகே சென்று அவன் கையை பிடித்துக் கொண்டு அவனது கண்களை ஆசையுடன் பார்த்தாள்.
அவன் இப்போது எல்லாம் சரியாக தூங்குவதில்லை என்பதால் லேசாக அவனுக்கு டார்க் சர்க்கிள்ஸ் வந்திருந்தது. அவனுடைய கண்கள் கூட கொஞ்சம் சிவந்திருக்க, அப்போதும் உயிர்ப்புடன் இருந்த அந்த கண்களையும், பிரகாசமாக இருந்த அவனுடைய ஹாண்ட்சம் முகத்தையும் கடந்த சில மாதங்களாகவே பார்த்து பழகி இருந்தாலும் கூட அத்தனை அருகில் அவனை பார்க்கும்போது அவளையும் அறியாமல் அவனை சைட் அடிக்கத் தான் தோன்றியது.
அவன் ஒருவேளை பணக்காரனாக இல்லை என்றாலும் கூட, அவனுடைய இந்த ஆளை மயக்கும் கட்டுடல் மேனியை உரிமை கொண்டாடுவதற்காகவே காலம் முடியும் வரை அவன் மனைவியாக இருக்கலாம் என்று நினைத்த அனாமிகா, “கோர்ட்ல நீயும் நானும் ஒரு வருஷத்துக்கு சேர்ந்து வாழணும்னு எப்ப ஜட்ஜ்மெண்ட் கொடுத்தாங்களோ, அப்பவே ஒரு செகண்ட் கூட நான் உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
நீ எங்க இருக்கியோ நானும் அங்க தான் இருப்பேன். And moreover, வனிதா ஆன்ட்டிக்கு இப்ப உடம்பு சரியில்ல. இந்த டைம்ல நான் அவங்க கூடவே இருந்து அவங்கள பாத்துக்கணும்னு நினைக்கிறேன். அவங்களுக்கு சரியானதுக்கு அப்புறமா, உங்களையும் கூட்டிக்கிட்டு நம்ம ஒண்ணா நம்ம வீட்டுக்கு போகலாம் விஜய். இதுக்கு மேல நீ தனியா உன் பிரைவேட் வில்லால ஸ்டே பண்ண கூடாது.” என்று செல்லமாக கண்டிஷன் போட்டுவிட்டு அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
விஜய் அவளுக்கு பதில் சொல்வதற்குள் “அம்மாவோட கண்டிஷன் stable-ஆ இருக்கு. அவங்களுக்கு கான்ஷியஸ் வந்துருச்சுன்னா நம்ம அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்னு டாக்டர் இப்ப தான் வந்து சொல்லிட்டு போனாங்க அண்ணி. முன்னாடி அண்ணா தனியா இருந்தாரு. அதனால யாரும் அவரை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு அவரோட வில்லாவுல போய் ஸ்டே பண்ணி இருந்தாரு.
இப்ப தான் நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களே.. இனிமே நம்ம எல்லாரும் ஃபேமிலியா ஒரே வீட்ல ஹாப்பியா இருக்கலாம். மறுபடியும் நீங்களும் அண்ணாவும் ஒன்னா சேர்ந்து வாழ போறீங்கன்னு தெரிஞ்சா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அந்த சந்தோஷத்திலேயே இனிமே அவங்க நல்லா இருப்பாங்க.” என்றாள் சஞ்சனா.
உடனே விஜயை விட்டுவிட்டு சஞ்சனாவின் அருகே சென்ற அனாமிகா அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு “you don’t worry சஞ்சனா. இனிமே ஆண்டி happy and healthy-ஆ இருப்பாங்க. அவங்க கூடவே இருந்து நான் அவங்கள பத்திரமா பாத்துப்பேன்.” என்றாள்.
அதுவரை ஒரு ஓரமாக நின்று முதலில் அனாமிகாவிடம் விஜய் எப்படி நடந்து கொள்கிறான் என்று பார்த்து தெரிந்து கொண்டு அதன் பிறகு தாங்கள் சென்று அவனிடம் பேசலாம் என்ற எண்ணத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த அவளுடைய பெற்றோர்கள் விஜயின் அருகில் சென்று அவனிடம் நலம் விசாரித்துவிட்டு, “இதுக்கு முன்னாடி நமக்குள்ள நடந்தது எல்லாத்தையும் எங்களை மன்னிச்சு மறந்திருங்க மாப்பிள்ளை.
நடந்த எதுக்கும், எங்க பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நாங்கதான் அன்னைக்கு இருந்த டென்ஷன்ல என்ன பண்ணி அந்த பிராப்ளம்ல இருந்து தப்பிக்கிறதுன்னு தெரியாம அப்படி எல்லாம் பண்ணிட்டோம். இனிமே செத்தாலும் அப்படி ஒரு விஷயத்தை நாங்க பண்ண மாட்டோம். நீங்க எங்களை தாராளமா நம்பலாம். எங்க மேல இருக்கிற கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு நீங்க எங்க பொண்ண ஏத்துக்காம இருந்து தண்டிச்சுடாதீங்க.” என்று அவன் கையைப் பிடித்து கெஞ்சினார்கள்.
அவர்களது கூட்டு களவாணித்தனத்தை பற்றி எல்லாம் நன்றாக ஒரு விசாரணை டீமே உருவாக்கி இத்தனை வருடங்களில் நன்றாக விசாரித்து தெரிந்து வைத்திருந்த விஜய்க்கு அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்க, “ம்ம்.. உருட்டுங்க.. உருட்டுங்க.. நல்லா உருட்டுங்க. நீங்க பேசுற பொய்யை எல்லாம் இன்னசெண்டா என் ஃபேமிலில இருக்கிறவங்க வேணா நம்புவாங்க.
அதுக்காக இந்த விஜயை உங்களால ஏமாத்த முடியாது. இன்னும் ஒரு வருஷம் என்ன ஒரு வருஷம்.. வெறும் ஒரே மாசத்துல உங்க பொண்ணே என் கூட அவளால இருக்க முடியாதுன்னு என் வீட்டை விட்டு அழுதுகிட்டே உங்க வீட்டுக்கு ஓடி வருவா. அப்ப உங்களுக்கு இந்த விஜய் யாருன்னு தெரியும்.” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டவன், ” பரவால்ல பரவால்ல விடுங்க நடந்தது எல்லாத்தையும் நான் மறந்துட்டேன். என் மம்மி நான் அனாமிகா கூட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படறாங்க. ஆல்ரெடி அவங்களுக்காக நான் இவளுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். சோ நீங்க அவளை நினைச்சு இவ்வளவு தூரம் வரி பண்ணனும்னு அவசியம் இல்ல.” என்றான்.
அவனது வார்த்தைகளை கேட்ட அனாமிக்காவிற்கும் அவளுடைய குடும்பத்திற்கும் அப்படியே உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது. அதே சந்தோஷத்துடன் டாக்டரிடம் பர்மிஷன் கேட்டு விட்டு உள்ளே சென்று அவர்கள் வனிதாவை சந்தித்தார்கள். என்னவோ தன்னுடைய ஆருயிர் மருமகளை பார்த்த சந்தோஷத்தில் தனக்கு சுயநினைவு வந்ததைப் போல நடித்துக் கொட்டிய வனிதா, எதுவும் தெரியாதவளை போல நடித்து விஜயின் முன்னிலையில் அனைவரிடமும் சாதாரணமாக பேசினாள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எப்படியோ அந்த டிராமா எல்லாம் ஒரு வழியாக முடிந்து தான் நினைத்த காரியத்தை சாதித்து விட்ட சந்தோஷத்தில் அனாமிகாவையும் அவளுடைய குடும்பத்தினரையும் கையுடன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு விஜய்யும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் வனிதா.
கிட்டத்தட்ட மதிய வேளையில் சாப்பிட்டு முடித்துவிட்டு தனது ரூமில் சென்று படுத்த அமுதா அடுத்து டின்னர் சாப்பிடுவதற்காக பசி எடுத்ததில் இரவு 8 மணி அளவில் கண் விழித்தாள். அவளுக்கு என்னவோ விஜயின் ஞாபகமாகவே இருந்தது. அவனிடம் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது. ஆனால் அவள் எப்படி அதை செய்ய முடியும்?
இதற்கிடையில் அவளுக்கு விஜய் மற்றும் அனாமிக்காவின் டிவர்ஸ் கேஸ் பற்றிய ஞாபகம் வர, கோர்ட்டில் என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் உடனே தன்னுடைய மொபைல் ஃபோனை எடுத்து நியூஸை வைத்து பார்த்தாள். மீண்டும் மீண்டும் அதில் இப்போது அனாமிகாவும், விஜயும் சேர்ந்து வாழப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
அதை பார்த்தவுடன் அவளுடைய மலர்ந்த முகம் வாடி போய்விட, “என்ன இது இப்படி ஆயிடுச்சு! இந்த கடவுள் எல்லாரோட வாழ்க்கையிலையும் விளையாடிட்டு இருக்காரு. யாருக்குமே அவங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது போல இருக்கு. அந்த அனாமிகா மேடம் எந்த விதத்திலையும் விஜய் சாருக்கு செட் ஆக மாட்டாங்க. ஆனா மறுபடியும் மறுபடியும் எதுக்குத் தான் இந்த விதி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதோ தெரியல.” என்று நினைத்து புலம்பினாள்.
அனாமிகாவும் அவனும் மீண்டும் சேர்ந்து வாழ போவதை நினைத்து விஜயை விட அமுதாவிற்கு தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தவனின் வாழ்க்கை ஏன் அவனுக்கு பிடித்த மாதிரி அமைவதில்லை? என்று நினைத்து வருத்தப்பட்ட அமுதா மீண்டும் கட்டிலில் தலையணையை கட்டிப் பிடித்துக் கொண்டு விழுந்தாள்.
– காதல் மலரும்