அத்தியாயம் 59
கேஸ் முடிந்தவுடன் லாயருடன் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தான் தினேஷ். அவன் தலையை கண்டவுடன் ஈக்களாக அவனை சுற்றி மொய்க்க தொடங்கிய மீடியா ஆட்கள் “கோர்ட்டு கேஸ் என்ன ஆச்சு சார்? விஜய் சார் நெஜமாவே ஹியரிங்க்கு வரலையா? மறுபடியும் அனாமிகா மேடமும் அவரும் சேர்ந்து வாழ போறாங்கன்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க!” என்று கேள்வி கேட்க, தன் குடும்பத்தினருடன் அங்கே வந்த அனாமிகா “அதை என் ஹஸ்பண்ட் ஓட அசிஸ்டன்ட் சொல்றத விட நான் சொன்னா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று திமிராக சொன்னாள்.
தினேஷ் அவளை திரும்பி பார்க்க, உடனே அங்கே இருந்த மீடியாக்கள் அனைவரும் அவனை புறக்கணித்துவிட்டு விஜயை பற்றியும், அனாமிகாவிற்கும் அவனுக்கும் இடையிலான உறவைப் பற்றியும் கேட்பதற்காக நேராக அனாமிக்காவின் அருகில் சென்று நின்றார்கள். அவர்களை சிரித்த முகமாக பார்த்த அனாமிகா “எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும் நடுவுல கொஞ்சம் misunderstanding இருந்தது எல்லாம் உண்மை தான். அதனால தான் நாங்க கொஞ்ச நாள் நடுவுல பிரிஞ்சு இருக்க வேண்டியது ஆயிடுச்சு.
எது எப்படி இருந்தாலும், நாங்க எவ்வளவு தூரம் விலகி போனாலும் எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் கண்டிப்பா எங்கள எப்பயும் பிரிய விடாது என்று நான் நம்பிட்டு இருந்தேன். என்னோட நம்பிக்கை இன்னைக்கு உண்மையாகி இருக்கு. கண்டிப்பா மனசார அவராலையும் நான் இல்லாம இருக்க முடியும்னு சொல்ல முடியாது. ஒருவேளை இன்னைக்கு அவர் கோர்ட்டுக்கு வராம இருந்ததுக்கு அது தான் ரீசனா கூட இருக்கலாம். நான் கோர்ட்டிலையும் ஜட்ஜ் மேடம் கிட்ட அதத் தான் சொன்னேன்.
அவங்களும் நான் சொன்னது புரிஞ்சுகிட்டு மறுபடியும் நான் என் விஜய் கூட சேர்ந்து வாழ்றதுக்கு எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க. இப்போ நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழ போறோம். I hope, இந்த தடவை எங்களுக்குள்ள இருக்கிற இஸ்யூஸ் எல்லாத்தையும் சரி பண்றதுக்கான ஆப்பர்சூனிட்டிய அந்த காட் தான் எங்களுக்கு அமைச்சு கொடுக்கணும்.” என்றாள்.
ஏற்கனவே விஜய்யை பற்றிய செய்திகளை அவனுடைய பெர்மிஷன் இல்லாமல் இவள் பரப்பி விட்டதால் அவன் கையில் துப்பாக்கியுடன் இவர்களை கொள்வதற்காக ருத்ர தாண்டவம் ஆடியதை எல்லாம் நினைத்து பார்த்த அவளுடைய அப்பா “போதும் நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போகாத. விஜய்க்கு மறுபடியும் நம்ம மேல கோபம் வந்தா, நம்ம பிசினஸ் எல்லாம் லாஸ் ஆகி நம்ம குடும்பத்தோட தெருவுல தான் நிக்கணும்.” என்று அவளது காதில் கிசுகிசுக்க,
என்ன தான் வனிதா கொடுத்த தைரியத்தில் விஜய் தனக்கு வேண்டும் என்று அனாமிகா ஸ்ட்ராங்காக கோர்ட்டில் பேசி இருந்தாலும் கூட, அவன் கண்டிப்பாக தன்னை கொலை செய்வதற்கு கூட தயங்க மாட்டான் என்று அவளுடைய மனதிற்கு நன்றாக தெரியும் தானே! அதனால் “ஷட் அப் அனாமிகா. நீயே மறுபடியும் விஜய் உனக்கு கிடைக்கிறதுக்கு இருக்கிற ஆப்பர்சூனிட்டியை கெடுத்துக்காத. அவன நீ கரெக்ட் பண்ணனும் இப்ப அதுதான் முக்கியம்.” என்று நினைத்தவள், “ஐ அம் சாரி, இப்ப உங்களோட கொஸ்டின் எல்லாத்துக்கும் ஆன்சர் பண்றதுக்கு எனக்கு டைம் இல்ல. என்னோட mother in law ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேன். இப்ப நான் அவங்கள பாக்க போகணும்.” என்று சொல்லிவிட்டு மீடியாக்களிடம் தப்பித்து தங்களுடைய காரில் ஏறி வனிதாவை காண மருத்துவமனையை நோக்கி அவளுடைய குடும்பத்தினருடன் புறப்பட்டாள் அனாமிகா.
“விஜய் சாரும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காரு.. அப்புறம் நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்றது?” என்று நினைத்த தினேஷ் லாயரை பார்மாலிடிஸ் அனைத்தையும் முடித்துவிட்டு ஆபீஸிற்கு செல்லுங்கள் என சொல்லிவிட்டு கேப் புக் செய்து ஹாஸ்பிடலுக்கு சென்றான்.
வீட்டிற்கு வந்தவுடன் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக் கொண்ட அமுதா அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் சென்று கட்டிலில் படுத்தாள். ஒரு பக்கமாக அவள் திரும்பி படுக்க, மணிகண்டன் அவளை அடைந்ததால் இன்னும் அவள் கண்ணம் வின் வின் என்று வலித்தது. உடனே அவள் வேறு புறமாக திரும்பி படுக்க, அவளுடைய கண்களில் அவளது மொபைல் ஃபோன் தென்பட்டது.
உடனே அதை கையில் எடுத்த அமுதா “யாரை பார்த்தாலும் எத பாத்தாலும் வர வர எரிச்சலா இருக்கு. நடக்கிறது எதையும் என்னால மாத்தவும் முடியல. சரி போய் தொலையுது நடக்கட்டும்னு அக்சப்ட் பண்ணவும் முடியல. அட்லீஸ்ட் இப்படி எல்லாம் நடக்குதுன்னு கலைச்செல்வி கிட்டையாவது சொல்லி புலம்பி ஆறுதல் பட்டுக்கலாம்.” என நினைத்து அவளுக்கு கால் செய்ய முற்பட்டாள்.
அப்போது அவள் விஜய்யின் பரம ரசிகையாக இருந்ததால் அவன் சம்பந்தப்பட்ட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் அவள் இருந்ததால், அதில் இருந்து அனாமிகா விஜய் டிவர்ஸ் அப்டேட் என்ற நோட்டிபிகேஷன் சராசரவென வந்தது. அதை அதிர்ச்சியுடன் பார்த்த அமுதா “அட ஆமா இதை நான் மறந்தே போயிட்டேன்.. இன்னைக்கு தானே அவரோட டிவார்ஸ் கேஸ் ஃபைனல் ஹியரிங்.. அதுக்காக தானே அவர் ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு சென்னை கிளம்பி போனாரு. இந்நேரம் எல்லாம் முடிஞ்சு அவருக்கு டிவர்ஸ் கிடைச்சிருக்கும்.” என்று நினைத்தவாறு உள்ளே சென்று வந்திருந்த போஸ்ட்களை பார்த்தாள்.
அதில் இருந்தவற்றை படித்து பார்த்தவுடன் அவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. இப்படி நடக்கும் என அவள் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இதில் அனாமிகா மீடியா ஆட்களிடம் பேசிய காட்சி வேறு தனியாக வீடியோவாக வந்திருந்ததால், அதை பிளே செய்து பார்த்த அமுதாவிற்கு என்னவோ அனாமிகாவின் முகத்தை பார்க்கவே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“இவங்க பாக்குறதுக்கு தான் சிரிச்ச முகமா இருக்காங்க. ஆனா இவங்க அவரைப் பத்தி பேசும்போது இவங்க கண்ணுல அவர் மேல உண்மையான லவ் இருக்கிற மாதிரி தெரியவே இல்ல. அப்படி இருந்திருந்தா, ஒரு சாதாரண மேக்கப் ஆர்டிஸ்ட் பிரியா மேடமை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக் கிட்ட விஜய் சார், இவங்கள எதுக்கு திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் டிவர்ஸ் பண்ணனும்?
அது சரி.. விஜய் சாரோட ஃபர்ஸ்ட் வைஃப் பிரியா அவர்களுக்கு என்ன ஆச்சு? இதுவரைக்கும் நான் அவங்களை பத்தி யோசிச்சதே இல்லையே! அவங்க ரெண்டு பேருக்கும் டிவர்ஸ் ஆனதுக்கு அப்புறம், பிரியா மேடமை பத்தி எந்த நியூஸ் வரவே இல்ல. கொஞ்ச நாள் முன்னாடி விஜய் சார் அண்ட் பிரியா மேடமோட மேரேஜ் ஆனிவர்சரி டேட் வந்திருக்குன்னு யாரோ அவங்க கல்யாண போட்டோவை போட்டு இருந்தாங்க.. அப்ப அதுல கூட ஒரு சிலர் அவர்கள் இப்ப உயிரோடவே இல்ல.
ஏதோ ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்கன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. பட் இப்ப வரைக்குமே பப்ளிக்கா பிரியா மேடம்க்கு என்ன ஆச்சுன்னு யாருமே எதுவுமே சொல்லல. விஜய் சாரை சுத்தி என்னமோ நிறைய மர்மங்கள் இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. இந்த அனாமிகாவுக்கு அவங்களே பரவால்ல. பாவம் அவங்களுக்கு என்ன ஆச்சோ தெரியல.” என்று திடீரென பிரியாவை பற்றி யோசிக்க தொடங்கிய அமுதா உடனே கூகுளில் விஜய் மற்றும் பிரியாவின் பழைய புகைப்படங்களை சர்ச் செய்து தேடி எடுத்து பார்த்தாள்.
அவனுடன் இருந்த ஒவ்வொரு புகைப்படத்திலும், பிரியா மிகவும் சாதாரணமானவளாகவும், அடக்கமானவளாகவும் இருந்தாள். அவளுடன் இருந்ததாலோ என்னவோ விஜய் கூட பார்ப்பதற்கு ஒரு சராசரி ஆணை போல, ஒரு நடிகனாக அல்லாமல் பிரியாவின் கணவனாகவே அவள் கண்களுக்கு தெரிந்தான். அதைப் பார்த்த அமுதா அனாமிகாவுடன் விஜய் இருக்கும் போட்டோக்களை தேடி பார்த்தாள்.
பல வருடங்களுக்கு முன் விஜய் பிரியாவுடன் இருக்கும்போது கூட எக்கச்சக்கமான போட்டோக்களை எடுத்துக் கொண்டு இருப்பான் போல. ஆனால் அனாமிகாவுடன் அவன் ஒரு சில பொது நிகழ்வுகளில் மட்டுமே தோன்றி இருந்ததால், google-லால் கூட அவளுக்கு ஏராளமான போட்டோக்களை காட்ட முடியவில்லை.
அனைத்தையும் தேடி பார்த்து பெருமூச்சு விட்ட அமுதா “எனக்கு என்னமோ விஜய் சார் பிரியா மேடம் கூட இருந்தப்ப தான் லாஸ்ட்டா சந்தோஷமா இருந்திருப்பாருன்னு தோணுது. அவங்க ரெண்டு பேரும் நல்ல கப்புல். பிரியா மேடம் கூட இருக்கும்போது அவர் எவ்வளவு சந்தோஷமா சிரிக்கிறாரு.. அப்படி நான் விஜய் சாரை எப்பயுமே பார்த்ததில்லை. குறிப்பா அனாமிகா கூட இருக்கும்போது.” என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது தன்னையும் அறியாமல், அவன் தன்னுடன் இருக்கும்போது எப்படி இருந்தான் என்று யோசித்து பார்க்க தொடங்கினாள்.
பிரியாவுடன் இருக்கும் அளவிற்கு இல்லை என்றாலும் கூட, அனாமிகாவுடன் இருக்கும் அளவிற்கு தன்னுடன் அவன் இறுக்கமான முகத்துடன் இல்லை என்று மட்டும் அமுதாவின் மனதிற்கு தோன்ற, அவன் அவளை இழுத்துப் பிடித்து இறுக்கி அணைத்து அவளுடைய இதழ்களில் முத்தமிட்டது அவளுக்கு சட்டென ஞாபகம் வந்தது.
இப்போது அதை நினைத்தாலும் அவன் தன் அருகில் இருப்பதைப் போலவே அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட, வெட்கப்பட்ட அமுதா “அவர் என்ன தான் சம்டைம்ஸ் என் கூட இருக்கும் போது சண்டை போட்டாலும், என்னை ஏதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருந்தாலும், அவர் அட்லீஸ்ட் என் கூட இருக்கும்போது நார்மலா இருந்தாரு. அதுவே பெரிய விஷயம் தான்.” என்று சம்பந்தமே இல்லாமல் விஜய் பற்றி யோசித்து கொண்டு இருந்தாள்.
அப்போது வெற்றியுடன் அவளுக்கு நடக்கவிருக்கும் திருமணம் பற்றியும், அதைப்பற்றி அவள் கலைச்செல்வியிடம் பேச நினைத்தது பற்றியும் அவளுக்கு ஞாபகம் வர, “என் லைஃப்லையே திடீர் திடீர்னு என்னென்னமோ நடந்துட்டு இருக்கு. இதுல நான் விஜய் சார பத்தி யோசிச்சு கவலைப்பட்டு என்ன பண்றது? அவர் ஹாப்பியா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டாலும் என்னால அவருக்காக எதுவும் பண்ண முடியாது.” என நினைத்து கலைச்செல்விக்கு கால் செய்தாள்.
தன் அம்மாவுடன் களத்து வேலைக்கு சென்று இருந்த கலைச்செல்வி அமுதா மூன்று நான்கு முறை கால் செய்து எடுக்கவில்லை. அதனால் கடுப்பான அமுதா “நான் கொஞ்ச நேரம் அவ கிட்ட மனசார புலம்பலானு நினைச்சேன். ச்சே.. நான் நெனச்சா அது கூட நடக்க மாட்டேங்குது.” என நினைத்து வந்த கடுப்பில் மொபைல் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து தூக்கி போட்டுவிட்டு அருகில் இருந்த தலையணையை கட்டிப்பிடித்து கண்களை மூடி படுத்தாள்.
– காதல் மலரும்