அத்தியாயம் 56
ஹாய் பிரண்ட்ஸ்!
இந்த நாவல் தினம்தோறும் ஆடியோ நாவலாக நம்முடைய தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணிட்டு இருக்கோம். அதை நீங்க வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் பவஸ்ரீ அபி குரலில் கேட்டு மகிழலாம். மறக்காம கேட்டுட்டு உங்களோட கருத்துக்களை பதிவிடுங்க.
அத்தியாயம் 56
தனக்காக வெற்றி அனைவரையும் எதிர்த்து இத்தனை வருடங்களாக அவன் வளர்ந்த வீட்டை விட்டு வரக் கூட தயாராக இருக்கிறானா? என்று நினைத்த அமுதா அவன் தன் மீது வைத்திருக்கும் காதலை ஆச்சரியத்துடன் கண்டாள். அவனுக்கு தன் மீது இருக்கும் காதல் தங்களுடைய உறவையும் கடந்தது. அவனுடைய அன்பிற்கு எல்லை இல்லை என்று நினைத்த அமுதா “நீ என்ன லூசா? பெரியண்ணா என்ன அடிச்சதுனால எனக்கும் கோபம் வருது தான். அதுக்காக நானே வீட்டை விட்டு போகணும்னு எல்லாம் யோசிக்கல. நீ ஏன் இந்த அளவுக்கு யோசிக்கிற? நிஜமாவே எனக்காக நான் அந்த வீட்டை விட்டு வான்னு சொன்னா கூட நீ வந்துருவியா? இல்ல சும்மா என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக ஏதாவது சொல்லுவோம்னு அடிச்சு விடுறியா?” என்று கேட்டுவிட்டு அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடனே அவளை முறைத்து பார்த்த வெற்றி “என்ன பாத்தா முன்ன ஒன்னு பேசிட்டு பின்னாடி ஒன்னு பேசி நடிக்கிற ஆள் மாதிரி தெரியுதா உனக்கு? எனக்கு ஒன்னே ஒன்னு தாண்டி கஷ்டமா இருக்கு. எனக்கு உன்ன பத்தி எல்லாமே தெரியும். நீ எப்படி யோசிப்ப, உனக்கு என்ன புடிக்கும் பிடிக்காதுன்னு எனக்கு எல்லாமே தெரியும். இதுவரைக்கும் உனக்கு பிடிக்காத மாதிரி நான் ஏதாவது ஒன்னு பண்ணி இருக்கேனா சொல்லு?
ஆனா நீ மட்டும் ஏன் புள்ள என்ன கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்குற? சரி நேச்சுரலா தான் உனக்கு அது வரலைன்னு வச்சுக்குவோம் பரவால்ல.. ஆனா ஏதாவது நான் சொல்லும்போது இப்படி என்ன சந்தேகப்படாம இருக்கலாம் இல்ல? கொஞ்சமாவது என்ன பத்தி யோசிச்சு பார்த்து என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணலாம் இல்ல?” என கோபமாக தொடங்கி சோகமாக கேட்டு முடித்தான்.
அவன் அப்படி நேரடியாக பேசிய பிறகு அதுவரை கொஞ்சம் காணாமல் போயிருந்த குற்ற உணர்ச்சி மீண்டும் அவளுக்கு வரத் தொடங்கியது. வெற்றி விஷயத்தில் தன் மிகவும் இரக்கமற்றவளாக நடந்து கொள்வதாக நினைத்த அமுதா “I am sorry வெற்றி. நீ சொல்ற மாதிரி என் மேலயும் நிறைய தப்பு இருக்கு. எனக்கு புரியுது. ஆனா என்னையும் அறியாம உன்ன கஷ்டபடுத்த மாதிரி நான் ஏதாவது பண்ணிடறேன். இதையெல்லாம் மாத்திக்க ட்ரை பண்றேன் ஓகேவா? எனக்கு திடீர்னு நமக்கு கல்யாணம்.. இனிமே நீதான் என் ஹஸ்பண்ட் அப்படி இப்படின்னு எல்லாம் யோசிச்சா எல்லாமே புதுசா இருக்கு. இனிமே இதை எப்படி எடுத்துக்கறதுன்னு எனக்கு தெரியல. இந்த கல்யாண பேச்சு ஸ்டார்ட் ஆனதில இருந்து நான் ஒரே கன்பியூசர்ல தான் இருக்கேன் வெற்றி.
ஒரு பக்கம் ஷூட்டிங். விஜய் சாருக்கு இதெல்லாம் இன்னும் தெரியாது. எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா அவங்க அப்புறமா என்ன பண்ணுவாங்கன்னு வேற அதை யோசிச்சா பயமா இருக்கு. இப்படி என் மைண்ட்ல நிறைய ஓடிட்டு இருக்கு. இந்த மெண்டல் பிரஷரை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியாம நானே தவிச்சிட்டு இருக்கேன். அதான் என்னால பெருசா எதையும் யோசிக்க முடியல.” என்று விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் துக்கம் தொண்டையை அடைக்க சொன்னாள்.
அவள் பேச பேச அவளை கட்டி அணைத்து சமாதானப்படுத்த வேண்டும் என்று வெற்றியின் கைகள் பரபரத்தது. இருப்பினும் இன்னும் அவளுக்கு தன் மீது முழுவதாக காதல் வரவில்லை என்று நினைத்து அடக்கி வாசிக்க முடிவு செய்த வெற்றி “சரி விடு நான் சொன்னதுக்கு அப்புறம் நீ யோசிச்சு பாக்குறேன் சொல்லி இருக்கில்ல எனக்கு அதுவே போதும். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரே ஒரு ஆசை தான் அமுதா. எப்பயும் உன்ன பத்திரமா பாத்துக்கணும். உன் கூட சேர்ந்து ஹாப்பியா ஒரு லைஃப் வாழனும். அவ்ளோ தான். வேற எதுவுமே எனக்கு தேவையில்லை.” என்று உணர்ச்சிகள் பொங்க சொன்னான். அவன் கண்கள் கூட லேசாக கலங்கியது.
அவனது கனவு தான் என்று சொன்னதைக் கேட்கும் போது தன்னை ஒருவன் இவ்வளவு நேசிக்கிறானே என்று நினைத்த அமுதாவிற்கு உள்ளுக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. அதேசமயம் “அட்லீஸ்ட் இவனுக்காவது சின்ன வயசுல இருந்து ஏதோ ஒரு கனவு இருந்திருக்கு. ஆனா எனக்கு அப்படின்னு எதுவுமே இல்லையே.. நான் என் வாழ்க்கை பத்தி பெருசா எதுவுமே யோசிக்கல. விட்டா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களேன்னு காலேஜ் போய் படிச்சேன். அப்பயும் இங்கிலீஷ் சரியா வரல. அதுக்கு தனியா டியூசன் எல்லாம் போய் கஷ்டப்பட்டு படிச்சு எப்படியோ பேருக்கு ஒரு டிகிரி வாங்கிட்டேன்.
அதுக்கப்புறம் இதே மாதிரி தட்டு தடுமாறி எங்கேயாவது வேலைக்கு போய் வேலையையும் கத்துக்கிட்டா இன்னும் கொஞ்ச நாள் வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க மாட்டாங்க நிம்மதியா வேலை பார்க்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள படத்தில நடிக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சது. அதுவும் விஜய் சார் கூட.. அப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நான் என் கனவுல கூட நினைச்சு பார்க்கல. ஆனா என்னோட கனவு என்னது? இந்த லைஃப்ல எனக்கு என்ன வேணும்னே எனக்கு புரியலையே! முன்னாடில இருந்து நான் என்ன பண்ணனும்னு என்னை சுத்தி இருக்கிற மத்தவங்க தான் முடிவு பண்றாங்க. கடைசியில புடிச்சிருக்கோ பிடிக்கலையோ நான் அதை ஏத்துக்கிட்டு வாழற மாதிரி தான் இருக்கு.” என்று யோசித்துப் பார்த்த அமுதாவிற்கு இப்போது அவள் ஹீரோயினாக நடிக்கப் போவதால் திரைத்துறையில் தனக்கென்று ஒரு பெயர் நிலையாக கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என யோசித்துப் பார்க்க தோன்றியது.
ஆனால் திருமணத்திற்கு பிறகு அது சாத்தியமா? என்று அவளுக்கு தெரியவில்லை. அதனால் மீண்டும் “இப்ப நான் வெற்றியை மேரேஜ் பண்ணிக்கிட்டே ஆகணுமா? அவன் என்ன லவ் பண்றது எல்லாம் ஓகே தான்.. ஆனா ஏன் இப்படி அவசரப்பட்டு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க? கேட்டா நான் நடிக்க போறதுனாலைன்னு சொல்றாங்க.. நடிக்கப் போனா உடனே நான் கெட்டுப் போயிடுவேனா? மத்தவங்களுக்கும் எனக்கும் வித்யாசமில்லை? என்னை ஏன் வீட்டில இருக்கிறவங்களே ஏன் நம்ப மாட்டேங்கறாங்க?” என்று யோசிக்க தொடங்கிய அமுதாவிற்கு இந்த திருமணம் தனக்கு தேவைதானா என்று குழப்பம் மனதில் எழுந்தது.
இறுதியில் “ஏற்கனவே நான் அண்ணா கிட்ட கோபப்பட்டு சண்டை போட்டுட்டு வந்துட்டேன். அப்படியே சண்டையோட சண்டையா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லி ஒரு பிரச்சனைய பண்ணிடலாமா?” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அவள் முகத்தில் வெயில் அடிப்பதை கவனித்த வெற்றி அவள் தோள்களைப் பிடித்து இழுத்து அவளை நகர்ந்தி உட்கார வைத்துவிட்டு “ஏற்கனவே முகத்துல காயம் இருக்கு. எதுக்கு டி வெயில் உக்காந்து இருக்க? இப்படி உரக்க வெயில் அடிக்குது. உனக்கு அது கூட தெரியலையா?
இப்ப நம்ம எங்க போறது? உன்ன டாக்டர் பாத்துட்டு இருக்கும்போதே மாமா எல்லாரையும் ஜவுளி கடைக்கு கூட்டிட்டு போயிட்டாரு. நம்பளையும் கிளம்பி அங்க வர சொன்னாருன்னு அன்னபூரணி அத்தை கால் பண்ணாங்க. நான் அப்புறம் பேசுறேன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். இப்ப என்ன நம்ம வீட்டுக்கு போலாமா? இல்ல டிரஸ் எடுக்க போலாமா?” என்று அவளிடம் அன்புடன் கேட்டான்.
மனதிற்குள் ஆயிரம் குழப்பங்களும் கேள்விகளும் இருந்தாலும் கூட வெற்றியின் முகத்தை பார்க்கும்போது “எனக்கு இப்போதைக்கு இந்த கல்யாணத்துல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல வெற்றி. இந்த மேரேஜ் வேண்டாமே ப்ளீஸ்!” என்று கேட்கக் கூட அவளுக்கு மனம் வரவில்லை. அவன் முகத்தில் இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது அதை கெடுக்க விரும்பாத அமுதா உடனே அவனுக்காக “நம்ம டிரஸ் எடுக்கவே போலாம். ஏற்கனவே எல்லாரும் என் மேல கோவத்துல இருக்காங்க. இப்ப அவங்க கூப்பிட்டும் நான் போகலைன்னா, இதுக்கும் கோபப்பட்டு என்னை கரிச்சு கொட்டுவாங்க.. இல்லனா அடிக்க கூட செய்வாங்க எனக்கு தேவையா!” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டவள் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கு பிடித்த ஆடைகளை பார்த்து பார்த்து வாங்க வேண்டும் என்று ஆசை ஆசையாக இருந்த வெற்றி அவள் தன்னுடன் டிரஸ் எடுக்க வருவதாக சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தான். பின் காரை ஸ்டார்ட் செய்து அவளுடன் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பினான்.
கோர்ட்டில் இருந்த தினேஷ் விஜய்க்கு கால் செய்து “பாஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம கேஸ் தான் ஷேரிங் வரப்போகுது. நீங்க ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பிட்டீங்களா எப்ப இங்க வருவீங்க?” என்று கேட்க, “டேய் மம்மியோட கண்டிஷன் கிரிட்டிக்கல்லா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாரு. நான் இப்ப எப்படி அவங்கள விட்டுட்டு வர முடியும்? இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். சஞ்சய், சஞ்சனா ரெண்டு பேரும் அம்மா அம்மான்னு சொல்லி அழுதுட்டே இருக்காங்க. டாடிக்கு கால் பண்ணா அவன் நம்பர் ரீச் பண்ணவே முடியல. அவரும் இங்க இல்லாதப்ப நான் தானே எல்லாத்தையும் பாத்துக்கணும்.. எப்படி டா என்னால இவங்கள விட்டு வர முடியும்?” என்று அவனிடம் பதில் கேள்வி கேட்டான் விஜய்.
“பாஸ் நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது. பட் இந்த கேஸ் உங்களுக்கு ரொம்ப இம்பார்டன்ட். நீங்க மட்டும் இன்னைக்கு கோர்ட்ல ஆஜர் ஆகலனா அனாமிகா மேடம் சைட்ல இதை எப்படி வேணாலும் திருப்புவாங்க. ஆல்ரெடி நீங்களும் அவங்களும் ஒண்ணா இருந்த போட்டோ வர சோசியல் மீடியாவுல ஸ்பிரட் ஆகி உங்களுக்குள்ள இன்னும் ரிலேஷன்ஷிப் இருக்கு. ஆனாலும் நீங்க தான் அனாமிகா மேடம் வேணும்னே டிவோர்ஸ் பண்ண ட்ரை பண்றீங்கன்னு ஒரு டாக் போயிட்டு இருக்கு.
என்ன தான் அனாமிகா மேடமை வச்சு நீங்க அது பழைய ஃபோட்டோனு சொல்ல சொல்லி இருந்தாலும் கூட நிறைய பேர் அதை நம்பவே இல்ல பாஸ். இப்ப நீங்க கோர்ட்டுக்கு வராம போய்ட்டீங்கன்னா அது அவங்களுக்கு அட்வான்டேஜா போயிடும். ஒரு மணி நேரம் மட்டும் வந்துட்டு போயிருங்க. மத்தது எல்லாத்தையும் இங்க இருந்து நான் பார்த்துக்கிறேன். சொன்னா புரிஞ்சுக்கோங்க பாஸ் ப்ளீஸ்!” என்ற தினேஷ் மூச்சை பிடித்துக் கொண்டு விஜய்க்காக பேசிக் கொண்டே இருக்க, “இப்ப என்ன பண்றது? நம்ம அங்க போலாமா வேண்டாமா?” என்று யோசித்து குழப்பத்தில் ஆழ்ந்தான்.
-காதல் மலரும்