Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 22

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 22

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 22

அஸ்வினை அழைத்துக் கொண்டு விவேக்கும், அவனது சித்தப்பா மகன் லோகேஷும் ஊர் சுற்றுவதற்காக கிளம்பினார்கள். அதை கவனித்த மனிஷா “என்ன விட்டுட்டு நீங்க எல்லாரும் மட்டும் எங்க போறீங்க? என்ன லோக்கி மாமா என்னை மறந்துட்டியா?” என்று உரிமையாக லோகேஷிடம் சண்டை பிடித்தாள். 

“ஏய் வாயாடி.. நாங்க பசங்களா வெளிய கிளம்பி போகும்போது உனக்கு அங்க என்ன வேலை? போய் அக்ஷயா கூட இரு. அவளுக்கு போரடிக்கும்ல.. 

அவள பாத்துக்கிறதுக்கு டாக்டர்ஸ் வந்திருக்காங்கன்னு  மாலதி அத்தை சொல்லிட்டு இருந்தாங்க. போய் அவங்க கிட்ட அக்ஷயாவுக்கு நேரத்துக்கு என்னென்ன மருந்து மாத்திரை கொடுக்கணும்னு கேட்டு தெரிஞ்சுக்கோ.” என்று சொல்லிவிட்டு அவள் முதுகில் தட்டி அவளை வீட்டிற்குள் செல்லும்படி வற்புறுத்தினான் லோகேஷ். 

மனிஷாவிற்கு அக்ஷயா உடன் இருப்பதைவிட அஸ்வினுடன் தனது நேரத்தை செலவிட வேண்டும் என்று தான் இருந்தது. அதனால் அவள் செல்லவே விருப்பம் இல்லாமல் பாவமாக அஸ்வினை பார்க்க, அவனோ அவளை கண்டுக் கொள்ளாமல் சுற்றிமுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

“நான் மட்டும் தான் எப்ப பார்த்தாலும் இந்த அஸ்வின் மாமா தான் உலகம்ன்னு இவனையே சுத்தி சுத்தி வரேன்.. ஆனா இவன் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறான்!” என்று தனக்குள் புலம்பிய மனிஷா “ஆமா அக்ஷயா பாவம் தனியா இருப்பா. நான் சும்மா தான் உங்க கூட வரேன்னு சொன்னேன். நீங்க பார்த்து போயிட்டு வாங்க பாய்!” என்று சொல்லிவிட்டு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அஸ்வினை பார்த்தாள். 

“அக்ஷயா அடிபட்டு ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராட்ட நிலைமையில அட்மிட் ஆகி இருக்கிறது தெரிஞ்சு இருந்தும் அந்த ஐஸ்வர்யா ஒரு தடவை கூட என் தங்கச்சிய சென்னையில இருக்கும் போது ஹாஸ்பிடல்ல போய் பாக்கல. 

கொஞ்சம் கூட அவாளால தான் என் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு இப்படி எல்லாம் ஆச்சுன்னு ஒரு கில்ட்டி ஃபீலிங் இல்லாம எப்படித் தான் அவளால அந்த குடும்பத்தை பத்தி யோசிக்க முடியுதோ தெரியல! 

என்னை லவ் பண்றதா சொல்லிட்டு இருந்த அவ.. எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா என்னோட ஃபேமிலியை தானே அவளோட ஃபேமிலின்னு நினைத்து இருக்கணும்.. அப்படி நினைச்சிருந்தா, அவ ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க போறா? 

அவ இங்க கிளம்பி வரட்டும். இன்னிக்கு அவளுக்கு இருக்கு. மனிஷாவுக்கு என் ஃபேமிலி மேல இருக்கிற அக்கறை கூட அவளுக்கு இல்ல. 

அவளுக்கு என் கூட இருக்கறதுக்கு எந்த தகுதியும் இல்லைன்னு இன்னிக்கு நான் அவளுக்கு ப்ரூவ் பண்றேன்.” என்று நினைத்த அஸ்வின் இப்போது மனிஷா தன் தங்கைக்காக பேசியதால் கொஞ்சம் அவள் பக்கம் ஈர்க்கப்பட்டு “தேங்க்ஸ் மனிஷா; நீயும், பாலாவும், எப்பவும் அக்ஷயா கூட இருந்து அவள நல்லா பாத்துக்கிறீங்க. நான் இதை என்னைக்கும் மறக்க மாட்டேன்.” என்று வாஞ்சையுடன் சொன்னான். 

“இதுக்கு எதுக்கு மாமா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க நீ? நம்ம எல்லாருமே ஒரே ஃபேமிலி தானே! ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி துணையா இருப்பதெல்லாம்  எல்லாம்  நடக்கிறது தான்.. 

இதுக்கு எல்லாம் தேங்க்ஸ சொல்லி என்னை வெளியாள் மாதிரி ஃபீல் பண்ண வைக்காத.‌ வாசு மாமா சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல! 

கருணா மாமா உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்பட்டிருக்காரு.‌ நீயும் அதுக்கு சரின்னு சொல்லிட்ட..  

நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சுன்னா, அக்ஷயா அப்புறம் எனக்கு நாத்தநாராயிடுவா. உரிமையா எப்பவும் நான் அவ கூட இருப்பேன். யோசிக்கவே நல்லா இருக்குல்ல?

நமக்குன்னு ஒரு புது ஃபேமிலி கிரியேட் ஆகும். நீங்க இனிமே தனியா இருக்கிற மாதிரி அங்க feel பண்ண மாட்டீங்க.” என்று மனிஷா சைடு கேப்பில் தங்களது திருமணம் பற்றி அவன் மண்டையில் ஏற வேண்டும் என்பதற்காக அந்த டாபிக்கை ரிஜிஸ்டர் செய்யும்படி பேசினாள். 

ஒரு நொடி அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்த அஸ்வின்  மனிஷா தன்னை அன்பாக பார்க்கும்போது அவளை எதிர்க்கும் விதமாக அவனுக்கு பேச வராததால் “ஆமா நீ சொல்றது கரெக்ட் தான். நம்ம எல்லாரும் ஒரே ஃபேமிலி.” என்று மட்டும் சொல்லிவிட்டு விரக்தியில் புன்னகைத்தான்.

“சப்பா.. இவ சரியான ஆளா இருப்பா போல இருக்கே! இந்த பிசாசு கிட்ட இருந்து என் மச்சான் அஸ்வினை எப்படி தான் காப்பாத்த போறனோ தெரியல.. 

இந்த சமயத்துல ஐஸ்வர்யா இங்க வர்றதும் நல்லது தான். இல்லைனா இங்க இருந்து சென்னை போறதுக்குள்ள இந்த மனிஷா நடுவுல புகுந்து கேப்ல கெடா வெட்டிருவா.” என்று நினைத்த விவேக் “சரி வாங்க வாங்க.. நம்ம கிளம்பலாம். லேட் ஆகுது! இப்படியே பேசிட்டு இருந்தா ஈவினிங் ஆயிடும்.“ என்று சொல்லி அஸ்வினையும், லோகேஷையும் அழைத்துச் சென்று விட்டான். 

அக்ஷயாவையும் தன் மகன் பாலாவையும் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்று நினைத்த கொண்டு இருந்த மாலதி அதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் விடுவதாக இல்லை. அக்ஷயா நேரடியாக ஹாஸ்பிடலில் இருந்து இங்கே வந்திருந்ததால் அவளுக்கு தேவையான ஆடைகளை அவள் பாலாவை வாங்கி வர சொல்ல, “ஜஸ்ட் வாங்குறது எல்லாம் ஓகே தான் மா. ஆனா ஒரு பொம்பள பிள்ளைக்கு நான் எப்படி டிரஸ் வாங்க முடியும்?” என்று கூச்சத்துடன் கேட்டான் பாலா. 

“ஏன் நீ இதுக்கு முன்னாடி மனிஷாவுக்கு டிரஸ் வாங்கி கொடுத்தது இல்லையா? அக்ஷயாவுக்கு வாங்கறதுல உனக்கு என்ன பிரச்சனை? 

அவ நம்ம வீட்டு பொண்ணு டா. இப்ப தான் ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஊருக்கு வந்து இருக்கா.. பாவம் வரும்போது எதுவும் எடுத்துட்டு வந்திருக்க மாட்டா.. 

நம்ம தானே அவளுக்கு தேவையானது எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து அவளை நல்லபடியா பாத்துக்கணும்!” என்று திலகா கேட்க, 

“அது சரி தான். ஆனா மனிஷாவும் அக்ஷயாவும் ஒண்ணா எனக்கு? இதுவரைக்கும் என் தங்கச்சிக்கே நான் வெறும் புடவை மட்டும் தான் வாங்கி கொடுத்து இருக்கேன்.

நீங்க அக்ஷயாவுக்கு எல்லாமே வாங்கி தர சொல்றீங்க.. அவ சைஸ் என்னன்னு தெரியணும். அதுவும் இல்லாம இன்னர்ஸ் எல்லாம் எப்படி நான் போய் கடையில பார்த்து வாங்க முடியும்?  

நீங்க போய் மனிஷா கிட்ட சொல்லி அக்ஷயா கிட்ட கேட்டு சைஸ் எழுதி வாங்கிட்டு வர சொல்லுங்க. நானும் மணியும் கடைக்கு போய் வாங்கிட்டு வந்தர்றோம்.” என்றான் பாலா. 

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியாதா? டாக்டர் கட்டு கட்டுறது எப்படி, அக்ஷயா புள்ளைய குளிக்க வைக்கிறது எப்படின்னு மனிஷாவுக்கு இப்ப தான் சொல்லிக் கொடுத்தாங்க.

பக்கத்துல இருந்து அவ அக்ஷயாவை பார்த்துக்க வேண்டாமா? என் சின்ன அண்ணன் மவ அனுக் கிட்ட சொல்லலாம்னு பார்த்தா அவ எப்ப பாத்தாலும் ஃபோனும் கையுமா உக்காந்துட்டு இருக்கா.. 

அவ கிட்ட எல்லாம் என்னால ஒரு வேலையும் வாங்க முடியாது. உனக்கு நம்ம அக்ஷயா மேல பாசம் இருந்தா அம்மா சொல்றது செய் போ!” ‌ என்ற திலகா அதற்கு மேல் அங்கே நின்றால் மீண்டும் மீண்டும் பாலா ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான் என நினைத்து தனக்கு வேலை இருப்பதாக சொல்லி நழுவி சென்று விட்டாள்.  

தயக்கத்துடன் அக்ஷயா இருந்த ரூமிற்குள் சென்ற பாலா அவளுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து “அம்மா உனக்கு தேவையான டிரஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு வர சொன்னாங்க. எனக்கு என்ன வாங்கணும், எப்படி வாங்கணும்னு தெரியல. 

நீ ஒரு பேப்பர்ல உனக்கு என்னென்ன வேணும்னு எழுதி கொடுக்கிறியா? நான் அதை அப்படியே கொண்டு போய் கடையில வேலை செய்ற பொண்ணு கிட்ட கொடுத்து எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துடறேன்.” என்று கேட்க, 

அடிப்பட்டு கட்டு கட்டி இருந்த தனது இரண்டு கைகளையும்  அவன் முன்னே காட்டிய அக்ஷயா “இந்த கைய வச்சுக்கிட்டு என்னை எழுத சொல்றீங்களா மாமா?” என்று உடைந்த குரலில் கேட்க, “அய்யோ சாரி மா!! ஏதோ தெரியாம கேட்டுட்டேன். நீ தப்பா நினைச்சுக்காத.” என்ற பாலா மனிஷாவின் கையில் ஒரு நோட்டையும் பேனாவையும் கொடுத்து “அவளுக்கு என்னென்ன வேணும்னு கேட்டு இதுல எழுதி கொடு. நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்றான். 

“அம்மா அண்ணாவையும், அக்ஷயாவையும் சேர்த்து வைக்கிறதுக்காக தான் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு நினைக்கிறேன். அதனால பாலாவை நம்ப இங்க இருந்து வெளிய போக விடக்கூடாது.” என்று நினைத்த மனிஷா “அவ சொல்ல சொல்ல நான் இதுல கேட்டு எழுதி தரேன். ஆனா நீ எதையாச்சும் தப்பா வாங்கிட்டின்னா என்ன பண்றது? 

இது என்ன ஆன்லைன் ஷாப்பிங்கா புடிக்கலைன்னா ரிட்டன் பண்றதுக்கு? பொண்ணுங்களுக்கு டிரஸ் வாங்குறதுனா சும்மா இல்ல அண்ணா. 

மெட்டீரியல்ல இருந்து டிரஸோட fitting வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்கணும்.  அவ சொல்றதை நீயும் கொஞ்சம் கேட்டுக்கிட்டேனா உனக்கு வாங்கும்போது ஈசியா இருக்கும். 

இந்த சேல்ஸ் கேர்ள்ஸ் எல்லாம் நம்ம ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு இஷ்டத்துக்கு குடுப்பாங்க. முக்கியமா எது விலை அதிகமா இருக்கோ அதைத் தான் நம்ம தலையில கட்ட பாப்பாங்களே தவிர அது நமக்கு புடிச்ச மாதிரி எல்லாம் இருக்காது.” என்று சொல்லி பாலாவை அங்கே இருக்க வைத்து விட்டாள். 

அதனால் கொஞ்சம் சங்கடத்துடன் அவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி அக்ஷயா தனக்கு என்னென்ன வேண்டும் என்று சைஸ் வாரியாக லிஸ்ட் போட்டு சொல்ல, அனைத்தையும் தன் கையில் உள்ள நோட்டில் எழுதினாள் மனிஷா. தனது உள்ளாடைகளைப் பற்றி பேசும்போது அக்ஷயாவிற்கு ஒரே வெட்கம் வெட்கமாக வர, அவள் தலையை உயர்த்தி பாலாவை பார்த்தாள்.

அவனோ இங்கே நடக்கும் எதையும் தன் கண்களால் பார்த்து விடவே கூடாது, காதுகளால் கேட்டு விடவே கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு என்னவோ இப்போது தான்  சமந்த பெண் போல தரையையே வெறித்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த அக்ஷயாவிற்கு சிரிப்பு தான் வந்தது. 

இனி தங்கள் வாழ்க்கையில் இழக்க எதுவும் இல்லை. தனது பெற்றோர்களின் இறப்புடன் தங்கள் வாழ்வின் மொத்த சந்தோசமும் சென்று விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த அக்ஷயா அந்த பண்ணை வீட்டிற்கு சென்ற பிறகு தான் தனக்காகவும் சிலர் இருக்கிறார்கள் என்று யோசித்து நிம்மதியாக உணர தொடங்கினாள். 

– முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured