அத்தியாயம் 38: அவங்கள நீ புரிஞ்சுக்கணும்
சவித்தாவிற்கும் தன்மீது இன்ட்ரஸ்ட் இருக்கிறது என்று புரிந்து கொண்ட சபரி “நான் உன்ன நெனச்சு எவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்னு எனக்கு மட்டும் தானே தெரியும் சவி! நான் உன்ன பாக்கலாம்னு ஆசை ஆசையா உங்க டிபார்ட்மெண்ட் பக்கம் வந்தா, அது தெரிஞ்சும் நீ அப்படியே என்னை கண்டுக்காத மாதிரியே போவ.. எனக்கு உன் நேம் சவித்தான்றதை தவிர உன்ன பத்தி வேற எதுவுமே தெரியாது. என்கிட்ட என்ன உன் ஃபோன் நம்பரா இருக்கு? உன்கிட்ட கால் பண்ணி நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன், எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு சொல்றதுக்கு!” என்று சொல்லி அப்படியே symbolicஆக அவளிடம் நம்பர் கேட்டான்.
அதை புரிந்து கொண்டு அவனைப் பார்த்து வெட்கப்பட்டு புன்னகைத்த சவித்தா “நீங்கதான் என் நம்பர் கேக்கவே இல்லையே.. அப்புறம் எப்படி கொடுக்க முடியும்? எங்க டிபார்ட்மெண்ட் பக்கம் வந்தாலும் அப்படியே தூரமா நின்னு என்ன பாத்துட்டு நீங்க பாட்டுக்கு கிளம்பி போயிடுவீங்க.. தைரியமா வந்து என்கிட்ட பேசினா தானே, நானும் உங்ககிட்ட பதிலுக்கு பேச முடியும்? நீங்க சும்மா டைம் பாஸ் பண்றதுக்கு என்ன சைட் அடிச்சிட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன். அதான் நானும் கண்டுக்கல.” என்று சொல்ல,
“சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லமா. எனக்கு உன்கிட்ட வந்து பேச கொஞ்சம் பயமா இருந்துச்சு. நீ அடுத்த டிபார்ட்மெண்ட் பொண்ணு வேற.. நான் உன்கிட்ட ஏதாவது பேசி நீ போய் உங்க H.O.D கிட்ட கம்பளைண்ட் பண்ணிட்டா எனக்கு enquiry வச்சு சாவடிச்சிடுவாங்க. காலேஜ்ல மானமே போயிடுமே! அதான் நான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிட்டேன். இப்பதான் காலேஜ் முடிஞ்சிடுச்சே.. நான் தைரியமா கேட்கிறேன். உன் ஃபோன் நம்பர் குடு நம்ம ஃப்ரீயா இருக்கும்போது பேசலாம்.” என்று அவளிடம் கேட்டான் சபரி.
உடனே சவித்தா அவனுக்கு தனது மொபைல் எண்ணை கொடுக்க, அதை தனது மொபைல் ஃபோனில் Amul baby என்று பக்கத்தில் ஒரு ஹார்டின் போட்டு உடனே சேவ் செய்தான் சபரி. அதை கவனித்த சவித்தா குறும்பாக அவனைப் பார்த்து புன்னகைத்து “நான் Amul babyஆ உங்களுக்கு?” என்று கேட்க, “ஆமா நீதான் ஹன்சிகா மாதிரி மொழு மொழுன்னு கியூட்டா இருக்கியே!” என்று வெட்கமே இல்லாமல் சொல்லிவிட்டு அவளைப் பார்த்து இழித்தான் சபரி. இப்படியே அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசியபடி தங்களுக்கென்று ஒரு டேபிளை பிடித்து சென்று அமர்ந்தார்கள்.
“இப்ப எதுக்கு நீ இனியாவும் நம்ம கூட வரணும்னு சொல்லி கூட்டிட்டு வந்த?” என்று ரிஷி கேட்க, “சலீமுக்கு மேரேஜ் ஆகப்போகுது. எப்படியும் விராட்டும், தேஜுவும் அவங்க லவ் பண்ற ஸ்பீடுக்கு சீக்கிரம் மேரேஜ் பண்ணிடுவாங்க. நான் அன்னைக்கி உன் கிட்ட marriage proposal பண்ணதுக்கு, நீ ஓகே சொன்ன. பட் அப்புறம் என்னென்னமோ ஆகிடுச்சு. அதான் நம்ம மேரேஜ் பத்தி நீ என்ன நினைக்கிறன்னு உன் கூட டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் இனியா அக்காவையும் நம்ம கூட கூட்டிட்டு வந்தேன். நம்ம இங்க இருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு ஸ்பெஷல் பர்சனை மீட் பண்ண வேண்டியது இருக்கு. அப்போ இனியா அக்காவும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதுவும் ஒரு ரீசண் தான்.” என்றாள் ரோகிணி.
“அங்கிள் கூட என் கிட்ட இதை பத்தி கேட்டாரு. உனக்கும் எனக்கும் சீக்கிரம் மேரேஜ் பண்ணிட்டா அடுத்து சுபாஷினியை பத்தி யோசிக்கிறதுக்கு கரெக்டா இருக்கும்னு சொன்னாரு. உங்க அத்தை நீ காலேஜ் படிக்க வந்து என்ன லவ் பண்ணதுனால, இப்ப லிங்கேஷ் மேல ஃபீலிங்க்ஸ் இருக்குனு சொல்ற சுபாஷினி மனசு மாறிட்டா என்ன பண்றதுன்னு பயப்படுகிறார்களாம். சோ அவளுக்கு 18 வயசு ஆனதுக்கப்புறம் உடனே மேரேஜ் பண்ணனும்னு force பண்றாங்களாம். சோ நானே இதை பத்தி உன்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன்.” என்று ரிஷி சொல்ல, “இப்ப நம்ம என்ன பண்ண போறோம் ரிஷி?” என்று அவனிடமே கேட்டாள் ரோகிணி.
“Frankஆ சொல்லணும்னா எனக்கும் தெரியல ரோகினி. But உங்க urgency எனக்கு புரியுது. இப்ப தானே சுபாஷினி 12த் முடிச்சிருக்கா.. அவ முதல்ல காலேஜ் ஜாயின் பண்ணட்டும். அதுக்குள்ள நான் அந்த கம்பெனில போய் ஜாயின் பண்ணி கொஞ்சம் செட்டில் ஆகணும்.
நீயும் இப்பதான் supreme Techல contract sign பண்ணி இருக்க. சோ work-ல நீ focus பண்ணி ஆகணும். ஒரு 6 months போகட்டும். நம்ம அப்புறம் நம்ம மேரேஜ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம். உனக்கு ஓகே தானே?” என்று அவளிடம் ரிஷி கேட்க, ஒரு நொடி அமைதியாக யோசித்துப் பார்த்த ரோகினி “நீ சொல்றது கரெக்ட் தான் ரிஷி. அவசரப்பட்டு எதுவும் பண்ண முடியாது. சுபாஷினி மேரேஜ்க்கு டைம் இருக்கு. அவளுக்கு இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்றது எனக்கு புடிக்கல. நமக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் பொறுமையா நம்ம அத்தை கிட்ட பேசி அவங்கள கன்வின்ஸ் பண்ண முடியுதான்னு பார்க்கலாம்.” என்றாள்.
இப்படியே அவர்கள் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையைப் பற்றி பேசிக் கொண்டு இருந்ததில் அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. நேரம் கிட்டத்தட்ட இரவு 8 மணியை கடந்து இருக்க, “நம்ம கிளம்பலாம் ரிசி. நான் ஒருத்தரை மீட் பண்ணனும்னு சொன்னனே.. அவங்க கூட நம்ம டின்னர் சாப்பிட்டுக்கலாம். அவங்களே நமக்கு டேபிள் புக் பண்ணிட்டாங்க.” என்றாள் ரோகிணி.
“ஆமா நானும் கேட்கலாம்னு இருந்தேன் மறந்துட்டேன்.. யாரு அந்த ஸ்பெஷல் பர்சன்? அவங்கள பத்தி எதுவுமே சொல்லாம அவங்க கூட டின்னர் சாப்பிட போகணும்னு மட்டும் நம்ம இங்க வந்ததுல இருந்து சொல்லிகிட்டே இருக்க! அந்த அளவுக்கு அவங்க உனக்கு important-டா என்ன?” என்று ரிஷி அவளிடம் கேட்க, “அவங்கள நான் மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு. அவங்க உன் கூட பேசணும்னு ஆசைப்படறாங்க. நம்ம கார்ல போகும்போது நான் அவங்கள பத்தி சொல்றேன். ப்ளீஸ் இப்ப எதுவும் கேட்காத ரிஷி.” என்ற ரோகிணி அவர்களது மற்ற நண்பர்களிடம் சொல்லிவிட்டு ரிசியை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அவர்கள் இருவரும் காரில் ஏறி அமர, அதை ஸ்டார்ட் செய்த ரிசி, “இப்ப நம்ம எங்க போறோம்?” என்று ரோகினியிடம் கேட்டான். “நீ போ நான் ரூட் சொல்றேன்.” என்ற ரோகிணி தொடர்ந்து அவனுக்கு ரூட் சொல்ல, அதை பின்பற்றி காரில் சென்று கொண்டிருந்தான் ரிஷி.
அவர்கள் அரை மணி நேரத்திற்கு மேல் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போதும் ரோகிணி அவர்கள் சந்திக்கப் போகும் நபர் யார் என்று சொல்லாததால், “ஓய் எவ்ளோ நேரம் ஆகுதுடி.. இன்னும் அது யாருன்னு சொல்ல உனக்கு மனசு வரலையா? நீ யாருன்னு சொல்லாம இனிமே ஒரு ஸ்டெப் கூட நான் move பண்ண மாட்டேன்.” என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு தன் காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டான் ரிஷி.
“அவங்கள நேர்ல பாக்குறதுக்கு முன்னாடியே ரிஷி கிட்ட அவங்கள பத்தி பேசுறது நல்லது.” என்று நினைத்த ரோகினி “நான் அவங்க யாருன்னு உன்கிட்ட சொல்றேன். பட் அவங்கள பத்தி நீ முழுசா தெரிஞ்சுக்கிற வரைக்கும், நான் பேசி முடிக்கிற வரைக்கும், கோபப்பட்டு அதை கேட்காம பாதியில பேச்சை ஸ்டாப் பண்ண மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு.” என்று கேட்டு சத்தியம் செய்ய சொல்லி அவன் முன்னே தன் ஒற்றை கையை நீட்டினாள்.
அவளை குழப்பமான முகத்துடன் பார்த்த ரிஷி “ஏய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா? Are you kid or what? இதுக்கெல்லாம் போய் பிராமிஸ் கேட்டுட்டு இருக்க?” என்று கேட்க, “விஷயம் அந்த அளவுக்கு சீரியஸ் ரிஷி. நீ எனக்கு பிராமிஸ் பண்ணு. அப்பதான் உன்கிட்ட எனக்கு தெரிஞ்ச எல்லா உண்மையும் சொல்ல முடியும்.” என்று அவளும் உறுதியாக சொன்னாள்.
“ஐயோ.. ரொம்ப பண்ணாதடி.. நான் பிராமிஸ் பண்றேன் போதுமா? இப்பயாவது அவங்க யாருன்னு சொல்லு.” என்று ரிஷி சலிப்புடன் சொல்ல, “வேற யாரும் இல்ல, உங்க அம்மா தான். சுபா ஆண்டியை தான் நம்ம பாக்க போறோம் இப்போ!” என்று ரோகிணி சொன்னவுடன் ரிஷியின் முகம் அப்படியே மாறிவிட்டது.
அதை பார்த்து முகம் சுழித்த ரோகினி “நீ எனக்கு நான் சொல்றத fullஆ கேட்பேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்க ரிஷி! அதை மறந்துடாத. முதல்ல என்ன பேச விடு. நடந்த உண்மையெல்லாம் உனக்கு இப்ப கூட தெரியலனா, கடைசி வரைக்கும் உங்க அம்மாவை பத்தி நீ எதுவுமே தெரிஞ்சுக்காமயே போயிடுவ.” என்றாள்.
“நான் அவங்கள என் அம்மாவா நினைக்கிறதே இல்ல ரோகினி. எனக்கு அவங்கள பத்தி பேசறதுக்கு கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்ல. இருந்தாலும் இத சொல்றது நீயா இருக்கறதுனால நான் பொறுமையா இருக்கேன் அவ்ளோ தான்.” என்று ரிஷி சொல்லி விட, அவன் தனக்கு செவி சாய்ப்பதே பெரிய விஷயம் என்று நினைத்த ரோகினி “ஓகே ரிஷி cool. நான் சொல்றத பொறுமையா கேளு எனக்கு அதுவே போதும்.” என்று சொல்லிவிட்டு சுபாவை பற்றி பேச தொடங்கினாள். அவர்களது conversationஐ அந்த காரின் பின் சீட்டில் அமர்ந்து இனியா ரோபோர்டும் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.
“உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மேரேஜ் ஆகும்போது உங்க அம்மா law Collegeல படிச்சிட்டு இருக்காங்க. அவங்களோட studiesஐ discontinue பண்ண வச்சு ஆண்டியோட parents அவங்கள force பண்ணி அவங்களுக்கு மேரேஜ் பண்ணி இருக்காங்க. Beginning stageல இருந்தே அவங்களோட marriage life அப்படி ஒன்னும் நல்லா இல்ல.
இதுல நடுவுல உங்க அப்பாவுக்கு வேற ஒரு பொண்ணோட illegal relationship இருந்திருக்கு. அது தெரிஞ்சு ஆன்ட்டி அங்கிள் கிட்டையும் அந்த லேடி கிட்டையும் சண்டை போட்டு இருக்காங்க. அதுக்கு அங்கிள் அந்த பொண்ணு pregnant-டா இருக்கிறதாகவும், இனிமே அந்த பொண்ணு கூட தான் வாழ போறதாகவும், அந்த பொண்ணுக்கு பொறக்க போற குழந்தைதான் அவருடைய வாரிசுன்னும் சொன்னாராம்.
சோ ஆன்ட்டி ரொம்ப அந்த டைம்ல depressed ஆகியிருக்காங்க. ஒருவேளை திடீர்னு அவர் உங்களை விட்டுட்டு போயிட்டா, ரெண்டு குழந்தைங்கள வச்சுட்டு நம்மளால எப்படி வளர்க்க முடியும்னு யோசிச்சு கவலைப்பட்டிருக்காங்க. அவங்க வேற job ஏதாவது போகலாம்னு try பண்ணா கூட, உங்க அப்பா அவங்கள எங்கயும் போக விடாம எல்லா இடத்திலயும் block பண்ணி எப்பயுமே அவங்க அவரோட கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைச்சிருக்காரு. இதுல அவர் தினமும் ஆண்டிய mentally and physically abuse பண்ணிருக்காரு.” என்று ரோகினி சொல்ல சொல்ல ரசியின் முகம் வாடியது.
***