அத்தியாயம் 13
அப்போது இறக்கும் தருவாயில் அவன் அம்மா அவனிடம் பேசியதும், அவள் இறந்த பின்பு அவனும் குசியும் கதறி அழுததும் அப்படியே படமாக ஓட, அடுத்து அவன் எதிர்பார்க்காத ஒன்று அவன் கண்களில் தெரிந்தது.
சற்று நேரத்திற்கு முன்பாக அவன் பார்த்த அதே இளம் பெண். அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
ஆனால் அவன் பார்த்தபோது இருந்ததைப் போல கவர்ச்சியான உடையில் மயங்கி கிடப்பது போல அவள் இல்லை. அழகான புடவை கட்டி நேர்த்தியாக தன்னை அலங்கரித்துக் கொண்டு பார்ப்பதற்கு கிட்டத்தட்ட தன் அம்மாவைப் போல அவன் கண்களுக்கு அவள் மரியாதைக்குரிய சிறந்த பெண்ணாக தெரிந்தாள்.
அதனால் அதிர்ந்த ரிஷி உடனே தன் கண்களை திறந்து பார்க்க, அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சத்தியவதியின் சமாதியின் மீது விழுந்தது.
அவன் அருகில் சென்று ஆறுதலாக அவனுடைய தோள்களை பற்றி கொண்ட திலீப், “கிளம்பலாமா பாஸ்? இன்னும் ரெண்டு மணி நேரத்துல விடிஞ்சே போயிடும்.” என்று சொல்ல, “ம்ம்..!!” இறுகிய முகத்துடன் சொன்னான் ரிஷி.
அவனை அழைத்துக் கொண்டு தங்களது காரை நோக்கி சென்ற திலீப் ரசியை காரின் பின் சீட்டில் ஏற்றிவிட்டு தானும் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டான். இப்போது அடுத்து எங்கே செல்வது? என்ற கேள்வி மீண்டும் திலீபின் மனதிற்குள் வந்தது.
ஆனால் இம்முறை அதைக் கேட்டு ஏற்கனவே சோகமே உருவாக இருக்கும் ரிசியை மீண்டும் கஷ்டப் படுத்த வேண்டாம் என்று நினைத்து அவன் எதுவும் கேட்காமல் தன் மனம் போன போக்கில் காரை செலுத்த தொடங்கினான் திலீப்.
அவர்கள் அப்படியே ஒரு 20 நிமிடங்கள் தொடர்ந்து ஏதோ ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வேர்க்க விருவிருக்க மூச்சு வாங்க அந்த தார் சாலையின் நடுவில் வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்த இளம் பெண் ஒருத்தி சட்டென்று அவர்களது காரில் வந்து விழுந்தாள்.
அதனால் பதறிப்போன திலீப் ஸடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான். “டேய் என்ன டா ஆச்சு? யார் மேலயாவது இடிச்சு ஆக்சிடென்ட் பண்ணிட்டியா?” என்று பின் சீட்டில் அமர்ந்து இருந்த ரிசி பதட்டத்துடன் கேட்க,
“தெரியல பாஸ், இருங்க. நான் போய் பாத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு அவசரமாக தனது சீட் பெல்டை கழட்டிவிட்டு காரில் இருந்து இறங்கி வேகமாக அங்கே சென்று அடிபட்ட பார்த்தான். அவன் கண்களில் அதிர்ச்சி.
“இவ அதே பொண்ணு தானே! இந்த நேரத்துல இவ எப்படி இங்க?” என்று நினைத்து குழம்பிய திலீப் அவளுக்கு என்ன ஆனது என்று கூட சென்று பார்க்காமல் அப்படியே அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
அங்கே யாருக்கு என்ன ஆனதோ என்று நினைத்து நொடிக்கு நொடி பதட்டத்தில் ரிஷியின் இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருக்க, “டேய் யாரு டா அது? அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு முதல்ல பாரு!” என்று காருக்குள் இருந்து குரல் கொடுத்தான்.
அவன் அப்படி சொன்னவுடன் வேகமாக அந்த பெண்ணின் அருகில் சென்ற திலீப் அவள் மூக்கிற்கு அருகில் மூச்சு வருகிறதா என்று தனது விரல்களை வைத்து பார்த்தான். இன்னும் அவளது மூச்சு சீராக வந்து கொண்டு தான் இருந்தது.
ஆனால் அவள் கீழே விழுந்த வேகத்தில் லேசாக அவள் தலையில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டு இருக்க, அவளது கவர்ச்சியான ஆடை அவளுடைய மொத்த உடலையும் மறைக்க தவறி இருந்ததால் கீழே விழுந்ததில் ஆங்காங்கே அடிபட்டு அவளுடன் சிவந்து போயிருந்தது.
“இது என்ன.. பாஸ் வேண்டாம்னு சொல்லி இந்த பொண்ண திருப்பி அனுப்பி விட்டாலும் மறுபடியும் இவ எங்க கரிலேயே வந்து விழுகிறா?
இது coincidence-ஆ இல்ல இந்த பொண்ண அரேஞ்ச் பண்ணி கொடுத்த புரோக்கர் ஏதாவது இவளை வச்சு பிளான் பண்றானா?
எதுவா இருந்தாலும் பரவால்ல. யாரோ ஒரு பொண்ண பத்தி கவலைப்படுற சுச்சுவேஷன்ல எல்லாம் இப்ப நாங்க இல்ல.
முதல்ல பாஸ கூட்டிட்டு இந்த இடத்துல இருந்து கிளம்பனும். இந்த இடம் அவுட்டர்ல இருக்குறதுனால எப்படியும் சிசிடிவி கேமரா எதுவும் இருக்காது.
சோ எத பத்தியும் கவலைப்பட தேவையில்லை. இவளை இப்படியே விட்டுட்டு கிளம்பிட வேண்டியது தான்.” என்று நினைத்த திலீப் மீண்டும் காருக்கு சென்று அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தான்.
“டேய் என்ன டா நான் கேக்குறதுக்கு ஆன்சர் பண்ணாம நீ பாட்டுக்கு காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்புற!
யார் கார்ல வந்து விழுந்தது? அவங்களுக்கு என்ன ஆச்சு?” என்று ரிஷி பதட்டத்துடன் கேட்க,
“யாரும் வந்து விலுகள பாஸ். ஒரு தெரு நாய் தான் தெரியாம ஆப்போசிட்ல வந்துருச்சு.
அதுக்கு லேசா தான் அடிபட்டிருக்கும் போல இருக்கு அதுவா எந்திரிச்சு ஓடிப்போயிருச்சு.
சோ ஒண்ணும் பிரச்சனை இல்ல. நம்ம கிளம்பலாம்.” என்ற திலீப் அடிபட்டு மயக்கத்தில் கிடந்தவளை அப்படியே இயக்கமே இல்லாமல் தன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
திலீப் என்ன தான் சமாதானம் சொன்னாலும் வேகமாக துடித்துக் கொண்டு இருந்த ரிஷியின் இதயம் இன்னும் சமாதானமான பாடில்லை.
அவனுக்கு தான் என்னவோ தன்னுடைய உடலின் ஒரு பகுதியை அங்கேயே விட்டுவிட்டு செல்வதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அதனால் அவன் தன்னையும் மீறி அதுவரை லாக் செய்து இருந்த ஜன்னலை கீழே இறக்கி தன் தலையை திருப்பி வெளியில் எட்டிப் பார்த்தான்.
அவன் கண்களுக்கு தலையில் மயங்கி கிடந்த அவளுடைய உருவம் அங்கே இருட்டாக இருந்ததால் கொஞ்சம் மங்களமாக தெரிந்தது.
அப்போதும் அவன் இதயம் அது அவள் தான் என்று சரியாக கண்டுபிடித்து விட்டதால், “Stop the bloody car you Idiot!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தினான் ரிசி.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)