அத்தியாயம் 8
அவனுக்கு தன் குடும்பத்தை காக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
அவளை நெருங்கி சென்ற ரிஷி அவளது கூந்தலை ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அந்த கவர்ச்சியான உடை அணிந்திருக்கும் பெண்ணை தன் கண்களால் ஸ்கேன் செய்தான்.
அவளது அதீத அழகு அவனை அவள் பக்கம் இழுத்ததை அவனால் மறுக்க முடியவில்லை.
அவளுடைய ஸ்ட்ராபெர்ரி இதழ்கள் வேறு அவனை தன் அருகில் வா வா என்று அழைப்பதைப் போலவே அவனுக்குள் ஒரு குரல் கேட்க,
“ரொம்ப யோசிக்காத ரிஷி சம்டைம்ஸ் நீ செல்பிஷா இருந்துதான் ஆகணும்.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், அவளது இதழ்களின் மீது தனது இதழ்களை பொருத்தினான்.
அவளது இதழ் தேனின் சுவையை உணர்ந்த பிறகு அவனால் அவளை முத்தமிடுவதை நிறுத்த முடியவில்லை.
தன்னையும் மீறி தனது மொத்த உடலையும் அவள் மீது போட்டுக் கொண்ட ரிஷி அவளை ஆழமாக முத்தமிட தொடங்கினான்.
இதுவரை அவனுக்குள் ஒளிந்திருந்த ஆண்மை அவளை கண்டவுடன் வெளியில் வெகுண்டு எழுந்து வருவதாக அவனுக்கு ஒரு உணர்வு.
அவளை அவள் இதழ்கள் வன்மையாக தீண்டிக் கொண்டு இருக்க, அவனது முரட்டு கைகள் அவளது அங்கங்களை அளந்து கொண்டிருந்தது.
ஏதோ போதைக்கு அடிமையானவனை போல அவளின் அருகாமையில் அந்த சில நிமிடங்களிலேயே அடிமையாகி கிடந்த ரிஷியின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அவள் வேண்டும் வேண்டும் என்று அவளுக்காக ஏங்கித் தவித்து துடிக்க தொடங்கியது.
அவனும் தன்னை மறந்து அவளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கும் போது,
சட்டென்று அவனுக்கு அவனுடைய முன்னாள் காதலி தனுவின் ஞாபகம் வந்தது.
தனக்கும் அவளுக்கும் திருமணமான பிறகு இப்படி எல்லாம் அவளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவன் எத்தனை எத்தனையோ ஆசைகளை மனதிலே வைத்திருந்தான்.
அவளுடன் வாழப்போகும் தன்னுடைய வாழ்க்கையை கற்பனை செய்து பார்த்திருக்கிறான்.
இன்று அவனுடைய கற்பனை அனைத்தும் கானல் நீராக கரைந்து போனதை கூட அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
ஆனால் இப்படி இத்தனை வருடங்களாக தான் காத்து வைத்திருந்த தன்னுடைய கண்ணியம், கட்டுப்பாட்டை எல்லாம் எவளோ ஒரு பெண்ணிடம் காணிக்கை ஆக்குவதை அவனால் அனுமதிக்கவே முடியவில்லை.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)