கத்தியை பொருட்படுத்தாமல் அவன் அவளை நெருங்கியபடியே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நடு நெஞ்சுக்குள் இறங்க ஆரம்பித்தது அந்த கத்தி.
அதில் பதறியவள், “என்ன பண்ற? விடு” என்று கத்தியை விலக்க முயல, அவனோ மெல்லியதாய் இதழ் வளைத்து மேலும் இடைவெளியை குறைக்க அவனின் இரத்தம் தரையில் சொட்டியது. அதில் பதறியவள் வேகமாய் அவன் நெஞ்சில் கரம் பதித்து தள்ள முயல, பட்டென்று இடைவெளியை உடைத்து அவள் இதழ்களை சிறை செய்தவனின் இதயத்தில் மொத்தமாய் இறங்கியது அந்த கத்தி.
அதில் அதிர்ந்த அவள் விழிகள் அகல விரிய, அவனோ எதையும் பொருட்படுத்தாது வேகமாய் அவள் இதழ்களை சுவைக்க துவங்கினான்.
அதில் இறுக்கி விழி மூடியவளின் மனம் பதறி, முழு பலமாய் அவனை விலக்க முயல, அவனே மயங்கி அவள் தோள்பட்டையில் சரிந்தான்.
அதில் பதறி அவனை தாங்கி பிடித்தவள், “ஹேய் இங்க பாரு.” என்று அவன் பின்தலையை தாங்கி பிடிக்க, அவன் முகம் அவள் கழுத்தில் புதைய, அவன் கரங்கள் அப்படியே சரிந்து தொங்கிவிட்டது.
அதில் அவனின் மொத்த உடல் பாரமும் அவள் மீது இறங்க, தடுமாறி சுவரில் புதைந்தவள், அவசரமாய் அவன் மார்பிலிருந்த கத்தியை முதலில் வெளியில் எடுக்க, அதுவோ சட்டென்று வந்திருந்தது.
அதில் அவள் புரியாது அதை தூக்கி பார்க்க, வெறும் கைப்பிடிதான் இருந்தது, கத்தியை காணவில்லை. அதில் அதிர்வாய் விழி விரித்தவள், அவன் மார்புக்குள் உடைந்து சிக்கிவிட்டதோ என்று பதறி அவன் மார்பை தொட்டு ஆராய, அவள் கையிலிருந்த கத்தியின் கைப்பிடியை விட்டாள்.
அது இருவரையும் உரசியபடி கீழே சரிய, அதை பட்டென்று பிடித்தது அவன் கரம். அதில் அவள் திடுக்கிட்டு அவன் கரத்தை பார்க்க, அந்த கைப்பிடியை மெதுவாய் தூக்கிய அவன் கரம், மெதுவாய் ஒரு அழுத்தம் கொடுக்க பட்டென்று வெளியில் வந்தது கத்தி. ஏனென்றால் அது ஒரு பட்டன் கத்தி.
அதில் அவள் அதிர்வாய் திரும்பி இவனை பார்க்க, அவனோ அவள் கழுத்தில் அழுத்தி ஈரம் செய்தபடியே அவள் காதுரசி, “என் ஹார்ட்டு அவ்ளோ வீக்கில்ல டார்லு.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் மெல்லியதாய் நெளிந்து பதறியவள் அவன் கரத்தை பிடித்து அந்த கத்தியை ஆராய, அதில் கால்வாசி வரை அவனின் இரத்தம் இருந்தது. அதற்கு மேல்தான் பட்டனை அழுத்தி கத்தியை உள்ளிழுத்திருக்கிறான் என்பது புரிய, அப்போதும் அவனை விலக்காமல் அவள் மார்பை பதறி ஆராய்ந்தாள்.
காயம் சற்று ஆழமாகவே இருக்க, அவள் கண்கள் கலங்கியது. “உனக்கென்ன பைத்தியமா?” என்று அவள் கமறிய குரலில் கேட்க, அவள் கன்னத்திற்கு கீழும் இதழை படரவிட்டு, “உன்மேல.” என்றான் அனல் மூச்சாக.
அதில் முகத்தை சுழித்து நெளிந்தவள், அவனை விலக்க முயல, சட்டென்று அவளை சுவரோடு சிறை செய்து அவள் விழி பார்த்தான். அத்தனை நெருக்கத்தில் அவனின் முகம் அவள் முகத்தை மெதுவாய் உரச, அவளோ பதற்றமாய் அவன் விழிகளை பார்த்தாள். அவளின் அந்த ஈர இமைகளின் நடுவே தேங்கி நின்ற தனக்கான கண்ணீரை தன் கட்டை விரலால் உரசியபடியே அவள் கன்னம் பிடிக்க, அவள் இதயம் சட்டென்று துடிப்பை அதிகரிக்க, அப்படியே அவள் முகமெங்கும் பூத்திருந்த நீர் துளிகளை தன் புறங்கையால் துடைத்தபடியே அவள் முகத்தை அளந்தவன், “இன்னொரு தெடவ என்ன தள்ளிவிடுற வேல வெச்சுகிட்ட..” என்றவனின் கரம் அவள் கழுத்திற்கு நகர, அவளோ திடுக்கிட்டு விழி விரிக்க, பதற்றத்தில் குழிந்த அவள் தொண்டையில் மென்மையாய் இதழ் பதித்து, “அப்றம் உனக்குதா கஷ்டம்.” என்றவனின் மீசை அங்கு மெதுவாய் உரசியது.
அதில் அவள் பதற்றத்தையும் தாண்டி உடல் குறுகுறுத்து நெளிய, அங்கிருந்த நீர் துளிகளை அழுத்தி சுவைத்தது அவன் இதழ்கள். அதில் அவள் கரத்தையும் கண்களையும் இறுக்கி மூடி குறுக, அதில் குறுகிய அவள் மார்புக்குழியில் வழிந்து சென்ற ஒரு நீர் துளியை மெதுவாய் துடைத்து எடுத்தது அவன் நாவின் நுனி.
அதில் பிடித்தமின்மையாய் முகம் சுழித்தவள் முகத்தை திருப்பிக் கொள்ள, அதில் திரும்பிய அவள் காதில் மீசையை அழுத்தி உரசியவன், அதில் அவள் புருவத்தை குறுக்கும் நேரம், “ஐ காண்ட் கன்ட்ரோல்.” என்றான் அனல் மூச்சாக.
அதில் அவள் சட்டென்று விழி திறக்க, அவனின் கரம் அவளின் மணி வயிற்றில் தாராளமாய் படர்ந்து பதிய, அதில் குறுகியபடி சுவரில் புதைந்துவிட்டவளின் இதயம் அத்தனை வேகமாய் துடிக்க, அப்படியே அவள் முகமெங்கும் தன் முகத்தை உரச தன் ஈரத்தை இடம் பெயர்த்து, அவள் ஈரத்தை தனதாக்க, அதில் அவள் அவஸ்த்தையை முகத்தை குறுக்கவும் இதழால் மீண்டும் ஈரம் செய்து துடைத்தபடியே அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “சீக்கிரம் குளிச்சிட்டு வா.”என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் பதற்றமாய் விழியை நகர்த்தி அவனை பார்க்க, அவள் இதழில் மென்மையாய் முத்தமிட்டு, “ஐயம் வெயிட்டிங் ஃபார் யூ.” என்று மெல்லிய குரலில் கூறி மெதுவாய் விலகினான்.
அதில் அவள் புரியா பதற்றமாய் அவனையே பார்க்க, அவளை பார்த்தபடியே மெல்ல பின்னால் நகர்ந்தவனின் பார்வை அவளை மேலிருந்து கீழ் கிறக்கமாய் தழுவ, சேலையில்லாமல் வெறும் ஜேக்கட்டுடன் ஈரம் வழிய வழிய நின்றிருந்தவளின் மேனி இவனின் மோகத்தை வெகுவாய் தூண்ட, வேகமாய் தன் சேலையை எடுத்து சுருட்டி பிடித்து தன்னை மறைத்துக் கொண்டாள் அவள்.
அதில் அதே கிறக்கத்துடன் மெல்ல இதழ் வளைத்தவன், “லேட் பண்ணிராத.” என்றபடியே நகர்ந்து வெளியில் சென்றுவிட்டான்.
அதில் புரியா பதற்றமாய் சேலையை தன் மார்போடு இறுக்கி பிடித்து நின்றவளுக்கோ, அவன் வார்த்தைகளின் அர்த்தம் பிரளயத்தையே கிளப்ப, “ஜஸ்ட் டென் மினிட்ஸ்” என்று வெளியிருந்து கேட்டது அவன் குரல்.
அதில் திடுக்கிட்டு பதறியவள், வேகமாய் சென்று கதவை அடைக்க போக, சட்டென்று அவள் உடலை உரசி வந்து நின்றான் அவன்.
அதில் அவள் அதிர்வாய் பின்னெட்டு வைக்கும் முன், மென்மையாய் அவள் இதழில் பதிந்து விலகியது அவன் இதழ்கள். அதில் தடுமாறி விலகி நின்றவள் தன் கையிலிருந்த சேலையை இறுக்கி பிடித்து பார்வையை தாழ்த்த, அதை இரசித்தபடியே அந்த கதவுகளை முழுதாய் திறந்துவிட்டவன், “இந்த கதவு தெறந்துதா இருக்கணும்.” என்றான் அத்தனை மென்மையாக.
அதில் அவள் அதிர்வாய் விழி விரிக்க, அவனோ அப்படியே திரும்பி நகர்ந்தான். அதில் அதிர்வாய் நிமிர்ந்து அவனை பார்த்தவளுக்கோ இவனெல்லாம் என்ன ஜென்மம் என்று கோபம் பற்றிக் கொண்டு வர, வேண்டுமென்றே கதவை படாரென்று அடித்து சாத்தினாள் அமீரா.
அதில் திடுக்கிட்டு நின்றவனின் கைகள் இறுக, விரல்களை இறுக்கி மூடி, அப்படியே தன் ஈர கன்னத்தை அழுத்தி துடைத்தவனின் விழிகள் கோவத்தில் சிவந்தது.
இங்கே உள்ளே வந்த அமீரா இரண்டடி முன்னால் எடுத்து வைத்த நேரம், தடாரென்று ஒரு சத்தத்தில் அவள் திடுக்கிட்டு அதிர்வாய் திரும்பி பார்க்க, அவள் முன் சுக்குநூறாய் உடைந்து விழுந்தது அந்த கதவு.
அடுத்த நொடி இங்கே சட்டென்று விழி திறந்தான் விராஜ். அவனுக்கோ தன் மீராவிற்கு ஆபத்து என்று தோன்ற, வேகமாய் எழ முயற்சித்து முடியாமல் மெத்தையில் புதைந்தான்.
அதில் அவசரமாய் அவன் அருகில் வந்தமர்ந்த அவனின் அம்மா விமலா, “என்ன ஆச்சுப்பா விராஜ்? எதாவது வேணுமா?” என்று பதறி கேட்க, “மீ..மீர்..” என்றவனால் அதற்கு மேல் வார்த்தை அடைக்க, அவன் தலையை அழுத்தி நீவியவர், “ஒன்னும் இல்ல. உன் மீரா கண்டிப்பா கெடச்சிருவா. ரிலேக்ஸ்.” என்று கூற, அவனோ அப்போதும் சமாதானம் ஆகாமல், “டே..ட்” என்று கூற முயற்சிக்க, “சரி சரி நா கால் பண்ணி தர்றேன்.” என்று அவசரமாய் விக்ரமனுக்கு கால் செய்தார்.
இங்கே அந்த காட்டிற்குள் தன் ஆட்களுடன் சென்றுக் கொண்டிருந்த விக்ரமனின் கைப்பேசி ஒலிக்க, உடனே எடுத்து பார்த்து காலை அட்டன் செய்தவர், “சொல்லு. விராஜ் நல்லா இருக்கான்ல?” என்று சிறு பதறலாய் கேட்க, “அவன் திரும்ப மீரா மீரான்னு சொல்லி ஸ்ட்ரெயின் பண்ணிட்டிருக்கான். நீங்க பேசுங்க.” என்று அவன் காதில் மொபைலை வைத்தார் விமலா.
அவனோ அத்தனை சோர்வாய், “டே..ட்” என்று கூற வர, “உன் மீராவோடதா வருவேன். நீ எதுக்கும் கவலப்படாத.” என்றார் விக்ரமன்.
“அ..ஆனா டேட்..” என்று அவன் கூற வர, “உயிர குடுத்தாவது உன் மீராவ கூட்டிட்டு வர்றேன்..” என்று அவர் கூறி முடிக்கும் முன் வெடித்து சிதறியது அந்த பாம்.
அதில் இங்கே திடுக்கிட்டு மொபைலை தள்ளிவிட்ட விராஜின் காதிலிருந்து இரத்தமே வந்திருக்க, அவன் இதயமே நின்று உடல் உறைந்திருந்தது.
– நொடிகள் தொடரும்…