அத்தியாயம் 4
அவன் மனம் மாறுவதற்குள் எப்படியாவது அனைத்தையும் ஏற்பாடு செய்து இன்று தனது பாஸ்குணமடைய செய்து விட வேண்டும் என்று குறியாக இருந்த திலீப், “எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டேன் பாஸ். இப்ப வர போற பொண்ண உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.நாளைக்கு மார்னிங் ஆகும்போது, நம்மளுக்கு இருக்கிற எல்லா ப்ராப்ளமும் ஒரேடியா சால்வ் ஆகிடும்.” என்று உற்சாகமான குரலில் சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்பினான்.
ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷி, “அவ கடைசியா என் கிட்ட பேசி இன்னையோட 100 டேஸ் ஆகிடுச்சு. இந்த 100 டேஸ்ல என் லைஃப்ல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. எனக்கு இதெல்லாம் ஏன் நடந்துச்சுன்னு இப்ப வரைக்கும் என்னால் நம்ப முடியல. எது மாறினாலும் நீ மாற மாட்டேன்னு நான் நினைச்சேன் தனு.
நமக்கு மேரேஜ் ஆகும்போதுல இருந்து, நீயும் நானும் சாகுற வரைக்கும் நம்ம லைஃப் எப்படி எல்லாம் இருக்கணும்னு உன் கூட நான் வாழ போற ஒவ்வொரு நாளையும் நான் டிசைன் பண்ணி வெச்சிருந்தேன்.பட், என்னோட லைஃப் கொலாப்ஸ் ஆனதுக்கப்புறம் என் கூட இருக்கறதுனால உனக்கு எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு நெனச்சு நீ ஒரு பிளான் பண்ணி உன் பேரன்ட்ஸ் உனக்கு அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறாங்கன்னு சிம்பிளா சொல்லிட்டு என்னை விட்டு போய்ட்டில்ல!” என்று நினைத்து தனக்குள் விரத்தியுடன் புன்னகைத்துக் கொண்டான்.
பின் தன்னுடைய மொபைல் ஃபோனை போனை எடுத்து பார்த்தான். அவனுடைய லாக் ஸ்கிரீனில் ஒரு அழகான இளம் பெண்ணை அவன் தன் தோள்களில் சுமந்து கொண்டு பீச்சின் மணலில் சிரித்த முகமாக நடந்து செல்ல, அவனைப் போல அவனை அணைத்துக் கொண்டு அவன் மீது இருந்த அந்த இளம் பெண் விரிந்த புன்னகையுடன் அவனுடன் நெருக்கமாக இருந்தாள். இத்தனை வருடங்களாக அவன் பார்த்து ரசித்த அந்த பெண்ணின் முகத்தை இப்போது பார்த்தாலே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
அதனால் உடனே தனது லாக் ஸ்கிரீனில் இருந்த ஃபோட்டோவை மாற்றிய ரிஷி, தனது ஃபோனில் இருந்த அவளுடைய அத்தனை ஃபோட்டோக்களையும் இருந்த கோபத்தில் டெலிட் செய்து தள்ளினான். ஆனால் அவன் இதயம் முழுவதும் இணைந்திருக்கும் அவளையும், அவனுடைய மூளை முழுவதும் ஞாபகங்களாக ஆக்கிரமித்திருக்கும் அவள் நினைவுகளையும் என்ன செய்து அழிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.
அவன் இவ்வாறாக தனுவின் ஞாபகங்களில் தன்னை மறந்து இருக்க, சில நிமிட பயணத்திற்கு பிறகு தங்களுடைய காரை ஒரு பங்களா வீட்டின் முன்னே கொண்டு சென்று நிறுத்தினான் திலீப். கார் வரும் சத்தம் கேட்டவுடன் ஏற்கனவே தாங்கள் இங்கே வரப்போகும் செய்தியை அவன் வாட்ச்மேனிற்க்கு கால் செய்து இன்ஃபார்ம் செய்து இருந்ததால், உடனே வேகமாக வந்து செக்யூரிட்டி டீமெல் இருக்கும் இருவர் பெரிய கேட்டை கார் வருவதற்காக திறந்து விட்டார்கள். நேராக உள்ளே சென்று காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திய திலீப், காரில் இருந்த ரிசியை வீல் சேர் உதவியுடன் கீழே இறக்கி மெதுவாக தள்ளிக் கொண்டு சென்றான்.
தரைத்தளத்தில் உள்ள ஒரு ரூமிற்கு ரிஷியை அழைத்து சென்ற திலீப், “நீங்க ஒரு 10 மினிட்ஸ் இங்க வெயிட் பண்ணுங்க பாஸ்.என் ஃபிரண்டு சொன்ன ஆளுங்க பக்கத்துல வந்துட்டாங்களாம்.அவங்க கிட்ட இருந்து கால் வந்ததுச்சு. எல்லாம் ரெடியானதும் நான் உங்கள வந்து உள்ள கூட்டிட்டு போறேன்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவனுக்கு துணையாக அங்கே ஒரு வேலையாளை விட்டுவிட்டு சென்றான்.
பின் அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு கூட தெரியாமல் ஒரு மாஸ்கை அணிந்து கொண்டு அந்த பங்களாவின் பின் பக்க வாசலுக்கு சென்று அங்கே இருந்த சீக்ரெட் டோரை திறந்துவிட்டு சிலரை உள்ளே அழைத்து வந்தான் திலீப். பின் அனைத்தையும் அரேஞ்ச் செய்துவிட்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் “பாஸ் எல்லாம் ரெடி, வாங்க போகலாம்!” என்று சொல்லி ரிஷி இருந்த ரூமிற்கு சென்று அவனை அழைத்துக் கொண்டு வேறொரு ரூமிற்கு சென்றான் திலீப்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)