Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 3

போதையடி நீ எனக்கு CH 3

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 3

இத்தனை நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தனது பாஸ் ஒரு வழியாக இன்று இதற்கு ஓகே சொல்லி விட்டதால்‌ இனி தங்களுக்கு நல்ல காலம் தான் என்று நினைத்து சந்தோஷப்பட்ட திலீப் ‌ உடனே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தனது நண்பன் ஒருவனுக்கு கால் செய்தான். திலீப் அவனிடம் “மச்சான் இப்பவே எனக்கு ஒரு பிரஷ்ஷானா பொண்ணு வேணும். பாக்குறதுக்கு அவ நல்லா டின் பீர் மாதிரி கும்முனு இருக்கணும்.அவள பாத்தாலே மூடு வரணும். ஒரு 20ல இருந்து 30 வயசுக்குள்ள இருக்கிற பொண்ணா இருக்கணும். ‌அந்த மாதிரி ஏதாவது பொண்ணை உன்னால அரேஞ்ச் பண்ணி தர முடியுமா? எவ்ளோ செலவானாலும் பரவால்ல. எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு இன்னைக்கு நைட்டு ஒரு பொண்ணு வேணும்.” என்று கேட்க,

“அது எல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல டா. கேட்டா உடனே அரேஞ்ச் பண்ணி குடுத்துடுவானுங்க. நமக்கு இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் எல்லா பக்கமும் ஆள் இருக்கு.‌ ஆனா எனக்கு என்ன டவுட்னா.. உனக்கு தெரிஞ்சா எவனோ ஒருத்தனுக்காக நீ பொண்ண உஷார் பண்ணி கொடுக்க சொல்றியா.. இல்ல உன் ஃபிரண்டுக்குன்னு சொல்லி புது ஃபிகரா தனியா தள்ளிட்டு போய் நீயே யாருக்கும் தெரியாம அவ கூட என்ஜாய் பண்ணனும்னு கேக்குறியா?” என்று கிண்டலாக கேட்டான் லைனில் இருந்தவன்.

“டேய் நேரம் காலம் தெரியாம லூசுத் தனமா பேசாத டா. நான் ஒன்னும் உன்ன மாதிரி இல்ல. எனக்கு என் பொண்டாட்டி போதும். இப்ப யாருக்காக நான் இத கேட்கிறேனோ, அவர பத்தி டீடெயில்ஸ் என்னால சொல்ல முடியாது.நீ எனக்கு பர்சனலா இத அரேஞ்ச் பண்ணி குடு.‌ அந்த பொண்ண நாங்க சொல்ற இடத்துக்கு தான் கூட்டிட்டு வரணும். எல்லாமே சீக்ரட்டா நடக்கணும். அந்த பொண்ணுக்கே வரப்போறவர் யாருன்னு தெரியவே கூடாது. அந்த பொண்ணை அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறவங்களுக்கும் தெரிய கூடாது. இது ரொம்ப ரொம்ப கான்ஃபிடன்ஷியல்.‌ அதான் வெளிய போய் வேற யார் கிட்டயும் கேட்காம நான் உன் கிட்ட ஹெல்ப் கேட்கிறேன்.பணத்த பத்தி எல்லாம் பிரச்சன இல்ல. எவ்ளோ செலவானாலும் பரவால்ல.‌ பட் நாளைக்கு விடியுற வரைக்கும் அந்த பொண்ணு ‌ எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கணும். விடிஞ்சதும் உங்க ஆளுங்க அந்த பொண்ண கூட்டிட்டு போகலாம்.” என்று திலீப் தன் நண்பனிடம் சீரியஸாக சொல்ல, ‌‌

அவன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்கிறான் என்றாலே கண்டிப்பாக அது அவனுக்காக இருக்காது என்று புரிந்து கொண்ட அவனுடைய நண்பனும், “ஓகே டா, ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ எங்கன்னு லோகேஷன் மட்டும் அனுப்பு. நீங்க சொல்ற டைம்க்கு அங்க பொண்ணு இருக்கும். அதுக்கு நான் guarantee.பேமெண்ட் டீடெயில்ஸ் எல்லாம் நான் புரோக்கர் கிட்ட கேட்டுட்டு உனக்கு சென்ட் பண்றேன், bye.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.  அனைத்தையும் பேசி முடித்து ஒரு பெண்ணுடைய ஃபோட்டோவை பார்த்து அவளை தனது boss-ற்க்காக கன்ஃபார்ம் செய்த திலீப்,ரிஷி அவளுடன் முதல் முறையாக தனது இரவை கழிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அவளை வாங்கினான். பின் திரும்பி ரிஷியை பார்த்து ‌“பாஸ்.. நம்மளோட பிரைவேட் கெஸ்ட் ஹவுஸ்க்கு அந்த பொண்ணை கூட்டிட்டு வர சொல்றதா?” என்று திலீப் கேட்க, வழக்கம்போல அதற்கும் “ம்ம்..!!” என்று மட்டுமே சொன்னான் ரிஷி.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured