அத்தியாயம் 176
தேன்மொழியை தூக்கி கொண்டு போய் காரில் அமர வைத்த அர்ஜூன் அவனே ட்ரைவ் செய்ய தொடங்கினான். இந்தியாவில் டிரைவிங் செய்யும் போது பொதுவாகவே அர்ஜுன் கொஞ்சம் மிதமான வேகத்தில் தான் செல்வான். ஆனால் இன்று என்னவோ கல்யாண ஊர்வலத்தில் செல்பவனை போல அவன் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டு இருப்பதை கவனித்த தேன்மொழி சந்தேகமாக “என்னாச்சு அர்ஜுன்? ஏன் இவ்வளவு ஸ்லோவா போற? சைக்கிள்ல போறவங்க கூட நம்மள விட ஃபாஸ்டா போவாங்க போல!
நான் காலையில வீட்ல இருந்து கிளம்பி வந்தேன். ஹாஸ்பிடல்ல என்னையும் சோனியா ஆன்ட்டியையும் அட்மிட் பண்ணதுனால வீட்ல இருக்குறவங்க எல்லாரும் கிளம்பி வந்துட்டாங்க. சித்தார்த்தும் ஆருத்ராவும் பாவம் வீட்டில தனியா இருப்பாங்க இல்ல..
அங்கே யாரும் இல்லைனா அவர்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? நான் வீட்டுக்கு சீக்கிரம் போலாம்னு பார்த்தா நீ என்ன லேட் பண்ணிக்கிட்டே இருக்க!” என்று கேட்டாள்.
“நான் தான் சொன்னேனே.. டாக்டர் உன்னை கேர்ஃபுல்லா பாத்துக்க சொல்லி இருக்காங்க. நம்ம ஸ்பீடா போக கூடாது.” என்று மட்டும் சொன்ன அர்ஜுன் எதையும் தெளிவாக சொல்லி அவளை பயமுறுத்த வேண்டாம் என நினைத்தான். அவர்களை பின் தொடர்ந்து விஜயாவும் காலேஜில் இருந்து பாதியில் வந்த ஆதவனும் வேறு ஒரு காரில் வீட்டுக்கு சென்றார்கள்.
தேன்மொழியை தங்களுக்கு காப்பாற்றி கொடுத்த சோனியாவை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்று நினைத்த ஜானகி ஹாஸ்பிடலிலேயே இருந்து விட்டாள்.
அர்ஜுன் சொன்ன பதிலில் திருப்தி அடையாத தேன்மொழி “நீ இன்னைக்கு ரொம்ப வியர்டா பிகேவ் பண்ற அர்ஜுன். சோனியா ஆன்ட்டிய கடைசி வரைக்கும் நீ என்னை பார்க்கவே விடல. இப்ப நம்ம கார்ல தானே போறோம்.. அட்லீஸ்ட் சீக்கிரமா வீட்டுக்கு போய் குழந்தைகளையாவது பார்க்கலாம்னு நினைச்சா டாக்டர் சொன்னாங்கன்னு ஸ்லோவா போறேன்னு சொல்ற..
பிரக்னண்டா இருக்கிற லேடிஸ் எல்லாம் எத்தனை பேர் வெளிய ஜாப் போறாங்க! நான் எப்பவுமே வீட்டுக்குள்ள தான் இருக்கேன். இன்னிக்கி ஒரு நாள் நம்ம கார்ல டிரைவ் பண்றதுனால எனக்கு என்ன ஆக போகுது?” என்று கேட்க,
இவளிடம் பொறுமையாகவே பேசிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக இவள் மீண்டும் மீண்டும் தன்னிடம் ஏதேனும் கேள்வி கேட்டு நச்சரித்துக் கொண்டே இருப்பாள் என்று நினைத்த அர்ஜுன் அவளை திரும்பி பார்த்து முறைத்தபடி “நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன். கண்ணு தெரியுதா இல்லையா உனக்கு? இப்படித் தான் டிரைவிங்ல இருக்குறவங்கள பேசி பேசி டிஸ்டர்ப் பண்ணுவாங்களா? நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும். நீ சைலன்டா இருந்தா போதும்.” என்றான். அவன் எதிர்பார்த்ததை போலவே அவன் பேசியதில் கோபப்பட்ட தேன்மொழி அதற்கு மேல் அவனிடம் பேசவே இல்லை.
தன் அம்மா அட்மிட் ஆகி இருக்கும் ஹாஸ்பிடலில் வெட்டிங் ஏரியாவில் உள்ள விஐபி ரூமில் தங்கிக் கொண்ட சுனில் அவனது அசிஸ்டன்ட்டை அங்கே வரவழைத்து “அந்த நம்பர் யாருதுன்னு டிரேஸ் பண்ணீங்களா?” என்று கேட்க, “சாரி சார் எங்களால இந்த நம்பர் யாரோடதுன்னு detect பண்ணவே முடியல. ஒவ்வொரு செகண்டுக்கும் அதோட டவர் லொகேஷன் மாறிக்கிட்டே இருக்கு.
அட்லீஸ்ட் அவன் உங்களுக்கு கால் பண்ணி பேசினா கூட எக்ஸாக்ட் லொகேஷன் எதுன்னு கண்டுபிடிக்க ஒரு சான்ஸ் இருக்கு. அவன் ஜஸ்ட் மெசேஜ் தானே பண்ணிட்டு இருக்கான்.. சோ எவ்ளோ ட்ரை பண்ணாலும் அவனை டிரேஸ் பண்ண முடியல.
பட் இது எல்லாத்தையும் பார்த்தா அவன் சாதாரண லோக்கல் பர்சனா இருப்பான்னு எனக்கு தோணல. இது எல்லாத்தையும் இன்டர்நேஷனல் லெவல் காண்டாக்ட் இருக்கிறவங்களால தான் ஈசியா பண்ண முடியும். எதுக்கும் நம்ம அவங்க கிட்ட கேர்புல்லாவே இருக்கணும் சார். நாளைக்கு அவன் உங்கள வச்சு ஏதாவது பண்ணிட்டு கடைசில உங்களையே மாட்டி விடறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.” என்று சுனிலை எச்சரித்தான் அவன் அசிஸ்டன்ட்.
அவன் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சுனில் இத்தனை நாட்களாக தான் செய்ய துடித்துக் கொண்டு இருந்த ஏதோ ஒரு விஷயத்தை செய்வதற்கு தானாக வாய்ப்பு கிடைத்ததை போல வில்லத்தனமாக சிரித்தான். கண்டிப்பாக இந்த முறை அவன் இந்த வாய்ப்பை நழுவ விடுவதாக இல்லை.
சித்தார்த் ஆருத்ரா இருவரும் கார்டன் ஏரியாவில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது மெயின் கேட் திறக்கப்பட, என்ட்ரன்ஸ் வழியாக அர்ஜூனின் கார் உள்ளே வந்தது. அதை கவனித்த ஆருத்ரா உற்சாகமான குரலில் “டாடி வந்துட்டாரு!” என்றபடி எழுந்து நின்றாள். உடனே சித்தார்த்தும் ஊஞ்சலில் இருந்து கீழே இறங்கினான்.
அர்ஜுனின் கார் போர்டிகோவிற்கு செல்ல, அவர்கள் இருவரும் அதன் அருகில் சென்றார்கள். காரில் இருந்து அவசரமாக கீழே இறங்கிய அர்ஜூன் தேன்மொழி அமர்ந்து இருந்த கதவின் பக்கம் சென்று அவனாகவே அதை திறந்து உள்ளே அமர்ந்து இருந்த தேன்மொழியை தனது கைகளில் தூக்கிக் கொண்டான்.
அந்த காட்சியை பார்த்தபடி சித்தார்த்தும், ஆருத்ராவும் வாக்கிங் ஏரியாவின் ஒரமக நிற்க, யாரையும் கண்டு கொள்ளாமல் தேன்மொழியை பத்திரமாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அர்ஜுன் அவளுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அதை பார்த்துவிட்டு சித்தார்த் ஆருத்ரா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து விஜயாவும் ஆதவனும் இறங்கினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து இரண்டு டாக்டர்களும் மூன்று செவிலியர்களும் அடுத்தடுத்து வந்து இறங்கினார்கள். அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வேனில் தேன்மொழிக்கு டிரீட்மென்ட் கொடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் அங்கே வந்து இறங்கியது.
“இது எல்லாம் எனது சித்? இவங்க டாக்டர்ஸ் தானே! இவங்க எதுக்காக இங்க வந்து இருக்காங்க? முன்னாடி டாடி கோமால இருந்தப்போ இப்படித்தானே நம்ம வீட்ல டாக்டர்ஸ் டீம் இருப்பாங்க.. மறுபடியும் எதுக்கு இவங்க எல்லாம் வந்திருக்காங்க? அப்ப யாருக்காவது உடம்பு சரியில்லையா?” என்று ஆருத்ரா சித்தார்த்தின் கையை பிடித்துக் கொண்டு கேட்க,
தேன்மொழியுடன் லிஃப்டில் ஏறிக் கொண்டு இருந்த அர்ஜுனை எட்டிப் பார்த்த சித்தார்த் “அவங்களுக்கு தான் உடம்பு சரி இல்லைன்னு நினைக்கிறேன். அதனால தான் டாடி அவங்க தூக்கிட்டு போறாரு.” என்றான்.
ஏற்கனவே தன்னை பெற்ற தாயை இறந்துவிட்டு தவிக்கும் ஆருத்ரா, இப்போது அவள் உருவத்தில் வந்த தேன் மொழியையும் தாங்கள் இலக்க நேரிடுமோ? என நினைத்து உள்ளுக்குள் பயந்தாள். ஆனால் இப்போது எல்லாம் சித்தார்த்திற்கு தேன்மொழியை பிடிப்பதில்லை என்பதால் அவன் முன் அதை அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம் தேன்மொழிக்கு என்ன ஆனது என்று சென்று பார்க்காமலும் இருக்க முடியாததால் சித்தார்த்தின் கையை விட்டுவிட்டு உள்ளே ஓடினாள் ஆருத்ரா.
இவ்வளவு நேரம் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் ஆருத்ராவுடன் ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சித்தார்த், தேன் மொழியை கண்டவுடன் அவள் உள்ளே ஓடியதால் “உனக்காக எப்பவும் நான் இருப்பேன் ருத்ரா. பட் எனக்காக நீ இருப்பியா? இல்ல நீயும் டாடி மாதிரி இவங்க கூட போய் சேர்ந்துடுவியா?” என்று யோசித்து வருத்தப்பட்டான்.
அர்ஜுன் ஆபீஸில் இருந்து பாதியில் அப்படியே வந்திருந்ததால் அவன் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டு இருந்தது. அதனால் அங்கே சென்று தன்னால் முடிந்தவரை பிரிட்டோ அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் எவ்வளவு விசாரித்து பார்த்தும் ஒரு துப்பும் கிடைக்காததால் எரிச்சல் அடைந்த மைக்கேல் தங்களது ஆட்களிடம் அவர்கள் அனைவரையும் அவர்களது வீட்டிற்கு அனுப்ப சொல்லி விட்டு வாடிய முகத்துடன் இரவு வீடு வந்து சேர்ந்தான்.
அர்ஜுன் வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து தேன்மொழி கட்டிலில் படுத்துக் கொண்டே இருந்தாள். இதற்கு முன்பும் அவள் வீட்டிற்குள் அதை அறையில் வெகு நேரம் இருந்திருக்கிறாள். ஆனால் இப்போது அர்ஜுன் அவளை அசையவே கூடாது என்று சொல்லி வற்புறுத்தி அப்படி படுக்க வைத்திருக்கும் போது என்னவோ அது அவளுக்கு சுமையாக இருந்தது.
காலையில் கோவிலுக்கு கட்டிச் சென்ற பட்டுப் புடவையை கூட இன்னும் அவள் மாற்றி இருக்கவில்லை. இதில் நடுநடுவில் வந்து டாக்டர்களும் நர்சுகளும் அவளை செக் செய்வதற்காக வந்து சென்று கொண்டே இருந்ததால் வீட்டிற்கு டிஸ்டார்ஜ் ஆகி வந்த பிறகும் கூட அவளுக்கு என்னவோ தான் ஹாஸ்பிடலில் இருப்பதைப் போலவே ஒரு உணர்வு வந்தது.
அதில் பொறுமையை இழந்த தேன்மொழி தனக்காக புதிதாக ஒரு ஜூஸுடன் வந்து தன் முன்னே நின்று கொண்டு இருக்கும் அர்ஜுனை முறைத்து பார்த்தாள். “இந்தா நீ கேட்ட மாதிரி இதுல நான் கொஞ்சம் நாட்டு சக்கரை போட்டு கொண்டு வந்து இருக்கேன். சோ இது நான் முன்னாடி குடுத்த ஜூஸ் அளவுக்கு கசக்காது. அதனால எந்த ரீசனும் சொல்லாம ஒழுங்கா இதை குடி.” என்ற அர்ஜுன் அவள் முன்னே ஜூஸ் கிளாஸை நீட்டினான்.
அவனை மேலும் கீழும் பார்த்த தேன்மொழி “நான் பிரக்னண்டா இருக்கேனா இல்ல பேஷண்டா இருக்கேனான்னு எனக்கே தெரியல. நீ என்ன கொஞ்சம் கூட நகர விட மாட்டேங்குற அர்ஜுன்.
இதுவே எனக்கு ஸ்ட்ரெஸ் ஆகுது. இதுல சும்மா சும்மா எதையாவது கலக்கி கொண்டு வந்து ஜூஸ்ன்னு சொல்லி குடிக்க சொல்ற.. அது வேற கேவலமா இருக்கு. எப்படி என்னால குடிக்க முடியும்? இப்ப எதுக்கு நீ என்ன இப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?
நான் இன்னும் டிரஸ் சேஞ்ச் கூட பண்ணல. விட்டா என்ன எந்திரிச்சு ரெஸ்ட் ரூம் கூட போக விடமாட்ட போல!” என்று கடுப்பில் கத்தினாள்.
அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் கையில் வலுக்கட்டாயமாக ஜூசை திணித்த அர்ஜுன் “உன்ன டாக்டர் எப்படி பாத்துக்க சொன்னாங்களோ நான் அப்படி தான் பாத்துட்டு இருக்கேன். உனக்கு டவுட்டுன்னா சொல்லு.. பக்கத்துல தான் டாக்டர் இருக்காங்க. நான் இன்டர்காம்ல கால் பண்ணி வர சொல்றேன்.
அவங்க வந்து நீ பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு சொன்னா நீ கேட்டு தானே ஆகணும்! நான் அவங்கள வர சொல்லவா?” என்று கேட்க,
ஏகத்திற்கும் அவனை முறைத்த தேன்மொழி வெடிக்கென்று அவன் கையில் இருந்த ஜூசை பிடுங்கி மட மடவென குடித்துவிட்டு அதை அவனிடம் கொடுத்தாள். அருகில் இருந்த டேபிளில் அதை வைத்து அர்ஜுன் அவளது கூந்தலை மென்மையாக தடவி “குட் கேர்ள்! இப்படித் தான் நான் என்ன சொன்னாலும் அப்படியே கேக்கணும். எல்லாம் ஜஸ்ட் டூ மந்த் தான். அப்புறம் நீ நார்மலா இருக்கலாம்..” என்றான்.
தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவனை கோபமாக பார்த்த தேன்மொழி “அப்ப அந்த டூ மந்த்ஸ் முடிய வரைக்கும் நான் இதே பட்டு புடவையில இருக்கணுமா?” என்று கேட்க, “சேச்சே.. நான் இருக்கும் போது நீ எதுக்காக அதையெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணனும்? உனக்கு இங்க கொஞ்சம் அரேஞ்மென்ட் ஸ்பெல்லிங் இருந்துச்சு.
அது எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணி பாத்துட்டு வந்ததுல நான் உனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணனும்னு மறந்துட்டேன். நர்ஸ் கிட்ட நான் சொல்லி இருந்தா இதெல்லாம் டைம் பண்ணி இருப்பாங்க. பட் அவங்க வந்து உனக்கு டிரஸ் சேஞ்ச் பண்றது இல்ல எனக்கு விருப்பம் இல்ல.
அதான் முன்னாடியே அதெல்லாம் நானே பாத்துக்கிறேன்னு அவங்க கிட்ட ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன். உனக்கு ஹாஸ்பிடல்ல வேற இருந்தது ஒரு மாதிரி இருக்கும் இல்ல!
நீ அப்படியே படு. நான் போய் உனக்கு வார்ம் வாட்டர் வெச்சி கொண்டு வந்து டவல் பாத் பண்ணி விடுறேன். நீ நைட்ல டீசர்ட் பைஜாமா தானே போடுவ.. நான் போட்டு விட்டுடறேன். You don’t worry baby. ஜஸ்ட் ரிலாக்ஸ்ட்டா படுத்துகிட்டு ரெஸ்ட் எடுக்கிறது மட்டும் தான் உன் வேலை. உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட கேளு.
நான் இங்க இல்லாத டைம்ல கண்டிப்பா உன் கூட ரெண்டு மூணு பேர் இங்க உனக்கு அசிஸ்ட் பண்றதுக்கு இருப்பாங்க. சோ நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னை பத்திரமா பாத்துகுவோம்.” என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)