அத்தியாயம் 163: ஐ லவ் யூ ரித்திகா (பார்ட் 2)
நாராயணன் பேலஸில்….
ஆராதனாவின் அறை…
சோகமாக கோவிலில் இருந்து வந்த ஆராதனா, தன்னுடைய ஹேண்ட் பேக்கை தூக்கி பெட்டில் போட்டவள், தன்னுடைய ஆடைகளை மாற்றி விட்டு வந்து அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தாள். அவளின் முன்னே இருந்த காபி டேபிளில் ஒரு கிப்ட் பாக்ஸ் இருந்தது. அதன் மேலே, “ஐ அம் சாரி ஆராதனா. உன்னால முடிஞ்சா என்ன மன்னிச்சிடு.” என்று ஒரு குட்டி பேப்பரில் எழுதி வைக்கபட்டு இருந்தது. அதைப் பார்த்த உடனேயே அதில் இருப்பது ஹரியின் கையெழுத்து தான் என்று உணர்ந்து கொண்டவள், அந்த பேப்பரை கசக்கி தூக்கி எறிந்து விட்டு அந்த கிப்ட் பாக்ஸை ஓபன் செய்து பார்த்தாள்.
அந்த பாக்ஸின் உள்ளே பிங்க் நிறத்தில் அழகாக டெகரேட் செய்யப்பட்டு இருந்த ஒரு ஸ்டாபெரி கேக் இருந்தது. அந்த கேக்கில் ஹாப்பி பர்த்டே ஆராதனா என்று எழுதி இருந்தது. அதைப் பார்த்து விரக்தியுடன் புன்னகைத்த ஆராதனா, “இப்ப இந்த கேக்க வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது ஹரி..??? யாரும் இல்லாத இந்த ரூம்ல தனியா நானே இதை கட் பண்ணி என்னோட பர்த்டேவ செலிப்ரேட் பண்றதா..??? நீ சிம்பிளா இப்படி இந்த கேக்கை குடுத்துட்டு சாரி சொன்னா, அத நான் அக்சப்ட் பண்ணிகனுமா..??? என்னோட பர்த்டேவ எத்தனையோ தடவ யாருமே இல்லாம நான் இதே மாதிரி தனியா ஒரு ரூம்ல இருந்து நானே கேக் வாங்கி கட் பண்ணி “ஹேப்பி பர்த்டே டு மீ.” -ன்னு சொல்லி செலிபிரேட் பண்ணி இருக்கேன்.
ஆனா அப்போ இருந்தத விட எனக்கு இப்ப தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ நீயும் நானும் ஒரே வீட்ல இருக்கோம். காலையில இருந்து நீ எனக்கு ஒரு பர்த்டே விஷ் கூட என்ன பார்த்து சொல்லல. இந்த நிலைமையில எனக்கு இந்த கேக் ஒன்னு தான் குறைச்சலா..??? எனக்கு இத பார்த்தாலே இரிடேட் ஆகுது.” என்று அந்த கேக்கை பார்த்து ஹரி என்று நினைத்து தன் மனதில் இருந்தவற்றை எல்லாம் அந்த கேக்கிடம் சொல்லி புலம்பிய ஆராதனா அந்த பாக்ஸை அப்படியே மூடி வைத்துவிட்டு, சலிப்பாக தன்னுடைய பெட்டில் சென்று விழுந்தவளின் மனம் முழுவதும் ஹரி தான் நிறைந்து இருந்தான். அதனால் தன் அருகே இருந்த பெரிய சைஸ் டெடி பியரை கட்டிப்பிடித்துக் கொண்டு அதனுள் தன்னை தொலைத்த ஆராதனா, சத்தம் இன்றி அழத் தொடங்கினாள். 😭 😭 😭
இந்த இதயம் எனக்குள்ளே துடிக்கிறது, எனக்காக துடிக்கிறது, ஆனால் என்னுடைய பேச்சை மட்டும் எப்போதும் கேட்க மறுக்கிறது…. 💔
இந்த இதயம் இதமாய் ஒரு அரவணைப்பு வேண்டும் என்கிறது… 😍
நெருங்கி அருகில் செல்கையில், இது வேண்டாம்; பிரிவை நம்மால் தாங்க முடியாது என்று விலகி விடுகிறது…😕
எதுவும் வேண்டாம் நீ தனிமையில் இரு என்கிறது. 😐
தனிமை கொடுமை என்று அழகிய பல கற்பனைகள் செய்கிறது. 😒
கனவுகள் அனைத்தும் கானல் நீராய் போக… மீண்டும் தனித்து நிற்கிறது இந்த பாவ பட்ட இதயம்.🖤💫🌟✨
என் இதயமே.. நீ என்னுள் இருக்கிறாய், ஆனால் நான் உன்னுள் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்…. 🖊️நர்மதா சண்முகம். 🖤 💫 🌟 ✨
செண்பகத்தின் அறையில்…
கோவிலில் தான் ரெகார்ட் செய்த வீடியோவை செண்பகத்திடம் போட்டுக் காட்டினாள் சோபியா. அதைக் கண்டு திருப்தியாக புன்னகைத்த செண்பகம், “இந்த வீடியோவை என்னோட போனுக்கு சென்ட் பண்ணு. நானா இத பத்தி வருண் கிட்ட பேசுற வரைக்கும் நீ இத பத்தி அவன்கிட்ட எதுவும் சொல்ல கூடாது.
நான் வருணையும் ரித்திகாவையும் வச்சு ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் பண்ணலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். சோ நான் தாராவை வச்சு ஆன்லைன்ல இருந்து நிறைய ரெஃபரன்ஸ் எடுத்து வச்சிருக்கேன். எப்படியும் வருண் இதில எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டான். அதனால நான் சூஸ் பண்ண கேட்லாக்ஸ் எல்லாத்தையும் நீ ரித்திகா கிட்ட காமிச்சு அவளுக்கு எது எதெல்லாம் புடிச்சிருக்குன்னு பாத்து செலக்ட் பண்ணி வை. அது எல்லாத்துக்கும் இன்னைக்கே ஸ்டிட்ச் பண்ண ஆர்டர் கொடுத்துடு. நாளைக்கு எல்லா காஸ்ட்யூம்சும் ரெடியா இருக்கணும்.
நான் நிறைய தீம் யோசிச்சு வச்சிருக்கேன் அது எல்லாத்துலயும் நம்ம போட்டோ ஷூட் பண்ணனும். இந்த ஃபீல்டுலையே பெஸ்ட்டா இருக்கிற போட்டோகிராபர்ஸ் எல்லாரையும் ஒரு டீமா அரேஞ்ச் பண்ணி நீ இதற்கு பிக்ஸ் பண்ணிடு. ரெண்டு மூணு நாள் ஆனா கூட பரவால்ல. நான் ஆசைப்பட்ட மாதிரி இந்த போட்டோ ஷூட் நடக்கணும். இத மட்டும் நீ வருண் கிட்ட இன்பார்ம் பண்ணிடு.” என்று சொல்ல, “ஓகே மேம்.” என்ற சோபியா செண்பகம் தனக்கு கொடுத்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பதற்காக அங்கு இருந்து சென்று விட்டாள்.
கௌத்தமின் வீட்டில்…
அவனுடைய பெட்ரூமில் இருந்த கட்டலில் படுத்து கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்த கௌத்தம், பிரவீன் தன்னிடம் சொன்னதைப் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான். ஒரு புறம் தான் இப்படி செய்தால் ரித்திகா துன்பப்படுவாள் என்று நினைத்து அவனுடைய மனம் இதை செய்ய மறுத்தாலும், இன்னொரு புறம் நீ இப்படி செய்யவில்லை என்றால் ரித்திகா உடன் இணைவதற்கு உனக்கு இதை விட வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை என்று அவனிடம் சொல்லிக் கொண்டு இருக்க, என்ன செய்வது என்ற குழப்பத்தில் சில நிமிடங்கள் அமைதியாக யோசித்துக் கொண்டு இருந்தான் கௌத்தம்.
சில நிமிடத்திற்கு பின் பெருமூச்சு ஒன்றை விட்ட கௌத்தம் தன்னுடைய மொபைல் போனில் இருந்த ரித்திகாவின் புகைப்படத்தை பார்த்து, “ஐ அம் சாரி ரித்திகா . எனக்கு இதை விட்டா, வேற வழி இல்ல. ஒரு வேளை நான் இதை பண்ணலைனாலும், வேற ஏதாவது ஒரு பிரச்சனையை கிரியேட் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு பிரவீன் என்ன வேணாலும் செய்வான். அதையும் மீறி உனக்கு இந்த கல்யாணம் நடந்தா அவன் உன்னை சந்தோஷமா வாழவிட மாட்டான்.
அதுக்கு நான் இப்படி செஞ்சுட்டா, நீயும் சந்தோசமா இருப்ப. நானும் சந்தோஷமா இருப்பேன். பிரவீன் சொன்ன மாதிரி ஒரு வேளை இந்தப் பிரச்சினையால உன்னோட பெயர் கெட்டு போயி நீ வெக்ஸ் ஆணா கூட, உன் கூட இருந்து உன்ன பார்த்துக்கறதுக்கு நான் ரெடியா இருக்கேன். முதல்ல நீ என் மேல கோபப்பட்டாலும், இது எல்லாத்தையும் நான் உன்னோட நல்லதுக்காக தான் செஞ்சுருக்கேன்னு நீ புரிஞ்சுகிட்டு என்ன ஏத்துப்பன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதைத் தவிர எனக்கு வேற வழி இல்ல ரித்திகா. எனக்கு புடிக்கலைனாலும் நான் இதை செஞ்சு தான் ஆகணும்.” என்று கலங்கிய கண்களுடன் ரித்திகாவின் புகைப்படத்தை பார்த்து அவளிடம் சொன்னவன், பிரவீனின் மேனேஜர் சங்கருக்கு கால் செய்து தான் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்வதாகக சொல்லி விட்டான்.
அதைக் கேட்டு மகிழ்ந்த பிரவீன், “நீ இந்த டிசிஷனை தான் எடுப்பேன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். நீ என்னை நம்பு. உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன். வருணிற்கு இந்த கல்யாணத்துல பெருசா எந்த இன்ட்ரஸ்ட் இல்ல. அதனால அவனால எந்த பெரிய பிரச்சினையும் வராது. நீ ஃப்ரீயா விடு. நான் என்ன சொல்றேன்னோ அதை கேள்வி கேட்காம அப்படியே செய். அது போதும்.” என்று சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தான்.
ஏதோ ஒரு வேகத்தில் கௌத்தம் பிரவீன் இடம் இந்த திட்டத்திற்கு சம்மதித்து இருந்தாலும், நாளை ரித்திகாவை தான் எப்படி எதிர்கொள்ள கூடும் என்று நினைத்து குற்ற உணர்ச்சியில் 💔 தவித்தான்.
சித்தார்த்தின் பள்ளியில்…
உணவு இடைவேளை…
வழக்கம்போல் சித்தார்த்தத்துடன் தானும் ரித்திகாவோடு இணைந்து உணவு உண்ணும் இடத்திற்கு வந்தாள் ஷாலினி. அப்போது சித்தார்த் தன்னுடைய முகத்தை சோகமாக கீழே தொங்க போட்டு அமர்ந்து இருப்பதை கண்டவள், “என்னாச்சு இவனுக்கு..!!! ஏன் இவ்ளோ சோகமா இருக்கான்னு தெரியலையே…!!!!” என்று நினைத்த ஷாலினி அவன் அருகே சென்று அமர்ந்து; “ஓய் குட்டி பையா ஏன் இப்ப ரொம்ப சேடா இருக்க..??? உங்க மிஸ் யாராவது உன்ன திட்டிட்டாங்களா..?? என்கிட்ட சொல்லு. நான் பதிலுக்கு அவர்களை திட்றேன். இந்த ஸ்கூல்ல உன்ன திட்ற அளவுக்கு எந்த ஸ்டாப்புக்கு தைரியம் இருக்குன்னு நானும் பார்க்கிறேன்.” என்றாள் அக்கரையாக.
சித்தார்த்: அவள் சொன்னதைக் கேட்டு மறுப்பாக தன்னுடைய தலையை அசைத்தவன், “யாரும் என்ன திட்டல ஷாலி.” என்றான்.
ஷாலினி: “அப்புறம் ஏன் டா இப்படி மூஞ்சிய உம்ன்னு வச்சுட்டு இருக்க…???” என்று குழப்பமான குரலில் கேட்டாள். 🙄
சித்தார்த்: “இன்னைக்கு என்னோட ரித்திஅம்மா ஸ்கூலுக்கு வரலல்ல…!!! அதான் எனக்கு சாப்பாடு ஊட்டி விட யாரும் இல்லைன்னு நெனச்சு நான் ரொம்ப சோகமா இருக்கேன்.” என்று தன்னுடைய முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொன்னான். 😔 😖
ஷாலினி: அவனை பாசத்துடன் பார்த்தவள், “அதான் உனக்கு உன்னோட சித்தி நான் இருக்கேன்ல்ல… நான் உனக்கு ஊட்டி விடுறேன்.” என்று அன்பாக சொன்னாள். 😍
சித்தார்த்: அவள் தன்னிடம் சொன்னதை ஜோக் என்று நினைத்தவன், “நீ என்னோட சித்தியா…???” என்று கேட்டவன் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கி விட்டான். 😂 😂 😂 😂
ஷாலினி: அவன் ஏன் தன்னைப் பார்த்து சிரிக்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவனை குழப்பமான முகத்துடன் பார்த்தவள், “டேய் இப்ப நான் என்ன காமெடியா சொன்னேன்..!!! எதுக்கு நீ இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்க…???” என்று அவனிடம் அப்பாவியாக கேட்டாள்.
சித்தார்த்: “நீ என்னோட பிரண்டு ஷாலி. அதான் நீ இப்போ புதுசா சித்தி பத்தி சொல்லவும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.” என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னவன், “சித்தி… சித்தி… பத்தி… பத்தி குச்சி..!!!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான். 😂 😂 😂
ஷாலினி: குழந்தை தனமாக அவனிடம் கோபித்துக் கொண்டவள், “ஷூ சும்மா இரு. இன்னொரு தடவ நீ என்ன பாத்து சிரிச்சீன்னா, நான் உங்க அம்மாகிட்ட உன்னை போட்டு குடுத்துடுவேன் பாத்துக்கோ..!!.” என்று சொல்லி அவனை மிரட்டினாள்.😒
சித்தார்த்: “சரி.. சரி.. நான் இனிமே சிரிக்கல. நீ இதை பத்தி ரித்திஅம்மாகிட்ட சொல்லிடாத.” என்றவன், “ஆமா..!! நீ எனக்கு நிஜமாவே சித்தியா..??” என்று ஆச்சரியமான குரலில் அவளை பார்த்து கேட்டான். 😧
ஷாலினி: “ஆமா. ஆனா நான் எப்படி உனக்கு சித்தி ஆனேன்னு உன்கிட்ட சொல்லனும்னா, அதை நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு. அப்ப தான் நான் அத உன்கிட்ட சொல்லுவேன். அண்ட் மத்தவங்க முன்னாடி நீ என்ன சித்தின்னு கூப்பிட கூடாது.” என்று அந்த சின்ன குழந்தையிடம் சொல்லி பெரிது பெரிதாக கண்டிஷன்களை பட்டியலிட்டு கொண்டு இருந்தாள்.
சித்தார்த்: அவளுடைய கையின் மீது தன்னுடைய குட்டி கையை வைத்தவன், “நான் இத பத்தி யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ப்ராமிஸ் ஓகேவா? இப்ப சொல்லு.” என்றான்.
ஷாலினி: “நானும் உங்க அம்மாவும் சிஸ்டர்ஸ் மாதிரி அதனால நான் உனக்கு சித்தி. அண்ட் உங்க விஷ்ணு சித்தப்பாவ நான் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். சோ எப்படிப் பாத்தாலும், நான் உனக்கு சித்தி தான்.” என்று அவனுடைய மூக்கை பிடித்து ஆட்டிய படி சொன்னாள். 😁 😁
சித்தார்த்: அவள் சொன்னதை வைத்து தனக்கு அனைத்தும் புரிந்து விட்டது என்பது போல ஓ…!!! என்று இழுத்தவன், “ஓகே சித்தி. இனிமே நான் உன்னை சித்தின்னு கூப்பிடுறேன் சித்தி. நான் உனக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி வேற யாராச்சும் இருந்தா உன்ன சித்தின்னு கூப்பிட மாட்டேன் சித்தி. அதே மாதிரி நீயும் நான் உன்ன பத்தின்னு சொன்னத ரித்திஅம்மாகிட்ட சொல்ல கூடாது. டீல் ஓகேவா சித்தி..??” என்று நக்கலாக கேட்டுவிட்டு சிரித்தான். 😂 😂 😂
ஷாலினி: “யப்பா.. சாமி.. போதும் டா… ரொம்ப நடிக்காத.. அப்படியே நீ ரொம்ப மரியாதையா எல்லாரையும் பேசுற மாதிரி தான். நீ உன்னோட விஷ்ணு சித்தப்பாவயே விஷ்ணுன்னு பேர் சொல்லி தானே கூப்பிடுவ… என்ன மட்டும் ஒழுங்கா சித்தின்னு கூப்பிட போற மாதிரி தான்…!!!” என்று சொல்லிவிட்டு சிரித்தவள் அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விட தொடங்க, சமத்து பிள்ளையாக அமைதியாக சாப்பிட்டான் சித்தார்த்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)