காலை நேரம் 11 மணியளவில் வெயில் மெல்ல மெல்ல உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரம், இங்கே ஒரு அறை மட்டும் அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருட்டாய் இருந்தது. அப்போது திடீரென்று சத்தமாய் ஒலித்தது ஒரு கைப்பேசி.
அது அந்த மேசையின் மீது கத்திக்கொண்டிருக்க, அதன் அருகே அந்த மெத்தையில் போர்வையை சுற்றியபடி இன்னுமே உறக்கத்தில் இருந்தாள் மௌனா.
அவள் எடுக்காமல் போகவும் அந்த கைப்பேசி மீண்டும் மீண்டும் சத்தமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்து புருவத்தை சுருக்கியவள், மெதுவாய் இமையை பிரித்து சுற்றியும் பார்த்தாள்.
அந்த அறையில் அவள் மட்டுமே கிடக்க, உடலெல்லாம் அடித்து போட்டதுப்போல அத்தனை வலித்தது. அதிலும் இடுப்பு பகுதிதான் அதிகம் வலிக்க, அதை அழுத்தி பிடித்தபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள் மௌனா.
அப்போது சட்டென்று அவள் மீதிருந்த போர்வை சரிய, திடுக்கிட்டு அதை இழுத்து பிடித்தாள். அப்போதே அவள் உடலில் ஆடையின்றி இருப்பது புரிய, பதற்றமாய் திரும்பி மெத்தையை பார்த்தாள். அருகே அவன் இல்லை. அப்போதே சுற்றி பார்க்க, அங்கே கண்ணாடியில் எதோ எழுதியிருந்தது. அதில் அவள் தூக்க கலக்கத்தோடு கண்களை தேய்த்துவிட்டு உற்று பார்க்க, “ஹாய் பொண்டாட்டி! எந்திருச்சிட்டியா? எப்படியும் நா போகும்போது குடுத்த கிஸ்சஸ் உனக்கு நியாபம் இருக்காது. அதா உனக்கு எத்தன கிஸ் குடுத்தனோ அத்தன கேன்டில்ஸ் இங்க ஏத்தி வெச்சிருக்கேன். ஒவ்வொன்னா நியாபகம் வரும்போது இத ஊதி அண. அதுதா நீ எனக்கு திரும்ப குடுக்குற கிசஸ். அத நா இங்கிருந்து ஃபீல் பண்ணுவேன்.” என்று எழுதியிருந்தது.
அதில்தான் அரை உறக்கத்தில் அவன் தன் முகமெங்கும் கொடுத்து சென்ற முத்தங்கள் நினைவிற்கு வர, அப்படியே அதற்கு முன்பு குளியலறையில் அவன் நடத்திய ஆட்டமும் கண்முன் வர அவள் இதயம் பலமாய் துடித்தது. அப்போது மீண்டும் சத்தமாய் அவள் கைப்பேசி ஒலிக்க, திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.
அதில் அம்மா என்ற பெயரிலிருந்து வெகு நேரமாய் அழைப்பு வந்துக்கொண்டிருக்க, வேகமாய் தன் மார்போடு போர்வையை இறுக்கி பிடித்தபடி எட்டி தன் மொபைலை கையில் எடுத்தாள் மௌனா. அடுத்த நொடி கடைசி ரிங்கும் முடிய போக, வேகமாய் அட்டன் செய்து காதில் வைத்தவள், “ஹலோ அம்மா” என்றாள்.
அதில் இந்த பக்கம் புருவத்தை சுழித்த அவளின் அம்மா மேகலா, “என்னடி கொரல் ஏ இவ்ளோ சோர்வா இருக்கு?” என்று கேட்டார்.
“அ..அது இப்பதா தூங்கி எந்திரிச்சம்மா” என்றாள் மௌனா.
அதில் திரும்பி மணியை பார்த்தவர், “அடிப்பாவி. மணி என்னன்னு பாத்தியா? மொதல் நாளே இப்பிடி மொதல மாதிரி தூங்குனன்னா, மாப்ள நம்ப குடும்பத்த பத்தி என்ன நெனப்பாரு?” என்று கேட்டார் மேகலா.
“இல்ல இல்லம்மா. அவரு ஆஃபிஸ் போயிட்டாரு. அவரு போனதுக்கு அப்றம்தா கொஞ்ச நேரம் படுத்தேன்.” என்று சமாளித்தாள் மௌனா.
“ஓஹோ சரிம்மா. உனக்கும் அங்க தனியா போர் அடிக்கும்ல?” என்று இவர் கூற, அதற்கு அவளோ எதுவும் கூறாமல் அமைதியானாள்.
“என்ன அமைதியாயிட்ட?” என்று அவர் கேட்க, அவளோ வாடலாய், “ஒன்னும் இல்லம்மா. அப்பா எங்க?” என்று கேட்டாள்.
“அப்பா வயலுக்கு போயிட்டாருடி. ஏ எதாவது பேசணுமா?” என்று அவர் கேட்க, “அதெல்லா ஒன்னும் இல்லம்மா.” என்றாள் வாடலாக.
அவள் வாடல் பெற்ற தாய்க்குமே புரியதான் செய்ய, “உன்ன கேக்காமலே எல்லாத்தையும் பண்ணிட்டாருன்னு, அப்பா மேல வருத்தமா?” என்று கேட்டார்.
“அதெல்லா ஒன்னும் இல்ல.” என்றாள் அதே வாடலாக.
“அப்பா என்ன பண்ணாலும் உன் நல்லதுக்குதா பண்ணுவாரு செரியா? இதவிட நல்ல மாப்ள உனக்கு கெடைக்கவே மாட்டான்.” என்றார் அவர்.
“ம்ம்” என்று மட்டும் இவள் கூற, “ஏ ஒரு மாதிரியே பேசுற? மாப்ள உன்ன நல்லா பாத்துக்குறாருதான?” என்று கேட்டார் மேகலா.
அதில் யோசனைக்குள் ஆழ்ந்தவளுக்கோ, நேற்றிரவு டைம் வேண்டும் என்று கூறியும் அவன் அத்துமீறியது, காலையில் கிச்சனில் செய்த இம்சைகள், பாத்ரூமில் மீண்டும் ஒரு கூடல் என்று தன்னை போட்டு படுத்தி எடுத்தது இதெல்லாம்தான் அவளுக்கு சிறு அச்சத்தை கொடுத்தது.
அவன் என்றுமே அந்த நினைப்பிலேயே தன்னை அணுகுவதுப்போல தோன்றியது அவளுக்கு.
“ஹேய் என்ன ஆச்சு? ப்தில் சொல்லு.” என்று கேட்டார் மேகலா.
“அ..அது.. உங்கிட்ட ஒன்னு கேக்கட்டுமா?” என்று தயக்கமாய் கேட்டாள் மௌனா.
“ம்ம் சொல்லுடி.” என்று அவரும் கூற, அதில் தயக்கமாய் போர்வை நுனியை சுருட்டியவள், “அவருக்கூட இந்த மாதிரி தெனமும் பண்ணி ஆகணுமா?” என்று கேட்டாள்.
“எந்த மாதிரி?” என்று அவர் குழம்பி கேட்க, அதில் மேலும் அவஸ்த்தையாய் போர்வையை சுருட்டி இழுத்தவள், “அதாம்மா புருஷன் பொண்டாட்டி.. ஒன்னுமன்னா..” என்றாள் தயக்கமாக.
அதில்தான் புரிந்து புன்னகைத்தவர், “இப்ப புரியுது நீ ஏ இவ்ளோ நேரம் தூங்குறன்னு.” என்று அவர் கிண்டலாய் கூற, அதில் அவஸ்த்தையாய் முகத்தை மூடியவள், “ச்ச் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லும்மா.” என்றாள் சிணுங்களாக.
அதில் மெல்ல சிரித்துக்கொண்டவர், “அது ஆரம்பத்துல அப்படித்தான்டி இருக்கும். போகப் போக உனக்கே பழகிடும்.” என்றார்.
“இல்லம்மா.. எனக்கென்னமோ பயமா இருக்கு.” என்றாள் நெருடலோடு.
“இதுல என்னடி பயம் உனக்கு? புருஷன் பொண்டாடிக்குள்ள இது சகஜம்தான?” என்று அவர் கூற, “இல்லம்மா. அவரு எப்பவுமே அந்த நினைப்புலயே இருக்காரோன்னு தோனுது.. எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் குடுக்கவே மாட்டிங்குறாரு.” என்றாள் மௌனா.
“அடி பைத்தியக்காரி. ஒரு ஆம்பளைக்குத் தன் பொண்டாட்டி மேல இருக்குற உரிமையும், பிரியமும் அந்த விஷயத்துலதான் அதிகமா வெளிப்படும். அதுக்காகப் பயப்படக் கூடாது. உன்னை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ, அந்த அளவுக்குத்தான் நெருக்கமாவும் இருப்பாரு. அத நெனச்சு நீ சந்தோஷம்தா படணும்.” என்றார் மேகலா.
“ஆனா எனக்கென்னமோ..” என்று அவள் தயங்க, “எனக்கு ஒரு விஷயம் சொல்லு.” என்றார் மேகலா.
“ம்ம்” என்று அவள் கூற, “அவரு அந்த விஷயத்துல உன்ன காயப்படுத்துறாரா என்ன?” என்று சந்தேகமாய் கேட்டார். ஏனோ இவள் தயக்கம் அவரை அப்படித்தான் யோசிக்க வைத்தது.
“ஐயயோ அதெல்லா இல்லம்மா.” என்றாள் இவள் வேகமாக.
அதில்தான் சற்று நிம்மதியடைந்தவர், “அப்றம் என்ன? இப்போதான கல்யாணம் ஆகியிருக்கு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இதுவும் ஒரு வழிதான். அவர் உன்னை கஷ்டப்படுத்துலயே? அன்பாதானே நடந்துக்கிறாரு? அந்த அன்பை ஏத்துக்க பழகு. போக போக எல்லாமே சரியாயிரும்.” என்றார் மேகலா.
ஆனாலுமே அவளுள் சிறு நெருடல் இருக்கதான் செய்ய, “ம்ம் சரிம்மா.” என்றாள்.
“இங்க பாருடி. நீயாச்சு அப்பா, அம்மா, சொந்த பந்தம்னு ஊருக்குள்ள ஜனங்களோட வளந்தவ. அவரு அப்பா அம்மா இல்லாம வளந்த புள்ள. எவ்ளோ கஷ்டத்த பாத்திருப்பாரு? அவருக்குன்னு இப்ப இருக்குற ஒரே உறவு நீதாங்கும்போது, உன்மேல கொஞ்சம் அதிகாமாவே பாசத்த காட்டதா பாப்பாரு. நீ அத நெனச்செல்லா பயந்துட்டு இருக்காத. புரியுதா?” என்று அவர் கூற,
“ம்ம் சரி.” என்றாள் மௌனா.
“சரிடி. எனக்கு ஆயிரத்தெட்டு வேல கெடக்கு. நா அப்றம் ஃபோன் பண்றேன்.” என்றார்.
“சரிம்மா.” என்று அவள் கூற,
“மாப்ளை சொல்றதைக் கேட்டு நடந்துக்கோ. அதுதான் உனக்கும் நல்லது, உங்க வாழ்க்கைக்கும் நல்லது.” என்று அவர் கூற, “ம்ம்” என்றாள் இவள்.
அதில் அவரும் இணைப்பை துண்டித்துவிட, இவளும் மொபைலை இறக்கினாள்.
தன் தாய் கூறிய வார்த்தைகளை கேட்ட பின்பு சற்று ஆறுதலாய் இருந்தாலும், ஏதோ ஒரு நெருடல் ஏதோ ஒரு அச்சம் உள்ளுக்குள் இருக்கதான் செய்தது. அதில் அவள் அப்படியே திரும்பி அந்த கண்ணாடியை பார்த்தாள்.
அங்கே அவன் எழுதி வைத்த வரிகளும் ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகளும் அழகாய் எரிந்துக்கொண்டிருக்க, “உன்ன அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ, அந்த அளவுக்குத்தான் நெருக்கமாவும் இருப்பாரு.” என்ற தன் தாயின் வார்த்தைகள் காதில் ஒலித்தது.
அதில் மெதுவாய் தன் போர்வையை சுருட்டி பிடித்தவள், மெல்ல கட்டிலைவிட்டு இறங்கி அதன் அருகில் செல்ல, அவளை நோக்கி அழகாய் அசைந்தாடியது அந்த மெழுகுவர்த்திகள்.
“உனக்கு எத்தன கிஸ் குடுத்தனோ அத்தன கேன்டில்ஸ் இங்க ஏத்தி வெச்சிருக்கேன். ஒவ்வொன்னா நியாபகம் வரும்போது இத ஊதி அண. அதுதா நீ எனக்கு திரும்ப குடுக்குற கிசஸ். அத நா இங்கிருந்து ஃபீல் பண்ணுவேன்.” என்ற அவனின் வரிகள் கண்முன் வந்தது.
அவன் மெத்தையில் கொடுத்த முத்தங்கள், கிச்சனில் கொடுத்த முத்தங்கள், குளியலறையில் கொடுத்த முத்தங்கள் என்று அனைத்தையும் சேர்த்தால் இங்கிருக்கும் மெழுகு ஒளிகள் குறைவுதான்.
அதில் அவள் மெதுவாய் அதை நோக்கி குனிய, “ஐ லவ் யூ ம்மு” என்ற அவனின் வார்த்தைகளும் கண்முன் வர, மெதுவாய் இதழ் குவித்து முதல் மெழுகு தீயை ஊதினாள்.
அதில் அது கப்பென்று அணிந்த நொடி இங்கே அலுவலகத்தில் சட்டென்று தன் கன்னத்தில் கை வைத்தான் அகன்.
– காதல் தீ தொடரும்…