Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 153

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 153

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 153: தூக்குங்கடா என் தங்கத்தை (பார்ட் 1)

பிராத்தனாவின் கல்லூரியில்…

உணவு இடைவேளைக்கு பின்பு மினி ஆடிட்டோரியமில் பி. பி. ஏ. இரண்டாம் ஆண்டு முதல், எம். பி. ஏ. இரண்டாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை போட்டு, ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆண்களில் ஒருவர் பெண்களில் ஒருவர் என ரெப்ரசன்டேட்டிவ் ஆக தேர்ந்தெடுத்து இந்த ஃபங்ஷனை ஆர்கனைஸ் செய்து இருந்தனர். 

பிராத்தனாவின் வகுப்பில் இருந்து ரெப்ரெசென்ட்டேட்டிவாக அவளும், அவளுடைய நண்பன் நவீனும், அங்கே வந்து இருந்தனர். பிராத்தனாவிற்கு இது போன்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதை ஹோஸ்ட் செய்வது மிகவும் பிடிக்கும். அதனால் வழக்கம் போல் மகிழ்ச்சியாக எம். ஓ. சி. -யில் சென்று மைக்குடன் அமர்ந்து கொண்டாள். அவளுடைய கையில் அந்த நிகழ்ச்சிக்கான அஜந்தா இருந்தது. அதை பார்த்து தான் எப்படி கோர்வையாக அனைத்தையும் பேச வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பேப்பரில் ஆங்கிலத்தில் நோட்ஸ் எழுதி வைத்துக் கொண்டு இருந்தாள் பிராத்தனா.

நவீன் டெக்கரேஷன் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று தன்னுடைய சீனியர் மாணவர்களுடன் இணைந்து சரி பார்த்துக் கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் அந்த பங்க்ஷன் தொடங்குவதற்கான நேரமும் வந்து விட, ஒவ்வொரு மாணவர்களாக அந்த அரங்கத்திற்குள் நுழைய தொடங்கி இருந்தனர். பின் அவர்களுடைய துறையின் பேராசிரியர்களும், துறை தலைவரும் இணை துறைை தலைவரும், பிரின்சிபல், வைஸ்  பிரின்சிபல் என அனைவரும் அங்கு வந்து மேடையில் அமர்ந்தனர். நிகழ்ச்சி தொடங்கப் போகிறது என்று ஆங்கிலத்தில் அநௌன்ஸ் செய்த பிராத்தனா, மேடையில் அமர்ந்து இருக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் தனி தனியாக சொல்லி அவர்களை வரவேற்றாள். 

இது  துறை ரீதியான பங்க்ஷன் என்பதால் மாணவர்களை அவர்களுடைய வகுப்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆண்கள் ஒரு பக்கமும் பெண்களை இன்னொரு பக்கமும் அமர வைத்து இருந்தனர். அதனால் தன் அருகே அமர்ந்து இருந்த தன்னுடைய வகுப்பை சேர்ந்த மாணவனுடன் பேசி பழக தொடங்கிய சூர்யா, ஓர கண்ணால் பிராத்தனாவையும் பார்க்க தவறவில்லை. 😍 ❤️ அவனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்து இருந்த நிவேதாவும் சூர்யாவை கவனித்து கொண்டு தான் இருந்தாள். 

பிராத்தனா இன்று பங்க்ஷன் இருப்பதால், அதிசயமாக சுடிதார் அணிந்து தன்னுடைய கூந்தலை பின்னி போட்டுவிட்டு வந்திருந்தாள். அதனால் எப்போதும் மாடர்ன் மங்கையாக காட்சியளிப்பவள், இன்று வேறுவிதமாக அனைவரின் கண்களுக்கும் தெரிந்தாள். சூர்யாவை போல் பிராத்தனா மேடையில் தோன்றிய உடன் பல மாணவர்களின் கண்களும் அவள் மீது தான் இருந்தது. 😍 அவர்களுடைய கனவு தேவதையின் குரலை கேட்கவும், அவளை பார்க்க முடிந்ததற்காகவும், அவர்கள் தங்களுடைய மனதில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்தனர். 😍 🥰 🙏 

பலரின் கண்கள் பிராத்தனாவை மேய்ந்து கொண்டு இருப்பதை கவனித்த சூர்யாவிற்கு அவனுடைய வயிற்றில் இருந்து புகை வராத குறை தான். 😡 🌬️ 💨 ஸ்டேஜ் இல் இருந்தவர்கள் அனைவரும் தங்களுடைய உரையை ஒவ்வொருவராக பேசிவிட்டு செல்ல, நடுநடுவே வந்த ஆராதனா அவர்களை வாழ்த்தியும், அவர்கள் ஆற்றிய உரைக்கு நன்றிகளையும் சொல்லிக் கொண்டு இருந்தாள். இப்படியே எப்படியோ அந்த பங்க்ஷன் அதன் நிறைவு பகுதியை வந்தடைய, புதிதாக வந்திருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை மற்றவர்கள் யாரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை என்பதால்; அவர்களை மேடைக்கு வந்து தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளும் படி சொல்லிவிட்டு ஸ்டேஜில் இருந்து கீழே இறங்கினாள் பிராத்தனா. 

அதனால் ஆண்கள் வரிசையில் இருந்து ஒருவர், பெண்கள் வரிசையில் இருந்து ஒருவர் என மாறி மாறி ஸ்டேஜ்க்கு ஏறி சென்ற மாணவ மாணவியர்கள்; தங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டனர். மாணவர்களின் ஸ்டேஜ் பியரை போக்குவதற்காக வருடா வருடம் இது அவர்களுடைய கல்லூரியில் வழக்கமாக நடந்து   கொண்டு இருப்பது தான். மாணவர்கள் வரிசையாக சென்று கொண்டு இருக்க, நிவேதா கூட தன்னுடைய இண்ட்ரொடக்ஷனை கொடுத்து முடித்துவிட்டு கீழே இறங்கி வந்து விட்டாள். 

சூரியா தன் அருகே அமர்ந்து இருந்த மாணவர்களின் வரிசையை பார்த்தான். அவனுடைய முறை வருவதற்கு இன்னும் அவனுக்கு நடுவே வெறும் ஐந்து மாணவர்களே அமர்ந்து இருந்தனர். இதுவரை பேசிய மாணவ மாணவியர்கள் அனைவரும் சரளமான ஆங்கிலத்தில் பேசிவிட்டு சென்றதால், தான் எப்படி பேசப்போகிறோம் என்ற பயம் சூர்யாவின் மனதை வாட்ட, அவனுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. 😒 ❤️ சூர்யாவின் பதட்டமான முகத்தை கவனித்த நிவேதா, அவனை சற்று தேற்றுவதற்காக தூரத்தில் இருந்து அவனைப் பார்த்து சைகை செய்தாள். 

பதட்டத்தில் இருந்த சூர்யா, அவளுடைய சைகைகளை கவனிக்கவில்லை. ஆனால் மாணவர்களின் அருகே, அவர்களை சூப்பர்வைஸிங் செய்தபடி நின்று கொண்டு இருந்த நவீன் அவளுடைய சைகையை கவனித்தவன் சூர்யாவின் அருகே சென்று, “ப்ரோ அந்த பொண்ணு உங்கள கூப்பிடுறாங்க.” என்றான். அவன் சொன்ன பின்பு தான தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த நிவேதாவை கவனித்த சூர்யா, தன்னுடைய கண்களாலேயே என்ன என்று அவளிடம் கேட்டான். அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த நிவேதா, “பயப்படாத. ஆல் தி பெஸ்ட். உனக்கு இங்கிலீஷ்ல பேச டப் ஆ இருந்துச்சுன்னா, யோசிக்காம தமிழ்லயே பேசிடு.” என்று சைகை செய்து அஸ்கி வாய்ஸில் சொன்னாள். 😁 😁 

அவள் தூரத்தில் இருந்ததால் அவளுடைய குரலை கேட்க முடியாத சூர்யாவிற்கு அவளுடைய உதட்டின் அசைவை வைத்து அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் குழப்பத்துடன் அவளை பார்த்தவன், ஒன்னும் புரியல என்று சைகை செய்தான். 🙄 அதைக் கண்ட நிவேதா அட போ டா என்றவள், தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள். அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்த நவீன், “ப்ரோ உங்களுக்கு பயமா இருந்துச்சுன்னா அந்த பொண்ணு உங்களை தமிழ்லயே பேச சொல்றாங்க.” என்று அவள் சொன்னதை புரிந்து கொண்டு சரியாக சொன்னான். நவீனின் வாயின் அசைவுகளை வைத்து அவன் தான் சொன்னதை சரியாக சொல்லிவிட்டதை உணர்ந்த நிவேதா, ஆமா நான் அத தான் சொன்னேன் என்பது போல தன்னுடைய தலையை சூர்யாவை பார்த்து ஆட்டினாள். 

இப்படியே இவர்கள் மாறி மாறி ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொண்டு இருக்க சூர்யாவின் முறையும் வந்துவிட்டது. சூர்யாவின் இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ அவனுடைய மனதில், “உயிரே எப்படியாவது தப்பிச்சு ஓடிவிடு.” என்று தோன்றியது. ஆனால் அனைவரும் சூர்யாவை, நீங்க ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஐ வில் பி வாட்சிங். என்பது போல கூர்மையாக கவனித்துக் கொண்டு இருந்தனர். அதனால் வேறு வழி இன்றி சூர்யா எழுந்து ஸ்டேஜ்ப -ற்கு சென்றான்.

அப்போது தான் சூர்யா என்ற ஒருவன் அங்கே இருப்பதையே கவனித்த பிராத்தனா, அவனை ஏளனமாக பார்த்தாள். 😾 “என் கிட்ட சொன்ன மாதிரி என் காலேஜ்லயே வந்து சேர்ந்துடல..!!! பெரிய இவன் மாதிரி என்கிட்டயே பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு ஸ்பெல்லிங் சொல்லி எனக்கு மறந்து போச்சான்னு கேட்டில டா. இப்போ நீ எல்லாரும் முன்னாடியும் இங்கிலீஷ்ல பேசி தானே ஆகணும். நீ அப்படி என்னத்த பேசி கிழிக்கிறேன்னு நானும் பாக்கிறேன்.” என்று நினைத்தவள், தான் ஏதோ ஒரு காமெடி ஷோவை பார்க்க தான் ஏதோ ஒரு காமெடி ஷோவை பார்க்க போவதை போல் ஆர்வமாக சூர்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு மாணவன் சூர்யாவின் கைகளில் ஒரு மைக்கை கொண்டு வந்து தர, அதை வாங்கிய சூர்யாவின் கைகள் பயத்தில் நடுங்கியது. அவனுடைய வாயில் இருந்து வார்த்தைகள் வர மறுத்து விட்டன. இப்படியே சில நொடிகள் கடந்து இருக்க…. சூர்யா ஸ்டேஜ் ஃப்பீயர் இல் தான் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான் போல என்று நினைத்தவர்கள், அவனை கைதட்டி உற்சாகப்படுத்தி பேசும் படி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தனர். ஸ்டேஜ் இல் இருந்த சூர்யாவால், கீழே இருந்த அனைவரையும் தெளிவாக பார்க்க முடிந்தது. அவன் அங்கு இருந்த பிராத்தனாவை கண்டு கொண்ட உடனேயே அவளுடைய கண்கள் தன்னை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று உணர்ந்தவன், அவள் முன்னே தான் ஏதும் தவறாக பேசி சுத்தப்பி விடக்கூடாது என்று நினைத்து பயந்தவன்; நேராக நிவேதாவை பார்த்தான்.

நிவேதாவின் கண்கள் எதையாவது பேசி தொலை டா என்று அவனிடம் மானசீகமாக கெஞ்சி கொண்டு இருப்பதை சூர்யாவால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவளுடைய கண்களை மட்டும் பார்த்தவன், “என் பெயர் சூர்யா. என்னோட சொந்த ஊர் கரூர்.” என்று அவன் தமிழில் பேச தொடங்க, அனைவரும் அவனைப் பார்த்து பிராத்தனா உட்பட அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டனர். 😂 😂 😂  அதை தனக்கு நடந்த பெரிய அவமானமாக நினைத்து மனம் வருந்திய சூர்யா, தன் கையில் இருந்த மைக்கை அங்கே இருந்த ஒரு பையனிடம் கொடுத்துவிட்டு ஸ்டேஜில் இருந்து கீழே வர தொடங்கினான். 

அதைக் கண்ட நிவேதா சட்டென்று எழுந்து நின்றவள், “கீழ இறங்காத சூர்யா.” என்று சொன்ன படியே ஸ்டேஜ் இன் நறுகே சென்றவள், சூர்யாவின் கையை பிடித்துக் கொண்டு ஸ்டேஜில் ஏறினாள். என்னங்கடா நடக்குது இங்க என்பது போல ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ஸ்டேஜில் நடப்பதை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். “யார் இவ புதுசா இருக்கா..!!! இவனுக்கு எதுக்கு சப்போர்ட் பண்றா..??” என்று நினைத்த பிராத்தனாவும், குழப்பத்துடன் அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். 🙄 ஸ்டேஜ் இல் நின்று கொண்டு இருந்த ஒரு பையனிடம் இருந்து மைக்கை வாங்கிய நிவேதா, “இப்போ எதுக்கு நீங்க எல்லாரும் சிரிக்கிறீங்க..??? நம்ப எல்லாரும் தமிழ்நாட்டுல இருக்கிறோம் அண்ட் தமிழ் நம்மளோட மதர் டங் அப்படின்றத மறந்துட்டு நீங்க எல்லரும் ஒருத்தர் தமிழ் பேசுறத பாத்து சிரிக்கிறதுக்கு ஷேமா ஃபீல் பண்ணனும். of course இங்கிலீஷ் ஈஸ் வேரி இம்போர்ட்டண்ட். இன்னைக்கு அவனுக்கு அது சரியா வரலைன்னா, என்னைக்குமே அது வராதுன்னு அர்த்தம் இல்ல. எனக்காவது ஒரு நாள் அவன் அத கத்துப்பான். ஆனா நீங்க இப்போ இப்படி அவன இன்சல்ட்  பண்ற மாதிரி சிரிச்சிங்கன்னா, அது அவனோட செல்ஃப் கான்ஃபிடென்ச் ஐ சுத்தமா இல்லாம பண்ணிடும்ன்னு உங்களுக்கு தோணலையா…???” என்று அவர்களைப் பார்த்து நிவேதா கேட்க, அங்கு இருந்தவர்கள் அனைவரும் வாயடைத்து போய் அமைதியாக இருந்து விட்டனர்.  

இந்த சூழ்நிலையை சகஜமாக நினைத்த அவர்களுடைய துறையின் தலைவர், “நீ சொல்றது கரெக்டு தான் மா. தெரியாதத கத்துக்குறதுக்கு தான் நம்ம காலேஜுக்கே வரோம். தம்பி பரவால்ல.. நீ தமிழ்லயே பேசு பா. ஆனா இந்த இயர் முடியறதுக்குள்ள இதே ஆடிட்டோரியம்ல நீ இங்கிலீஷ்ல ஒரு செமினார் இல்லேன்னா பேப்பர் ப்ரசென்டேஷன் பண்ணனும். நீ அப்படி பண்ணினா, அத பார்த்து நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். நீ உன்ன டெவலப் பண்ணிக்கிறதுக்கு ரெடியா இருக்கணும். உனக்கு எந்த மாதிரியான ஹெல்ப் வேணும்னாலும் நம்ம ஸ்டாப் எல்லாரும் உனக்கு எப்பவுமே ஹெல்ப் ஃபுல்லா இருப்பாங்க.” என்று அவர் சூர்யாவிற்கு சாதகமாக பேச, “ஓகே சார் தேங்க்யூ.” என்ற சூர்யா, நிவேதாவின் கைகளில் இருந்த மைக்கை வாங்கி தயக்கமின்றி இப்போது தைரியமாக தமிழில் பேசினான். 

பின் நிவேதாவும் சூர்யாவும் ஜோடியாக ஸ்டேஜ் இருந்து கீழே இறங்கி வர, அந்த அரங்கம் முழுவதும் இப்போது மாணவர்களின் கைத்தட்டல்களின் சத்தத்தால் நிரம்பி இருந்தது. “யாரு டா இந்த பொண்ணு..!!!” என்பது போல, தன் அருகே நடந்து வந்து கொண்டு இருக்கும் நிவேதாவை பார்த்த சூர்யாவிற்கு, பரியேறும் பெருமாள் படத்தில் அந்த ஹீரோ சொல்லும் தேவதை கதையில் வரும் ஒரு தேவதையை போல தெரிந்தாள் நிவேதா. 😍 சூர்யா மட்டும் அல்லாமல் அங்கு இருந்த நிறைய மாணவர்களின் கண்களுக்கு நிவேதா ஒரு தேவதையாக தெரிந்தாள். அதனால் அவர்கள் தங்களுடைய மனதிற்குள், “தூக்குங்க டா அந்த தங்கத்தை.” என்று நினைத்துக் கொண்டனர். அந்தக் கூட்டத்திலேயே பிராத்தனா மட்டும் தான் அவர்களைப் பார்த்து கோபத்தில் முறைத்துக் கொண்டு இருந்தாள். 😒 🤨

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured