Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 143

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 143

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 143

அர்ஜுன் குழந்தைகளுடன் ரஷ்யா வந்தடைந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி இருந்தது. இந்த ஒரு வாரத்தில் அர்ஜுன் தேன்மொழி இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொள்ளவே இல்லை.  அர்ஜுன் அவ்வப்போது தேன்மொழியிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் கூட, சித்தார்த் தன்னை தொடர்ந்து புறக்கணித்து கொண்டே இருந்ததால்  உள்ளுக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் தேன்மொழியிடம் பேச தயங்கி இப்போது வரையிலும் பேசாமலேயே இருந்து விட்டான்.

இப்போது நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் ஜூலி தான் காரணம் என்று தெரிந்து கொண்ட ஜானகி “இனிமே நீ இந்த வீட்ல இருக்க கூடாது. ஏதோ நீ என் பையன் உயிர்  காப்பாத்துனதுக்காக போனா போகுதுன்னு  இறக்கப்பட்டு நான் உன்னை இத்தோட விடுறேன். பட் அதுக்காக எல்லாம் நீ இவ்வளவு பண்ணியும் என்னால உன்னை இந்த வீட்ல விட்டு வைக்க முடியாது.

இங்க பக்கத்துல தானே நம்மளோட அப்பார்ட்மெண்ட் இருக்கு.. உனக்கு சரியாகற வரைக்கும் நீ அங்கயே ஸ்டே பண்ணிக்கோ.  ‌ உனக்கு தேவையானது எல்லாத்தையும் நாங்க அரேஞ்ச் பண்ணி குடுக்கிறோம். உனக்கு சரியானதுக்கப்புறமா ஒழுங்கா ரஷ்யா போய் சேரு. இதுக்கு அப்புறம் எங்க மூஞ்சிலயே நீ முழுக்க கூடாது.”  என்று ஜூலியிடம் கடுமையாக சொல்லி அவளை துரத்தி விட்டாள்.

“ப்ளீஸ் ஆன்ட்டி நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன். இப்ப வரைக்கும் நீங்க குழந்தைங்க கிட்ட உண்மைய சொல்லாம இருக்கீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்? நான் ஏதோ கேசவலா அப்படி சொல்லிட்டேன். இனிமே இந்த மாதிரி எந்த தப்பும் நடக்காம நான் பாத்துக்குறேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்க.” என்று ஜூலி எவ்வளவோ கெஞ்சி பார்த்தோம் ஜானகியின் மனம் இறங்கவில்லை.

வலுக்கட்டாயமாக ஜூலியை தனது ஆட்களை வைத்து இடமாற்றி விட்டாள் ஜானகி. “நம்ம வீட்ல இருக்கறவங்க எல்லாரும் இந்தியாவுக்கு வந்துட்டாங்கன்னு ஓரளவுக்கு எல்லா வேலையும் முடிச்சு வச்சுட்டு உங்க கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நான் இங்க கிளம்பி வந்தேன். பட் இங்க சிச்சுவேஷன் சுத்தமா சரியில்ல.

அர்ஜுன் புதுசா வாங்கின கவர்மெண்ட் காண்ட்ராக்ட்டை ஆகாஷ் பாத்துக்கிறான். மத்தபடி இங்க ஜெனரலா மத்த பிசினஸ் எல்லாம் நார்மலா நம்ம இல்லேன்னாலும் கரெக்டா தான் நடக்கும்.‌ இதுக்கப்புறம் நான் இங்க இருந்து என்ன பண்றது? சோ நான் ரஷ்யா கிளம்புறேன்.‌

நீதான் அடம் பிடிச்சு தேன்மொழிய தனியா விட முடியாதுன்னு இந்தியா வரணும்னு வந்த. அங்க அர்ஜுன் கூட ஆருத்ராவும் சித்தார்த்தும் தனியா இருந்தா தான் எல்லா ப்ராப்ளமும் சால்வாகும்ன்னு சொன்ன. நம்ம கிளம்பி இங்க வந்து மூணு நாள் ஆச்சு.‌ நீ சொன்ன மாதிரி ஏதாவது சேஞ்சஸ் வந்திருக்கான்னு பார்க்கலாம்.” என்று ஜானகியிடம் சொன்ன பிரதாப் மீண்டும் கிளம்பி ரஷ்யா சென்றார்.

தன் மருமகளுக்காக தனது பேர குழந்தைகளை கூட ரஷ்யாவில் விட்டுவிட்டு அங்கே இருந்து வந்திருந்த ஜானகி  அர்ஜுன் தன்னுடன் இல்லை என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த தேன்மொழிக்கு பெரிய ஆறுதலாக இருந்தாள். மருமகளுக்காக இந்த அளவிற்கு யோசிக்கும் மாமியார் யாருக்கு கிடைப்பார்கள்? அந்த பாக்கியம் தனக்கு கிடைத்திருக்கும் போது, இந்த வாழ்வில் வேறென்ன வேண்டும்? என நினைத்து தன்னைத் தானே தேற்றிக் கொண்ட தேன்மொழி “ஒருவேளை எங்களுக்குள்ள இருக்கிற இந்த கேப் எங்க ரிலேஷன்ஷிப்பை அத்தை சொல்ற மாதிரி ‌இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக்கும்னா, பரவால்ல. நான் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்றேன்.‌ பாவம் அர்ஜுன் நான் ஒரு பக்கம், குழந்தைக்கு ஒரு பக்கம். இதுல யார் பக்கம் நிற்கிறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்காரு.

குழந்தைங்க தான் எது நல்லது கெட்டதுன்னு புரியாம அடம் பிடிக்கிறாங்க. பதிலுக்கு நானும் அவங்களை மாதிரியே பண்ணிட்டு இருந்தா, அவரு என்ன தான் பண்ணுவாரு?” என்று நினைத்தவள், “இருந்தாலும் சித்தார்த் கூடையும், ஆருத்ரா கூடையும் பேசாம இருக்கிறது இதை விட கஷ்டமா இருக்கு. அவங்க மம்மி மம்மின்னு கூப்பிட்டு என்னை அவங்களுக்கு உண்மையான மம்மி ஆக்கிட்டாங்க. ஆனா இப்ப என்னை அவங்க அம்மாவா ஏத்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்க. இத நான் என்ன சொல்றது?” என தனக்கு‌த்‌ தானே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு தன் நிலைமையை நினைத்து அழுவதா? இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை.

ரஷ்யாவை பொறுத்தவரை அது அர்ஜுனனின் கோட்டையாக இருந்தது.‌ அங்கே வைத்து அவனை யாராலும் எதுவும் செய்து விட முடியாது. அதனால் “ச்சே.. நம்ம மேல டவுட் வராம பொறுமையா ஏதாவது பண்ணி இந்த அர்ஜுனை பழையபடி கையைக் கால ஒடச்சு வீட்டுக்குள்ள படுக்க வைக்கலாம். இல்லைனா இந்த தேன்மொழி குழந்தைக்கு ஏதாவது ஸ்கெட்ச் போட்டு அதை க்ளோஸ் பண்ணிட்டு குழந்தை போச்சேன்னு அர்ஜுன் அழுகிறதை பார்த்தாவது சந்தோஷப்படாம்ன்னு நினைச்சா இவன் என்னனா இங்க இருக்கிற வேலையை எல்லாம் எங்க தலையில கட்டிட்டு கிளம்பி ரஷ்யா போய்ட்டானே..

அது எப்படி அப்படி நடக்கலாம்? நான் என்ன நினைக்கிறேனோ அது மட்டும் தான் இந்த வீட்டில நடக்கணும். எனக்கு அர்ஜுன் மூஞ்சிய பாத்துக்கிட்டே இருக்கணும். அவன் எப்ப அழுகணும், எப்ப சிரிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். அதுக்கு இப்ப அவன் இந்தியா திரும்பி வரணும். அவனா வரலைனா, நான் அவனை வர வைப்பேன்.” என்று நினைத்த சந்தோஷ் தனது பிரஸ்டீஜியஸ் ப்ராஜெக்டாக இப்போது அர்ஜுன் நினைத்துக் கொண்டிருக்கும் கவர்மெண்ட் தொடர்பான கட்டிடங்களை கட்டும் ப்ராஜெக்ட்டை செய்து முடிப்பதில் தன்னால் முடிந்த பிரச்சினைகளை ஏற்படுத்த தொடங்கினான்.

முதலில் கொத்தனார் வேலை பார்க்கும் ஒருவனுக்கு காசு கொடுத்து சம்பளம் போதவில்லை, அதிகமாக வேலை வாங்குகிறார்கள் என்று மற்ற தொழிலாளிகளுக்குள் பிரச்சனை செய்ய சொல்லி ஒரு தடங்களை ஏற்படுத்தினான். அர்ஜுனின் குடும்பத்தை பொறுத்தவரை அவர்களுக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. அவர்கள் நினைத்தால் ஒரே நொடியில் எந்த விதத்திலாவது தங்கள் எதிர்பார்ப்பையும் மீறி அவர்களால் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும்.

அதனால் பணத்தை மையமாக வைத்து வந்த பிரச்சினையை ஆகாஷ் அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக பணம் கொடுப்பதாக சொல்லி ஒரே நொடியில் சமாளித்து விட்டான். அதற்குப்பின் அர்ஜுனின் ஆட்கள் தரமற்ற பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து லாப நோக்கில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் படியாக அரசு கட்டிடங்களை கட்டுகிறார்கள் என்ற புரளியை மீடியாக்களில் பரப்பி விட்டான் சந்தோஷ்.

உலகம் எங்கும் பல தொழில்களை செய்து வந்து கொண்டிருக்கும் அவர்களது குடும்பத்திற்கு இது மாதிரியான வதந்திகள் எல்லாம் பழக்கப்பட்ட ஒன்று தான் என்பதால் தங்களது பப்ளிக் ரிலேஷன்ஷிப் டீமை வைத்து அதையும் திறன்பட சமாளித்தான் ஆகாஷ்.

“இந்த ஆகாஷ் இருக்கிற வரைக்கும் அர்ஜுனை எதுவுமே பண்ண முடியாது போல இருக்கு. முதல்ல இவனுக்கு ஒரு பாயாசத்தை போடணும். அங்க அர்ஜுன் எப்படி அவனோட ரெண்டு பொண்டாட்டியையும் நெனச்சு தேவதாஸ் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கானோ அதே மாதிரி இவனும் சுத்தணும். அப்ப தான் இவன் அடங்குவான்.” என்று நினைத்த சந்தோஷ் ஆகாஷை டார்கெட் செய்வதற்காக லிண்டாவிற்கு கட்டம் கட்டினான்.

‌ லிண்டா ரஷ்யாவை சேர்ந்தவளாக இருந்தாலும், இந்த தமிழ் குடும்பத்திற்கு திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு இந்திய உணவுகளை எல்லாம் விரும்பி சாப்பிட பழகி இருந்தாள். ஆனால் வேர் கடலை என்றால் அவளுக்கு அலர்ஜி. பொதுவாக அதை மட்டும் அவள் தனது உணவுகளில் இருந்து தவித்து விடுவாள். அது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

அதை நினைவு கூர்ந்து அனைத்து உணவுகளும் தயாராகி டைனிங் டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் வேலை ஆட்களுக்கு கடைசி நிமிடத்தில் இன்னும் இரண்டு உணவு வகைகளைச் சொல்லி அதை உடனே சமைத்து வாருங்கள் என கட்டளையிட்டு அனுப்பி வைத்த சந்தோஷ் அவன் மறைத்து வந்திருந்த வேர்க்கடலை பவுடரை யாருக்கும் தெரியாமல் சப்பாத்திக்கு வைக்கப்பட்டிருந்த குருமாவில் கலந்துவிட்டு சென்று விட்டான்.

வேர்க்கடலை இப்போது பவுடர் வடிவில் இருந்ததால் குருமாவுடன் அது நன்றாக கலந்து இருந்த நிலையில் அதை கண்டுபிடிக்க முடியாமல் சாதாரணமாக அதை சாப்பிட்டு முடித்தாள் லிண்டா. அவளுக்கு என்ன ஆகிறது என்று பார்ப்பதற்காகவே அவளுக்கு எதிரில் இருந்த சாரில் ஜனனியுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்தோஷ் “என்ன இவ்ளோ நேரம் ஆகியும் ஒரு ரியாக்ஷனையும் காணோம்! இவளுக்கு ஒரு வேர்க்கடலை தெரியாம சாப்பிட்டா கூட ஆகாதே.. நான் கலந்தது கிட்டத்தட்ட 20 கிராம் இருக்கும். இவ சாப்பிட்டதுல எப்படியும் ரெண்டு கிராம் கூடவா போயிருக்காது? ஒருவேளை இங்க இந்தியாவுக்கு வந்து கொஞ்ச நாள் தங்கி இருந்ததுனால இவளுக்கு அந்த அலர்ஜி போயிருச்சா? என்ன இது.. இந்த குடும்பத்தில இருக்கிறவங்க நம்ம என்ன பண்ணாலும் அதிலிருந்து தப்பிச்சுக்கிட்டே இருக்காங்க!” என தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.‌

“மம்மி எனக்கு ஐஸ் கிரீம் வேணும். நான் இன்னைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடாம தூங்க மாட்டேன். பாட்டி curd-ஐ ஃபிரிட்ஜில இருந்து எடுக்கும்போது அங்க ஐஸ்கிரீம் இருக்கிறத நான் பார்த்தேன். சோ இன்னைக்கு நீங்க ஐஸ் கிரீம் இல்லைன்னு பொய் சொல்லி என்னை ஏமாத்த முடியாது. நீங்க எனக்கு எடுத்து குடுக்கலைனாலும் நானே போய் எடுத்துக்குவேன்.” என்ற மகிழன் டைனிங் டேபிளில் இருந்து எழுந்து கிச்சனை நோக்கி ஓடினான்.

“No.. stop there.. don’t run மகிழ்!” என்ற லிண்டா அவசரமாக டைனிங் டேபிளில் இருந்து எழுந்து அவன் பின்னே ஓடினாள். மகிழன் வேகமாக ஓடி விட, அவனைப் பின் தொடர்ந்து வேகமாக சென்ற லிண்டா அப்படியே மயங்கி கீழே விழுந்தாள். அந்த காட்சியை ஆனந்தத்தில் விழிகள் விரிய பார்த்த சந்தோஷ் “சூப்பர்! இதுக்கு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என நினைத்து யாருக்கும் தெரியாமல் தனக்குள் சிரித்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனனி ‌“oh my God.. அண்ணி!” என்றபடி எழுந்து வேகமாக செல்ல, ஜனனியின் குரல் கேட்டு நின்று திரும்பி பார்த்த மகிழன் தன் அம்மா தரையில் மயங்கி கிடப்பதை பார்த்து ஷாக் ஆகி “மம்மி!”  என்று கத்தியபடி லிண்டாவை நோக்கி ஓடி வந்தான்.

ஜானகியுடன் சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலை நோக்கி வந்து கொண்டிருந்த தேன்மொழி “அச்சச்சோ.. என்னாச்சு இவங்களுக்கு? வாங்க அத்தை போய் பாக்கலாம்.” என்று ஜானகியை அழைத்துக் கொண்டு சென்றாள். எதுவும் தெரியாதவனை போல சந்தோஷ் லிண்டாவை தூக்கிக் கொண்டு சென்று அவளது ரூமில் படுக்க வைக்க,  அவளது முகம் மற்றும் கைகளில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் அலர்ஜிக் ரியாக்சன்ஸ் தெரிய தொடங்கியது.

அதைப் பார்த்தவுடன் உணவு ஒவ்வாமை காரணமாகத் தான் லிண்டா மயங்கி விழுந்திருக்கிறாள் என புரிந்துக் கொண்ட ஜானகி தாமதிக்காமல் டாக்டருக்கும், ஆகாஷிற்க்கும் கால் செய்து வரச் சொன்னாள்.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured