அத்தியாயம் 5: இவர் யாரு?
ஆருத்ரா தன்னை அம்மா என்று அழைத்ததால் தேன்மொழி ஒரு புறம் குழப்பத்தில் இருக்க, அவள் உண்மையை சொல்லலாம் என்று நினைக்கும் போது, ஆகாஷ் வேறு அவளை மிரட்டியதால் செய்வதறியாது கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள்.
தனது தங்கை இப்படி யாரோ ஒருத்தியை அம்மா என்று அழைப்பது அவளது அண்ணனான சித்தார்த்திற்க்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால் உடனே அவர்கள் அருகில் சென்று ஆருத்ராவின் கையை பிடித்து இழுத்தான்.
கண்கள் குளமாக அவனைப் பார்த்த ஆருத்ரா “நம்ம மம்மீ வந்துட்டாங்க சித். நீயும் அவங்க கிட்ட வந்து பேசு.” என்று சொல்ல, “நம்ம மம்மீ சாமி கிட்ட போய்ட்டாங்க ருத்ரா. இவங்க ஒன்னும் நம்ம மம்மீ இல்ல.” என்று சொல்லிவிட்டு தேன் மொழியை பார்த்து முறைத்தான்.
அதனால் உடனே தேம்பி தேம்பி அழத் தொடங்கிவிட்ட ஆருத்ரா “இல்ல நீ பொய் சொல்ற. இவங்க தான் நம்ம மம்மீ. அம்மா நமக்காக தான் திரும்ப வந்துருக்காங்க. நீ ஏன் இப்படி சொல்லி அவங்கள ஹர்ட் பண்ற?
அங்க பாரு உன்னால தான் அம்மா அழுகுறாங்க. சாரி மம்மீ அழுகாதீங்க. அவன் இப்படி சொன்னதுக்காக கோச்சிக்கிட்டு மறுபடியும் இங்க இருந்து போய்டாதீங்க. நான் உங்கள போக விட மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு சித்தார்த்தின் கையை உதறிவிட்டு தேன் மொழியை அணைத்துக் கொண்டாள்.
அந்த குழந்தையின் கள்ளமற்ற அன்பில் ஒரு நொடி தன்னையும் மீறி தொலைந்து போன தேன்மொழி ஆதரவாக ஆருத்ராவை அனைத்துக் கொள்ள, “குழந்தைங்க கன்பியூஸ் ஆகி அழுகிறாங்க இல்ல.. நீங்க தான் அவங்க அம்மான்னு சொல்லுங்க அண்ணி.
அப்ப தான் அவங்க ரெண்டு பேரும் நம்புவாங்க.” என்று அவளை மிரட்டும் தோரணையில் சொன்னான் ஆகாஷ்.
அதனால் உடனே தேன்மொழியின் முகம் மாறிவிட, இப்போது பயத்துடன் ஆருத்ராவை பார்த்து “நான் தான்.. நான் தான் மா உங்க அம்மா. உங்கள விட்டுட்டு போனதுக்கு சாரி.
இனிமே நான் எங்கயும் போக மாட்டேன். உங்க கூட தான் இருப்பேன். நீ சொன்ன மாதிரி நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். அதான் உங்களுக்காக திரும்ப வந்துட்டேன்.” என்று ஆகாஷ் மிரட்டியதால் தட்டு தடுமாறி பொய் சொன்னாள்.
அவளது தோற்றம் மட்டுமல்லாமல், குரல் கூட தனது அம்மாவை போலவே இருந்ததால் அவள் பேசியதை உண்மை என்று நம்பிய ஆருத்ரா “இனிமே நான் உங்களை எங்கயும் போக விட மாட்டேன் மம்மீ. எப்பவும் எங்க கூடவே இருங்க ப்ளீஸ்..!!” என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
தேன் மொழியின் மனதிற்குள்ளேயே இப்போது ஆயிரம் கஷ்டங்கள் இருக்கிறது. தான் எங்கே இருக்கிறோம், தனது குடும்பத்தினர்கள் என்ன ஆனார்கள்? என்றெல்லாம் தெரியாத நிலையில் இருக்கிறாள் அவள்.
ஆனால் அப்படி இருந்தும் அந்த குட்டி பெண்ணிற்காக அவளது இதயம் வலித்தது. அவளது குடும்பத்தினர் தனக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்ய காத்திருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரிந்தாலும், அதற்காக குழந்தையிடம் தன் கோபத்தை காட்டும் அளவிற்கு அவள் ஒன்றும் கொடுமைக்காரி இல்லையே..!!
அதனால் ஆருத்ராவை நேராக நிற்க வைத்த தேன்மொழி அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “நீ குட் கேர்ள் தானே.. இனிமே இப்படி எல்லாம் அழக்கூடாது. நீ இப்படி ஃபீல் பண்ணி அழுகுறத பார்த்தா அம்மாவுக்கும் கஷ்டமா இருக்கும்.” என்று அன்புடன் சொன்னாள்.
அதனால் அழகாக அவளை பார்த்து புன்னகைத்த ஆருத்ரா “நீங்க தான் வந்துட்டீங்களே.. டாடியும் சீக்கிரம் நார்மல் ஆகிடுவாரு. அப்புறம் நான் எதுக்கு அழனும்? இனிமே நான் ஹாப்பியா இருப்பேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
அங்கே நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவனது அம்மா பேச்சு மூச்சின்றி அவன் கண் முன்னே இறந்து கிடந்தது இன்னும் அவனது நினைவில் அப்படியே இருந்தது.
பின் அவளது டெட்பாடியை கூட தங்களது பெரிய தோட்டத்தின் ஒரு மூலையில் அவனது குடும்பத்தினர்கள் புதைத்து அங்கேயே அவளுக்கு ஒரு சமாதியை கட்டியதை எல்லாம் அவன் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருந்தான்..!!
அப்படி இருக்கும்போது, அவனது அம்மாவின் சாயலில் உள்ள ஒரு பெண்ணை அழைத்து வந்து இது தான் உன் அம்மா என்றால், அவனால் உடனே அதை நம்பவும் முடியவில்லை.
வந்திருப்பவள் தனது சொந்த அம்மாவைப் போல பாசமாக ஆருத்ராவிடம் நடந்து கொள்வதால், இது தன் அம்மா இல்லை என்றும் அவனால் நினைக்க முடியவில்லை. அதனால் ஒருவித குழப்ப மனநிலையிலேயே இருந்த சித்தார்த் அமைதியாக நின்றான்.
அதுவரை ஜனனியின் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த ஜானகி நடந்ததை பார்த்துவிட்டு தன் அத்தையிடம் “நான் கூட நம்ம எடுத்த முடிவு சரியா தப்பான்னே புரியாம யோசிச்சுகிட்டே இருந்தேன் அத்தை.
ஆனா இந்த பொண்ணு வந்த ஒரே நாள்ல நம்ம எடுத்த முடிவு கரெக்ட்னு ப்ரூவ் பண்ணிட்டா. இனிமே என் பையனும், பேர புள்ளைங்கலம் சந்தோஷமா இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. இந்த சின்ன பொண்ணு எல்லாத்தையும் மாத்திடுவா. மாத்தணும்.” என்று சொல்ல, ஆமாம் என்று தலையாட்டி அதை அமோதித்தார் பாட்டி.
அதுவரை அங்கே மந்திரம் சொல்லி திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த ஐயர் அவர்களை திரும்பிப் பார்த்து ”இன்னும் கொஞ்ச நேரத்துல நல்ல நேரம் முடியப்போகுது.
பொண்ணையும் மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்து மணமேடையில உட்கார வைங்க.” என்றார்.
அதனால் பயந்து போய் தேன்மொழி அந்த ஐயரையும், தன் அருகில் இருந்த ஆகாஷையும் மாறி மாறி பார்க்க, “அண்ணிய கூட்டிட்டு போய் மண மேடையில உட்கார வை.” என்று தன் மனைவி லிண்டாவிடம் சொன்னான் ஆகாஷ்.
பின் அவனே வில் சாரில் அசைவின்றி கண்களை மூடி மயக்க நிலையில் கிடந்த தனது அண்ணனை மேடைக்கு அழைத்து சென்றான். “அண்ணி ஏன் வீல் சார்ல உக்காந்திருக்காங்க? அவங்களுக்கு என்ன ஆச்சு லிண்டா?” என்று தனது இரண்டாவது அண்ணனின் மனைவியிடம் கேட்ட ஜனனி அவளுக்கு தேன்மொழியின் வீல் சேரை தள்ள உதவினாள்.
“அது பெருசா ஒன்னும் இல்ல Jan.. இவங்க கால் வலிக்குதுன்னு சொல்லிருப்பாங்க போல.
அதான் ஆகாஷ் இவங்களுக்கும் வீல் சேர் ரெடி பண்ணி கொடுத்துட்டாரு.” என்று லிண்டா சொல்லி சமாளித்து விட, அவர்களை எல்லாம் பார்க்க பார்க்க தேன்மொழிக்கு பற்றி கொண்டு வந்தது.
இப்போது அக்னி குண்டத்திற்கு முன் வீல் சாரில் தேன்மொழியும், அவளை திருமணம் செய்து கொள்ள போகிறவனும் அமர்ந்திருந்தார்கள். ஆனால் திரும்பி தன் அருகில் இருப்பவனை பார்க்க கூட அவளுக்கு தைரியம் வரவில்லை.
அதே சமயம் அவர்கள் இருவருக்கும் இப்போது திருமணம் நடக்கப் போகிறது என்னும்போது, அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவளுக்குள் பிறந்தது.
அதனால் தனது பயத்தையும் கோபத்தையும் மீறி ஜனனியின் கையை பிடித்து “நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே..!! உங்க அண்ணன் ஆகாஷ் வேற அப்பப்ப பிஸ்டலை காட்டி என்னை சுட்டுக் கொன்றுவேன்னு பயமுறுத்துறாரு.
எனக்கு இங்க யாரைப் பார்த்தாலும் பயமா தான் இருக்கு. நீங்க மட்டும் தான் என் கிட்ட கொஞ்சம் பாசமா பேசினீங்க. அதான் இத உங்க கிட்ட கேட்கிறேன்.” என்று மெல்லிய குரலில் கேட்டாள் தேன்மொழி.
குனிந்து அவள் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்த ஜனனி “நீங்க எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு அண்ணியாக போறீங்க தேன்மொழி.
சோ என்னையும், என் குடும்பத்தில இருக்கிறவங்களையும், பார்த்து நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல. நாங்க உங்கள பத்திரமா பாத்துப்போம். நீங்க எது வேணாலும் எப்ப வேணாலும், என்னையும் லிண்டாவையும் கேட்கலாம்.
நான் வேணா ஆகாஷ் அண்ணா கிட்ட கிளாராவ உங்க பர்சனல் அசிஸ்டன்ட்டா போட சொல்றேன். அவ உங்க கூடவே இருந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா.” என்றாள்.
“கிளாரான்னா அந்த கருப்பு கலர் யூனிபார்ம் போட்டு இருக்க பொண்ணா?” என்று பயந்த குரலில் கேட்ட தேன்மொழி தனக்கு எதிரில் பிரிட்டோவின் அருகில் நின்று கொண்டிருந்த கிளாராவை கை காட்டினாள்.
“ஆமா அண்ணி, அவ தான் கிளாரா.” என்று ஜனனி சொல்ல, “ஐயோ.. அவ வேண்டாம். நான் உன்னை என்ன விடு வேண்டாம். நான் வீட்டுக்கு போகணும்னு கெஞ்சியும் கேட்காம, அவ தான் என்ன கடத்திட்டு வந்தா.
எனக்கு அவளை பார்த்தாலே கோபம் கோபமா வருது. ப்ளீஸ் அவள என் முன்னாடி வரவே வேண்டாம்னு சொல்லுங்க.” என்று கோபம் கலந்த பயத்துடன் சொன்னாள் தேன்மொழி.
ஜனனிக்கு தேன்மொழியை பார்த்தவுடனேயே பிடித்து விட்டது. ஏனோ தன் அண்ணனுக்கு ஏற்றவள் இவள் தான் என்று அவள் மனம் ஸ்ட்ராங்காக சொல்லியது.
அதனால் அன்புடன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்கு ரெண்டு குட்டிஸ் இருக்காங்க அண்ணி. சோ எப்பவும் என்னால உங்க கூடவே இருக்க முடியாது. நீங்க நினைக்கிற அளவுக்கு கிளாரா கெட்டவ இல்ல.
அவ அவளோட வேலைய தான் செஞ்சிருக்கா. அதுக்காக நீங்க அவ மேல கோவப்படாதீங்க. சரி அவள பத்தி விடுங்க.
என் கிட்ட ஏதோ கேட்கணும்னு சொன்னிங்களே.. எதுவா இருந்தாலும் தைரியமா கேளுங்க. நான் சொல்றேன்.” என்றாள் ஜனனி.
“இவர் தான் உங்க அண்ணனா? இவருக்கும் எனக்கும் தான் மேரேஜா? இவர் பெயர் என்ன? ஏன் இவர் இப்படி இருக்காரு?
என்னை மாதிரியே இவரையும் மயக்க மருந்து குடுத்து கடத்திட்டு வந்துட்டீங்களா? இவருக்கும் இந்த கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லனா ஏன் இப்படி எங்க ரெண்டு பேரையும் force பண்ணி இப்படி ஒரு கல்யாணம்?” என்று கண்கள் கலங்க தன் மனதில் இருந்த அத்தனை கேள்விகளையும் ஒரே மூச்சாக கேட்டு முடித்தாள் தேன்மொழி.
தன் அண்ணனை பார்த்தவுடன் சோகமான ஜனனி “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாமே கரெக்டா தான் இருந்துச்சு அண்ணி.
நாங்க எங்க அண்ணா, அண்ணி, சித்தார்த், ஆருத்ரான்னு எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். எங்க லைஃப்ல வந்த அந்த ஒரு நாள், டோட்டலா எங்க லைஃப்பையே மாத்திடுச்சு.
நீங்க எங்க அண்ணன் பேரு என்னன்னு கேட்டீங்கள்ல… எங்க அண்ணாவோட பேரு அர்ஜுன் பிரசாத். எங்க வீட்ல இருக்கிறவங்க தவிர அவரோட ஒரிஜினல் நேம் என்னன்னு கூட யாருக்கும் தெரியாது.
வெளிய இருக்கிறவங்க எல்லாரும் அவர சீஃப் இல்லனா AJன்னு தான் கூப்பிடுவாங்க. எங்க அண்ணா இந்த பேலஸ்ல ராஜா மாதிரி கெத்தா இருந்தாரு. ஆனா அன்னைக்கு நடந்த அந்த மோசமான சம்பவத்தினால பாதிக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாரஆனா
அவருக்கு நாங்க பாக்காத டிரீட்மென்ட் இல்ல. ரெண்டு வருஷமாகியும், எங்களால எங்க அண்ணனை சரி பண்ணவே முடியல. அப்ப தான் அவர உங்களால மட்டும் தான் சரி பண்ண முடியும்னு தெரிஞ்சுகிட்டோம்.
இப்போதைக்கு நீங்க தான் அண்ணி எங்க அண்ணனுக்கு மெடிசன். உங்களால மட்டும் தான் கோமாவுல இருந்து எங்க அண்ணனை எழுப்பி நார்மல் ஆக்க முடியும்.
நாங்க உங்களுக்கே தெரியாம இங்க உங்களை கடத்திட்டு வந்தது தப்புதான். ஆனா அதுக்காக, எங்க அண்ணனை ஏத்துக்காம இருந்து எங்களுக்கு பனிஷ்மெண்ட் கொடுத்துடாதீங்க அண்ணி. எங்க அண்ணா தான் எங்க ஸ்ட்ரென்த்.
இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள அவருக்கு நினைவு திரும்பலைன்னா, இனிமே எப்பவும் அவர் நார்மலாக சான்ஸ் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அவருக்கு மட்டும் ஏதாவது ஆயிட்டா, நீங்க இங்க பாக்குற எல்லாமே ஒரே செகண்ட்ல இல்லாம போயிடும்.” என்று கண்கள் கலங்க சொன்னாள்.
– மீண்டும் வருவாள் ❤️
( பிரதிலிப்பியில் என்னை மறக்காமல் ஃபாலோ செய்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி 🙏)