Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 90

மூர்கனின் காதலி CH 90

by Thenaruvi Tamil Novels
129 views

அத்தியாயம் 90

பாட்டி விஷ்வாவோட வாரிசை பார்க்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னதால, “அது எப்படி முடியும்..??” அப்படின்னு நினைச்சுக்கிட்டே கேள்வியா மேகாவோட முகத்தைப் பார்த்தான் விஷ்வா. “என்ன இவரு பாட்டி கேட்டதுக்கு பதில் சொல்லாம என் மூஞ்சியைப் பார்க்குறாரு..?? ஒருவேளை பாட்டி சொன்னதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி.. கடைசில அவங்களுக்காக குழந்தையும் வேணும்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாரோ..?? எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்து, அது லவ்வாக மாறி.. நாங்க சேர்ந்து வாழ்ந்து எங்களுக்குப் பொறக்கப் போற குழந்தை எங்க லவ்வுக்கு அடையாளமா இருந்தா தானே நல்லா இருக்கும்..!! தேவைக்கு கடையில போய் பொருள் வாங்குற மாதிரி குழந்தை பெத்துக்க முடியுமா..??” அப்படின்னு யோசிச்ச மேகா, முகத்தைத் திருப்பிக்கிட்டா.

“நானே அவளை ஃபோர்ஸ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாட்டி. ஏதோ என் மேல இருக்கிற சாஃப்ட் கார்னர்ல அவ என்கூட இருக்கா. இப்போ உங்களுக்காக நான் அவளை எனக்கு குழந்தை பெத்து குடுன்னு கட்டாயப்படுத்த முடியுமா..?? நானே இதுக்கு சரின்னு சொன்னாலும் அவ எப்பவும் ஒத்துக்க மாட்டா. ஆனா இதை நான் எப்படி உங்ககிட்ட சொல்றது..??” அப்படின்னு நினைச்ச விஷ்வா அமைதியாவே இருக்க, “என்னடா அமைதியாவே இருக்க..!! நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா எனக்கு ஒரு கொள்ளுப் பேரனை பெத்து குடுப்பீங்களா மாட்டீங்களா..??” என்று கேட்டார் பாட்டி.

“அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும் பாட்டி. நீங்க கண்டதையும் போட்டு யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. நாங்க ஆபீஸ் போகணும், லேட் ஆகுது. அப்புறமா உங்களை வந்து பார்க்கிறோம்.” அப்படின்னு சொன்ன விஷ்வா மேகாவை அழைச்சுக்கிட்டு கார்ல ஆபீஸ்க்கு போனான். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆபீஸ்க்குள்ள நுழையும்போது, பார்ட்டி பாப்பர்ஸ் சத்தமா வெடிக்க, அவங்க மேல கலர் பேப்பர்ஸ் மழையா கொட்டுச்சு. அதுல விஷ்வாவோட சேர்ந்து நனைஞ்ச மேகா ஒரு சின்ன குழந்தை மாதிரி மாறி சந்தோஷப்பட, “ஹேப்பி மேரிட் லைஃப் பாஸ்..!!” அப்படின்னு ஆபீஸே இடிஞ்சு விழுற அளவுக்கு அங்க வேலை பாக்குற எல்லாரும் சேர்ந்து கத்துனாங்க.
மேகா எக்சைட் ஆகி அதையெல்லாம் சந்தோஷமா பார்த்துட்டு இருக்க, “டேய் நான் என்ன சொன்னேன்.. நீங்க என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..??” அப்படின்னு கோபமா மகேஷைப் பார்த்து முறைச்சான் விஷ்வா.

“ஐயோ பாஸ் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படி பண்ணப் போறேன்னு எவனும் என்கிட்ட சொல்லவே இல்லை. நீங்க சொன்னதை நான் அப்படியே எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். அப்படியும் இப்படி பண்ணி வச்சிருக்கானுங்க.” அப்படின்னு மகேஷ் அவசரமா சொல்ல, அங்க இருந்த சத்தத்துல அவன் பேசுனது விஷ்வாவுக்கு சரியா கேக்கவே இல்லை.
விஷ்வாவோட கையைப் பிடிச்சுக் கிட்ட மேகா, “உங்க ஆபீஸ்ல நமக்கு இப்படி ஒரு என்ட்ரி கொடுப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை விஷ்வா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” அப்படின்னு சொல்லிட்டு, அவனை இழுத்துக்கிட்டு உள்ள போனா.

அவளுக்கு இதெல்லாம் பிடிச்சிருக்குன்னு சொன்னதால விஷ்வா எதுவும் சொல்லாம அமைதியா வர, அவங்க முன்னாடி ஒரு பெரிய 5 டயர் கேக்கை தள்ளிக்கிட்டு வந்து நின்னான் ஒருத்தன்.
அப்போ அவங்க முன்னாடி வந்த அட்மின் ஹரி, “உங்களுக்கு கல்யாணம் ஆனதுல எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் பாஸ். அதுவும் நீங்க நம்ம லேடி பாஸ் கூட ஆபீஸ் வர்றீங்கன்னு தெரிஞ்ச உடனே பசங்க எல்லாம் செம ஹேப்பி. உங்களுக்கு கல்யாணம் ஆனதால அடுத்து அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடும்னு ஒரே அலப்பறை. அதான் உங்க ரெண்டு பேரையும் ஸ்பெஷலா வரவேற்கணும்னு இதெல்லாம் பண்ணோம். டைம் கம்மியா இருந்ததுனால பெருசா வேற எதுவும் பண்ண முடியல. சாரி பாஸ் கோச்சுக்காதீங்க..!!!” அப்படின்னு சொல்லிட்டு கேக் வெட்ட கத்தியை விஷ்வா கிட்ட நீட்டுனான்.

மேகா முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்தைப் பார்த்த விஷ்வா, டக்குனு ஹரி கையில இருந்து கத்தியை வாங்கி மேகாவோட சேர்ந்து கேக் வெட்டுனான். மேகா விஷ்வாவுக்கு கேக் ஊட்டி விட, இதுவரைக்கும் விஷ்வாவை ஒரு மாதிரியா பார்த்த ஸ்டாப்ஸ் எல்லாம் இதை ஏதோ அதிசயம் மாதிரி பார்த்தாங்க. “இந்த மனுஷனுக்குள்ளயும் எங்கயோ ஒரு இடத்துல கொஞ்சம் ஃபீலிங்ஸ் இருக்கு. இவரு மேகா மேடமை எவ்ளோ சின்சியரா லவ் பண்ணி இருந்தா மத்த பொண்ணுங்க கிட்ட பேசாம இருந்திருப்பாரு..!! என்ன இருந்தாலும் எங்க பாஸ் வேற லெவல்.” அப்படின்னு நினைச்ச வசந்த் பக்கத்துல இருந்த சதீஷ்கிட்ட, “உன் வாய் என்ன வாயோ தெரியல டா. அன்னைக்கு மீட்டிங்ல அவர் கிட்ட சும்மா ஒரு பொண்ணுக் கூட போட்டோவுக்கு போஸ் கொடுங்கன்னு தான் சொன்ன. இப்ப அவரு கல்யாணமே பண்ணிட்டு வந்து வைஃப்கூட நின்னு நம்ம முன்னாடியே போஸ் கொடுத்துட்டு இருக்காரு..!!” என்றான்.

“யெஸ் குட்டி பாஸ். பாஸ் கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே நான் தான். சோ அவர் கிட்ட டைம் பார்த்து பேசி எனக்கு ஒரு 5000 இன்க்ரிமென்ட் போட சொல்லுங்களேன்..!!” அப்படின்னு சதீஷ் கேட்க, “ஏன் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் நீ வாங்கின அடியை இப்போ நான் போய் வாங்கிட்டு வரணுமா..?? அதானே உன் பிளான்..!!” அப்படின்னு வசந்த் சந்தேகமா கேட்டான்.

“இருந்தாலும் உங்க மூளை ரொம்ப ஷார்ப் குட்டி பாஸ். அதான் நீங்க எனக்கு ஹெட்டா இருக்கீங்க, நான் அசிஸ்டன்ட்டா இருக்கேன்.” அப்படின்னு சதீஷ் சிரிச்சுக்கிட்டே சொல்ல, அவன் மண்டையிலேயே ஒண்ணு வச்சான் வசந்த்.
விஷ்வா மேகாவோட லிஃப்ட்ல ஏறி அவனோட ரூமுக்கு போயிட, “இவனுங்க பண்ண வேலைக்கு இவரு என்ன பண்ணப் போறாரோ தெரியல..!!” அப்படின்னு புலம்பிக்கிட்டே அங்க போன மகேஷ், “மே ஐ கம் இன் சார்..??” அப்படின்னு கேட்டுட்டு உள்ள போனான்.

“வந்து தொல.” அப்படின்னு விஷ்வா சொல்ல, “அவ்ளோதான் என் சோலி முடிஞ்சது. இவரு கூப்பிடுற ஸ்டைலே சரியில்லையே.” அப்படின்னு நினைச்சான் மகேஷ்.

“இங்க இவ்வளவு பிளான் நடந்திருக்கு, இதெல்லாம் உனக்கு தெரியாது.. அப்படித்தானே..!!” அப்படின்னு விஷ்வா டேபிள்ல இருந்த பேப்பர் வெயிட்ட உருட்டிக்கிட்டே கேட்க, “செத்துப்போன எங்க ஆயா மேல சத்தியமா எனக்கு தெரியாது பாஸ். எவனாவது என்கிட்ட சொல்லி இருந்தா கண்டிப்பா தடுத்து இருப்பேன். இப்ப தான் ஏண்டா இப்படி பண்ணீங்கன்னு கேட்டுட்டு வர்றேன். கேட்டா சர்ப்ரைஸ்னு சொல்றானுங்க. என்கிட்ட சொன்னா நான் உங்க கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லலையாம். இப்ப நான் என்ன பண்றது.. நீங்களே சொல்லுங்க..??” அப்படின்னு பாவமா கேட்டான்.

“இப்போ எதுக்கு அவரை நிக்க வச்சு இத்தனை கேள்வி கேட்குறீங்க..?? இதெல்லாம் கார்ப்பரேட் கம்பெனியில சாதாரணமா நடக்குறது தானே.. இதுக்கு ஏன் இப்படி கோபப்படுறீங்க..?? அவங்க நினைச்ச மாதிரி சர்ப்ரைஸ் நல்லாத்தானே இருந்துச்சு.. அப்புறம் ஏன்?” அப்படின்னு மேகா கேட்டதால, “இனிமே இப்படி எனக்கு தெரியாம எதுவும் நடக்கக் கூடாதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி வை. நீ போ.” அப்படின்னு மகேஷை அனுப்பிட்டான் விஷ்வா.

அவன் போனதுக்கு அப்புறம் மேகாவைப் பார்த்து, “இங்க நீ என்ன பண்ணப் போற..?? உனக்கு என்ன தெரியும்..?? உன்னோட ஒொர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸ், ப்ராஜெக்ட் டீடைல்ஸ் எல்லாத்தையும் சொல்லு.” அப்படின்னு விஷ்வா கேட்க, “ஓஹோ.. இவரு என்னையும் இன்டர்வியூ பண்ணித் தான் பொசிஷன் முடிவு பண்ணுவாரோ..?? இருக்கட்டும்.. நான் யாருன்னு சீக்கிரமா நிரூபிக்கிறேன் மிஸ்டர் விஷ்வா.” அப்படின்னு நினைச்ச மேகா, சூப்பரான இங்கிலீஷ்ல அவன் கேட்ட எல்லாத்துக்கும் ஒரு புரொபஷனல் மாதிரி பதில் சொன்னா.

நிஜமாவே அவ பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட விஷ்வா, வேணும்னே சில கஷ்டமான டெக்னிக்கல் கேள்விகளை கேட்டான். அதுக்கும் மேகா சலிக்காம பதில் சொல்ல, “வாவ்.. இவ நான் நினைச்சதைவிட ரொம்ப டேலண்டடா இருக்கா. இவளைப் போய் சாதாரண பொசிஷன்ல அந்த ஆதித்யா எப்படி வேலைக்கு வச்சிருந்தானோ..?? அவனுக்கு இருக்கிற அறிவுக்கு அவ்வளவுதான் முடியும்.” அப்படின்னு யோசிச்ச விஷ்வா மேகாவைப் பார்த்து, “நீ இருக்க வேண்டிய சரியான இடம் இது தான் மேகா.

அதான் நீயாவே இங்க வந்திருக்க.” அப்படின்னு நினைச்சுக்கிட்டான்.
அவன் அமைதியா இருந்ததால, “இன்டர்வியூ முடிஞ்சிடுச்சா சார்..?? எந்த ஆபீஸ்லயும் சேர்மன் சார் டைரக்டா இன்டர்வியூ பண்ண மாட்டாங்க. அப்படி இருக்கும்போது நீங்களே பண்றீங்கன்னா நான் எவ்ளோ ஸ்பெஷல்னு புரியுது. சீக்கிரமா ரிசல்ட் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். நான் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கேன்.” அப்படின்னு மேகா ஆர்வமா சொன்னா.

“நானும் தான். வெல்கம் டு எம்.வி டெக் மிஸஸ் மேகவாணி விஷ்வா.” அப்படின்னு விஷ்வா கையை நீட்ட, மேகா எழுந்து கை குடுத்தா.
அப்போ விஷ்வா லேசா சிரிக்க, டக்குனு அவனை அணைச்சுக்கிட்ட மேகா, “தேங்க்ஸ் விஷ்வா. நீங்க கேட்ட கேள்வியிலயே என்னோட கெபாசிட்டி என்னன்னு உங்களுக்கு புரிஞ்சிடுச்சுன்னு எனக்கு தெரிஞ்சது. உங்ககூட சேர்ந்து வேலை பார்க்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.” அப்படின்னு குஷியா சொன்னா. அவளையும் சேர்த்து அணைச்சுக்கிட்ட விஷ்வா, “நீ சொன்ன மாதிரி இது ஸ்பெஷல் இன்டர்வியூ தான். சோ, என் புது எம்ப்ளாயியை வெல்கம் பண்ண இன்னைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டி வைக்கலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிற..??” அப்படின்னு கேட்டான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured