அத்தியாயம் 9
“என்னது.. சிரிக்கிறாரா.. எங்க பாஸ் சிரிக்கிறாரா..!! இவர் கூட நான் இருந்த இத்தனை வருஷத்துல இந்த சம்பவம் நடந்து நான் ஒரு தடவைக்கூட பார்த்ததில்லையே.. இப்ப மட்டும் பாட்டி இந்த சீனைப் பார்த்தா.. உடனே சரியாகி டண்டனக்கா டனக்குனக்கான்னு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவாங்க.. இதை மிஸ் பண்ணிடக்கூடாது. எங்க என் ஃபோன்..??”ன்னு தனக்குள்ள பேசின மகேஷ் அந்த அழகான தருணத்தை தன் ஃபோன் கேமராவுல படம் பிடிச்சான். அவன் எடுத்த போட்டோவுல கேமராவைப் பார்த்து விஷ்வா சிரிக்க, “என்னடா உன் இஷ்டத்துக்கு என்னென்னமோ சொல்லிட்டு இருக்க..!!”ங்கிற மாதிரி ஷாக் ஆகி அவனையே பார்த்தபடி இருந்தா மேகா.
“ஐயோ இவர் சொல்றதெல்லாம் பொய் யாரும் நம்பாதீங்க…!!”ன்னு சொல்லத் துடிச்ச தன் உதடுகளைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக்கிட்ட மேகா விஷ்வாகிட்ட இருந்து விலக முயற்சி செய்ய, “எங்கேயாவது நகர்ந்த.. கொன்னுடுவேன்.”ன்னு சிரிச்ச முகமா அவள் காதோரம் கிசுகிசுத்த விஷ்வா அவளோட இடுப்புல தன் பிடியோட அழுத்தத்தை கொஞ்சம் கூட்டினான். அதற்கே “ஆஆ. வலிக்குதே.. என்ன இவர் என் இடுப்பை உடைக்க பிளான் பண்ணிட்டாரா..!!”ன்னு நினைச்ச மேகா பாவமா அவனைப் பார்த்தா.
“நான் தான் இருக்கேன்ல.. நீ ஏன் ஷையா ஃபீல் பண்ற..?? உன் பேர் என்ன.. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு எல்லாருக்கும் சொல்லு..!!”ன்னு விஷ்வா மேகாவைப் பார்த்து சொல்ல, ரிப்போர்ட்டர் ஒருத்தன் “சொல்லுங்க மேடம்.. விஷ்வா சார் சொல்ற மாதிரி நீங்க ரெண்டு பேரும் நிஜமாவே லவ் பண்றீங்களா..?? எப்படி உங்களுக்குள்ள லவ் ஸ்டார்ட் ஆச்சு..!! எத்தனை வருஷமா நீங்க லவ் பண்றீங்க..??”ன்னு அடுக்கடுக்கா கேள்விகள் கேட்டான்.
“இப்ப நான் இவரை லவ் பண்ணலேன்னு சொன்னா.. அப்ப இவர் சொன்ன மாதிரி நெஜமாவே என்னைக் கொன்னுட்டாருன்னா என்ன பண்றது..!!”ன்னு நினைச்ச மேகா வேர்த்து வடிய பயத்தோட அவனைப் பார்க்க, “உனக்கு டவுட் எல்லாம் வேண்டாம். சத்தியமா கொன்னுடுவேன்டி.”ங்கிற மாதிரி வில்லத்தனமா அவளைப் பார்த்துப் புன்னகைச்சான் அவன். அதனால வேகமா “ஆமாமா.. அவர் சொன்ன மாதிரி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்.”ன்னா மேகா.
ரிப்போர்ட்டர் பொண்ணு ஒருத்தி “சூப்பர் மேடம் நீங்க சிம்பிளா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க ஜோடி பெர்ஃபெக்ட். எப்போ உங்களுக்கு மேரேஜ்..??”ன்னு கேட்க, “இவ என்ன.. நெஜமாவே அவ்வளவு நல்லா இருக்காளா..??”ன்னு மேகாவை மேலும் கீழும் பார்த்தான் விஷ்வா. அவள் ஒரு சாதாரண கருப்பு நிற ஃபுல் ஹேண்ட் குர்தாவும், அதுக்கு கான்ட்ராஸ்ட்டா ப்ளூ நிற ஜீன்ஸும் போட்டிருந்தா. அவளோட நீளமான கூந்தல் அழகா விரிச்சு விடப்பட்டிருக்க, அவள் முகத்துல இருந்த அளவான மேக்கப்புக்கு மேலும் அழகு சேர்க்குற மாதிரி அவள் புருவங்களுக்கு நடுவுல கருப்பு நிறத்துல ஒரு சின்னப் பொட்டு மட்டும் வெச்சிருந்தா.
மொத்தத்துல எந்த ஆங்கிள்ல இருந்து பார்த்தாலும் அவனோட கண்ணுக்கு அவள் அழகாவே தெரிய, “நல்லாத்தான் இருக்கா..!! என்னோட கேர்ள்ஃப்ரெண்ட்ன்னு சொல்ல ஒர்த் தான்.”ன்னு நினைச்ச விஷ்வா, “அதான் ஆல்ரெடி சொன்னேன்ல.. இன்னும் ஒன் மந்த்ல எங்களுக்கு மேரேஜ்ன்னு..!!”ன்னான்.
“ஓகே ஓகே சார். இன்னும் மேடம் பற்றியும், உங்க லவ் ஸ்டோரியை பற்றியும் நீங்க ரெண்டு பேருமே எதுவுமே சொல்லலையே..!!”ன்னு ஒரு ரிப்போர்ட்டர் கேட்க, “கேக்குறாங்கல்ல சொல்லு..!!”ன்னு நக்கலா சொன்ன விஷ்வா மேகாவைப் பார்த்தான்.
“நீங்க சிங்கிளா நடிக்கப்போற படத்துக்கு டைரக்ஷன் ஸ்கிரிப்ட் ரைட்டிங் எல்லாம் நானே பண்ணனுமா..?? எல்லாம் என் தலையெழுத்து.”ன்னு நினைச்ச மேகா “என் பேரு மேகா. சாஃப்ட்வேர் இன்ஜினியர். நான் ஆதி குரூப்ஸ்ல ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்போ திடீர்னு விஷ்வா மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டதனால இனிமே நான் என் ஜாபைக் கண்டினியூ பண்ண வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.”ன்னு ஓரக் கண்ணால ஆதித்யாவைப் பார்த்தபடி சொன்னா.
அதை நம்ப முடியாம ஒரு ஓரமா நின்னு பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா “அடிப்பாவி… நான் தான் உன்னை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்திட்டு இருந்தேன்னு பார்த்தா.. நீயும் என்னை ஏமாத்திருக்கியா..?? இப்ப தானடி நமக்கு பிரேக்அப் ஆச்சு.. அதுக்குள்ள எப்படி செகண்ட் லவ்..??? அதுவும் இந்த விஷ்வா..! உனக்கு எப்படி இவனைத் தெரியும்..??”ன்னு நினைச்சுக் குழம்பிக்கிட்டு இருந்தான். நறுக்கென மேகாவோட இடுப்புல கிள்ளின விஷ்வா “ஏண்டி.. இத்துனூண்டு இருந்துட்டு எவ்வளவு தைரியம் இருந்தா இத்தனை பேர் முன்னாடி என்னை விஷ்வான்னு பேர் சொல்லிக் கூப்பிடுவ..!!”ன்னு மெல்லிய குரல்ல கேட்டான்.
அவன் கிள்ளினதுல அவளுக்கு நல்லா எரிய, வந்த ஆத்திரத்துல “யோவ்.. நானும் பார்க்கிறேன்.. என்ன நீ ஓவரா பண்ற..?? நானா உன்னை நம்ப ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்ல சொன்னேன்..!! இந்தக் காலத்துல லவ் பண்ற பையனைப் பொண்ணுங்க என்ன அத்தான் மாமான்னா கூப்பிடுவாங்க…?? இப்படியே சும்மா இருக்காம நீ என்ன பிடிச்சு நோண்டிட்டே இருந்தீன்னா முன்னாடி இத்தனை கேமரா இருக்குனு எல்லாம் பார்க்க மாட்டேன். உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு உண்மையை சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேன் பார்த்துக்கோ.”ன்னு கேஷுவலா தன் முகத்தைப் பாதி மூடியபடி மெல்லிய குரல்ல கோபமா சொன்னா மேகா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)