Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 89

மூர்கனின் காதலி CH 89

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 89

விஷ்வாவோட தலையை துவட்டி விட்டுட்டே மேகா யோசிச்சா, “இவர் இன்னும் இறந்து போன விஜயை நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கறதுக்கு பதிலா, சௌபர்ணிகா அக்காவ பத்தி யோசிச்சு மைண்ட டைவர்ட் பண்ணா நல்லா இருக்கும்.”
அப்படியே அவன்கிட்ட, “நம்ம மேரேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் மறுபடியும் சௌபர்ணிகா அக்கா அவங்க பிசினஸ பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நமக்காக நம்ம மேரேஜ் அப்போ கூடவே இருந்து எவ்ளோ பார்த்து பார்த்து செஞ்சாங்க.. அதே மாதிரி அவங்களுக்கு வேண்டியதை நம்மதானே செய்யணும்..!!” அப்படின்னு சொன்னா.

“ம்ம்ம்.. ஆனா இப்ப அதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற..??” அப்படின்னு விஷ்வா கேட்க, “என்ன இப்படி கேக்குறீங்க.. அதான் இப்போ அவங்களும் சேரன் அண்ணாவும் லவ் பண்றது எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சுல்ல.. ஆல்ரெடி உங்களுக்காக யோசிச்சு அவங்க ரொம்ப வருஷம் வெயிட் பண்ணிட்டாங்க. அடுத்து சீக்கிரமா அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ண வேண்டாமா..??” அப்படின்னு கேட்டா மேகா.
பல வருஷமா தன்னையும் விஜயையும் மட்டுமே பத்தி யோசிச்சு பழகின விஷ்வாவிற்கு, சௌபர்ணிகா அவன் கண்ணு முன்னாடி இல்லாதப்ப அவள பத்தின எண்ணமே வரல.

“அட, அவங்கள பத்தி விசாரிக்கணும்னு நினைச்சுட்டு இருந்தோமே.. அத அப்படியே விட்டாச்சு. இவ சொல்ற மாதிரி அவங்க கல்யாணம் என்னோட பொறுப்புதான். அவங்க எனக்காக செஞ்சதை விட நான் அவங்களுக்கு நிறைய செய்யணும். அவங்க மட்டும் இல்லன்னா, எனக்கும் இவளுக்கும் மேரேஜே ஆகி இருக்காது” அப்படின்னு நினைச்ச விஷ்வா, “எனக்கு ஞாபகப்படுத்தினதுக்கு தேங்க்ஸ். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு. அப்புறமா இத பத்தி அவங்க கிட்ட பேசிக்கலாம்” அப்படின்னு சொன்னான்.

மறுநாள் காலையில..

அலாரம் வைக்காம படுத்ததால மேகா 8 மணி போல தானா முழிச்சு பார்த்தா. டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி ரெடியாகி நின்னுட்டு இருந்த விஷ்வா தலை சீவிட்டு இருந்தான். அதனால, “ஆபீஸ் கிளம்பிட்டீங்களா..??” அப்படின்னு கேட்க, “ம்ம்ம்… டாக்டர் பாட்டிக்காக அரேஞ்ச் பண்ணிருந்த இன்ஜெக்ஷன் இன்னைக்கு வருது. சோ போற வழியில அப்படியே ஹாஸ்பிட்டல் போயிட்டு பாட்டிய பார்த்துட்டு ஆபீஸ் போகணும்” அப்படின்னு சொன்னான் விஷ்வா.

“நானும் வர்றேன் இருங்க..!!” அப்படின்னு மேகா வேகமா எழுந்திருக்க, “நீ பாட்டிய பாக்கணும்னா அப்புறமா போய் பாரு. எனக்கு லேட் ஆகுது, நான் கிளம்பணும்” அப்படின்னு சொன்னான்.

“ச்ச்‌… இருங்க. நீங்க தான் எனக்கு முன்னாடியே எந்திரிச்சிட்டீங்கல்ல.. என்னையும் எழுப்பி விட்டுருக்கலாம்ல.. நான் இங்க வந்த உடனே பாட்டிய போய் பாக்கணும்னு நினைச்சேன். வர்றதுக்கே நைட் ஆயிடுச்சு, அதான் மார்னிங் போய் பாக்கலாம்னு இருந்தேன்” அப்படின்னு சொன்னா.

“உன்னை யார் போய் அவங்கள பாக்க வேணாம்னு சொன்னது..?? என்கூடதான் வருவேன்னு அடம் பிடிக்காதன்னு தான் சொல்றேன்” அப்படின்னான் அவன்.

“நீங்க எல்லாரும் கிளம்பி வெளிய போயிட்டீங்கன்னா, இங்க தனியா இருந்து நான் என்ன பண்ண போறேன் விஷ்வா..?? பாட்டிய பாத்துட்டு ஆபீஸ் போகலாம். ஜஸ்ட் 10 நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுங்க, நான் ரெடி ஆயிட்டு வந்துடுறேன்” அப்படின்னு மேகா வேகமா பாத்ரூமுக்குள்ள ஓட, “ஏய்.. MV Tech-குள்ள பொண்ணுங்களுக்கு அலவ்டு இல்ல, தெரியாதா உனக்கு…?? உன்னை நான் எப்படிடி அங்க கூட்டிட்டு போறது..??” அப்படின்னு சத்தமா கத்தினான்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. உங்க ஆபீஸ்க்கு மத்த பொண்ணுங்க வேணா வரக்கூடாது.. நான் உங்க வைஃப். இனி உங்களோடது என்னோடதுன்னு எதுவுமில்லை, எல்லாமே நம்மளோடதுதான். சோ நம்ம ஆபீஸ்க்கு நான் வருவேன். நான் சும்மா வீட்ல உட்கார்ந்துட்டு இருக்கறதுக்கா எங்க அண்ணா என்னை சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க வச்சாரு..??” அப்படின்னு பாத்ரூமுக்குள்ள இருந்தே கத்தினா மேகா.

“ச்ச்ச்.. இவ மட்டும் நம்ம என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டா” அப்படின்னு சலிச்சுக் கிட்ட விஷ்வா, மகேஷுக்கு கால் பண்ணி, “ஆபீஸ்க்கு நம்ம கூட அவளும் வர்றா. சோ நாங்க அங்க வர்றதுக்குள்ள எல்லாருக்கும் இன்பார்ம் பண்ணி ஒழுங்கா இருக்க சொல்லு. எவனாவது அங்க அவளை பார்த்து பல்ல காட்டிட்டு இருந்தான்னா கடுப்பாயிடுவேன்” அப்படின்னு கோபமா சொன்னான்.

“உங்க வைஃப்னு தெரிஞ்சு நம்ம ஆபீஸ்ல எவன் பாஸ் வாலாட்ட போறான்..!! அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. இருந்தாலும் நான் ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன்” அப்படின்னு மகேஷ் சொல்ல, “ஓஹோ.. அப்படியா..?? அப்ப எவனாவது ஏதாவது பண்ணான்னா அவனை விட்டுருவேன், ஆனா என் கையில நீ செத்துருவ. மைண்ட் இட்” அப்படின்னு சொல்லிட்டு கால் கட் பண்ணிட்டான் விஷ்வா.
அஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்த மேகா, விஷ்வா கூட கிளம்பி நேரா ஹாஸ்பிட்டல் போனா.

டாக்டரோட கேபின்ல விஷ்வா இன்ஜெக்ஷன் பத்தி பேசிட்டு இருக்க, பாட்டி கூட இருந்த மேகா, “எப்படி இருக்கீங்க பாட்டி..??” அப்படின்னு கேட்டுக்கிட்டே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தா. “டாக்டர் ஏதோ ஊசி போட போறேன்னு சொன்னாரா.. அதனால நீ வர்ற வரைக்கும் இருப்போமோ மாட்டோமோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்போ உன்ன பார்த்த உடனே ஏதோ புது தெம்பு வந்த மாதிரி இருக்கு மேகா” அப்படின்னு பாட்டி மேகா கைய பிடிச்சுக்க,

“உங்களுக்கு ஒன்னும் ஆகாது பாட்டி, கவலைப்படாதீங்க. இந்த இன்ஜெக்ஷன் போட்டா சீக்கிரம் சரியாயிடும்னு டாக்டர் சொன்னாரு. நமக்கு அவ்ளோ பெரிய வீடு இருக்கும்போது இன்னும் எத்தனை நாள்தான் இங்கேயே இருப்பீங்க..?? சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” அப்படின்னா மேகா.

“நீ சீக்கிரம் ஒரு கொள்ளுப் பேரனையோ பேத்தியையோ பெத்துக்கொடு. அவங்கள பார்த்தாலே எனக்கு இருக்கிற அத்தனை பிரச்சனையும் சரியாயிடும். இதே ஹாஸ்பிட்டல்ல உனக்கு டெலிவரி ஆகட்டும், நம்ம எல்லாரும் சேர்ந்து இங்க இருந்து வீட்டுக்கு போகலாம்” அப்படின்னு பாட்டி ஆசையா சொல்ல, என்ன சொல்றதுன்னு தெரியாம அமைதியா இருந்தா மேகா. கதவுக்கு வெளிய பாட்டி பேசுனதை கேட்டுட்டு இருந்த விஷ்வா, உள்ள வந்தான்.

அவனை பார்த்ததும், “என் பேத்திய நீ ஒழுங்கா பாத்துக்கிறியாடா..??” அப்படின்னு பாட்டி கேட்க, “என்ன பாட்டி இப்படி கேக்குறீங்க..?? நியாயமா ‘என் பேரனை நீ ஒழுங்கா பாத்துக்கிறியாடி’ன்னு இவகிட்டதான் கேட்கணும். இவதான் என்னை டெய்லி கொடுமை பண்ணிட்டு இருக்கா. இது பத்தாதுன்னு இவ வீட்ல இருக்குறவங்க எல்லாம் என்னை அரிவாள தூக்கிட்டு வந்து மிரட்டுறாங்க பாட்டி” அப்படின்னு விஷ்வா மேகா மேல கம்ப்ளைன்ட் பண்ணான்.

சிரிச்ச பாட்டி, “என்ன டா எனக்கு எதுவும் தெரியாதுன்னு உன் இஷ்டத்துக்கு கதைய மாத்தி விடுறியா..?? உன்னை சுத்தி என்ன நடந்தாலும் எனக்கு உடனே தெரிஞ்சுடும். நீ பாட்டுக்கு இவளை லவ் பண்றேன்னு அவங்க வீட்ல சொல்லாம பிரஸ் மீட் வச்சு ஊருக்கே சொன்னா.. உன்னை சும்மா விடுவாங்களா..?? எனக்கு உன்ன பத்தி தெரியும். இனிமே நீ அவளை குறை சொன்னா நான் உன்கிட்ட பேச மாட்டேன். அவ உன்னை நம்பி வந்தவடா, நீதான் அவளை நல்லா பாத்துக்கணும். யாருக்காகவும் அவளை விட்டுக்கொடுக்கக் கூடாது” அப்படின்னு சொல்ல,

“அதுக்குள்ள இவ பாட்டியையும் கரெக்ட் பண்ணிட்டாளா..!!” அப்படின்னு நினைச்ச விஷ்வா, “சரிங்க பாட்டி, நீங்க சொன்ன மாதிரி நான் இவளை நல்லா பாத்துக்கிறேன். ஓகேவா..??” அப்படின்னு கேட்டான்.

“ம்ம்ம்.. நீ அவளை பாத்துக்கோ, அவ உன்னை பாத்துக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சீக்கிரம் ஒரு குழந்தைய பெத்து என் கையில கொடுங்க. அந்த குழந்தையோட முகத்தைப் பார்த்தாலே என் பிரச்சனை எல்லாம் சரியாயிடும். உன்னை பாத்துக்கிட்ட மாதிரி உன் குழந்தையையும் நான் பாத்துப்பேன். உங்க மேரேஜ் முடிஞ்சதுல இருந்தே உங்க குழந்தைய எப்ப பார்க்க போறோம்னு தான் வெயிட் பண்றேன். இந்த ஆசையையும் நீங்க சீக்கிரம் நிறைவேத்தணும் விஷ்வா. கடவுள் புண்ணியத்துல உங்க கல்யாணத்தைப் பாத்துட்டேன், அடுத்து குழந்தையையும் பாத்துட்டா சந்தோஷமா கிளம்பிடுவேன்” அப்படின்னு பாட்டி சொல்ல,

“நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க.. திடீர்னு ஏன் இப்படி பேசுறீங்க..?? உங்களுக்கு ஒன்னும் ஆகாது, இன்னும் நூறு வருஷம் நல்லா இருப்பீங்க” அப்படின்னு கண் கலங்கி சொன்னான் விஷ்வா.

அவன் கைய பிடிச்சுக் கிட்ட பாட்டி, “நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கறத பார்த்தாலே நான் நல்லா இருப்பேன் விஷ்வா” அப்படின்னு சொல்ல, “முதல்ல கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க, சரின்னு இவளை பண்ணி கூட்டிட்டு வந்தேன். இப்போ அடுத்து குழந்தை வேணும்னு சொல்றாங்களே.. அது எப்படி முடியும்..??” அப்படின்னு நினைச்சுக்கிட்டே மேகா முகத்தைப் பார்த்தான் விஷ்வா.
பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவானா விஷ்வா..??

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured